லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு
தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்கவரியை குறைக்க வேண்டும், டீசல் மீதான விற்பனை வரியை அந்தந்த மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தென் இந்திய லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தது.
இதற்கிடையே மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகத்தின் புதிய செயலாளராக ராஜேந்திரசிங் குஜ்ரால் இன்று பதவி ஏற்றார். அவர் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா, நல்லதம்பி, சுகுமார் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் லாரிக்கான் சுங்க வரியை குறைப்பதற்கான முடிவு பற்றி அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்தது. லாரி அதிபர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க கால அவகாசம் தேவைப்படுவதால், நாளை நள்ளிரவு முதல் தொடங்குவதாக இருந்த லாரி ஸ்டிரைக்கை 10 நாட்கள் தள்ளி வைக்குமாறு கடிதம் மூலம் குஜ்ரால் கேட்டுக்கொண்டார். அதை மோட்டார் சங்கத்தினர் ஏற்றுக்கொண்டனர்.