Home Home Page
தமிழகம்
இலவச அமரர் ஊர்தி திட்டம்: எம்.ஆர்.கே.
......................................
பிற்படுத்தப்பட்டோருக்கு வருமான வரம்பு உயர்வு
......................................
ஜெ.வுக்கு உரிய பாதுகாப்பு: பிரதமர் உறுதி
......................................
பொது இடங்களை ஆக்கிரமிக்க தடை
......................................
பெரியார் சிலை சேதம்: 4 பேர் கைது
......................................
நிலம் கையகப்படுத்த புதிய சட்டம்: நாராயணசாமி
......................................
நடிப்பில் விருப்பமில்லை: கமல் மகள் அக்ஷரா
......................................
முதல்வர் கருணாநிதி திருச்சி பயணம்
......................................
போலி பூச்சி மருந்துகள்: விவசாயிகள் அதிர்ச்சி
......................................
கடலோர பாதுகாப்பில் தமிழகம் முன்னோடி
......................................
ஜெ.வுக்கு உரிய பாதுகாப்பு: தமிழக அரசு
......................................
லத்திகாசரணுக்கு எதிரான வழக்கு தள்ளிவைப்பு
......................................
தொழிற்சங்க ஊழியர்கள் மறியல் (படங்கள்)
......................................
அதிமுக எம்எல்ஏ வெற்றி செல்லும்: சுப்ரீம் கோர்ட்
......................................
தமிழகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்: ஜி.கே.பிள்ளை
......................................
செல்போன் பேசிய 2 மாணவர்கள் சஸ்பெண்ட்
......................................
அதிமுக ஆட்சியில் நடந்த கொடுமைகள்: ஸ்டாலின்
......................................
காந்தியடிகள் காலடித் தேடி பயணம்
......................................
சட்டமன்ற மனுக்கள் ஆய்வுக்குழு குறை கேட்பு
......................................
சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு: கலைஞர் உத்தரவு
......................................
சைதைதுரைசாமி மகன் திருமணம்:ஜெ. பங்கேற்கிறார்
......................................
தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கு:தூக்குத்தண்டனை கைதிகள் கருணை மனு அனுப்ப முடிவு
......................................
மு.க.ஸ்டாலின் மருமகன் தொடர்ந்த வழக்கு: ஜெ. நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு
......................................
மாஜி எம்.பி. குடந்தை ராமலிங்கம் காலமானார்
......................................
காவலர்களுக்கு சர்வதேச தரத்தில் பயிற்சி மையம்
......................................
தி.மலை: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது
......................................
கலைஞர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு அருகில் பசுபதி பாண்டியன் ஆர்ப்பாட்டம்
......................................
மனித உரிமை பாதுகாவலர்களுக்கான அறிவுரைகள்!
......................................
நவம்பர் மாதம் மதுரையில் கலைஞர் பங்கேற்கும் திமுக பொதுக்கூட்டம்
......................................
திமுக ஆட்சிக்கு எதிரான உண்மைகளை செப்-15ல் வெளியிடுவேன்: வைகோ
......................................
வாலாஜாவில் அதிமுக நாளை கண்டன ஆர்ப்பாட்டம்:ஜெ.
......................................
கிராமணி- காஞ்சீபுரத்தில் 13-ம் தேதி ஆர்ப்பாட்டம்
......................................
நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் கோர்ட்டில் ஆஜர்
......................................
இலங்கை அகதிப்பெண் வீட்டில் காதலன் தூக்குப்போட்டு தற்கொலை
......................................
சமச்சீர் கல்விக்கு எதிராக வழக்கு தள்ளி வைப்பு
......................................
மு.க.அழகிரி தேர்தல் வெற்றியை எதிர்த்து மாற்று வேட்பாளர் வழக்கை நடத்த உத்தரவு
......................................
நடிகை அனகாவுக்கு கொலை மிரட்டல்
......................................
பந்த்:டாஸ்மாக் பணியாளர்கள் மறியலில் பங்கேற்பு
......................................
பிரபல தமிழ்ப்பட இயக்குநர் கே.எஸ்.ரவி மரணம்
......................................
இன்று பந்த் :தமிழக அரசு எச்சரிக்கை
......................................
சனிக்கிழமை, 31, ஜூலை 2010 (18:44 IST)



கலைஞர் காப்பீட்டுத் திட்டம்: தியாகிகள் சேர்ப்பு

உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில், விடுதலை போராட்ட தியாகிகள், முன்னாள் கிராம முன்சீப்கள் மற்றும் அரசு பொது நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நீட்டித்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இருதய அறுவை சிகிக்கை, புற்றுநோய் அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை போன்ற 51 வகையான நோய்களுக்கு உயர் சிகிச்சைகள் தேவைப்படும் ஏழை எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளில் காத்திருக்காமல் உடனடியாக உயர் சிகிச்சைகள் பெறும் வகையில் “முதல்வர் கலைஞர் காப்பீட்டுத் திட்டம்“ அறிவிக்கப்பட்டு, 23.7.2009 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில், ஆண்டு வருமானம் ரூ.72,000/  மற்றும் அதற்கு குறைவாக உள்ள அனைத்துக் குடும்பங்கள் மற்றும் பல்வேறு அமைப்பு சாரா நலவாரியங்களின் உறுப்பினர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தில் உறுப்பினர்களுக்கான காப்பீட்டுத் தொகையை அரசே செலுத்துகிறது. இந்த திட்டத்தில் 29.7.2010 வரை 1,59,118 நோயாளிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இவர்களின் சிகிச்சைக்காக ரூ.429.84 கோடி நிதியை காப்பீட்டு நிறுவனம் மருத்துவமனைகளுக்கு வழங்கியுள்ளது.

தற்பொழுது ஆண்டு வருமானம் ரூ.72,000/  மற்றும் அதற்கு குறைவாக ஓய்வூதியம் பெறும் முன்னாள் கிராம முன்சீப்கள், விடுதலை போராட்ட தியாகிகள் மற்றும் போக்குவரத்து கழகங்கள், பால் உற்பத்தியாளர் சங்கங்கள் போன்ற அரசு பொது நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்தி தமிழக அரசு தற்போது ஆணை பிறப்பித்துள்ளது.

மேற்கண்ட நபர்களும் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான முதல்வர் கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் உறுப்பினர்களாக சேர்ந்து உயர் சிகிச்சைகள் பெற மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் ஸ்டார் ஹெல்த் மற்றும் அலைடு இன்சூரன்ஸ் நிறுவனத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள மையங்களில் (முஐடீளுமுளு), தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்து அடையாள அட்டைகள் பெறலாம். இந்த பணிக்காக இம்மையங்கள் 01.08.2010 முதல் 30.09.2010 வரை கூடுதல் கணிணி வசதியுடன் செயல்படும்.


அடையாள அட்டை பெறுவதற்கு ஏதுவாக ஓய்வூதியம் பெறுபவர் தங்களின் ஓய்வூதிய அட்டையுடனும், பொது நிறுவனங்களில் பணிபுரிவோர்கள் அவர்களின் நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளுடன், வருமான சான்றிதழ், குடும்ப அட்டையின் நகலுடன், குடும்ப உறுப்பினர்களுடன் சென்று புகைப்படம் மற்றும் கைவிரல் ரேகை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அடையாள அட்டை பெறுவதற்குள் வேறு ஏதேனும் சிகிச்சை தேவைப்பட்டால், ஓய்வுதிய அட்டை / பொது நிறுவனங்களில் பணிபுரிவோர்கள் அவர்களின் நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை, வருமான சான்றிதழ் (ஊதிய சான்றிதழ்) மற்றும் குடும்ப அட்டையின் நகலை சமர்ப்பித்து அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :