பாக்.அடமழைக்கு 430பேர் பலி
கடந்த இருநாட்களுக்கு முன்பு மோசமான வானிலை காரணமாக இஸ்லாமாபாத் அருகே மலையில் விமானம் நொறுங்கி விழுந்து,150 பேர் பலியான நிலையில், கடந்த 3நாட்களாக பாகிஸ்தானில் பொய்துவரும் கனமழைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இதுவரை சுமார் 430பேர் பலியாகியுள்ளனர்.பாகிஸ்தானில் வடமேற்கு மாகாணத்தில் கடந்த 3 நாட்களாக பெய்த தொடர் மழையால்,ஆறுகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு கிராமங்களுக்குள் புகுந்தது. சாலைகள், கட்டிடங்கள் மற்றும் 60 பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதனால், 150 கிராமங்கள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன.இதனால், அப்பகுதிகளில்,மழை வெள்ளத்துக்கு இதுவரை 430 பேர் பலியானார்கள். வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன. எனவே, தாழ்வான பகுதியில் குடியிருக்கும் மக்கள் மேடான இடங்களுக்கு குடி பெயரும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு பொட்டலங்கள் வினியோகிக்கப்படுகின்றன. சுவாத் பள்ளத்தாக்கு, மிஸ்கோரா நகரம் மற்றும் தெற்கு வசிரிஸ்தான் பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளம் பாதித்த பகுதியில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடபெற்றுவருவதாக கைபர் மற்றும் பகதூர் கவா மாகாண தகவல் துறை அமைச்சர் மியான் இப்தி கார் உசேன் தெரிவித்துள்ளார்.