மின்கட்டண உயர்வு அறிவிப்பு வெளியானது
தமிழகத்தில் மின்கட்டண உயர்வு தொடர்பாக, மின்சார வாரியம் விண்ணப்பித்துள்ள மனு மீதான கருத்துக் கேட்பை தொடர்ந்து, புதிய மின் கட்டண விபரங்களை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இன்று வெளியிட்டது.
இதன்படி வீடுகளில் 600 யூனிட்டுகள் வரை பயன்படுத்தினால் கட்டணத்தில் மாற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 600 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் போது ஒவ்வொரு யூனிட்டுக்கும் ரூ. 1 அதிகரித்து ரூ. 5.75 வசூலிக்கப்பட இருக்கிறது.
அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ. 4.40 ல் இருந்து ரூ. 4.80 அதிகரிக்கப்படுகிறது. சினிமா தியேட்டர்களுக்கு யூனிட்டுக்கு ரூ4.40ல் இருந்து ரூ.5.50ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
குடிசை மற்றும் சிறு ரக தொழிற்சாலைகளுக்கு 1800 யூனிட்டுகள் வரையிலான பயன்பாட்டுக்கு பழைய கட்டணமும். அதற்கு மேல் செல்லும் பட்சத்தில் யூனிட்டுக்கு ரூ. 3.80 ம் விகிதத்திலும் மின்கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷாப்பிங் காம்பிளக்சுளுக்கும் இதே போல் 18000 யூனிட்டுகளுக்கு மேல் செல்லும் போது ரூ. 5.00 வசூலிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.