முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் நினைவிடத்தில் மு.க.அழகிரி அஞ்சலி
முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் நினைவிடத்தல், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இன்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இன்று தங்க பாண்டியன் மணிமண்டபத்தில் அன்னதானம் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.
மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இன்று காலை 8.30 மணிக்கு, அருப்புக்கோட்டை தொகுதியில் மல்லாங்கிணரில் உள்ள தங்கபாண்டியன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர் ஐ.பெரியசாமி, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ஆகியோர் உடனிருந்தனர்.