தூத்துக்குடி திமுகவின் கோட்டை: அழகிரி
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் திமுகவின் கைவசம் வரும் என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பேசினார்.
மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சரும், தி.மு.க. தென்மண்டல அமைப்பு செயலாளருமான மு.க.அழகிரி இன்று மதுரையில் இருந்து கார் மூலம் தூத்துக்குடி சென்றார். தூத்துக்குடி செல்லும் வழியில் மாவட்ட தி.மு.க. சார்பில் எட்டயபுரத்தில் காலை 9 30 மணிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனும், சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவனும் இந்த பிரமாண்ட வரவேற்பை ஏற்பாடு செய்திருந்தனர். வரவேற்வில் பேசிய மு.க.அழகிரி, இந்த பிரமாண்ட வரவேற்பை பார்த்தால் திமுக வரும் சட்டமன்றத் தேர்தலில் நூற்றுக்கு நூறு சதவீதம் கைப்பற்றும். இதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் திமுகவின் கைவசம் வரும். தூத்துக்குடி திமுகவின் கோட்டை. இன்று இந்த வரவேற்பில் கலந்து கொண்ட திமுகவினர் அனைவரும், தேர்தல் வரை ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றார்.