Home Home Page
வெள்ளிக்கிழமை, 30, ஜூலை 2010 (10:10 IST)



காங்கிரஸ் இருக்கும் வரை இலங்கை பிரச்சனைக்கு முடிவு வராது: நாஞ்சில் சம்பத்

காங்கிரஸ் இருக்கும் வரை இலங்கை பிரச்சனைக்கு முடிவு வராது என்று  ம.தி.மு.க., கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறினார்.

ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

பல கோடி ரூபாய் செலவு செய்து விடுமுறை அளித்து, அரசு வாகனங்களை பயன்படுத்தி ஐந்து நாட்கள் செம்மொழி மாநாடு நடத்தியதை, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஒரு மணி நேரத்தில் துவம்சம்  செய்து சாதனை படைத்து விட்டார். 

ராகுலுக்கு இயல்பாகவே கருணாநிதியை பிடிக்கவில்லை. அதனால்தான் சென்னை வரும்போது பார்ப்பதில்லை. அரசுக்கு எதிரான கூட்டணியை பற்றி சிந்திப்பது ராகுல் மட்டும்தான்.


விலைவாசி உயர்வு அரசுக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். சட்டசபை தேர்தல் விரைவில் வரும். காங்கிரஸ் தி.மு.க., கூட்டணியில் பிரிவு ஏற்பட்டுள்ளது.


காங்கிரஸ் இருக்கும் வரை இலங்கை பிரச்சனைக்கு முடிவு வராது. சோனியாவால் தமிழர்களுக்கு பயன் இல்லை. காங்கிரஸ் கட்சியோடு அ.தி.மு.க., கூட்டணி வரும் பட்சத்தில், எங்கள் கருத்தில் உறுதியோடு இருந்து, கூட்டணியில் அமைதியாக இருப்போம் என்றார். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(8)
Name : thavam Date :7/31/2010 6:13:40 PM
சோனியா குடும்பம் மட்டுமல்ல சில காங்கிரஸ் காரர்களும் உள்ளடக்கம் ,இவர்களின் ஏஜண்டுகளின் பொய்ப்பிரச்சாரங்களை கேட்டு செய்தி எழுதியவர்கள் மாட்டிக்கொண்டு அவலப்பட்டார்களே லண்டனில் !இனிமேல் இவர்களை எந்த பிரித்தானிய பத்த்ரிகையும் நம்பாது !போயசெல்லும் வேகத்தில் உண்மை செல்லாது ,உண்மை வெளிப்படும் பொது பொய் தானாக அழிந்து விடும்
Name : RS Country : United Kingdom Date :7/30/2010 10:52:00 PM
சம்திங் வில் ஹப்பேன் இன் தமிழ் நாடு. ஹொவ் லாங் ஆர் தி பிஷேர்மன் ஓர் தி அதர் தமிழ்ச இன் தமிழ் நாடு கோயன் டு டோலேரடே திஸ் கில்லிங்க்ஸ் ?
Name : somu Date :7/30/2010 1:45:19 PM
. காங்கிரஸ் கட்சியோடு அ.தி.மு.க., கூட்டணி வரும் பட்சத்தில், எங்கள் கருத்தில் உறுதியோடு இருந்து, கூட்டணியில் அமைதியாக இருப்போம் என்றார்.
Name : Hari Country : United Kingdom Date :7/30/2010 11:53:34 AM
I DONT HAVE ANY TRUST ON INDIA WHOEVER COMES TO THE POWER ....MOST OF THEM ARE SELFISH,ONLY THEM FAMILY THEY THINK ABOUT.LOOK AT THAT COUNTRY HOW MANY POOR PEOPLE LIVING THERE, MANY RICH PEOPLE LIVING THERE IF THEY HELP TO THE POOR YOU CANT FIND ONE POOR IN INDIA IF THERE NOT DOING FOR THE OWEN PEOPLE HOW THERE GOING TO DO FOR THE SRILANKAN TAMILS????
Name : thinnu Country : Kuwait Date :7/30/2010 11:46:19 AM
இட்ஸ் know fact
Name : d.anandaraj Country : Australia Date :7/30/2010 10:53:40 AM
ம.தி.மு.க.வுக்கு உண்மையிலே அக்கறை இருந்திருக்குமேயானால் கடந்த தேர்தலில் சோனியாவையும் ராகுக்வையும் எதிர்த்து நின்று இந்திய மக்களிடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்தி இருக்க வேண்டுமே !
Name : gnanamani Date :7/30/2010 12:48:19 AM
காங்கிரஸ் இருக்கும் வரை இலங்கைப் பிரச்சினைக்கு முடிவு வராது... சரிப்பா ம.தி.மு.க. ஆட்சிக்கு வந்துட்டா இலங்கை பிரச்சினை சரியாயிடுமா....ஏன்யா உங்களுக்கு இலங்கை பிரச்சினை அரசியல் பண்ணவதற்கு ஒரு ஆயுதமாக கிடைத்துவிட்டது. ஏன்யா இங்க கத்துறீங்க... தில்லு இருந்தா போய் ராஜபக்சே வீட்டு முன்னால போய் கத்துங்கய்யா.... போர் நடத்தியவன் அவன் தான்யா...இங்க ஏன் கத்துறீங்க... தமிழ் நாட்டில் சோத்துக்குவழியில்லாத எத்தனையோ ஏழைங்க இருக்காங்க... மனிதமலத்ததை மனிதனே அள்ளுகிற அவலம் நீங்க இங்க பார்த்ததே இல்லையா...???? அவங்களுக்காக நீங்க ஏன் குரல் கொடுக்க மாட்டேன் என்கிறீர்கள்....தேர்தல் வருதுல்ல இனிமேல் நல்லா கத்துவீங்க...யாரையும் நீங்க ஏமாத்த முடியாது...
Name : sakthy Date :7/30/2010 12:35:26 AM
இது தெரிந்த விஷயம். ஆனாலும் நீதி வெல்லும்.லண்டனில் பரமேஸ்வரனுக்கு நீதி கிடைத்தது.இது வெற்றியின் முதல் படி. காங்கிரஸ் உள்ளவரை சோனியா குடும்பம் உள்ளவரை தமிழர்கள் பழிவாங்கப் படுவார்கள் என்று கருணாநிதி முகத்தில் அறைந்தது போல் தமிழ் எம்.பி.களிடம் கூறி விட்டாரே. அதற்கு தான் எதுவும் செய்ய முடியாது என்றும் சொல்லி விட்டார். இதன் மூலம் கருணாநிதியின் முகமூடி கிழிந்து விட்டது.ஆனாலும் தமிழக மீனவர்கள் மீது சோனியாவிற்கும்,கருணாநிதிக்கும் என்ன பகை?உங்களுக்கு தெரிகிறதா?