Home Home Page
வியாழக்கிழமை, 29, ஜூலை 2010 (15:11 IST)
இரட்டைச்சதம்: சச்சின் அபார ஆட்டம்


இந்தியா - இலங்கை மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட்  போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது.

இலங்கை அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு  642 ரன் குவித்து `டிக்ளேர்' செய்தது. சங்ககரா 219 ரன்னும், ஜெயவர்த்தனே  174 ரன்னும், பரணவிதனா 100 ரன்னும் எடுத்தனர்.


பின்னர் முதல் இன்னிங்சை  விளையாடிய இந்தியா 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 382 ரன் எடுத்து இருந்தது. ஷேவாக் 99 ரன்னில் `அவுட்' ஆனார்.


தெண்டுல்கர் 108 ரன்னும், ரெய்னா 77 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.


இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது.


பாலோ ஆனை தவிர்க்க மேலும் 61 ரன் தேவை கைவசம் 6 விக்கெட் என்ற நிலையில் இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. ரெய்னா சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். பவுண்டரி அடித்து அவர் 100 ரன்னை (192 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்) தொட்டார்.


ரெய்னா தனது முதல் டெஸ்டிலேயே செஞ்சூரி அடித்தார். மறுமுனையில் இருந்த தெண்டுல்கரும் அபாரமாக ஆடினார். இருவரது ஆட்டத்தால் இந்தியா பாலோஆனை தவிர்த்தது.


தெண்டுல்கர் மிகவும் சிறப்பாக விளையாடி  200 ரன்கள் எடுத்து இரட்டைச்சதம் அடித்தார்.

சச்சின் தெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 வது முறையாக இரட்டைச்சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :