மதுரை: எஸ்.ஐ. சந்திரன் சஸ்பெண்ட்
மதுரை ஊமச்சிக்குளம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ.,யாக இருப்பவர் சந்திரன். இம்மாதம் 31ம் தேதி ஓய்வு பெற இருந்த இவரை, சஸ்பெண்ட் செய்து, மாவட்ட எஸ்.பி., மனோகர் உத்தரவிட்டுள்ளார்.
சந்திரன் 2004ல், திருமங்கலம் பகுதியில் பணியாற்றிய போது, லஞ்சப்புகாரில் சிக்கி, சஸ்பெண்ட் ஆனார். இவ்வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே, மீண்டும் பணியில் சேர்ந்த சந்திரனை, விசாரணை செய்வதற்கு ஏதுவாக சஸ்பெண்ட் செய்ததாக எஸ்.பி., தெரிவித்துள்ளார்.