தெருவில் நடனமாடி மாப்பிள்ளை தேடும் பெண்கள்! சீனாவில் உள்ள கான் சாலு என்ற இடத்தில் அங்குள்ள சுரங்கப்பாதை அருகே 8 இளம் பெண்கள் கூடினார்கள். அவர்கள் திடீரென தங்கள் மேலாடைகளை கழற்றி வீசி விட்டு ஜட்டி, பிராவுடன் நடனம் ஆடினார்கள். இளம் பெண்கள் நடனத்தை பார்த்ததும் என்ன, ஏதென்று தெரியாமல் ஏராளமானோர் கூடிவிட்டனர். அங்கு வந்திருந்த வாலிபர்களை பார்த்த அவர்கள் எங்களை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கெஞ்சியபடி நடனத்தை தொடர்ந்தனர். நடனமாடிய அனைவரும் அவர்கள் கையில் சில பேப்பர்களை வைத்து இருந்தனர். அதில் அவர்களை பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன. இது குறித்து அவர்கள், எங்கள் அனைவருக்கும் 30 வயதை எட்டி விட்டது. இன்னும் திருமணமாக வில்லை. மாப்பிள்ளைகளை தேடுகிறோம் யாரும் கிடைக்கவில்லை. இதனால் எங்கள் பெற்றோர் இன்னும் வாழ்க்கையை அமைத்து கொள்ளாமல் என்ன செய்கிறீர்கள் என்று கூறி திட்டுகிறார்கள். நாங்கள் எல்லோருமே அழகாகத்தான் இருக்கிறோம். ஆனால் எந்த வாலிபரும் எங்களை திருமணம் செய்ய முன்வரவில்லை. எனவேதான் இப்படி நடனம் ஆடி மாப்பிள்ளைகளை தேர்வு செய்ய முடிவு செய்தோம்’’என்று சொல்லிவிடு ஆடிக்கொண்டிருந்தார்கள். நீண்ட நேரம் அவர்கள் அங்கு நடனம் ஆடியும் கூட ஒரு வாலிபர் கூட அவர்களை திருமணம் செய்ய முன்வரவில்லை. எஏமாற்றத்துடன் களைந்து சென்றனர்.