16ல் பொன்சேகா மீதான விசாரணை தொடங்குகிறது
இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன்சேகா அதிபர் தேர்தலில் ராஜபக்சேயை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இவர் ராணுவ தளபதியாக இருந்தபோது ராஜபக்சேவை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பொன்சேகா மீது ராணுவ கோர்ட்டு விசாரணை நடைபெற இருக்கிறது.
இந்த விசாரணையை 3 மேஜர் ஜெனரல்கள், நீதிபதிகளாக இருந்து நடத்தவிருக்கிறார்கள். அவர்கள் 16-ந்தேதி தங்கள் விசாரணையை தொடங்கவிருக்கிறார்கள்.
விசாரணை நடைபெறும் அன்று ராணுவ கோர்ட்டில் பொன்சேகாவை ஆஜர் படுத்துகிறார்கள். அவருக்கு எதிராக 22 ராணுவ அதிகாரிகள், 7 போலீஸ் அதிகாரிகள், பொது மக்கள் 6 பேர் வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள்.