நாளை பாராளுமன்றத்தை நோக்கி இடதுசாரிகள் பேரணி
விலைவாசி உயர்வை குறைக்க இடது சாரி கட்சி சார்பில் பாராளுமன்றத்தை நோக்கி பேரணி நடக்கிறது.
’’விலைவாசி உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதல் வேலை வாய்ப்பு’’-ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து, இடது சாரிகள் சார்பில் நாளை வெள்ளிக்கிழமை டெல்லியில் பேரணி நடக்கிறது.
இந்த பேரணி ராம் லீலா மைதானத்தில் இருந்து புறப்பட்டு, பாராளுமன்றத்தை நோக்கி செல்கிறது. வழியில், பாராளுமன்ற சாலையில் உள்ள போலீஸ் நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடக்கிறது.
இந்த கூட்டத்தில் இடதுசாரி எம்.பி.க்கள் பேசுகிறார்கள். இந்த தகவலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் எச்சூரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.