இங்கிலாந்தை வீழ்த்தியது ஜெர்மனி
டெல்லியில் நடந்து வரும் உலக கோப்பை ஆக்கி போட்டியின் இரு அரை இறுதி போட்டிகளும் இன்று நடக்கின்றன. இதன் முதல் போட்டியில் ஜெர்மனி- இங்கிலாந்து அணிகள் மோதின.
முதல் அரையிறுதியில், 4-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வென்ற ஜெர்மனி அணி, பைனலுக்கு முன்னேறியது. ஆட்டம் துவங்கியது முதலே சிறப்பாக விளையாடிய ஜெர்மனி அணி, முதல் பாதியில் அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து முன்னிலை வகித்தது.
சுதாரித்து கொண்டு விளையாடிய இங்கிலாந்து ஒரு கோல் அடித்தது. எனினும் மூன்றாவது கோலை அடித்த ஜெர்மனி 3-1 என்ற கோல்கணக்கில் முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியில், ஜெர்மனி மேலும் ஒரு கோல் அடித்து, தனது முன்னிலையை தொடர்ந்தது. லீக் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி, அரையிறுதியில் சொதப்பியது.
இறுதியில், நடப்பு சாம்பியன் ஜெர்மனி 4-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வென்று பைனலுக்கு முன்னேறியது.