மிசௌரி தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா
செயின்ட் சார்லஸ் நகரம் உலகின் புகழ் பெற்ற மிசௌரி நதிக்கரையில் அமைந்துள்ள பாரம்பரியமிக்க, பழமையான நகரங்களில் ஒன்று. இப்படிப்பட்ட ஒரு இடத்தில் பொங்கல் விழா நடைபெற்றது ஒரு சிறப்பம்சம்.
விழாவிற்கு மக்கள் சரியாக 3 மணியளவில் செயிண்ட் லூயிஸ் நகரத்தன் குளிரையும் பொருட்படுத்தாமல் உற்சாகத்துடன் வரத் தொடங்கினர். பழைய உறுப்பினர்கள் மற்றுமன்றி, செயற்குழுவே எதிர்பாராத அளவிற்கு புதிய உறுப்பினர்களும் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை மக்கள் அனைவரும் தமிழ் உணர்வுடன் ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து, சர்க்கரை பொங்கல் உண்டு மகிழ்ந்தனர்.
விழாவிற்கு வருகை தந்த பெரும்பாலான ஆண்கள் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டியும், பெண்கள் சேலையும் அணிந்து விழாவை சிறப்பித்தனர்.
விழா மேடையை பொங்கல் பானை, கரும்பு மற்றும் வாழை மரங்களுடன் வடிமைத்ததுடன் மட்டுமல்லாது, பொங்கலோ பொங்கல் மற்றம் மிசௌரி தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் வாழ்துகள் போன்ற பேனர்களும் பார்ப்பவர்கள் கண்களை குளிர்வித்தன.
விழா நிகழ்ச்சிகள் மாலை 4.30 மணியளவில் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியது. விழாவில் முதல் நிகழ்ச்சியாக தமிழ் கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் நடனங்களில் ஒன்றான காவடி ஆட்டம் நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்ப் பள்ளி மாணவர்களின் மேனா மினிக்கி நடனம், பொங்கல் கலக்கல், போகி நடனம், தமிழா தமிழா நாளை நம் நாடு அணிவகுப்பு நடனம் போன்ற நிகழ்ச்சிகள் சிறப்பாக அமைந்தது.
கலை நிகழ்ச்சிசகள் மட்டுமன்றி மிசௌரி தமிழ்ச் சங்கத்தின் இளைஞர் பிரிவான விழாவின் போது ஏழை குழைந்தைகளுக்கு பள்ளிக்குச் செல்ல தேவையான பொருட்கள் மற்றும் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஹைதி மக்களுக்கும் நிதி திரட்டினார்கள்.