Home Home Page
அண்மைச் செய்திகள்
மீண்டும் மிரட்டல் கடிதம்: ஜெயா டி.வி. புகார் || சொல்லாததையும் செய்வோம்: மு.க.ஸ்டாலின் || உலகளாவிய ஊடகங்களால் புகழப் பெற்றவர் சோனியா: தங்கபாலு || இந்திய வீரர்களை சூதாட்டக்காரர்கள் அணுகினார்களா? சச்சின் பதில் || ஐ.சி.சி., மீது வழக்குத் தொடருவோம்: பாக். || சாம்பியன்ஸ் லீக் சவாலானது: ஜெயவர்த்தனே || பாக். வீரர்கள் 3 பேருக்கு ஐசிசி தற்காலிக தடை || தமிழ்நாட்டில் மழை பெய்யும்: வா.ஆ.மையம் || மாவோயிஸ்டுகளிடம் இருந்து 3 போலீசாரை மீட்க ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை || ரஜினி வீட்டுக்கல்யாணம்: ஜெ. ஆப்செண்ட் || அடுத்த 24 மணி நேரத்தில் சென்னையில் மழை || 2 மாணவர்கள் தற்கொலை முயற்சி: பல்கலை அதிகாரிகள் விசாரணை || ரஜினி வீட்டு திருமணம்: ஸ்டாலின் வாழ்த்து(படம்) ||
வியாழக்கிழமை, 28, ஜனவரி 2010 (12:31 IST)



காங்கிரசை அழிக்க எந்த செயலிலும் ஈடுபட தயார்: சீமான்

தமிழனத்தை அழிக்க துடிக்கும் காங்கிரசை அழிப்பதற்கு, எந்தவொரு செயலில் ஈடுபடவும் தயாராக இருப்பதாக இயக்குனர் சீமான் கூறினார்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் நடந்த நாம் தமிழர் இயக்க கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சீமான்,

கன்னடர்களுக்கு தேசிய கொடி இருப்பது போல், ராஜராஜசோழனின் புலிக்கொடியை தமிழர்களின் தேசிய கொடியாக அறிவிக்க வேண்டும்.

ஓட்டு போட பணம் வாங்குவதால், நம் உரிமைகள் பறிபோக தொடங்கி உள்ளன. தற் போதைய தி.மு.க., அரசு, கலைஞர் காப்பீட்டு திட்டம் என்ற பெயரில் மக்கள் பணத்தில் எமனுக்கு விளம்பரம் செய்து வருகிறது.

ஜாதிவாரியாக செய்த சலுகைகளை அடுக்கும் கருணாநிதி, ஜாதி இல்லை என்று சொல்ல தகுதியற்றவர்.  வரும் மே 18ல் மதுரையில் நாம் தமிழர் இயக்கத்தின் அரசியல் மாநாடு நடைபெற உள்ளது. இதில் தமிழ் உணர்வுள்ள அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்.

கோவையில் செம்மொழி மாநாடு நடத்த உள்ளதாக கருணாநிதி அறிவித்துள்ளது, தமிழ் மீது உள்ள பற்றின் காரணமாக அல்ல. ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகத்தை, தமிழர்கள் மத்தியில் மறைப்பதற்காகவே.

தமிழனத்தை அழிக்க துடிக்கும் காங்கிரசை அழிப்பதற்கு, எந்தவொரு செயலில் ஈடுபடவும் தயாராக இருக்கிறேன் என்றார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(11)
Name : Suresh.M Date :3/26/2010 4:36:18 PM
I am ready to beat the congress party in tamil nadu
Name : lakshmiguru Date :1/30/2010 5:47:39 PM
i am also against for congresh.
Name : Bhuvanendran Date :1/29/2010 11:53:52
தமிழனத்தை அழிக்க துடிக்கும் காங்கிரசை அழிப்பதற்கு, எந்தவொரு செயலில் ஈடுபடவும் தயாராக நானும் இருக்கிறேன்
Name : neethi Date :1/28/2010 10:11:27 PM
இந்தியாவில் ஹிந்திகாரனுக்கு தமிழன் அடிமை,இலங்கையில் சிங்களவனுக்கு தமிழன் அடிமை உலகை வெல்லும் ஆயுதத்தை தமிழன் கண்டுபிடித்து வைத்திருந்தாலே எதிர்காலத்தில் தமிழன் நிம்மதியாக படுத்து உறங்கலாம்.
Name : krishnasamy Date :1/28/2010 9:01:03 PM
ஆம் நான் ஆதரிக்கிறேன்
Name : Pazha.Mehalingam Date :1/28/2010 8:05:30 PM
நீங்கள் தயவு செய்து கலைஞரைப் பற்றி தரக்குறைவாக பேசாதீர்கள். கலைஞர் முகத்தை பார்த்து சொல்லுங்கள். இன்று கலைஞரை விட தமிழனுக்கு நல்லது செய்கிற அரசியல்வாதி இனம் காணமுடியுமா? உங்கள் பேச்சை ரசிக்கிரேன். உங்கள் உணர்வை மிகவும் பெரிதும் போற்றுகிறேன்.
Name : Ponn.Chandrakumaran Date :1/28/2010 5:03:55 PM
இன்றைய இந்தியாவை விட மிகப்பெரிய அரசை கட்டி அமைத்து புலிக்கொடியின்கீள் கோலோச்சியவன் எம் முப்பாட்டன் ராச ராசன் அவன் கொடிதான் தமிழனுக்கு சரியான அடையாளத்தையும் நிமிர்வையும் கொடுக்கும்.
Name : rajamanickam Date :1/28/2010 4:50:09 PM
இவரு எங்கிருந்து வந்தாரய்யா ?
Name : S.A.RAMKUMAR-MUHAVOOR-9790180022 Date :1/28/2010 4:08:31 PM
தனியா நின்னு குரல்கொடுதால் கைதுசெய்து சிறையில் அடைத்துவிடுவார்கள்.காங்கிரஸ் சோனியாவை குறைசொல்லமுடியது.காங்கிரசில் கிழேயுள்ள ஒருசிலர் திமுகஉடன்சேர்ந்துதவறுசெய்கிரர்கள்.
Name : thamilan Date :1/28/2010 3:26:02 PM
நானும் உங்களுடன் வாறன் சீமான் அண்ணை காங்கிரஸ் கட்சியை அழிப்பதற்க்கு
Name : EBU/PARIS Date :1/28/2010 1:05:57 PM
கொஞ்சம் ஓவராக போய் கொண்டிருகிறது சிமான் வண்டி.தமிழ் மக்களுக்கு இவரை யாரும் ஏஜென்ட் நியமிக்கவில்லை!!இப்படியே போய் கொண்டு இருந்தால் அப்புறம் என்கவுன்டர் தேன்அப்பு !!!!