24/7 நியூஸ்
நக்கீரன் டாக்கீஸ்
நந்தவனம்
வெப் டிவி
கேலரி
பதிப்பகம்
ரிசல்ட்
முந்தைய நியூஸ்
Home
நக்கீரன்
சினிக்கூத்து
பாலஜோதிடம்
ஓம்
இனிய உதயம்
பொது அறிவு
ஹெல்த் சாய்ஸ்
எங்களை பற்றி
சந்தா
சந்தா புதுப்பிக்க
விளம்பர விபரம்
தொடர்புக்கு
Toolbar
Free News Letter
Login
அண்மைச் செய்திகள்
ராகிங் பற்றி விழிப்புணர்வு கையெழுத்துப் பேரணி
||
மதுரை: முத்திரையர் சங்கத்தினர் போராட்டம்
||
மனஅழுத்தத்தை குறைக்கும் இன்டர்நெட்
||
சோனியாவுக்கு சர்வதேச காங்கிரஸ் வாழ்த்து
||
கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்
||
15 வயது சிறுமியின் திருமணம் ரத்து
||
பாமக துணையில்லாமல் ஆட்சி அமைக்க முடியாது: அன்புமணி ராமதாஸ்
||
திருச்சி என்ஐடி இயக்குநர் சஸ்பெண்ட்
||
சென்னையில் திருநங்கைகள் உண்ணாவிரதம்
||
பெரம்பலூர், விழுப்புரத்தில் கலைஞர்
||
திரைப்பட தயாரிப்பாளர் ராமநாயுடுவுக்கு தாதாசாகேப் பால்கே விருது
||
சாம்பியன்ஸ் லீக் அட்டவணை
||
தென்ஆப்பிரிக்காவில் சாம்பியன்ஸ் லீக் போட்டி
||
சிறப்பு கட்டுரை
சிறப்பு கட்டுரை
இந்தியாவில் நீதி இல்லையா? டக்ளஸால் கொல்லப்பட்ட குடும்பத்தின் கதறல்!
......................................
அட்சய திருதியைக்கு நகை வாங்கப் போறீங்களா? உஷார்!
......................................
வாசகர்களுக்கு நன்றி 23ஆம் ஆண்டில்
......................................
அதிரடியா? அமைதியா? கனிமொழி சிறப்பு பேட்டி!
......................................
"தனித்துப் போட்டியிடத் தயார்'' டாக்டர் அன்புமணி ஆனந்த பேட்டி!
......................................
I was with Ranjitha in Bed – So what? Asks Nithyananda
......................................
இஸ்லாமிய சகோதரர்களுக்கு.....
......................................
நக்கீரன் மக்கள் செய்தியாளர் (People Journalist)
......................................
மிசௌரி தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா (படங்கள்)
......................................
நீங்கள் உண்மையான விடுதலைப் புலிகளின் பிரதிநிதியா? சிங்களவர்களின் கைக்கூலியா? - தமிழ்மாறன் பேட்டி
......................................
யுத்தம் 14 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 13 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 12 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 11 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 10 -நக்கீரன் கோபால்
......................................
தந்தை பெரியார் சொன்ன வார்த்தைகள்! - கலாம்
......................................
போராளிகளே கவனம்! ராணுவத்தின் புது சதி!
......................................
யுத்தம்! 9 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம்! 8 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 7- நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 6 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 5 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 4 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 3 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 2 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 1 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் சேலஞ்ச் - II
......................................
பெரியார் எனக்குச் சொன்ன அறிவுரை! -் கலாம்
......................................
புதிய குழு புருடா! - ஜெகத் கஸ்பர்
......................................
சதீஷ் தவான் என்னும் ஒப்பற்ற தலைவர்! - கலாம்
......................................
அப்பா வருவார்! - ஜெகத் கஸ்பர்
......................................
தலைவனுக்கான 8 விதிகள்! - அப்துல் கலாம்!
......................................
சரித்திரம் சொல்லும் உண்மைகள்! - ஜெகத் கஸ்பர்
......................................
போர் குற்றத்திற்கு நீதிகோரும் புனிதப் பயணம்! - ஜெகத்
......................................
கதவைத் திற, சூரியன் வரட்டும்! - அப்துல் கலாம்
......................................
நமக்கு விடப்பட்ட சவால்!
......................................
காட்டாமணக்கு எண்ணெயில் ஒரு அற்புதம்’ -அப்துல் கலாம்
......................................
சரியும் சாம்ராஜ்யம்! - ஜெகத் கஸ்பர்
......................................
“என் ஜனாதிபதி காலத்தில் ஓர் ஆதங்கம்!’’ - அப்துல் கலாம்
......................................
அரிய புத்தகங்கள்! - ஜெகத் கஸ்பர்
......................................
இயற்கை ஒளித்து வைத்திருக்கும் சாவிகள்! - கலாம்
......................................
யார் துரோகி?
......................................
தாய்ப்பாலில் நஞ்சு! - ஜெகத் கஸ்பர்
......................................
அடுத்த விடுதலைப் போராட்டம்! - அப்துல் கலாம்
......................................
மூன்று சக்திகள்! - அப்துல் கலாம்
......................................
அமெரிக்கா விசாரணை! குற்றவாளி கூண்டில் கொலைகார ராஜபக்சே!
......................................
இந்தியா ஆசிர்வதிக்கப்பட்ட நாடு! - அப்துல் கலாம்
......................................
ஒரு போராளியின் கடிதம்! - ஜெகத் கஸ்பர்
......................................
பிரபாகரனை கலங்க வைத்த தலைவர்கள்! - ஜெகத் கஸ்பர்
......................................
கண்ணெதிரே ஒரு வசந்தம்! - அப்துல் கலாம்
......................................
தூண்டப்பட்ட... எழுச்சியூட்டப்பட்ட மனம் ...- அப்துல் கலாம்
......................................
யுத்தப் படம் சொல்லும் பாடம்! - ஜெகத்கஸ்பர்
......................................
கோவா வழிகாட்டுகிறது! -டாக்டர் அப்துல் கலாம்
......................................
இணையதள புல்லுருவிகள்! - ஜெகத் கஸ்பர்
......................................
கனவின் விலை 36,000 கோடி! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அந்த இறுதி நாளில் - ஜெகத் கஸ்பர்
......................................
என்னுடையக் கனவுத் திட்டம் -அப்துல் கலாம்
......................................
இறுதி யுத்தகளத்தில் என்ன நடந்தது?-ஜெகத் கஸ்பர்
......................................
கலங்க வைக்கும் கடிதங்கள்! - ஜெகத்கஸ்பர்
......................................
நதிநீர் இணைப்பு - கலைஞர், ஜெயலலிதா -டாக்டர் அப்துல் கலாம்
......................................
அதிர்வுகள் கண்டு அஞ்சாது நக்கீரன்
......................................
நதிநீர் இணைப்பு- செய்ய வேண்டியது என்ன? - டாக்டர் அப்துல் கலாம்
......................................
சஞ்சனா அனுபவம்! - ஜெகத் கஸ்பர்
......................................
நீரின்றி அமையா உலகு! -டாக்டர் அப்துல் கலாம்
......................................
இயற்கையே காட்டும் தீர்வு! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
நகரை காத்த வீரன்! - ஜெகத் கஸ்பர்
......................................
முடியும்..முடியும்..நதிகளை இணைக்க முடியும்! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
நான் உங்களோடுதான் இருக்கிறேன்'' பேசுகிறார் பிரபாகரன்
......................................
வீரம் எழுதிய வரலாறு! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
பிரபாகரனின் புதிய போர் முழக்கம்! - ஜெகத் கஸ்பர்
......................................
சுடடா என் மார்பில்.. - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அன்றே எழுந்த அச்சம்! - அருட்தந்தை ஜெகத்கஸ்பர்
......................................
ஆழ்கடலில் ஒரு பயணம்! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
வரலாற்றுப் பதிவு! - ஜெகத் கஸ்பர்
......................................
நாடே தூங்கும் நேரம்.. அவர்கள் விழித்திருக்கிறார்கள் - கலாம்
......................................
ஆயிரம் கேள்வி கேளு பாப்பா! - ஜெகத்கஸ்பர்
......................................
வான் கண்டேன், திசை கண்டேன்!- டாக்டர் அப்துல் கலாம்
......................................
உயரே பறக்க வேண்டும்... அதற்கு என்ன செய்வது?- டாக்டர் கலாம்
......................................
அஞ்சாதே! -பேசுகிறார் பிரபாகரன்
......................................
கடற்கரையில் பிறந்த கனவு! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
எமது மக்களை போக விடு! - அருட்தந்தை ஜெகத்கஸ்பர்
......................................
வயது 60, மனமோ 20! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அவலத்தை தந்தவனிடமே பிச்சை! - ஜெகத் கஸ்பர்
......................................
“இடிந்த வீட்டில் பூத்த பூந்தளிர்!’ - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அவரின் முகமா அது? - ஜெகத் கஸ்பர்
......................................
சிறிய விஷயங்கள் அழகானவை! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
கதற வைக்கும் காட்சிகள்! - ஜெகத் கஸ்பர்
......................................
இளைஞர்களே, வாருங்கள் விவசாயத்துக்கு! -டாக்டர் அப்துல் கலாம்
......................................
இதோ... சாட்சி! - ஜெகத் கஸ்பர்
......................................
பழமொழியைப் பொய்யாக்கிய டெக்னாலஜி! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
பாவி ராஜபக்சே பசி தீர்ந்ததா... - ஜெகத் கஸ்பர்
......................................
பிறந்தநாள் பரிசு! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அந்த இறுதி யுத்த நாளில்...!
......................................
உலகிலேயே முதன்முறையாக...
......................................
மனசாட்சி எழுப்பும் கேள்வி - அப்துல் கலாம்
......................................
தாயை சந்திக்கும் தருணங்களில்...! -பிரபாகரன் நெகிழ்ச்சி!
......................................
ஒரு கனவு நனவானது! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அன்பா சொல்லி அம்மி நகராது -பேசுகிறார் பிரபாகரன்
......................................
கிராமத்தில் ஒரு அதிசயம் - டாக்டர் அப்துல் கலாம்
......................................
ஈழத்தை அங்கீகரிக்கும் உலகநாடுகள்! -பேசுகிறார் பிரபாகரன்!
......................................
"தமிழீழம் மலரும்' -பேசுகிறார் பிரபாகரன்!
......................................
ஐயா, எங்களில் யாருமே அனாதைகள் இல்லை! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
எல்லை மீறும் ஸ்ரீலங்கா தூதரகம்! - ஜெகத் கஸ்பர்
......................................
மூதாட்டி தந்த தன்னம்பிக்கை! - டாக்டர் கலாம்
......................................
தேவை லட்சியத் தலைவர்கள்! - டாக்டர் கலாம்
......................................
யாரை எனக்குப் பிடிக்காது -பேசுகிறார் பிரபாகரன்
......................................
முடியும் என்று நீ நம்பு! -டாக்டர் அப்துல் கலாம்
......................................
காதல்... கல்யாணம்... வரதட்சனை! பேசுகிறார் பிரபாகரன்!
......................................
வருகிறது மௌனப்புரட்சி! டாக்டர் அப்துல் கலாமின் இளைஞர்கள் காலம்! (2)
......................................
நான் சர்வாதிகாரியா? பேசுகிறார் பிரபாகரன்!
......................................
டாக்டர் அப்துல் கலாமின் இளைஞர்கள் காலம்!
......................................
துன்பம் தந்தவனுக்கே அதனை திருப்பிக் கொடு'' - பேசுகிறார் பிரபாகரன்
......................................
என் மகன் என்னைப்போல் சண்டைக்காரன்'' -பிரபாகரன்
......................................
மாவீரன் பால்ராஜ்! -ஜெகத் கஸ்பர்
......................................
வரலாறு படைத்த பிரபாகரன்!
......................................
யுத்த துரோகம்! -ஜெகத் கஸ்பர்
......................................
உயிருடன் உள்ளார் பிரபாகரன்!
......................................
இறுதிப் போர்! களத்திலேயே நிற்பேன்! பிரபாகரன் வீரசபதம்!
......................................
நொறுங்கியது ஜெ. ஆட்சியின் பொய் வழக்கு!
......................................
அது கடையடைப்புஅல்ல... உயிர்த்துடிப்பு!
......................................
ஆஸ்கர் சிகரத்தில் வெற்றிக்கொடியேற்றிய ஏ.ஆர்.ரகுமான்!
......................................
வழக்கே வா! மிரட்டும் ராஜபக்சே தூதுவர் அம்சாவுக்கு நக்கீரன் சவால்!
......................................
இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்த மாநில அளவிலான கள ஆய்வு முடிவுகள்
......................................
மக்களே யோசியுங்கள்! முத்துக்குமார் எழுதிய கடைசிக்கடிதம்
......................................
இலங்கை இனப்பிரச்சினை
......................................
நோபல் பரிசு 2008
......................................
மும்பை தாக்குதல்: 5 பீகார் எம்.பிக்கள் ராஜினாமா!
......................................
ஏகன்
......................................
செல்வராகவனின் புதிய படம்
......................................
|
: Email this Article
திங்கட்கிழமை, 21, டிசம்பர் 2009 (10:30 IST)
தா
தாவீரமணியின் ஏரியா வில் காக்கிச் சட்டை கள். கைது செய்வதற் காகச் செல்லவில்லை. "ஒரு காரியம் உன்னால் ஆக வேண்டும்' என்று கேட்பதற்காகச் செல்கிறார்கள். தன் இருப்பிடத்தில், உடம்பைத் தங்கத்தில் இழைத்ததுபோல பளபளக்கும் நகைகளுடன் வீரமணி அட்டகாசமாக உட்கார்ந்திருக்க, அவன் முன்னே பவ்யமாக நிற்கிறார்கள் தமிழக-கர்நாடக போலீசார். அந்த நேரத்தில் அவர்களிடம் விறைப்பாக இருந்தது, கஞ்சி போட்டு இஸ்திரி செய்யப்பட்டிருந்த அவர்களது யூனிஃபார்ம் மட்டும்தான்.
""இன்னா மேட்டரு?'' - வீரமணியிட மிருந்து அதட்டலான ஒரு குரல் வருகிறது.
""உன்னோட உதவி வேணும்''- பதவிசாகச் சொல்கிறார்கள் போலீசார்.
வீரமணியிடம் அவர்கள் உதவி கேட்டுப் போவதொன்றும் புதிதல்ல. கலைஞரை நள்ளிரவில் கைது செய்ததைக் கண்டித்து சென்னை யில் தி.மு.க. நடத்திய பேரணி யின்போது கடற்கரைச் சாலையில் பத்திரிகையாளர்கள் மீதும் கட்சியினர் மீதும் கொடுந்தாக்குதல் நடத்தப்பட்டது. கல்லெறி, உருட்டுக்கட்டை அடி, அரிவாள் வெட்டு என படுபயங்கர மாக நடந்த தாக்குதலை போலீசின் தூண்டுதலோடும், துணையோடும், பாது காப்போடும் நடத்தியவர்கள் வீரமணியின் ஆட்கள்தான். அதற்கான ஆதாரத்தை அட்டைப்படத்திலேயே வெளியிட்டது நக்கீரன். பிரஸ் கவுன்சிலிலும் நக்கீரன்தான் ஆதாரமாக நின்றது.
அந்த தாதா வீரமணியின் எதிரில்தான் பவ்யம் காட்டி நின்றது போலீஸ்.
""ம்... சொல்லு.''
""நக்கீரன் கோபால தூக்கணும். இவங்க கர்நாடகாவிலிருந்து வந்திருக்காங்க. ட்ரை பண்ணிட்டாங்க. முடியல.. நீதான் ஹெல்ப் பண்ணணும்.''
சட்டென நிமிர்ந்து உட்கார்ந்த வீரமணி, ""தோடா... வந்துட்டாரு... ரவுடி, போக்கிரி, பார்ட்டி ஆளுங்கன்னா நம்ம கையில சொல்லு. ஆனா, பேப்பர்காரங்க மேட்டர் வாணாம். அதுலேயும் நக்கீரன் பேப்பர்னா நம்ம கையில வராதே. வீரப்பனையே ஒத்தைக்கு ஒத்தையா சந்திச்சவருய்யா. நெஞ்சுல மாஞ்சா சோறு உள்ள மனுசன். நக்கீரனுக்கும் நமக்கும் பேஜார் பண்ண வாணாம்... தெர்தா.''.
-போலீஸ் தரப்பில் எவ்வளவோ சொல்லியும் வீரமணி சம்மதிக்கவில்லை. இந்த விவரத்தை தம்பி சிவாவிடம் அதே இன்ஸ்பெக்டர்தான் சொல்லியிருக்கிறார். சிவா, அட்வகேட் பெருமாளிடம் சொல்ல, அவர் மூலம் எனக்குத் தெரிய வந்தது.
சிறையில் சிவாவைப் பார்த்துவிட்டு வந்த அட்வகேட் பெருமாள் முழு விவரங்களையும் என்னிடம் சொல்லி விட்டு, ""அண்ணாச்சி.... போலீஸோட டார்கெட் முழுக்க முழுக்க நீங்கதான். சிவாகிட்டே போலீஸ் சொன்னதைப் பார்த்தால் இது க்ளியரா தெரியுது. உங்களைப் பிடிக்க முடியாததால சிவாவைக் கொண்டு போயிட்டாங்க. அவங்க எப்படியும் உங்களை குறி வைப்பாங்க. ராஜ்குமார் கிட்நாப் கேஸை கையில எடுக்கலாம். நாம ஆண்டிசிபேட்ரி போடுறதுதான் நல்லது'' என்றார். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததுமே, குறிப்பிட்ட நாள் ஃபிக்ஸ் பண்ணி அதற்குள் ஒரு பயங்கரத்தை நடத்திவிட வேண்டும் என காவல்துறையினருக்கு அசைன்மெண்ட் தரப்பட்டிருந்தது. அந்த ஃபிக்ஸிங் டயம் நெருங்கிவிட்டதால்தான் போலீஸ் எப்படியாவது என்னைப் பிடித்துவிட பரபரத்தது. இத்தனைக்கும், உச்சநீதி மன்ற தீர்ப்பினால் ஜெ. பதவி விலகி, ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பு வகித்த நேரம். ஆனாலும் அவர் தான் அந்த பயங்கரத் திட்டத்தின் இயக்குநர். அந்த பயங்கரம் பற்றி பிறகு சொல்கிறேன்.
அட்வகேட் பெருமாள் சொன்னது சரிதான் என்பதை நிரூபிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருந்தன. அருப்புக்கோட்டையில் உள்ள எங்கள் வீட்டில் அப்பா அம்மாவுடன் எனது மூத்த சகோதரி குடும்பத்துடன் தங்கி யிருந்தனர். வயதான நிலையிலிருந்த அவர்களையும் போலீசின் கண்காணிப்பு கள் விட்டுவைக்கவில்லை. அங்கே சென்ற அங்குசாமி என்ற சி.ஐ.டி. என்னைப் பற்றிய விவரங்களை மிரட்டல் தொனியில் கேட்டிருக்கிறார். இந்தத் தகவல் எனக்குத் தெரிந்ததும் மாவட்ட எஸ்.பி, டி.ஜி.பி, உள்துறைச் செயலாளர், பிரஸ் கவுன்சில், மனித உரிமைக் கமிஷன் ஆகியவற்றுக்கு புகார் தந்திகளை அனுப்பினோம்.
தீவிரமான திட்டத்துடன் ஜெ அரசின் போலீசார் செயல்படுவது பட்டவர்த்தனமாக தெரிந்துவிட்ட நிலையில், நமது சீனியர் அட்வகேட் ரங்கா, ஹைகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். நக்கீரன் கோபாலை கைது செய்யக்கூடாது என்பதுதான் அந்த மனுவின் சாராம்சம். அந்த மனு விசாரணையில் இருந்த நிலையிலும், போலீசின் நடவடிக்கைகள் தொடர்ந்தபடியே இருந்தன.
சென்னை ஏர்போர்ட்டிலிருந்து நக்கீரன் அலுவலகத்திற்கு காரில் வந்து கொண்டிருக்கிறேன். டிரைவர் மோகன்தான் ஓட்டிக் கொண்டிருக்கிறார். தேனாம்பேட்டை வந்ததும் எங்களுக்குப் பின்னால் ஒரு டாடா சுமோ வந்தது. மோகன் அதை கண்ணாடி வழியே கவனித்துவிட்டு, ""அண்ணே... சுமோக்குள்ளே 4 பேரு இருக்காங்க. நம்ம வண்டியைத்தான் ஃபாலோ பண்ணுறாங்க'' என்றார். ""நீங்க நேரா ஆஃபீசுக்கு விடுங்க மோகன்'' என்றேன்.
அண்ணாசாலையிலிருந்து வலது புறம் திரும்பி ராயப் பேட்டையில் உள்ள நக்கீரன் அலுவலகத் திற்குள் எனது கார் நுழைந்தது. பின்னால் வந்த சுமோ, எங்கள் அலுவலகத்தைக் கடந்து நேராக சென்றுவிட்டது. வேறு ஏதாவது வேலையாக இந்தப் பக்கம் செல்கிறார்களோ என நினைத்து, அலுவலகப் பணிகளில் மூழ்கிவிட் டேன். ஒன்றரை மணி நேரம் கழித்து, வீட்டிற்குப் புறப்பட்டேன். அமீர் மகால் அரண்மனையைத் தாண்டி கார் சென்ற போது, இடதுபக்கம் கவனித்த மோகன், ""அண்ணே.. அங்கே பாருங்க'' என்றார். அந்த டாடா சுமோ காத்துக் கொண்டி ருந்தது.
மறுபடியும் எனது காரை ஃபாலோ செய்தபடியே அந்த சுமோ வர ஆரம்பித்தது. கீழ்ப்பாக்கம் டெய் லர்ஸ் ரோடு வரை பின்தொடர்ந்தது சுமோ. டெய்லர்ஸ் சாலை அருகில் உள்ள அப்பா கார்டனில் இருந்த என் வீட்டுக்கு சென்ற போது, பின்தொடர்ந்த சுமோவை பார்க்க முடியவில்லை. நட மாட்டத்தை உன்னிப் பாகக் கவனிப்பதையும், எந்த சந்தர்ப்பத்தில் தூக்க லாம் என கண்கொத்திப் பாம்பாக தமிழக போலீசார், செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் அப் பட்டமாகத் தெரிந்தது.
சீனியர் அட்வகேட் ரங்கா, ஹை கோர்ட்டில் நமது சார்பில் இன்னொரு மனுவைத் தாக்கல் செய்தார். மனுவைப் பரிசீலித்த நீதியரசர் கோவிந்தராஜன், ""ஏற்கனவே ஒரு பெட்டிஷன் போட்டு, விசாரணையில் உள்ளதே'' என்றதும், சட்டென அட்வகேட் ரங்கா சொன்னார், ""யுவர் ஹானர்... அது நக்கீரன் கோபாலை கைது செய்யக்கூடாதுங்கிற பெட்டிஷன். இது நக்கீரன் கோபாலை கடத்தக் கூடாதுங்கிற பெட்டிஷன்'' என்றார். நீதிமன்றமே திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தது.
தம்பி சிவாவைப் போலவே என்னையும் கடத்திச் சென்று, காட்டில் பிடிபட்டதாக காட்டுவதற்கு போலீசார் படாதபாடுபட்டுக் கொண்டிருந்த னர். நமது அட்வகேட் பெருமாள், டெல்லிக்குச் சென்று சுப்ரீம் கோர்ட் டில் ஸ்டே ஆர்டர் வாங்க முடியும் என்ற முயற்சியில் தீவிரமானார். ஹைகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்வதற்கான பணிகளும் வேக மெடுத்தன.
தம்பி காமராஜும் எனது செயலாளர் சிவக்குமாரும் அட்வகேட் என்.ஆர். இளங்கோவை சந்தித் தனர். போலீசின் நெருக் கடிகள் பற்றி தம்பியின் நண்பரான இளங் கோவுக்கு நன்றாகத் தெரியும். அவரது சீனியர் என்.நட ராஜன் (என்.என்.) மூலம் ஹை கோர்ட்டில் முன் ஜாமீன் மனுவை மூவ் பண்ணுவது என முடிவானது. தம்பி அதற்கான பணிகளை ரொம்பவும் துரிதமாக மேற்கொண்டார். ரொம்பவும் பிஸியான சீனியர் அட்வகேட் என்.என். நமக்காக ஆஜராக ஒப்புக் கொண்டார்.
நமது முன்ஜாமீன் மனு, நீதியரசர் கனகராஜ் அவர்களிடம் விசாரணைக்கு வந்தது. நமக்காக என்.என். ஆஜரானார். வாதாடுவதிலும் வழக்காடும் அனுபவத் திலும் புலி. அவர் நின்றால் கோர்ட்டே கம்பீரமாகத் தோற்றமளிக்கும். அந்தத் தோற்றத்துடன் கோர்ட்டில் நின்றது சட்டப்புலி.
இந்திய நீதிமன்ற வரலாற்றில் அதுவரையில்லாத வரலாற்று உத்தரவைப் பெற்றது நக்கீரன்.
அது...
-(யுத்தம் தொடரும்)
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்
*
Indicates mandatory fields
Name
*
:
Email Id
*
:
Loading...
Left:
Press
Ctrl+g
to toggle between English and Tamil
Comment
*
(500)
:
கருத்துக்கள்(1)
Name : thanjavur krishna from qatar
Date :12/24/2009 1:21:38 AM
கோபால் அய்யா, நீங்கள் எழுதும் உண்மை தொடர் நன்று. கஸ்பர் உங்களிடம் முப்பது ஆயிரம் வாங்கிகிட்டு இந்திய ஐ.பி.இக்கு வேலை செய்கிறார். உங்களையும் ஒரு நாள் குறை சொல்ல போகிறார் வெகு விரைவில். இது நான் சொல்லி உங்களுக்கு திரிய வேண்டியதில்லை.
Home
|
About us
|
Register
|
How To Subscribe
|
Free Newsletter
|
Font Help
|
Ad Tariff
|
Faq
|
Contact
|
RSS
Copyright © 2008 Nakkheeran.in . All rights reserved.