24/7 நியூஸ்
நக்கீரன் டாக்கீஸ்
நந்தவனம்
வெப் டிவி
கேலரி
பதிப்பகம்
ரிசல்ட்
முந்தைய நியூஸ்
Home
நக்கீரன்
சினிக்கூத்து
பாலஜோதிடம்
ஓம்
இனிய உதயம்
பொது அறிவு
ஹெல்த் சாய்ஸ்
எங்களை பற்றி
சந்தா
சந்தா புதுப்பிக்க
விளம்பர விபரம்
தொடர்புக்கு
Toolbar
Free News Letter
Login
அண்மைச் செய்திகள்
காஷ்மீரில் ராணுவ வாகனத்தில் குண்டு வெடிப்பு
||
ராகிங் பற்றி விழிப்புணர்வு கையெழுத்துப் பேரணி
||
மதுரை: முத்திரையர் சங்கத்தினர் போராட்டம்
||
மனஅழுத்தத்தை குறைக்கும் இன்டர்நெட்
||
சோனியாவுக்கு சர்வதேச காங்கிரஸ் வாழ்த்து
||
கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்
||
15 வயது சிறுமியின் திருமணம் ரத்து
||
பாமக துணையில்லாமல் ஆட்சி அமைக்க முடியாது: அன்புமணி ராமதாஸ்
||
திருச்சி என்ஐடி இயக்குநர் சஸ்பெண்ட்
||
சென்னையில் திருநங்கைகள் உண்ணாவிரதம்
||
பெரம்பலூர், விழுப்புரத்தில் கலைஞர்
||
திரைப்பட தயாரிப்பாளர் ராமநாயுடுவுக்கு தாதாசாகேப் பால்கே விருது
||
சாம்பியன்ஸ் லீக் அட்டவணை
||
சிறப்பு கட்டுரை
சிறப்பு கட்டுரை
இந்தியாவில் நீதி இல்லையா? டக்ளஸால் கொல்லப்பட்ட குடும்பத்தின் கதறல்!
......................................
அட்சய திருதியைக்கு நகை வாங்கப் போறீங்களா? உஷார்!
......................................
வாசகர்களுக்கு நன்றி 23ஆம் ஆண்டில்
......................................
அதிரடியா? அமைதியா? கனிமொழி சிறப்பு பேட்டி!
......................................
"தனித்துப் போட்டியிடத் தயார்'' டாக்டர் அன்புமணி ஆனந்த பேட்டி!
......................................
I was with Ranjitha in Bed – So what? Asks Nithyananda
......................................
இஸ்லாமிய சகோதரர்களுக்கு.....
......................................
நக்கீரன் மக்கள் செய்தியாளர் (People Journalist)
......................................
மிசௌரி தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா (படங்கள்)
......................................
நீங்கள் உண்மையான விடுதலைப் புலிகளின் பிரதிநிதியா? சிங்களவர்களின் கைக்கூலியா? - தமிழ்மாறன் பேட்டி
......................................
யுத்தம் 14 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 13 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 12 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 11 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 10 -நக்கீரன் கோபால்
......................................
தந்தை பெரியார் சொன்ன வார்த்தைகள்! - கலாம்
......................................
போராளிகளே கவனம்! ராணுவத்தின் புது சதி!
......................................
யுத்தம்! 9 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம்! 8 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 7- நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 6 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 5 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 4 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 3 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 2 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 1 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் சேலஞ்ச் - II
......................................
பெரியார் எனக்குச் சொன்ன அறிவுரை! -் கலாம்
......................................
புதிய குழு புருடா! - ஜெகத் கஸ்பர்
......................................
சதீஷ் தவான் என்னும் ஒப்பற்ற தலைவர்! - கலாம்
......................................
அப்பா வருவார்! - ஜெகத் கஸ்பர்
......................................
தலைவனுக்கான 8 விதிகள்! - அப்துல் கலாம்!
......................................
சரித்திரம் சொல்லும் உண்மைகள்! - ஜெகத் கஸ்பர்
......................................
போர் குற்றத்திற்கு நீதிகோரும் புனிதப் பயணம்! - ஜெகத்
......................................
கதவைத் திற, சூரியன் வரட்டும்! - அப்துல் கலாம்
......................................
நமக்கு விடப்பட்ட சவால்!
......................................
காட்டாமணக்கு எண்ணெயில் ஒரு அற்புதம்’ -அப்துல் கலாம்
......................................
சரியும் சாம்ராஜ்யம்! - ஜெகத் கஸ்பர்
......................................
“என் ஜனாதிபதி காலத்தில் ஓர் ஆதங்கம்!’’ - அப்துல் கலாம்
......................................
அரிய புத்தகங்கள்! - ஜெகத் கஸ்பர்
......................................
இயற்கை ஒளித்து வைத்திருக்கும் சாவிகள்! - கலாம்
......................................
யார் துரோகி?
......................................
தாய்ப்பாலில் நஞ்சு! - ஜெகத் கஸ்பர்
......................................
அடுத்த விடுதலைப் போராட்டம்! - அப்துல் கலாம்
......................................
மூன்று சக்திகள்! - அப்துல் கலாம்
......................................
அமெரிக்கா விசாரணை! குற்றவாளி கூண்டில் கொலைகார ராஜபக்சே!
......................................
இந்தியா ஆசிர்வதிக்கப்பட்ட நாடு! - அப்துல் கலாம்
......................................
ஒரு போராளியின் கடிதம்! - ஜெகத் கஸ்பர்
......................................
பிரபாகரனை கலங்க வைத்த தலைவர்கள்! - ஜெகத் கஸ்பர்
......................................
கண்ணெதிரே ஒரு வசந்தம்! - அப்துல் கலாம்
......................................
தூண்டப்பட்ட... எழுச்சியூட்டப்பட்ட மனம் ...- அப்துல் கலாம்
......................................
யுத்தப் படம் சொல்லும் பாடம்! - ஜெகத்கஸ்பர்
......................................
கோவா வழிகாட்டுகிறது! -டாக்டர் அப்துல் கலாம்
......................................
இணையதள புல்லுருவிகள்! - ஜெகத் கஸ்பர்
......................................
கனவின் விலை 36,000 கோடி! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அந்த இறுதி நாளில் - ஜெகத் கஸ்பர்
......................................
என்னுடையக் கனவுத் திட்டம் -அப்துல் கலாம்
......................................
இறுதி யுத்தகளத்தில் என்ன நடந்தது?-ஜெகத் கஸ்பர்
......................................
கலங்க வைக்கும் கடிதங்கள்! - ஜெகத்கஸ்பர்
......................................
நதிநீர் இணைப்பு - கலைஞர், ஜெயலலிதா -டாக்டர் அப்துல் கலாம்
......................................
அதிர்வுகள் கண்டு அஞ்சாது நக்கீரன்
......................................
நதிநீர் இணைப்பு- செய்ய வேண்டியது என்ன? - டாக்டர் அப்துல் கலாம்
......................................
சஞ்சனா அனுபவம்! - ஜெகத் கஸ்பர்
......................................
நீரின்றி அமையா உலகு! -டாக்டர் அப்துல் கலாம்
......................................
இயற்கையே காட்டும் தீர்வு! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
நகரை காத்த வீரன்! - ஜெகத் கஸ்பர்
......................................
முடியும்..முடியும்..நதிகளை இணைக்க முடியும்! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
நான் உங்களோடுதான் இருக்கிறேன்'' பேசுகிறார் பிரபாகரன்
......................................
வீரம் எழுதிய வரலாறு! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
பிரபாகரனின் புதிய போர் முழக்கம்! - ஜெகத் கஸ்பர்
......................................
சுடடா என் மார்பில்.. - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அன்றே எழுந்த அச்சம்! - அருட்தந்தை ஜெகத்கஸ்பர்
......................................
ஆழ்கடலில் ஒரு பயணம்! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
வரலாற்றுப் பதிவு! - ஜெகத் கஸ்பர்
......................................
நாடே தூங்கும் நேரம்.. அவர்கள் விழித்திருக்கிறார்கள் - கலாம்
......................................
ஆயிரம் கேள்வி கேளு பாப்பா! - ஜெகத்கஸ்பர்
......................................
வான் கண்டேன், திசை கண்டேன்!- டாக்டர் அப்துல் கலாம்
......................................
உயரே பறக்க வேண்டும்... அதற்கு என்ன செய்வது?- டாக்டர் கலாம்
......................................
அஞ்சாதே! -பேசுகிறார் பிரபாகரன்
......................................
கடற்கரையில் பிறந்த கனவு! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
எமது மக்களை போக விடு! - அருட்தந்தை ஜெகத்கஸ்பர்
......................................
வயது 60, மனமோ 20! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அவலத்தை தந்தவனிடமே பிச்சை! - ஜெகத் கஸ்பர்
......................................
“இடிந்த வீட்டில் பூத்த பூந்தளிர்!’ - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அவரின் முகமா அது? - ஜெகத் கஸ்பர்
......................................
சிறிய விஷயங்கள் அழகானவை! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
கதற வைக்கும் காட்சிகள்! - ஜெகத் கஸ்பர்
......................................
இளைஞர்களே, வாருங்கள் விவசாயத்துக்கு! -டாக்டர் அப்துல் கலாம்
......................................
இதோ... சாட்சி! - ஜெகத் கஸ்பர்
......................................
பழமொழியைப் பொய்யாக்கிய டெக்னாலஜி! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
பாவி ராஜபக்சே பசி தீர்ந்ததா... - ஜெகத் கஸ்பர்
......................................
பிறந்தநாள் பரிசு! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அந்த இறுதி யுத்த நாளில்...!
......................................
உலகிலேயே முதன்முறையாக...
......................................
மனசாட்சி எழுப்பும் கேள்வி - அப்துல் கலாம்
......................................
தாயை சந்திக்கும் தருணங்களில்...! -பிரபாகரன் நெகிழ்ச்சி!
......................................
ஒரு கனவு நனவானது! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அன்பா சொல்லி அம்மி நகராது -பேசுகிறார் பிரபாகரன்
......................................
கிராமத்தில் ஒரு அதிசயம் - டாக்டர் அப்துல் கலாம்
......................................
ஈழத்தை அங்கீகரிக்கும் உலகநாடுகள்! -பேசுகிறார் பிரபாகரன்!
......................................
"தமிழீழம் மலரும்' -பேசுகிறார் பிரபாகரன்!
......................................
ஐயா, எங்களில் யாருமே அனாதைகள் இல்லை! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
எல்லை மீறும் ஸ்ரீலங்கா தூதரகம்! - ஜெகத் கஸ்பர்
......................................
மூதாட்டி தந்த தன்னம்பிக்கை! - டாக்டர் கலாம்
......................................
தேவை லட்சியத் தலைவர்கள்! - டாக்டர் கலாம்
......................................
யாரை எனக்குப் பிடிக்காது -பேசுகிறார் பிரபாகரன்
......................................
முடியும் என்று நீ நம்பு! -டாக்டர் அப்துல் கலாம்
......................................
காதல்... கல்யாணம்... வரதட்சனை! பேசுகிறார் பிரபாகரன்!
......................................
வருகிறது மௌனப்புரட்சி! டாக்டர் அப்துல் கலாமின் இளைஞர்கள் காலம்! (2)
......................................
நான் சர்வாதிகாரியா? பேசுகிறார் பிரபாகரன்!
......................................
டாக்டர் அப்துல் கலாமின் இளைஞர்கள் காலம்!
......................................
துன்பம் தந்தவனுக்கே அதனை திருப்பிக் கொடு'' - பேசுகிறார் பிரபாகரன்
......................................
என் மகன் என்னைப்போல் சண்டைக்காரன்'' -பிரபாகரன்
......................................
மாவீரன் பால்ராஜ்! -ஜெகத் கஸ்பர்
......................................
வரலாறு படைத்த பிரபாகரன்!
......................................
யுத்த துரோகம்! -ஜெகத் கஸ்பர்
......................................
உயிருடன் உள்ளார் பிரபாகரன்!
......................................
இறுதிப் போர்! களத்திலேயே நிற்பேன்! பிரபாகரன் வீரசபதம்!
......................................
நொறுங்கியது ஜெ. ஆட்சியின் பொய் வழக்கு!
......................................
அது கடையடைப்புஅல்ல... உயிர்த்துடிப்பு!
......................................
ஆஸ்கர் சிகரத்தில் வெற்றிக்கொடியேற்றிய ஏ.ஆர்.ரகுமான்!
......................................
வழக்கே வா! மிரட்டும் ராஜபக்சே தூதுவர் அம்சாவுக்கு நக்கீரன் சவால்!
......................................
இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்த மாநில அளவிலான கள ஆய்வு முடிவுகள்
......................................
மக்களே யோசியுங்கள்! முத்துக்குமார் எழுதிய கடைசிக்கடிதம்
......................................
இலங்கை இனப்பிரச்சினை
......................................
நோபல் பரிசு 2008
......................................
மும்பை தாக்குதல்: 5 பீகார் எம்.பிக்கள் ராஜினாமா!
......................................
ஏகன்
......................................
செல்வராகவனின் புதிய படம்
......................................
|
: Email this Article
வெள்ளிக்கிழமை, 13, நவம்பர் 2009 (10:15 IST)
மே
17. முள்ளிவாய்க்கால் கடற்கரை. பின் பகல். எங்கு பார்க்கினும் பிணங்களும் உயிர் ஏங்கும் காயமுற்றவர்களும். வெயிலின் வெம்மை ஒருபுறம், இடைவிடாது பொழியப்பட்ட வெடிகுண்டுகள்- எறிகணைகளின் தீ மறுபுற மென கடற்கரை மணல்வெளி கந்தகப் பரப்பாய் கிடக்கிறது. நிறைமாத கர்ப்பிணித்தாய், குனிய முடியாமல் குனிந்தும், ஊர்ந்துமாய் கொலைக் களத்தை கடக்க முயல்கிறார். வேகமாய் நகரவும் முடியாமல் அம்மணல்வெளியின் நெருப் புத் தணலை தாங்கவும் முடியாத வலியின் தவிப்பு. சற்று தூரத்தில் தன்னைப்போலொரு இளம்தாய் எறிகணை குண்டுக்கு இரையாகி இறந்து கிடக்கிறார். அவரது கால்களில் காலணி அப்படியே இருக்கிறது. ஊர்ந்து நகர்கையில் எறிகணை தாக்கியிருக்க வேண் டும். உயிரோடு தவிக்கும் இந்தத்தாய் மெல்ல மாய் பிணமாகக் கிடந்தவ ரின் காலணிகளை அகற்றி, தான் அணிந்து கொள்கிறார். மரண நிழல் கவிந்த மண்ணில் பயணம் தொடர்கிறது. உயிர்தப்பி வவுனியா வந்து, வதை முகாமில் பதிவாகி, ஆண்பிள்ளையொன்றை பெற்றெடுத்து தாயாகி, இப்போது உறவினர்களின் உதவியில் கொழும்பு வந்துவிட்டார். ஆனால் கந்தக நிலத்தில் தனக்கு காலணி தந்த உயிரற்ற அந்தத் தாயின் காட்சியும் நினைவும் சதா அவரைப் பிழிகிறது. ஆறுதலின்றித் தவிக்கிறார். ஆற்றுப்படுத்தல் (Counselling) அருட்பணி செய்துவரும் அருட் தந்தையொருவர் பகிர்ந்துகொண்ட அனுபவம் இது. போர்க்கொடுமைகளை அனுபவித்தும் பார்த்தும் வந்த அப்பாவி மனித ஜீவன்களின் கதைகளையும் அவர்களை ஆற்றுப்படுத்துவதிலுள்ள சவால்களையும் அவர் விவரிக்க மனது தாங்கவில்லை. ஒன்றல்ல, இரண்டல்ல... அவலத்தின் நெடுங்கதையாய்...
பதினாறு வயதில் விடுதலைப்போரில் இணைந்த அந்த மாணவன் இரு வாரங்களுக்கு முன்புவரை உயிரோடிருந்த இளைஞன். வயது 26. கடைசி சண்டையில் வீரமரணம் தழுவாது உயிரோடிருந்தவர்களில் ஒருவர். காடு கடலென அலைந்து பிறந்த ஊர் வந்திருக்கிறார். உறவுகள் உயிரோடிருக் கிறார்களா, இருந்தால் எங்கே என்ற விபரங் களெல்லாம் தெரியவில்லை. காட்டிக்கொடுக் கும் பலர் ஊருக்குள் ஊடுருவியிருப்பது மட்டும் அவனுக்குத் தெரிகிறது. சரணடைய முடிவெடுத்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியை நாடுகிறான். ""சண் டைக் களத்தில் மட்டுமே சரணடையும் ஒழுங்குகளை செஞ்சிலுவைச் சங்கம் செய்ய முடியும். போர் முடிந்ததாய் அறிவிக்கப்பட்ட பின் தங்களால் அதைச் செய்யமுடியாது'' என்பதை எடுத்துச் சொல்லும் அவர்கள் வேறொரு தொண்டு நிறுவனத்தோடு அவனை தொடர்புபடுத்திவிட்டார்கள். அந்நிறுவனம் அத்தமிழ் இளைஞனை காவல்நிலையத்தில் ஒப்படைத்து தயவு செய்து சித்ரவதை எதுவும் செய்யாதீர்கள், போர்க் கைதியாய் நடத்துங் கள் என மன்றாடி விடைபெறுகிறது. நான்கு நாட்களுக்குப்பின் அந்த இளைஞனின் பிணத்தை பெற்றுக்கொள்ளும்படி காவல்நிலை யத்திலிருந்து செய்தி வருகிறது. ""முல்லைத் தீவில் புலிகள் ஆயுதங்களை புதைத்து வைத் திருக்கும் இடங்களை அடையாளம் காட்டக் கூட்டிச் சென்றோம். தப்பியோடி நந்திக் கடலில் குதித்து தற்கொலை செய்துகொண் டார்'' என்று மிகச் சாதாரணமானதோர் செய்தியாகச் சொல்லி விடை கொடுத்திருக் கிறார்கள்.
ஊரறியாமல் உலகறியாமல் இன்னும் எத்தனை தமிழ் உயிர்கள் அறுக்கப்படுகின் றன... எத்தனைபேரது தாய்மை மலடாக்கப் படுகிறதென்பதெல்லாம் நமக்குத் தெரியாது. உலக அளவில் மிகவும் மதிக்கப்படும் ""மனித உரிமைகள் கண்காணி (HRW) என்ற அமைப்பின் ஆசிய இயக்குநர் பிராட் ஆடம்ஸ் சமீபத்தில் இலங்கையின் இன்றைய மனித உரிமைகள் நிலை பற்றி குறிப்பிட்டுக் கூறியிருக்கிறார். ""மனித உரிமை களைப் பொறுத்தவரை உலகில் மிக ஆபத்தான நாடுகளில் ஒன்றாக ஸ்ரீலங்கா இன்று திகழ்கிறது. ஒரு தேசத்தின் உள்நாட்டுச் சட்டங் களுக்கு உள்ள அனைத்து தன்மை களும் மனித குலத்திற்குப் பொது வாகவென வார்க்கப்பட்டுள்ள அனைத்துலக மனிதாபிமானச் சட் டங்களுக்கும் உண்டு. அச்சட்டங் களை ஒருபொருட்டாக ஸ்ரீலங்கா மதிக்கவில்லை. மிகக்குறைந்தபட்சம் போர்க்கைதிகளையும், அகதி மக்களையும் முறைப்படி பதிவு செய்யும் கடமையைக்கூட ஸ்ரீலங்கா செய்ய வில்லை.''
பின் நவீனத்துவ (Post Modernism) கருத்தியல் விரிந்து வேரூன்றிய இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தையதான காலத்தில் மனிதகுலத் திற்குப் பொதுவான மனிதாபிமானச் சட்டங்களை அரசியற் களத்திற்கு நகர்த்துகின்ற ஆற்றலாக விழிப்புணர்வு பெற்ற குடிமக்களாலான "பொதுவெளிகள்'' (Civil Society) முன்னின்று முக்கிய பங்காற்றியுள்ளன. ஈழத்தமிழ் மக்களுக்கான அத்தகு பொதுவெளிகள் தமிழர் செறிவுடன் வாழும் ஐரோப்பிய - வடஅமெரிக்க நாடுகளில் இன்று வலுவாக உருவாகி வருவதை அவதானிக்க முடிகிறது. அப்படியான பொதுவெளி தமிழகம்-இந்தியாவில் வேண்டுமென்பதும், ஈழ மக்களுக்காய் இந்திய மக்களாட்சி அமைப்புகள், அலகுகள், அரசியற்கட்சி களுடன் உரையாடுகின்ற, வாதாடுகின்ற, மன்றாடுகின்ற பணியில் அத்தனை அரசியற் சக்திகளோடும் அப்பொதுவெளி ஈடுபட வேண்டுமென்பதுமே நம் அவா.
நக்கீரன் படிக்கிறவர்களில் சிலர் என்னைக் கேட்பது ""நீங்கள் ஏன் கலைஞரை விமர்சிப்பதில்லை?'' இக் கேள்விக்கான பதில் இதுதான் : நாற்பதாண்டு கால விடுதலைப் போராட்டம் கொடூரமாகச் சிதையுண்டு, சகல நம்பிக்கைகளும் தகர்ந்து போய் எதிர்காலம் சூன்யமாகி நிற்கும் அம்மக்களுக்கு நாம் ஏதேனும் உண்மையில் செய்யக்கூடுமானால் அது "அம்மக்களுக் கானதோர் பொது அரசியல், மனிதாபிமானக்' கருத்தினை இங்கு உருவாக்குவது, அதை நம் நாட்டின் அரசாங்கக் கொள்கையாக மாற்றிட அரசியற் கட்சிகள், ஊடக வெளி, பாராளுமன்றம் என பன்முகக் களங்களூடே உழைப்பது. அதை விடுத்து ஈழமக்களின் பேரழிவை கலைஞருக்கும் தி.மு.க.விற்கும் எதிரான அரசியலாக இங்கு கட்டமைக்க முயல்வது அம் மக்களுக்கு எப்பயனையும் தந்துவிடப் போவதுமில்லை, இன்றைய சூழலில் அத்தகு அணுகுமுறை ஏற்புடையதுமல்ல. கட்சி அரசியல், தேர்தல் அரசியல் என்ற முரண்பாடுகளுக்குள் சிக்கி கந்தலாகிக் கிடக்கும் ஈழப்பிரச்சனையில் மிச்சமிருக்கிற சன்னமான சிறு நம்பிக்கைகளையும் பட்டுப்போகச் செய்கிற அணுகுமுறையாகவே அது அமையும். இன் னொன்று கலைஞருக்கோ, தி.மு.க.விற்கோ துரோகி என்று பட்டம் சுமத்துகிற பவித்திர நிலையில் இங்கு எந்த அரசியற் கட்சி களும், தலைவர்களும் இல்லை.
ராஜபக்சே கும்பலின் இனவெறி உச்சம் தொட்டு பேரழிவின், தமிழின அழித்தலென்ற ஊழிக்கூத்து முள்ளிவாய்க்காலை நெருங்கிக் கொண்டிருந்த தருணத்தில், யாருடைய பாதங்களில் விழுந்து அப்பேரழிவைத் தடுக்கலா மென கட்சி பலமெல்லாம் இல்லாத சாதாரண உணர்வாளர்கள் இரவு பகலென அங்குமிங்கும் அலைந்து திரிந்த காலை ""இந்தக் கூட்டணிக்கு ஆதரவாய் அறிக்கையொன்று விடுங்கள்'' என விடுதலைப்புலிகள் இயக்க அரசியற்பிரிவு பொறுப் பாளர் நடேசன் அவர்களுக்கு உரைத்தவர்களுக் கெல்லாம் நிச்சயமாய் அந்த ஒழுக்க தார்மீகம் இல்லை.
மிக முக்கியமாக ஈழ விடுதலைப் போராட் டத்தின் வேதனையான பின்னடைவுக்குக் காரணம் ஏதோ தமிழகமும் தமிழகத் தலைவர் களும்தான் என்பது போன்ற விவாதம் பிரச் சனையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திடத் தேவையான புரிதல்களையும் சுருக்குகிறது. விடு தலைப் போராட்ட பின்னடைவுக்கும் அம்மக்களின் அவலங்களுக்கும் முக்கிய காரணங்கள் பல. வெறிபிடித்தாடும் பௌத்த சிங்களப் பேரினவாதம் முதற் காரணம். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் என உலகம் ஏற்றுக்கொள்ள வைத்ததில் சிங்களப் பேரினவாதம் பெற்ற வெற்றியும் அக்களத்தில் ஒன்றிணைந்து திறம்பட இயங்கி தமிழரின் அரசியல் சுயநிர்ணய உரிமையை உலகம் அங்கீகரிக்கச் செய்வதில் உலகத்தமிழ்ச் சமுதாயம் தவறியமையும் இரண்டா வது காரணம். இந்தியப் பெருங்கடல் அரசியலில் அமெரிக்க மேலாதிக்கத்தை இடைமறிக்கவேண்டி சீனா, ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகள் ஸ்ரீலங்கா வுக்கு அள்ளித்தந்த பேராயுதங்களும், பெருநிதியும் உலக ராஜதந்திர உதவிகளும் மூன்றாவது கார ணம். ஈழம் மலர்ந்தால் தமிழகத்தில் பிரிவினை வாதம் தலைதூக்குமென்ற கருதுகோளினடிப்படை யில் தமிழினம் அழிந்தாலும் பரவாயில்லை விடு தலைப்புலிகள் இயக்கம் நசுக்கப்படவேண்டுமென நிலையெடுத்து ஸ்ரீலங்காவுடன் போரில் இணைந்து நின்ற இந்தியாவின் கொள்கை நிலைப்பாடு நான்காவது காரணம்.
உலகில் சிங்களவர் எண்ணிக்கை ஒரு கோடி. தமிழர்களோ எட்டு கோடிக்கும் மேல். எனினும் இனத்தைக் காக்கும் அக்கறையில் இணைந்து நிற்க முடியாத இந்த தமிழினத்தின் குறிப்பாக இந்தியத் தமிழகத்தின் சாபக்கேடு இறுதி காரணம். இன்னும் சிறு சிறு, சில பல காரணங்களையும் சேர்க்கலாம். ஆக, பெரியதோர் வரைபடத்தில், ஈழ விடுதலைப் போராட்ட பின்னடைவுக்கான காரணங்கள் மிகப்பல. தொடர்ந்த பயணத்திற்கு இந்தப் புரிதல் மிக முக்கியமானதென்பதால்தான் நமக்குள்ளேயே ஒருவருக்கொருவர் துரோகப் பட்டங்கள் சுமத்துவதைத் தவிர்த்தல் நலமென்றும், இணைந்து குறைந்தபட்ச பொதுக்கருத்தும் திட்டமும் வகுத்தல் சிறப்பென்றும் நம்பி, வலியுறுத்தி அதற்காக வாதிடுகிறோம்.
எனவேதான் அரசியல்மாச்சரியங்களுக்கு அப்பால் பொதுவெளிகள் (Civil Society) உருவாவதை முக்கியமானதாய் அடிக்கோடிடுகிறோம். அத்திசையில் ""போருக்கெதிரான பத்திரிகையாளர்'' என்ற அமைப்பின் சுமார் இருபது பத்திரிகையாளர்கள் இணைந்து ஆக்கியுள்ள ""ஈழம் : நமது மௌனம்'' என்ற புத்தகத்தை பற்றி கடந்த இதழில் குறிப்பிட்டிருந்தோம். அப்புத்தகத் தில் நடிகர் கமல்ஹாசன் அவர்களின் பதிவு செறி வுடைத்ததாயிருந்தது.
காக்க ஒரு கனக (AK) 47
நோக்கவும் தாக்கவும் ஒரு நொடி நேரம்
தோற்கவும் அதே கண நேரம்தான்
ஈயம் துளைத்துக் கசிந்து சிவந்த
காயம் தொட்டுக் கையை நனைத்து
விண்ணே தெரிய மண்ணில் சாய்ந்தேன்
முன் காக்க மறந்த அமைதியைக் காத்து.
மாட்டுத் தோலில் தாய்மண் அறைபட
பூட்ஸுக் கால்களால் கடந்தனர் பகைவர்.
விட்ட இடத்தில் கதையைத் துவங்கச்
சட்டென இன்னொரு குழந்தை பிறக்கும்
அதுவரை பொறுத்திரு தாயே, தமிழே
உதிரம் வடியும் கவிதை படித்து...
சத்குரு ஜக்கி வாசுதேவ்-
""வாழ்க்கையை இழந்தவர்களுக்காகவும்
இனி வாழ இருப்பவர்களுக்காகவும்
அநீதியை சுட்டிக்காட்டும் துணிவை நாம் பெறுவோம்''
-என தனது பதிவில் நம் அனைவரையும் அழைத்திருந்தார்.
...இப்படி புகழ்பெற்ற நூறுபேர் ஈழத்து மானுடத்திற்காய் அணிவகுக்கிறார்கள்.
புத்தக வெளியீடு வரும் நவம்பர் 14 சனி மாலை 4.30 மணிக்கு, 13 காசா மேஜர் சாலை, எழும்பூரிலுள்ள டான்போஸ்கோ பள்ளி அரங்கில் நடைபெறும். அனைவரும் வாருங்கள். உடன் பலரை அழைத்தும் வாருங்கள்.
(நினைவுகள் சுழலும்)
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்
*
Indicates mandatory fields
Name
*
:
Email Id
*
:
Loading...
Left:
Press
Ctrl+g
to toggle between English and Tamil
Comment
*
(500)
:
கருத்துக்கள்(15)
Name : Vani
Date :1/10/2010 2:24:30 AM
துரோகிகளின் மவுனத்தில் துடிக்கும் முள்ளிவாய்க்கால்” புதிய கலாச்சாரத்தின் புதிய வெளியீடாக வந்திருக்கும் நூலை படியுங்கள்,ம இந்த துரோகி ஜகத் கஸ்பார் புலிகளை தானே கொன்றதை ஒப்புகொள்கிறார்.
Name : kumaran pirabhakaran
Date :11/19/2009 10:57:17 PM
இந்த முட்டாள் தனமான,தன்னிலை விளக்க அறிக்கையை இனிமேலும் தொடரும்படி கூற மாட்டார்கள்.ஏன்தான் எங்கள் அபிமானமிக்க கோபால் அண்ணன் இதை தொடர அனுமதிக்கிராரோ தெரியவில்லை.
Name : chandru
Date :11/19/2009 9:48:55 PM
நல்லது அடிகளார் தொடர்ந்து அத்தனையும் எலுதுங்கோ
Name : ramjii
Date :11/17/2009 9:37:40 PM
இந்தியாவை நீங்கள் ஆதரிப்பது போல் உங்களை எதிர் கருத்தை பரப்புக்கின்றனர் ஜெகத் அவர்களே உங்களது கருத்துகளை தொடைரிந்து எழுதுங்கள். உனர்வுகளை பதிவு செயதால் எதிர்ப்பு வரும் என்று தெரிந்தும் வாயப்பு அளிக்கும் நக்கீரன் கோபால் அவர்களுக்கும் நன்றி ஈழம் வெல்லும் அதை காலம் பதில் சொல்லும் . வணக்கம் தமிழீழ அதரவாலன்
Name : kumaran pirabhakaran
Date :11/16/2009 3:05:31 AM
உம்மை சுயதம்பட்டமடிக்கவும் பயன்பட்ம் இவ்வாறான காலம் கடந்தன பேசும் கட்டுரைகளை எழுதுவதை விடுத்து இனியாவது நீர் நேசிக்கும் அந்த மக்களுக்கு அரசியல் கடந்து ஏதாவது செய்ய முயலும்.அல்லது உமது போதனைகளை ஆலயத்தில் மட்டும் வைத்து,இந்த இடத்தை பயனுள்ளதாக்கும்.
Name : kumaran pirabhakaran
Date :11/16/2009 3:00:29 AM
இவ்வளவு சொல்லும் பிதாவே,நீர் இந்த கட்டுரைகளின் மூலமாக என்ன செய்கிறீர்?எதை சாதித்தீர்?அந்த முகம் தெரியா இருபது பத்திரிகையாளர்களால் செய்யமுடிந்த ஒரு ஆவணத்தைபோல பலர் அறிந்த உம்மால் ஏன் முடியவில்லை?உமை சார்ந்தவர்களை நியாய படுத்தவும்(சிதம்பரம்,...)உம்மை
Name : ranjan
Date :11/15/2009 8:45:14 PM
இன்னும் இலங்கை தமிழன் பெயரை சொல்லி காசு உளயுங்கோ . உங்களுக்கு காசு தானே வேணும். தமிழன் செத்தான் ஏன்டா நல்லா உழைக்கலாம்.
Name : அரவிந்
Date :11/14/2009 8:58:01 PM
அருட்தந்தை கஸ்பர் அவர்களே! விடுதலைப்போராட்டத்தின் பின்னடைவுக்கும் மக்களின் அழிவிற்கும் ஒன்றே ஒன்றும் உண்மையானதுமான காரணம்... இந்தியா...இந்தியா..இந்தியாவேதான்!! புரிந்துகொள்ளுங்கள்! உங்கள் எழுத்திலும் இப்போது உண்மையைத் தேடவேண்டியுள்ளதே!!
Name : அரவிந்
Date :11/14/2009 8:56:25 PM
அருட்தந்தை கஸ்பர் அவர்களே! விடுதலைப்போராட்டத்தின் பின்னடைவுக்கும் மக்களின் அழிவிற்கும் ஒன்றே ஒன்றும் உண்மையானதுமான காரணம்... இந்தியா...இந்தியா..இந்தியாவேதான்!! புரிந்துகொள்ளுங்கள்! உங்கள் எழுத்திலும் இப்போது உண்மையைத் தேடவேண்டியுள்ளதே!!
Name : steepan
Date :11/14/2009 7:57:20 PM
நன்றி.
Name : moorthy
Date :11/14/2009 2:22:19 PM
நமக்கு நாமே துணை.முள் கம்பிஅகதி முகாம் மக்களையும்,சித்திரவதை முகாம்களையும் மட்டுமே நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.அது தவிர இருபதினாயிரத்திற்கு மேற்பட்ட இளம் உடன் பிறப்புக்கள் போராளிகள் என்ற போர்வையில் சிறைப் படுத்தப்பட்டுள்ளார்கள். மேலும் பலர் துரோகிகளால் காட்டிக் கொடுக்கப் பட்டு கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இவர்கள் அடையும் சித்திரவதை பற்றி சமிபத்தில் செய்தி வந்தது. இந்த சித்திரவதைக்கு அதிகமாக ஆளாக்கப்படுவது பெண்களே என்று தெரிய வருகிறது.தனிப்பட்ட விரோதத்திற்காகவும் காட்டிக் கொடுக்கிறார்களே
Name : Kumanan
Date :11/14/2009 6:44:11 AM
தேங்க்ஸ் கஸ்பர்,பிளஸ் ஸ்டாப் யுவர் article thats enough for tamils
Name : ANPU
Date :11/13/2009 11:29:46 PM
எம்ம தமிழ் உறவுகளுக்கு வணக்கம் எமக்கு யாரும் உதவ இல்ல்லையே எண்டு ஒப்பாரி வைக்கும் தமிழரே என்கல்சொந்த உறவுகளே எட்டப்பர் வேலை செய்து சிங்களனுக்கு தமிழ் பெண்களை பிடிச்சு குடுத்து சொத்துக்காக நாயிலும் கேவலமான வேலை செய்து தமிழனின் அழிவுக்கு ஈழத்த
Name : jana
Date :11/13/2009 10:08:08 PM
கோமாளி அரசியல்வாதிகள் தான் ஈழத்தமிழன் இந்த நிலைக்கு வரக் காரணம். இந்த உண்மையை நாங்கள் மறந்தாலும் வரலாறு சொல்லிக்கொண்டிருக்கும் . நன்றி
Name : eelavan
Date :11/13/2009 2:54:20 PM
தமிழீழ விடுதலைக்கு தடையாக இருந்த காரணிகள் எவைகள் என்ற பட்டியலில் எவ்வளவு தூரம் இந்தியாவை விலக்கி விடலாமென நல்ல முயற்ச்சி .... முள்ளிவாய்க்கால் கொலை வெறி தாண்டவம் நடத்தியது யார் நடத்துவதற்கு துணை நின்றது யார் தடுக்கக் கூடிய நிலையில் இருந்தவர் யார் தடுக்காமல் போனவர் யார் என்ற கேள்விகளுக்கு ஈழத்தமிழர் விடை தேட வேண்டாம் என்றாலும் ஏற்றுக் கொள்கின்றோம் இத்தனைக்கும் பின்பும் மனித உரிமை மீறல் விசாரணைக்கு தடையாக நின்றவர் யார் அந்த விசாரணையை முறியடிக்க வேண்டுமென மும்மரமாக செயல் பட்டது யார் இத்தனைக்கும் பின்பும் சிங்கள அரசை போற்றி புகழ்கிறவர்கள் யார் அவர்கள்தான் ஈழவிடுதலையின் எதிரிகள் ...யாரது ???
Home
|
About us
|
Register
|
How To Subscribe
|
Free Newsletter
|
Font Help
|
Ad Tariff
|
Faq
|
Contact
|
RSS
Copyright © 2008 Nakkheeran.in . All rights reserved.