காமராஜர் சிலை விவகாரம்: மருத்துவமனையிலும் உண்ணாவிரதத்தை தொடரும் முதியவர்
நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில், அண்மையில் திறக்கப்பட்ட பஸ் ஸ்டாண்டிற்கு, காமராஜர் பெயர் வைக்க வலியுறுத்தி காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.
இருப்பினும், பெயர் இல்லாமல் பஸ் ஸ்டாண்டை துணை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். பஸ் ஸ்டாண்டிற்கு, காமராஜர் பெயர் வைக்க வலியுறுத்தி குமிளம்பாடு கிராமத்தைச் சேர்ந்த தியாகி சுடலைமுத்து(80) என்பவர், கடந்த 7ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இதனால், அவர் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கும் நான்காவது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.