நெல்லை: மழையில் 500 ஏக்கர் நெற்பயிர் பாதிப்பு நெல்லை மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூனில் கார் சாகுபடி நெல்லை உற்பத்தி துவங்கும். இதற்காக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும்.
இந்த ஆண்டு பாபநாசத்தில் தண்ணீர் குறைவாக இருந்ததால் அனேக பாசனங்களில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் ஆழ்வார்குறிச்சி, கீழாம்பூர் உள்ளிட்ட பகுதியில் மிகவும் தாமதமாக ஆகஸ்ட்டில் கார் சாகுபடிதுவங்கியது. அந்த நெல் பயிர் அறுவடைக்கு இன்னமும் சில தினங்களே உள்ள நிலையில் தற்போதைய மழையினால் பயிர்கள் பாதிப்படைந்துள்ளன.
கடனா நதிஅணை நிரம்பியதால் அணைக்கு வரும் மழை நீர் முழுவதும் கருணையாற்றில் திறந்துவிடப்பட்டது. வெள்ளநீர் வயல்களில் புகுந்ததால் இந்த பகுதியில் சுமார் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல்பயிர் சேதமடைந்துள்ளது.