Add1
logo
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ || அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம் || புதுச்சேரியில் ரவுடிகள் ஆட்சி செய்ய முடியாது: கிரண்பேடி || இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்! || அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி || அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்! || வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு || குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல் || பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை || போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்! || பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்! || பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்) || திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது! ||
முக்கிய செய்திகள்
இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்!
 ................................................................
பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்!
 ................................................................
பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்)
 ................................................................
பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: திருமா
 ................................................................
ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சி மேலும் பலவீனமடையும்: தமிழிசை
 ................................................................
இரட்டை இலைக்கு ஓட்டு போட்டால் வீடு: போலீசில் ஒப்படைக்கப்பட்ட அதிமுக எம்.பி. கையெழுத்து போட்ட கடிதம்
 ................................................................
ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா: திமுகவினரும், டி.டி.வி. ஆதரவாளர்களும் முற்றுகையால் பரபரப்பு!
 ................................................................
ஜெ . மரணம் குறித்து அப்போலோ குழும தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார் !
 ................................................................
செட் தேர்வு: மிகப் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுப் பிரிவை ஒழிப்பதா? ராமதாஸ்
 ................................................................
ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளை கொடுத்து, விவசாயிடம் ஆடு வாங்க முயன்ற வாலிபர்கள் கைது
 ................................................................
கடலூரில் ஆளுநர் ஆய்வு - ஜி.ரா. எதிர்ப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 24, நவம்பர் 2017 (16:27 IST)
மாற்றம் செய்த நாள் :24, நவம்பர் 2017 (16:37 IST)


டிடிவி அணியில் இருந்து ஓபிஎஸ் - ஈபிஎஸ்
அணிக்கு தாவும் எம்.எல்.ஏ., எம்.பிக்கள்..!

தமிழக அரசியலில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. முதலில் கட்சியின் தலைமைக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் குரல் எழுப்பினார். இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் முறையிட, கட்சியின் அதிகாரபூர்வ சின்னமான 'இரட்டை இலை' சின்னம் மார்ச் 23ஆம் தேதி முடக்கப்பட்டது.

இந்தநிலையில் அதிமுக அணி இரண்டாகி பின்னர் மூன்றாகி அதன் பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிகள் ஒன்றிணைந்தனர். பின்னர் அதிமுக அணி, தினகரன் அணி என இரண்டாக செயல்பட்டது.

இதனிடையே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக டிடிவி தினகரன் அணியினர் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்துத் தனித்தனியாகக் கடிதம் அளித்தனர். இதனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று அரசு கொறடா, சபாநாயகருக்கு பரிந்துரை செய்திருந்தார். இதையடுத்து அவர்களில் எம்.எல்.ஏ ஜக்கையன் தவிர 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.

ஒருபுறம், ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிகள் இணைந்ததும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோர மறுபுறம், தினகரன் தரப்பில் தாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க என்று கூறி, தேர்தல் ஆணையத்தில் வாதங்களை முன்வைத்தனர். பின்னர் இருதரப்பு வாதங்களும் முடிவடைந்து, இரட்டை இலைச் சின்னம் ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிக்கு ஒதுக்கப்படுவதாக நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனால் இனி அதிமுக என்கிற கட்சியின் பெயர் மற்றும் இரட்டை இலை சின்னத்தை ஈபிஎஸ் - ஓபிஎஸ் அணியால் மட்டுமே பயன்படுத்த முடியும். டிடிவி தினகரன் அணியினரால் பயன்படுத்த முடியாது. இதனால் டிடிவி தினகரன் பக்கம் ஆதரவு எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் மற்றும் ஆதரவாளர்கள் மட்டுமே இருக்கின்றனர்.

இந்தநிலையில் வருகிற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தொப்பி சின்னத்தில் போட்டியிடுவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். ஆனால் இரட்டை இலை சின்னம் கைவிட்டு போனதால் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும் டிடிவி ஆதரவு எம்.பிக்களான விஜிலா சத்யானந்த், நவநீத கிருஷ்ணன்,
விளாத்திகுளம் எம்.எல்.ஏ., உமா மகேஷ்வரி உள்ளிட்டோர் ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

- அருண்பாண்டியன்


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : Paatali Country : India Date :11/25/2017 8:22:26 AM
சரியான ஒட்டுண்ணிகள் அதான்யா வடக்கிருந்து வந்த மோடி இவங்களை ஆட்டி படைக்கின்றான்.'அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு' ?!
Name : G. Madeswaran Date :11/24/2017 11:16:22 PM
என்று MGR , JJ ,இரட்டை இலை,ADMK என்ற ஒரு குரல் சொல்உடைந்து, திரிந்து அ,ஆ...எ...ஒ....தி,தீ....என்று அவ்வன்னவாக மாறியதோ, அன்றே அதன் சொக்கத்தங்க மதிப்பு மக்களின் மனதில் இருந்து குறைந்துவிட்டது. ராமன் ஆண்டாள் என்ன,ராவணன் ஆண்டால் என்ன என்று மக்களும் சொல் இல்லாமல் கல்லாகிப்போனார்கள்! கு..., தாவல் இல்லாத ஓரணி எல்லோருக்கும் பலம்!
Name : Js kumar Date :11/24/2017 7:19:55 PM
அரசு அடித்த கொள்ளை பணம் அதிமுக அடித்த கொள்ளை பணம் பாகப்பிரிவினை நடக்கும் அனைவரையும் ஓடஓட துரத்த தமிழ் நாட்டு மக்கள் கொதித்து உள்ளார்கள்
Name : SIVAKUMAR Date :11/24/2017 5:40:53 PM
I like nakkeeran very much. V.Sivakumar