Add1
logo
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ || அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம் || புதுச்சேரியில் ரவுடிகள் ஆட்சி செய்ய முடியாது: கிரண்பேடி || இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்! || அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி || அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்! || வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு || குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல் || பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை || போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்! || பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்! || பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்) || திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது! ||
முக்கிய செய்திகள்
இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்!
 ................................................................
பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்!
 ................................................................
பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்)
 ................................................................
பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: திருமா
 ................................................................
ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சி மேலும் பலவீனமடையும்: தமிழிசை
 ................................................................
இரட்டை இலைக்கு ஓட்டு போட்டால் வீடு: போலீசில் ஒப்படைக்கப்பட்ட அதிமுக எம்.பி. கையெழுத்து போட்ட கடிதம்
 ................................................................
ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா: திமுகவினரும், டி.டி.வி. ஆதரவாளர்களும் முற்றுகையால் பரபரப்பு!
 ................................................................
ஜெ . மரணம் குறித்து அப்போலோ குழும தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார் !
 ................................................................
செட் தேர்வு: மிகப் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுப் பிரிவை ஒழிப்பதா? ராமதாஸ்
 ................................................................
ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளை கொடுத்து, விவசாயிடம் ஆடு வாங்க முயன்ற வாலிபர்கள் கைது
 ................................................................
கடலூரில் ஆளுநர் ஆய்வு - ஜி.ரா. எதிர்ப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, நவம்பர் 2017 (16:51 IST)
மாற்றம் செய்த நாள் :20, நவம்பர் 2017 (17:9 IST)


ஏழை மாணவிக்கு அரசு வழங்கிய சீட்டை, பணத்துக்கு விற்ற சுகாதாரத்துறை அமைச்சர் கல்லூரி!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கருக்காகுறிச்சியில் விவசாய குடும்பத்தை சேர்ந்த மாணவிக்கு கலந்தாய்வின் மூலம் நர்சிங் படிப்பிற்கு இடம் கிடைத்தும், இடம் கொடுக்காத தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சகோதரரின், மதர்தெரசா கல்லூரி நிர்வாகம், கலந்தாய்வு சீட்டுகளை விற்றுவிட்டதாக மாணவியின் குடும்பத்தினர் குற்றச்சாட்டியுள்ளனர்.

இதனால், கல்லூரிப் படிப்பை தொடரமுடியாமல் தவிக்கும் மாணவிக்கு, தமிழக அரசு உதவ வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கருக்காகுறிச்சியை சேர்ந்தவர் வீரைய்யா. இவரது மகள் வேணி(18) இந்தாண்டு 12 வகுப்பு முடித்த வேணி அறிவியல் பாடப்பிரிவில் பொதுத் தேர்வில் 820 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். நர்சிங் சேர்ந்து படிக்க வேண்டும் என்பதே இவரது விருப்பம்.


இந்நிலையில், நீட் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அரசு நடத்தும் கலந்தாய்விற்காக சென்னைக்கு அழைக்கப்பட்ட வேணிக்கு புதுக்கோட்டை இலுப்பூர் மேட்டுசாலையில் உள்ள தமிழக சுகாதாரத்தறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சகோதரர் உதயகுமாரின் கல்லூரியான மதர்தெரசா நர்சிங் என்ற தனியார் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

இதில், தான் விருப்பட்ட படிப்பை தொடரலாம் என்று சென்னையிலிருந்து ஆவலுடன் ஊர் திரும்பிய வேணிக்கு ஏமாற்றம்தான் காத்திருந்தது. ஊர் திரும்பிய வேணி தனது பெற்றோர்களுடன் கடந்த 13-ம் தேதி கலந்தாய்வில் இடம் கிடைத்த கல்லூரிக்கு சென்று கேட்டபோது அங்கு அவருக்கு இடம் இல்லை என்று கல்லூரி நிர்வாகம் மறுத்ததாக தெரிகிறது.

வேணியின் பெற்றோர்கள் முறைப்படி கலந்தாய்வுக்கு சென்று இடம் தேர்வுசெய்த பின்பும், வேணிக்கு இடம் கொடுக்க மறுப்பதற்கான காரணம் என்ன என்று கேட்டவுடன் கல்லூரி நிர்வாகம் 2 நாள் கழித்து வரும்படி கூறியுள்ளனர்.

பின்னர், 15-ம் தேதி மீண்டும் கல்லூரிக்குச் சென்ற வேணி மற்றும் அவரது பெற்றோர்களிடம் வேணியின் கலந்தாய்வு சீட்டுகளை விற்றுவிட்டதாகவும் உங்கள் மகளுக்கு மற்றொரு கல்லூரியில் இடம்பெற்று தருவதாகவும் அங்கு மேனேஜ்மெண்ட் கோட்டாவில் நன்கொடை கட்டி படிக்கவேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் கூறியதாக, கூறப்படுகின்றது.

இதுபோல் 5-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கலந்தாய்வில் உரிய இடம் வழங்கியும் கல்லூரி நிர்வாகம் இடம் தரமறுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், வேணியின் பெற்றோர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் நன்கொடை கொடுத்து தன் மகளை படிக்க வைக்கும் சூழலில் தாங்கள் இல்லை; கலந்தாய்வு முறைப்படி கிடைத்த இடத்தை எங்களுக்கு ஒதுக்குங்கள்  என்று கூறியுள்ளனர். அதற்கு கல்லூரி நிர்வாகம் வங்கியில் லோன் பெற்று படிக்க வையுங்கள் என்று கூறியுள்ளனர்.

இதனையடுத்து, வேணி மற்றும் அவரது பெற்றோர் மனமுடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுகுறித்து பேசிய வேணி, நான் நர்சிங் பயிலவேண்டும் என்று விருப்பத்தோடு படித்து வந்தேன். அதன்படி, கலந்தாய்வில் தேர்வுசெய்து சென்ற கல்லூரி நிர்வாகம் எனக்கு இடம் தர மறுத்துவிட்டது. எனக்கு கொடுக்க வேண்டிய இடத்தை கல்லூரி நிர்வாகம் பல லட்சத்திற்கு விற்று விட்டது. நன்கொடை கொடுத்து என்னை படிக்கவைக்க எனது பெற்றோர்களால் முடியாது. எனவே, எனது படிப்பை இந்தாண்டே தொடர அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து வேணியின் தந்தை வீரையா கூறுகையில், எனது மகள் வேணியை சிறுவயதிலிருந்தே படிக்க வைக்க வேண்டும் என்று லட்சியத்தில் படிக்க வைத்தேன். அதேபோல் 12-ம் வகுப்பையும் எனது மகள் முடித்து அவள் ஆசைப்படி நர்சிங் படிப்பை தொடர கலந்தாய்வில் இடம் கிடைத்தும் அமைச்சர் விஜயபாஸ்கர் சகோதரரின் கல்லூரி நிர்வாகம் இடம் தர மறுக்கிறது. விவசாயம் செய்து தனது மகளைப் படிக்கவைத்த சூழலில் நன்கொடை கொடுத்து படிக்க கல்லூரி நிர்வாகம் சொல்கிறது. இதனால், எனது மகள் கலந்தாய்வில் தேர்வாகியும் கல்லூரிப் படிப்பை தொடர முடியாமல் மனமுடைந்து கடந்த 4 நாட்களாக உணவு கூட சரியாக சாப்பிடாத சூழ்நிலையில் உள்ளார்.

சுகாதாரத்துறை அமைச்சரின் சகோதரர் கல்லூரியிலேயே இதுபோன்ற செயல்கள் அரங்கேறி வருகின்றது. இதற்கு தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தங்களது மகள் வேணிக்கு உரிய இடம் அளித்து நர்சிங் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற செய்கைகளில் ஈடுபடும் கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக தெரிவித்தார்.

- இரா.பகத்சிங்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : rajan Country : Bahrain Date :11/21/2017 3:26:16 PM
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தம புத்திரன் போன்று பேசுவார்
Name : pathman Country : United States Date :11/20/2017 8:51:14 PM
அப்பாவிகளை கொடூர கொலை செய்பவர்களுக்கு இந்த பொறுக்கிகள் கண்ணுக்கு தெரிவதில்லையா?