Add1
logo
29ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு || மோடி பிரதமர் என்ற ஈகோவினால் என் கடிதங்களுக்கு பதிலளிக்கவில்லை! - அண்ணா ஹசாரே || சாதிச்சுவரை இடிக்கக் கோரி போராடிய தலித்துகள், பத்திரிகையாளர்கள் கைது! || ‘பத்மாவத்’ படத்தை தடை செய்; இல்லையேல் சாகவிடு! - ராஜபுத் பெண்கள் பேரணி || பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சி.பி.எம். ஆர்ப்பாட்டம் || நடிகர்கள் எல்லாரும் முதல்வராகி விட முடியாது! - ஆர். வைத்திலிங்கம் எம்.பி பேச்சு || கடனைத் திருப்பித் தராததால் டிராக்டர் பறிமுதல்! - சக்கரத்தில் விழுந்து விவசாயி உயிரிழப்பு || பிப்ரவரி 03 இல் மதுக்கடை பூட்டுப் போடும் போராட்டம் - அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் || வங்கி காவலாளியை கட்டிப் போட்டு கொள்ளை முயற்சி. நகை தப்பியது! || பாகிஸ்தான் இந்தியாவுடனான பகையை இன்னும் மறக்கவில்லை! - மோகன் பாகவத் || கலாச்சார உடையில் கண்டன ஆர்ப்பாட்டம்! || ஒரு ரன்னில் உலகசாதனையை தவறவிட்ட நியூஸி பேட்ஸ்மேன்! || ஜெ., மரணம் குறித்த விசாரணையில் ஈபிஎஸ், ஓபிஎஸ்சை விசாரிக்காதது ஏன்? நாஞ்சில் சம்பத் ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, நவம்பர் 2017 (14:4 IST)
மாற்றம் செய்த நாள் :20, நவம்பர் 2017 (15:11 IST)


கோலியின் சதத்துடன் இந்திய அணி டிக்ளேர்! 

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஆட்டத்தின் ஐந்தாம் நாளான இன்று இந்திய அணியின் கோலி மற்றும் ஜடேஜா களத்தில் இறங்கினர்.



ஐந்து விக்கெட்டுகள் இழப்புடன் களத்தில் நின்ற இந்திய அணியில், ஒரு புறம் கேப்டன் கோலி நிதானமாக ஆட, மறுபுறம் விக்கெட்டுகள் வரிசையாக சரியத் தொடங்கின. ஜடேஜா உள்ளிட்ட அடுத்தடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர். இந்திய அணி எப்போது டிக்ளேர் செய்யும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், உணவு இடைவேளைக்குப் பிறகு கோலி நூறு ரன்களைக் கடந்தார். இது சர்வதேச அளவில் 50ஆவது, டெஸ்ட் போட்டிகளில் 18ஆவது மற்றும் கேப்டனாக பொறுப்பேற்றபின் 11ஆவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு வழியாக இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்து, 230 ரன்கள் முன்னிலையில் இருந்தபோது கோலி டிக்ளேர் செய்துகொள்வதாக அறிவித்தார். இன்றைய ஆட்டம் முடிய சில மணிநேரங்களே உள்ள நிலையில், 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியுள்ளது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :