Home Home Page
அண்மைச் செய்திகள்
ராகிங் பற்றி விழிப்புணர்வு கையெழுத்துப் பேரணி || மதுரை: முத்திரையர் சங்கத்தினர் போராட்டம் || மனஅழுத்தத்தை குறைக்கும் இன்டர்நெட் || சோனியாவுக்கு சர்வதேச காங்கிரஸ் வாழ்த்து || கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் || 15 வயது சிறுமியின் திருமணம் ரத்து || பாமக துணையில்லாமல் ஆட்சி அமைக்க முடியாது: அன்புமணி ராமதாஸ் || திருச்சி என்ஐடி இயக்குநர் சஸ்பெண்ட் || சென்னையில் திருநங்கைகள் உண்ணாவிரதம் || பெரம்பலூர், விழுப்புரத்தில் கலைஞர் || திரைப்பட தயாரிப்பாளர் ராமநாயுடுவுக்கு தாதாசாகேப் பால்கே விருது || சாம்பியன்ஸ் லீக் அட்டவணை || தென்ஆப்பிரிக்காவில் சாம்பியன்ஸ் லீக் போட்டி ||
சிறப்பு கட்டுரை
இந்தியாவில் நீதி இல்லையா? டக்ளஸால் கொல்லப்பட்ட குடும்பத்தின் கதறல்!
......................................
அட்சய திருதியைக்கு நகை வாங்கப் போறீங்களா? உஷார்!
......................................
வாசகர்களுக்கு நன்றி 23ஆம் ஆண்டில்
......................................
அதிரடியா? அமைதியா? கனிமொழி சிறப்பு பேட்டி!
......................................
"தனித்துப் போட்டியிடத் தயார்'' டாக்டர் அன்புமணி ஆனந்த பேட்டி!
......................................
I was with Ranjitha in Bed – So what? Asks Nithyananda
......................................
இஸ்லாமிய சகோதரர்களுக்கு.....
......................................
நக்கீரன் மக்கள் செய்தியாளர் (People Journalist)
......................................
மிசௌரி தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா (படங்கள்)
......................................
நீங்கள் உண்மையான விடுதலைப் புலிகளின் பிரதிநிதியா? சிங்களவர்களின் கைக்கூலியா? - தமிழ்மாறன் பேட்டி
......................................
யுத்தம் 14 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 13 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 12 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 11 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 10 -நக்கீரன் கோபால்
......................................
தந்தை பெரியார் சொன்ன வார்த்தைகள்! - கலாம்
......................................
போராளிகளே கவனம்! ராணுவத்தின் புது சதி!
......................................
யுத்தம்! 9 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம்! 8 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 7- நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 6 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 5 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 4 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 3 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 2 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 1 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் சேலஞ்ச் - II
......................................
பெரியார் எனக்குச் சொன்ன அறிவுரை! -் கலாம்
......................................
புதிய குழு புருடா! - ஜெகத் கஸ்பர்
......................................
சதீஷ் தவான் என்னும் ஒப்பற்ற தலைவர்! - கலாம்
......................................
அப்பா வருவார்! - ஜெகத் கஸ்பர்
......................................
தலைவனுக்கான 8 விதிகள்! - அப்துல் கலாம்!
......................................
சரித்திரம் சொல்லும் உண்மைகள்! - ஜெகத் கஸ்பர்
......................................
போர் குற்றத்திற்கு நீதிகோரும் புனிதப் பயணம்! - ஜெகத்
......................................
கதவைத் திற, சூரியன் வரட்டும்! - அப்துல் கலாம்
......................................
நமக்கு விடப்பட்ட சவால்!
......................................
காட்டாமணக்கு எண்ணெயில் ஒரு அற்புதம்’ -அப்துல் கலாம்
......................................
சரியும் சாம்ராஜ்யம்! - ஜெகத் கஸ்பர்
......................................
“என் ஜனாதிபதி காலத்தில் ஓர் ஆதங்கம்!’’ - அப்துல் கலாம்
......................................
அரிய புத்தகங்கள்! - ஜெகத் கஸ்பர்
......................................
இயற்கை ஒளித்து வைத்திருக்கும் சாவிகள்! - கலாம்
......................................
யார் துரோகி?
......................................
தாய்ப்பாலில் நஞ்சு! - ஜெகத் கஸ்பர்
......................................
அடுத்த விடுதலைப் போராட்டம்! - அப்துல் கலாம்
......................................
மூன்று சக்திகள்! - அப்துல் கலாம்
......................................
அமெரிக்கா விசாரணை! குற்றவாளி கூண்டில் கொலைகார ராஜபக்சே!
......................................
இந்தியா ஆசிர்வதிக்கப்பட்ட நாடு! - அப்துல் கலாம்
......................................
ஒரு போராளியின் கடிதம்! - ஜெகத் கஸ்பர்
......................................
பிரபாகரனை கலங்க வைத்த தலைவர்கள்! - ஜெகத் கஸ்பர்
......................................
கண்ணெதிரே ஒரு வசந்தம்! - அப்துல் கலாம்
......................................
தூண்டப்பட்ட... எழுச்சியூட்டப்பட்ட மனம் ...- அப்துல் கலாம்
......................................
யுத்தப் படம் சொல்லும் பாடம்! - ஜெகத்கஸ்பர்
......................................
கோவா வழிகாட்டுகிறது! -டாக்டர் அப்துல் கலாம்
......................................
இணையதள புல்லுருவிகள்! - ஜெகத் கஸ்பர்
......................................
கனவின் விலை 36,000 கோடி! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அந்த இறுதி நாளில் - ஜெகத் கஸ்பர்
......................................
என்னுடையக் கனவுத் திட்டம் -அப்துல் கலாம்
......................................
இறுதி யுத்தகளத்தில் என்ன நடந்தது?-ஜெகத் கஸ்பர்
......................................
கலங்க வைக்கும் கடிதங்கள்! - ஜெகத்கஸ்பர்
......................................
நதிநீர் இணைப்பு - கலைஞர், ஜெயலலிதா -டாக்டர் அப்துல் கலாம்
......................................
அதிர்வுகள் கண்டு அஞ்சாது நக்கீரன்
......................................
நதிநீர் இணைப்பு- செய்ய வேண்டியது என்ன? - டாக்டர் அப்துல் கலாம்
......................................
சஞ்சனா அனுபவம்! - ஜெகத் கஸ்பர்
......................................
நீரின்றி அமையா உலகு! -டாக்டர் அப்துல் கலாம்
......................................
இயற்கையே காட்டும் தீர்வு! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
நகரை காத்த வீரன்! - ஜெகத் கஸ்பர்
......................................
முடியும்..முடியும்..நதிகளை இணைக்க முடியும்! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
நான் உங்களோடுதான் இருக்கிறேன்'' பேசுகிறார் பிரபாகரன்
......................................
வீரம் எழுதிய வரலாறு! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
பிரபாகரனின் புதிய போர் முழக்கம்! - ஜெகத் கஸ்பர்
......................................
சுடடா என் மார்பில்.. - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அன்றே எழுந்த அச்சம்! - அருட்தந்தை ஜெகத்கஸ்பர்
......................................
ஆழ்கடலில் ஒரு பயணம்! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
வரலாற்றுப் பதிவு! - ஜெகத் கஸ்பர்
......................................
நாடே தூங்கும் நேரம்.. அவர்கள் விழித்திருக்கிறார்கள் - கலாம்
......................................
ஆயிரம் கேள்வி கேளு பாப்பா! - ஜெகத்கஸ்பர்
......................................
வான் கண்டேன், திசை கண்டேன்!- டாக்டர் அப்துல் கலாம்
......................................
உயரே பறக்க வேண்டும்... அதற்கு என்ன செய்வது?- டாக்டர் கலாம்
......................................
அஞ்சாதே! -பேசுகிறார் பிரபாகரன்
......................................
கடற்கரையில் பிறந்த கனவு! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
எமது மக்களை போக விடு! - அருட்தந்தை ஜெகத்கஸ்பர்
......................................
வயது 60, மனமோ 20! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அவலத்தை தந்தவனிடமே பிச்சை! - ஜெகத் கஸ்பர்
......................................
“இடிந்த வீட்டில் பூத்த பூந்தளிர்!’ - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அவரின் முகமா அது? - ஜெகத் கஸ்பர்
......................................
சிறிய விஷயங்கள் அழகானவை! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
கதற வைக்கும் காட்சிகள்! - ஜெகத் கஸ்பர்
......................................
இளைஞர்களே, வாருங்கள் விவசாயத்துக்கு! -டாக்டர் அப்துல் கலாம்
......................................
இதோ... சாட்சி! - ஜெகத் கஸ்பர்
......................................
பழமொழியைப் பொய்யாக்கிய டெக்னாலஜி! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
பாவி ராஜபக்சே பசி தீர்ந்ததா... - ஜெகத் கஸ்பர்
......................................
பிறந்தநாள் பரிசு! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அந்த இறுதி யுத்த நாளில்...!
......................................
உலகிலேயே முதன்முறையாக...
......................................
மனசாட்சி எழுப்பும் கேள்வி - அப்துல் கலாம்
......................................
தாயை சந்திக்கும் தருணங்களில்...! -பிரபாகரன் நெகிழ்ச்சி!
......................................
ஒரு கனவு நனவானது! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அன்பா சொல்லி அம்மி நகராது -பேசுகிறார் பிரபாகரன்
......................................
கிராமத்தில் ஒரு அதிசயம் - டாக்டர் அப்துல் கலாம்
......................................
ஈழத்தை அங்கீகரிக்கும் உலகநாடுகள்! -பேசுகிறார் பிரபாகரன்!
......................................
"தமிழீழம் மலரும்' -பேசுகிறார் பிரபாகரன்!
......................................
ஐயா, எங்களில் யாருமே அனாதைகள் இல்லை! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
எல்லை மீறும் ஸ்ரீலங்கா தூதரகம்! - ஜெகத் கஸ்பர்
......................................
மூதாட்டி தந்த தன்னம்பிக்கை! - டாக்டர் கலாம்
......................................
தேவை லட்சியத் தலைவர்கள்! - டாக்டர் கலாம்
......................................
யாரை எனக்குப் பிடிக்காது -பேசுகிறார் பிரபாகரன்
......................................
முடியும் என்று நீ நம்பு! -டாக்டர் அப்துல் கலாம்
......................................
காதல்... கல்யாணம்... வரதட்சனை! பேசுகிறார் பிரபாகரன்!
......................................
வருகிறது மௌனப்புரட்சி! டாக்டர் அப்துல் கலாமின் இளைஞர்கள் காலம்! (2)
......................................
நான் சர்வாதிகாரியா? பேசுகிறார் பிரபாகரன்!
......................................
டாக்டர் அப்துல் கலாமின் இளைஞர்கள் காலம்!
......................................
துன்பம் தந்தவனுக்கே அதனை திருப்பிக் கொடு'' - பேசுகிறார் பிரபாகரன்
......................................
என் மகன் என்னைப்போல் சண்டைக்காரன்'' -பிரபாகரன்
......................................
மாவீரன் பால்ராஜ்! -ஜெகத் கஸ்பர்
......................................
வரலாறு படைத்த பிரபாகரன்!
......................................
யுத்த துரோகம்! -ஜெகத் கஸ்பர்
......................................
உயிருடன் உள்ளார் பிரபாகரன்!
......................................
இறுதிப் போர்! களத்திலேயே நிற்பேன்! பிரபாகரன் வீரசபதம்!
......................................
நொறுங்கியது ஜெ. ஆட்சியின் பொய் வழக்கு!
......................................
அது கடையடைப்புஅல்ல... உயிர்த்துடிப்பு!
......................................
ஆஸ்கர் சிகரத்தில் வெற்றிக்கொடியேற்றிய ஏ.ஆர்.ரகுமான்!
......................................
வழக்கே வா! மிரட்டும் ராஜபக்சே தூதுவர் அம்சாவுக்கு நக்கீரன் சவால்!
......................................
இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்த மாநில அளவிலான கள ஆய்வு முடிவுகள்
......................................
மக்களே யோசியுங்கள்! முத்துக்குமார் எழுதிய கடைசிக்கடிதம்
......................................
இலங்கை இனப்பிரச்சினை
......................................
நோபல் பரிசு 2008
......................................
மும்பை தாக்குதல்: 5 பீகார் எம்.பிக்கள் ராஜினாமா!
......................................
ஏகன்
......................................
செல்வராகவனின் புதிய படம்
......................................
திங்கட்கிழமை, 2, நவம்பர் 2009 (11:30 IST)


                    ழவிடுதலைப்போராட்டஅரசியற் களத்திற்குள் நான் அறிமுகமாகியது மிகப்பெரியதோர் பின்னடைவின், நெருக்கடியின் காலத்தில். வெளியேறியது புலிகள் ஆனையிறவில் ஈழக்கொடி உயர்த்திய வெற்றியின் நாளில். மீண்டும் உள் நுழைந்தது பேரிடர் சூழ்ந்த இறுதிப்போர் நாட்களில். நக்கீரன் வாசகர்கள் சந்திக்கையில் கேட்கும் கேள்வி- ""இத்தனை விபரங்கள் எப்படி உங்களுக்கு சாத்தியமாயிற்று?'' என்பது. கடந்த ஆகஸ்ட் மாதம் துஷாந்தன் என்ற போராளி எழுதிய கடிதத்தினை பதிலாகப் பதிவு செய்ய விழைகிறேன்.

12.08.2009

அன்பின் ஜெகத் அண்ணா,

தங்களது "மறக்க முடியுமா?' தொடர் வெளிவரத் தொடங்கியதில் இருந்து, தொடர்ந்து படித்து வருகிறேன். ஈழ விடுதலைப் போராட்டத்தை வைத்துப் பிழைத்துக்கொண்ட பல சந்தர்ப்ப வாதிகளை இனம் காணக்கூடியதான இந்தப் போர் ஓய்ந்து, எம்மினம் அவல வாழ்வு வாழும் நாதியற்ற நிலையில், தங்களது எழுத்துக்கள் எம்மை புத்தெழுச்சி கொள்ள வைக்கின்றன. காலத்தின் தேவையான பலவற்றை உங்கள் நலன் பற்றியும் கவலை கொள்ளாது, அறத்துடன் முன்வைக்கிறீர்கள். "ஜெயசிக்குறுய்' ராணுவ நடவடிக்கை காலத்தில் தாங்கள் செவிவழியால் ஆற்றுப்படுத்தியது போலவே, தற்போதைய சூனிய நிலையிலும் தங்கள் எழுத்துக்கள் மருந்திடுகின்றன.

பத்து வருடங்கள் கழிந்த நீண்டதோர் காலப் பகுதியின் பின் முற்றிலும் மாறுபட்ட பல சூழல்களைத் தாண்டிய பிறகு உங்கள் நினைவுகள் மடைதிறக்கின்றன. கம்பீரமான, நம்பிக்கை வரிகள் சுமந்து சந்தத்துடன் எம் காதுகளில் தங்கள் குரல் ஒலித்த ஞாபகங்கள், ஓடி வருகின்றன.

தங்கள் குரலும், குரலைக் கேட்க உதவிய வேரித் தாஸ் வானொலி தமிழ்ப்பணியும் என்னுடன் ஒன்றித்துப் போய்விட்ட நினைவுகளைச் சொல்ல, கொஞ்சம் எனது சுய புராணத்தையும் சொல்லிவிடுகிறேன்.

அண்ணா, (உங்களை அருட்தந்தை என மத அடையாளத்தில் சுருக்கிட மனம் ஒப்பவில்லை) எனக்கு வயது 24. (85-ல் பிறந்தவன்) பிறந்தது வல்வெட்டித் துறையில் இருந்து ஒரு கிலோமீற்றர் தூரமேயான "கெருடாவில்' எனும் சிற்றூர். என் அம்மாவின் அப்பா (தாத்தா - ஐயா என அழைப்போம்), ஒரு தமிழ் ஆசிரியராக இருந்தவர். வல்வெட்டித் துறை யின் மையப் பள்ளியான "சிவகுரு' வித்தியாசாலை யில் இருபது வருடங்களாக கற்பித்தவர். (அறுபது, எழுபதுகளில்) பின்னாளில் போராட்டத்தின் முது கெலும்புகளாக விளங்கிய பலர் (கிட்டு, மாத்தையா, வினோத் என பலர்) அவரிடம் படித்தவர்கள்.

வீட்டில் அம்மம்மாவும் தமிழாசிரியையாகவே இருந்ததால் இயல்பாகவே தமிழ், ஈழவிடுதலை, தமிழுணர்வு என்பன என் சிறுவயது முதலே என்னுள் முளைவிட்டிருந்தது. ஐயாவின் இறுதி காலத்தில் கண் தெரியாது போய்விட, அவருக்கு செய்தித்தாள் படித்துக் காட்டும் வேலை எனக்கு. இதே காலத்தில் செய்தி ஊடகங்கள் என்றால் (92, 93-களில்) பி.பி.சி.தான். ஆனந்தி அக்காவின் குரலில், ஓரளவு நடுநிலையான நம்பகமான செய்திகள், விரும்பிக் கேட்போம். இந்த வேளையில்தான் சபா அண்ணாவின் குரலில் வேரித்தாஸ் வானொலி எனக்கு அறிமுகமானது.

என்ன வேலை இருந்தாலும், 7.45-ற்கும், 9.15-ற்கும் ஐயாவின் "றழி' சைக்கிளின் பக்கத்தில் கூடிவிடுவோம். சைக்கிள் டைனமோவில் இருந்து உண்ர்க்ங்/Diode/Transister உபயத்துடன் கிடைக்கும் சிறிது இரைச்சலுடனான சிற்றலை மீற்றர்களின், உண்மையின் தூதுவர்களாய் பல்லாயிரம் கிலோ மீற்றர்களுக்கு அப்பாலுள்ள வேரித்தாஸ் தமிழ்ப் பணி செய்திகளை கேட்போம். வேரித்தாஸில் சபா அண்ணா ஓய்வு பெற்று செல்லும்போது புதிதாக வருபவரின் குரல் எப்படியோ? என ஏங்கி யிருந்தபோதுதான் -தெளிவான நீரோட்டம் போன்ற, கம்பீரமான, சந்தத் தமிழில் செய்தி வழங்கும் உங்களைப் பெற்றோம்.

தங்கள் மந்திரக் குரலில் உறவுப் பாலச் செய்திகள் ஒலிபரப்பாகும் அந்த ஐந்து, ஆறு நிமிடங்களும் Sielence Bell இங்ப்ப் ஒலித்தது போலவே இருக்கும். டைனமோவின் இரைச்சல், பழைய வானொலிப் பெட்டியின் சிற்றலை செய்யும் குளறுபடிகள் என எல்லாவற்றையும் தாண்டி செய்தி "பிடிக்க' எல்லோராலும் முடியாது. சிலவேளைகளில் சரி யான பீற்றர் கிடைக்காது, அக்கம் பக்க பீற்றர்களின் விரோதமான ஒலிகளைக் கேட்டு, எரிச்சலுடன் வானொலியை அணைத்துவிட்டு அயல் வீடுகளுக்கு ஓடிச்சென்று செய்தி கேட்போம்.

வலிகள் மட்டுமே தெரிந்த, வசந்தங்கள் ஒருபோதும் எட்டிக்கூடப் பார்த்திராத, அவலங்கள் சுமந்த எம் இனத்திற்காய், எந்த முன்தொடர்பும் இன்றி சரிவர எம் மனநிலை புரிந்து மருந்திட்டுத் தடவி, அரவணைத் தது தங்கள் குரல். மணிக்கூட்டில் 7.58, 7.59 என நேரம் ஓடும்போது மிக விரைவாக ஆனால் தெளிவு குன்றாது செய்தி வாசிக்கும் இலாவகம் தங்களுக்கு மட்டுமே வாய்ந்த ஒன்று. மேலும் அடிக்கடி எமக்காக நீங்கள் செய்யும் பிரார்த்தனையும், வெந்துபோன எம் உள்ளங்களுக்கு மருந்திட்டன. முகம் தெரியாது தங்கள் குரலால் மட்டுமே தொடுப்பு பெற்ற நாங்கள் உங்கள் குரலுக்கு அடிமையானோம். பின்னர் போராளி ஆகி களங் களில் நின்றபோதும், யாரின் தயவிலாவது கிடைக்கும் பற்றரிகளை வேரித்தாஸ் கேட்கவென கவனமாக வைத் திருந்தேன். (காவலரண்களில் சைக்கிள் கிடைக்காது). செய்திகள் கேட்டபின் பற்றரிகளை கழற்றி வெளியில் வைத்தும், பவர் குறையும்போது வெயிலில் வைத்தும் வாயால் கடித்தும் கூடிய காலம் அவற்றைப் பாவிப்போம்.

நாம் எடுத்த உறுதிமொழிகளும் அடிக்கடி பொறுப்பாளர்களுடன் நடக்கும் கலந்துரையாடல்களின் போது கிடைக்கும் ஊக்கமும் இலக்கு நோக்கி எம்மை எவ்வாறு உறுதியுடன் பயணிக்க வைத்ததோ, அதேயளவு பங்கு தங்கள் குரலுக்கும் இருந்தது.

கடுமையான களங்களின் பின்பும், தோழர்களை இழந்த துயரின்போதும் கசியாத கண்கள் தங்கள் செய்தியறிக்கைகளின்போதும், உறவுப்பால நிகழ்ச்சிகளை வழங்கும்போதும் கசிந்து விடுவதுண்டு.

இப்படியாக தங்கள் குரலை வைத்து, கம்பீரமான, நெடிதுயர்ந்த, ஒரு "பயில்வான்' தோற்றத்துடன் (எங்கள் சொர்ணத்தார் போல) ஒருவரையே என் மனதில் கற்பனை செய்திருந்தேன். இவ்வேளையில் தங்களுக்கு எழுதி வேண்டியதின்படி தங்கள் கலண்டர் புத்தகம் ஒன்றைப் பெற்றிருந்தேன். (98 ஆக இருக்க வேண்டும்) அதில் குரலுக்கும், தோற்றத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லாத தங்களைப் பார்த்து ஏமாற்றமே மிஞ்சியது. இறுதியில் இப்பள்ளி மாணவன் போன்ற உருவத்திற்கா அந்தக் குரல் சொந்தமானது என திகைப்படைந்தேன். கையடக்கமான அந்தக் கலண்டர் இன்றும் யாழிலுள்ள எங்கள் வீட்டு நூலகத்தில் உள்ளது.

மலேனியத்தின் தொடக்கத்தில் அற்றுப்போன தங்களுடனான தொடர்பு (குரல்) பின் எப்போதுமே எனக்கு கிடைக்கவில்லை. வேரித்தாஸ் பணி முடிந்து, புலம்பெயர் ஈழத்தமிழர்கள் மத்தியில் சுற்றுப்பயணம் செய்து தாங்கள் ஆற்றிய பணிகள் பற்றி அறிந்திருந்தேன். தங்கள் உரைகளைக் கேட்ட உறவுகள், நெகிழ்ந்து போய் எமக்கான ஆதரவுகளை அள்ளி வழங்கியதையும், கேட்டு மகிழ்ந்தேன். இப்பணிகள் காரணமாக சில நாடுகளுக்கு தங்களுக்கு விசா மறுக்கப்பட்டதாயும் கேள்விப்பட்டிருந்தேன்.

பின் (2002 புரிந்துணர்வு உடன்படிக்கை காலத்தின்பின்) வெளியிடங்களில் நின்றபோது, தாங்கள் வன்னி வந்து சென்ற சேதி அறிந்தேன்.

இடையிடையே tamilnaatham.com இணைய தளத்தில் தங்கள் நேர்காணல்களை கேட்டிருந்தேன். "அண்ணைக்கு' எழுதியிருக்கக் கூடிய கடிதங்களுக்கும் பின் உங்களுக்குத்தான் மனம் திறந்து எழுத வருகிறது.

தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களை "அண்ணை' என விளிக்கும் பாக்கி யம் பெற்றவன் நான். அந்த உறவில்தான் எம் உறுதியும் மாசுபடாது இருந்தது.

வெறுமனே ஆயுதம் தாங்கிய மனித இயந்திரங்களாய் எம்மை ஆக்காது நல்ல பண்பு களை எம்மில் வளர்த்து, சமூகம், அரசியல், வரலாறு, மருத்துவம், விஞ்ஞானம் என எதிலுமே தேடலுடன் கற்கும் ஆர்வத்துடன் எமை வளர்த்தவர். பல்வேறு தேவைகளைக் கருதி உலக நாடுகளெங்கும் தன் பிள்ளை களை அனுப்பி, "தமிழீழம்' என்ற நெடுங்கனவு கண்டவர் எம் தலைவர்.

தவறான நடத்தை, போதை எதற்கும் அடிமையாகாது, "அரசன் எவ்வழி அவ்வழி குடிகள்' என்பதற்கு இலக்கணமாய் வாழ்ந்து காட்டியவர். குழந்தைகள், இயலாதவர்கள், அனாதைகள், காயமடைந்த போராளிகள், முதியோர் என மனித படைப்புகளிலேயே கடவுளை தரிசித்து போராளிப் பிள்ளைகளுக்கு ஆதர்சமாய் இருந்தவர்.

தெளிவற்ற, கரடுமுரடான, சதிகளும்- சகதிகளும் நிரம்பிய பெரும் குழிகள் கொண்ட பாதையில் பலர் முயன்றும் ஓட்ட முடியாது போய்விட்ட "தமிழீழ தேசம்' என்ற வண்டியை மூன்று தலைமுறைகளுக்கும் மேலாய், விடாப்பிடியாய் ஓட்டிச் சென்ற ஓட்டியாய் அவரைப் பார்க்கிறேன்.

மிக நீண்ட பாரம்பரியமாய் தொடர்ந்த, இறுக்க மான, மனிதாபிமானங்களைத் தூரவைத்துப் பார்க்க சாதியக் கட்டமைப்புகள் சிதைந்து போகவும், பெண் ணடிமை ஒழிப்பு, சீதன ஒழிப்பு போன்ற முற்போக்கு விடயங்கள் பக்கவிளைவுகளாக தொடரவும், நிலப் பரப்பிலும் எண்ணிக்கையிலும் சுண்டுவிரல் அளவேயான ஈழத்தமிழ் இனத்தை உலகெங்கும் பேசச் செய்ததும், தமிழினத்தின் பாரம்பரிய குணங்களை மீண்டும் எழுச்சி பெற வைத்ததும்... கடமை, கண்ணியம், கட்டுப்பாடுடன் கூடிய புதியதொரு சமுதாயத்தை வழங்கியதும் ஆயுதப் போராட் டம் என்பதற்கு அப்பால், போராட் டம் எமக்கு வழங்கியவை.

அண்ணா, ஏறத்தாழ ஒரு தலைமுறைக்கும் மேற்பட்ட கால வரலாறு தொக்கிப்போய் எம்முன் சூனியப்பெருவெளி சூழ்ந்து போயுள்ளது. இருந்தும் தடை களையும் சோதனைகளையும் கண்டு சோர்வடையாது, எஞ்சிய வர்களுடன் எம் இலக்கு எட்டப் படும். தன் இன விடிவு ஒன் றையே மனதில் விரித்து சாவை அணைத்த இருபத்தைந்தாயிரம் மாவீரர்களதும், தம் பொருளை, இருப்பிடங்களை, அவயவங் களை, உயிரைக்கூட அர்ப்பணித்த ஆதரவாளர்களதும் மக்களதும் கனவுகள் வீண்போகா.

மீண்டும் யாருமற்றிருந்த இவ்வேளையில் நக்கீரன் எழுத்துக்கள் ஆறுதல் அளிக்கின்றன. தொடர்ந்து எழுதுங்கள். இதுவரை வெளிவராத உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வாருங்கள்.

நன்றி!

நண்பர்களே!

விடுதலைப் போராட்டம் கண்டுள்ள பின்னடைவும் அது எழுப்பியுள்ள சில வெற்றிடங்களும் முதலில் பலிகொள்வது உண்மையைத்தான். எப்போதோ நிறைவாகி யிருக்கிற இந்த "மறக்க முடியுமா' பகுதி தவிர்க்க முடியாமல் தொடர்வதும் சிங்கள பேரினத்திற்கு எதிரான போரில் ஓர் அங்கமாக உண்மைக்கான போரையும் எடுத்துச் செல்வதற் காகத்தான். உண்மைகள் நமது முழு விடுதலையை சாத்தியப்படுத்தும்.

(நினைவுகள் சுழலும்)
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(16)
Name : s.ranjan Date :11/15/2009 2:51:31 PM
good.news.thanks.
Name : chandru..canada Date :11/9/2009 10:16:19 PM
nallathu father நீங்கள்Aluthuvathu thodaravum unkalathu pany nantry
Name : price Date :11/4/2009 11:55:14 PM
பதேர் நன் ஜெர்மன்யில் இறக்கிறேன் உங்கள் கட்டுரைகள் எல்லாம் படிப்பேன் மிகவும் ஆறுதலாக இருக்கும் எம் இன விடுதலைக்காக நீங்கள் கொடுக்கும் அதரவுக்கு நன்றி நிட்சஜம் ஈழம் மலரும் கத்திரிப்போம் விட்வுக்கி குரல் கொடுப்போம் நன்றி price
Name : paranjothimani Date :11/4/2009 5:56:51 PM
ஓகே பாதர் aannal நிங்கள் கருனநிதிஐ பற்றி ஏன் ஒன்றும் குறை சொல்லுவதில்லை கண்ண்டிப்பாக ஈழத்து இந்த நிலைக்கு முதல்வரும் ஒரு காரணம் அதை பற்றி நிங்கள் ஒன்றும் சொல்லாதவரை உன்ன்களின் இந்த கருத்து சந்தேகத்தைத்தான் உருவாக்கும்
Name : rathy Date :11/4/2009 10:21:20 AM
பாதர் நீங்கள் தயவுசெய்து தமிழீழத்துக்கு ஆதரவாக தொடர்ந்தும் அலுதுங்கோ மீக்க நன்றி
Name : pulitthamilan canada Date :11/4/2009 3:45:31 AM
பாதர் அவர்களேயாரம் ஒன்றில் கதை சொல்ல்வார்கள் இல்ய்ஜெல் கவிதை சொல்வார்கள் நீங்கள் சொல்வது ஒன்றும் எனக்கு புரிஜவில்லை நான் சொல்வதை நீங்கள் புரிந்தால் நல்லது புலம் பெஜர்ந்த மண்னில் வாழும் தமிழன் என்ற அடிப்படிஜெல் சொல்கிறேஅன் உங்கள் எழுத்து ஈழத்தமிழன
Name : vadivazhagan Date :11/4/2009 1:30:29 AM
வி நீட தி கிரேட் பாதர் டு கீப் கொந்திநுஎ his சோசியல் செர்வேசேs போர் தமிழ். not ஒnly பொர் ezham aslo இட் is ஆல் டோடல் தமிழ் world
Name : elan Date :11/3/2009 5:33:41 PM
பாதரின் இந்தக் கட்டுரைப்பற்றி என்னால் இதைப்போல் இரண்டு மடங்கு எழுத முடியும்.ஆனால்,அது வஞ்சப்புகழ்ச்சி அணியாகத்தான் இருக்கும்.நக்கீரன் அதற்கு வாய்ப்பளிக்குமா எனத்தெரியவில்லை.ஒரு மாவீரனின் வரலாறு திசை மாறி,உருமாறி செல்கிறது.மனம் வலிக்கிறது.சிலந்தி வலையில் சிக்கிய சிறு பூச்சியாய் தவிக்கிறேன்.எதிர்மறையான கருத்துக்கள்.....நிறைய சொல்ல எண்ணம்.அதை இங்கு வெளியிடமாட்டார்கள் என்பது திண்ணம்.வேறென்ன....அனுபவம்தான்....
Name : palaputhran Date :11/3/2009 4:03:31 PM
முக்கிய இணையத்தளம் இரண்டு இன்று இல்லை.இனியும் வராது.ஆனால் அது வேறுபெயரில் இலங்கை அரசின் துதி பாடும். நீயுமா துரோகி? என்று இனம் கண்டு விடுவார்கள் அதன் அச்சமே. படித்த ஒரு கவிதை இது "திருமணம் வேண்டாம் என்று இருந்தேன் வரதட்சனை தொகையை கேட்டவுடன் எனக்கும் கல்யாண ஆசை வந்துவிட்டது. பாதர் அவர்களே பாரிஸ் -லண்டன் நண்பர்கள் பிரபலம் (உங்களுக்கு) நிச்சயம் தெரியும் தானே. உண்மையை விசாரித்து எழுதுங்கள். உண்மை ஓங்குக - நன்றி:
Name : Tamileelam Date :11/3/2009 3:20:45 PM
பாதர் ! நான் உங்களை கிளிநொச்சியில் சந்தித்து இருக்கிறேன். உங்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துள்ளேன். உண்மையை தயங்காமல் எழுதுங்கள்.
Name : palaputhran Date :11/3/2009 4:08:10 AM
மதிப்பிற்குரிய பாதர் அவர்களே! எழுதுவதாலும்,பேசுவதாலும் ஒரு புரட்சியாளன் உருவாக வழி ஏற்படும் இப்படித்தான் பிரபாகரன் உருவானார். நன்றி.
Name : raavan rajhkumar-jaffna Date :11/3/2009 1:06:34 AM
இதை வாசிக்க சிரிப்புதான் வருகிறது....ஐயா,நீங்கள் என்னதான் சொல்ல வருகிறீர்கள்?உங்கள் அண்மைய பேச்சுக்களின் விடலைத்தனத்தை நியாயப்படுத்த வருகிறீர்களா?அல்லது,நீங்கள் என்ன சொன்னாலும் கேட்டுத்தான் ஆகவேண்டும்.ஏனென்றால்,ஈழத்தவருக்காக நான் நிறைய செய்திருக்கிறே
Name : eelavan Date :11/2/2009 6:40:58 PM
புலம் பெயர் தேசங்களில் விடுதலைக்காக பணி செய்கின்றோம் என்று வானொலிகளும் தொலைக்காட்ச்சிகளும் முன்பு விட்ட தவறுகளை உங்கள் கட்டுரையிலும் அவதானிக்க கூடியதாக இருக்கிறது .. மக்களிடம் இன்றே போக வேண்டிய தகவல்களை கால தாமதம் செய்து நாள்க்களை இழுத்தடிப்பது நன்றாகவே உணர முடிகிறது .விடுதலையின் வலியை உணராதது போல நிசத்துடன் நிழல்களை கலப்பதுமாக கண்ணீருடன் கானல் நீரை இணைப்பதுமாக உயிர் தியாகத்துடன் ஒன்றுக்கும் உதவாத சினிமாவை இணைப்பதுமாக இருப்பதால் எங்கள் இதயங்கள் வலிக்கிறது நீங்கள் முன்பு செய்த அத்தனை பணிகளின் தாற்பரியத்தை இப்போ எழுதும் எழுத்தின் மைகள் மாயமாக்கி விடுமோ என்ற ஏக்கம் எழுகிறது . ஈழ தேசத்தையும் விடுதலைப்புலிகளையும் விளங்க வைக்க வீணாக போகும் சினிமா எதற்கு ???
Name : ramjii Date :11/2/2009 6:39:35 PM
இணையதள புல்லுரிவிகளை பற்றி இனியும் எழுதுங்கள்
Name : siva Date :11/2/2009 5:12:07 PM
ஒரு மர்மக்கதை எழுத்தாளரைப் போல "இதைப் பற்றி பின்பு விளக்குகிறேன்" "உண்மை என்ன என்று பிறிதொரு சமயம் சொல்லுகிறேன்" என முடிச்சுப் போட்டுக்கொண்டே போகிறார் தவிர தெளிவான விஷயங்கள் எதுவும் இல்லை. வேரித்தாஸ் வானொலி சுய புராணம்தான் அதிகம். இன்றையத் தேதியில் இலங்கைத் தமிழர்களுக்கு அமைதி வாழ்க்கை திரும்புவதற்கான ஆக்க பூர்வமான யோசனைகள் தேவை.
Name : D.Stanley Date :11/2/2009 4:17:23 PM
ஒரு தொடர்ச்சி இல்லாமல் வெள்ளாடு வாய் வெஇதது போல அங்கொன்றும் இங்கொன்றுமாக துண்டு துண்டாக ஒங்க கட்டுரை இருக்கிறது. முழு செய்தியை சொல்லுங்கள்.