Home Home Page
சிறப்பு கட்டுரை
இந்தியாவில் நீதி இல்லையா? டக்ளஸால் கொல்லப்பட்ட குடும்பத்தின் கதறல்!
......................................
அட்சய திருதியைக்கு நகை வாங்கப் போறீங்களா? உஷார்!
......................................
வாசகர்களுக்கு நன்றி 23ஆம் ஆண்டில்
......................................
அதிரடியா? அமைதியா? கனிமொழி சிறப்பு பேட்டி!
......................................
"தனித்துப் போட்டியிடத் தயார்'' டாக்டர் அன்புமணி ஆனந்த பேட்டி!
......................................
I was with Ranjitha in Bed – So what? Asks Nithyananda
......................................
இஸ்லாமிய சகோதரர்களுக்கு.....
......................................
நக்கீரன் மக்கள் செய்தியாளர் (People Journalist)
......................................
மிசௌரி தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா (படங்கள்)
......................................
நீங்கள் உண்மையான விடுதலைப் புலிகளின் பிரதிநிதியா? சிங்களவர்களின் கைக்கூலியா? - தமிழ்மாறன் பேட்டி
......................................
யுத்தம் 14 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 13 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 12 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 11 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 10 -நக்கீரன் கோபால்
......................................
தந்தை பெரியார் சொன்ன வார்த்தைகள்! - கலாம்
......................................
போராளிகளே கவனம்! ராணுவத்தின் புது சதி!
......................................
யுத்தம்! 9 -நக்கீரன் கோபால்
......................................
யுத்தம்! 8 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 7- நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 6 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 5 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 4 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 3 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 2 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் 1 - நக்கீரன் கோபால்
......................................
யுத்தம் சேலஞ்ச் - II
......................................
பெரியார் எனக்குச் சொன்ன அறிவுரை! -் கலாம்
......................................
புதிய குழு புருடா! - ஜெகத் கஸ்பர்
......................................
சதீஷ் தவான் என்னும் ஒப்பற்ற தலைவர்! - கலாம்
......................................
அப்பா வருவார்! - ஜெகத் கஸ்பர்
......................................
தலைவனுக்கான 8 விதிகள்! - அப்துல் கலாம்!
......................................
சரித்திரம் சொல்லும் உண்மைகள்! - ஜெகத் கஸ்பர்
......................................
போர் குற்றத்திற்கு நீதிகோரும் புனிதப் பயணம்! - ஜெகத்
......................................
கதவைத் திற, சூரியன் வரட்டும்! - அப்துல் கலாம்
......................................
நமக்கு விடப்பட்ட சவால்!
......................................
காட்டாமணக்கு எண்ணெயில் ஒரு அற்புதம்’ -அப்துல் கலாம்
......................................
சரியும் சாம்ராஜ்யம்! - ஜெகத் கஸ்பர்
......................................
“என் ஜனாதிபதி காலத்தில் ஓர் ஆதங்கம்!’’ - அப்துல் கலாம்
......................................
அரிய புத்தகங்கள்! - ஜெகத் கஸ்பர்
......................................
இயற்கை ஒளித்து வைத்திருக்கும் சாவிகள்! - கலாம்
......................................
யார் துரோகி?
......................................
தாய்ப்பாலில் நஞ்சு! - ஜெகத் கஸ்பர்
......................................
அடுத்த விடுதலைப் போராட்டம்! - அப்துல் கலாம்
......................................
மூன்று சக்திகள்! - அப்துல் கலாம்
......................................
அமெரிக்கா விசாரணை! குற்றவாளி கூண்டில் கொலைகார ராஜபக்சே!
......................................
இந்தியா ஆசிர்வதிக்கப்பட்ட நாடு! - அப்துல் கலாம்
......................................
ஒரு போராளியின் கடிதம்! - ஜெகத் கஸ்பர்
......................................
பிரபாகரனை கலங்க வைத்த தலைவர்கள்! - ஜெகத் கஸ்பர்
......................................
கண்ணெதிரே ஒரு வசந்தம்! - அப்துல் கலாம்
......................................
தூண்டப்பட்ட... எழுச்சியூட்டப்பட்ட மனம் ...- அப்துல் கலாம்
......................................
யுத்தப் படம் சொல்லும் பாடம்! - ஜெகத்கஸ்பர்
......................................
கோவா வழிகாட்டுகிறது! -டாக்டர் அப்துல் கலாம்
......................................
இணையதள புல்லுருவிகள்! - ஜெகத் கஸ்பர்
......................................
கனவின் விலை 36,000 கோடி! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அந்த இறுதி நாளில் - ஜெகத் கஸ்பர்
......................................
என்னுடையக் கனவுத் திட்டம் -அப்துல் கலாம்
......................................
இறுதி யுத்தகளத்தில் என்ன நடந்தது?-ஜெகத் கஸ்பர்
......................................
கலங்க வைக்கும் கடிதங்கள்! - ஜெகத்கஸ்பர்
......................................
நதிநீர் இணைப்பு - கலைஞர், ஜெயலலிதா -டாக்டர் அப்துல் கலாம்
......................................
அதிர்வுகள் கண்டு அஞ்சாது நக்கீரன்
......................................
நதிநீர் இணைப்பு- செய்ய வேண்டியது என்ன? - டாக்டர் அப்துல் கலாம்
......................................
சஞ்சனா அனுபவம்! - ஜெகத் கஸ்பர்
......................................
நீரின்றி அமையா உலகு! -டாக்டர் அப்துல் கலாம்
......................................
இயற்கையே காட்டும் தீர்வு! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
நகரை காத்த வீரன்! - ஜெகத் கஸ்பர்
......................................
முடியும்..முடியும்..நதிகளை இணைக்க முடியும்! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
நான் உங்களோடுதான் இருக்கிறேன்'' பேசுகிறார் பிரபாகரன்
......................................
வீரம் எழுதிய வரலாறு! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
பிரபாகரனின் புதிய போர் முழக்கம்! - ஜெகத் கஸ்பர்
......................................
சுடடா என் மார்பில்.. - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அன்றே எழுந்த அச்சம்! - அருட்தந்தை ஜெகத்கஸ்பர்
......................................
ஆழ்கடலில் ஒரு பயணம்! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
வரலாற்றுப் பதிவு! - ஜெகத் கஸ்பர்
......................................
நாடே தூங்கும் நேரம்.. அவர்கள் விழித்திருக்கிறார்கள் - கலாம்
......................................
ஆயிரம் கேள்வி கேளு பாப்பா! - ஜெகத்கஸ்பர்
......................................
வான் கண்டேன், திசை கண்டேன்!- டாக்டர் அப்துல் கலாம்
......................................
உயரே பறக்க வேண்டும்... அதற்கு என்ன செய்வது?- டாக்டர் கலாம்
......................................
அஞ்சாதே! -பேசுகிறார் பிரபாகரன்
......................................
கடற்கரையில் பிறந்த கனவு! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
எமது மக்களை போக விடு! - அருட்தந்தை ஜெகத்கஸ்பர்
......................................
வயது 60, மனமோ 20! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அவலத்தை தந்தவனிடமே பிச்சை! - ஜெகத் கஸ்பர்
......................................
“இடிந்த வீட்டில் பூத்த பூந்தளிர்!’ - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அவரின் முகமா அது? - ஜெகத் கஸ்பர்
......................................
சிறிய விஷயங்கள் அழகானவை! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
கதற வைக்கும் காட்சிகள்! - ஜெகத் கஸ்பர்
......................................
இளைஞர்களே, வாருங்கள் விவசாயத்துக்கு! -டாக்டர் அப்துல் கலாம்
......................................
இதோ... சாட்சி! - ஜெகத் கஸ்பர்
......................................
பழமொழியைப் பொய்யாக்கிய டெக்னாலஜி! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
பாவி ராஜபக்சே பசி தீர்ந்ததா... - ஜெகத் கஸ்பர்
......................................
பிறந்தநாள் பரிசு! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அந்த இறுதி யுத்த நாளில்...!
......................................
உலகிலேயே முதன்முறையாக...
......................................
மனசாட்சி எழுப்பும் கேள்வி - அப்துல் கலாம்
......................................
தாயை சந்திக்கும் தருணங்களில்...! -பிரபாகரன் நெகிழ்ச்சி!
......................................
ஒரு கனவு நனவானது! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
அன்பா சொல்லி அம்மி நகராது -பேசுகிறார் பிரபாகரன்
......................................
கிராமத்தில் ஒரு அதிசயம் - டாக்டர் அப்துல் கலாம்
......................................
ஈழத்தை அங்கீகரிக்கும் உலகநாடுகள்! -பேசுகிறார் பிரபாகரன்!
......................................
"தமிழீழம் மலரும்' -பேசுகிறார் பிரபாகரன்!
......................................
ஐயா, எங்களில் யாருமே அனாதைகள் இல்லை! - டாக்டர் அப்துல் கலாம்
......................................
எல்லை மீறும் ஸ்ரீலங்கா தூதரகம்! - ஜெகத் கஸ்பர்
......................................
மூதாட்டி தந்த தன்னம்பிக்கை! - டாக்டர் கலாம்
......................................
தேவை லட்சியத் தலைவர்கள்! - டாக்டர் கலாம்
......................................
யாரை எனக்குப் பிடிக்காது -பேசுகிறார் பிரபாகரன்
......................................
முடியும் என்று நீ நம்பு! -டாக்டர் அப்துல் கலாம்
......................................
காதல்... கல்யாணம்... வரதட்சனை! பேசுகிறார் பிரபாகரன்!
......................................
வருகிறது மௌனப்புரட்சி! டாக்டர் அப்துல் கலாமின் இளைஞர்கள் காலம்! (2)
......................................
நான் சர்வாதிகாரியா? பேசுகிறார் பிரபாகரன்!
......................................
டாக்டர் அப்துல் கலாமின் இளைஞர்கள் காலம்!
......................................
துன்பம் தந்தவனுக்கே அதனை திருப்பிக் கொடு'' - பேசுகிறார் பிரபாகரன்
......................................
என் மகன் என்னைப்போல் சண்டைக்காரன்'' -பிரபாகரன்
......................................
மாவீரன் பால்ராஜ்! -ஜெகத் கஸ்பர்
......................................
வரலாறு படைத்த பிரபாகரன்!
......................................
யுத்த துரோகம்! -ஜெகத் கஸ்பர்
......................................
உயிருடன் உள்ளார் பிரபாகரன்!
......................................
இறுதிப் போர்! களத்திலேயே நிற்பேன்! பிரபாகரன் வீரசபதம்!
......................................
நொறுங்கியது ஜெ. ஆட்சியின் பொய் வழக்கு!
......................................
அது கடையடைப்புஅல்ல... உயிர்த்துடிப்பு!
......................................
ஆஸ்கர் சிகரத்தில் வெற்றிக்கொடியேற்றிய ஏ.ஆர்.ரகுமான்!
......................................
வழக்கே வா! மிரட்டும் ராஜபக்சே தூதுவர் அம்சாவுக்கு நக்கீரன் சவால்!
......................................
இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்த மாநில அளவிலான கள ஆய்வு முடிவுகள்
......................................
மக்களே யோசியுங்கள்! முத்துக்குமார் எழுதிய கடைசிக்கடிதம்
......................................
இலங்கை இனப்பிரச்சினை
......................................
நோபல் பரிசு 2008
......................................
மும்பை தாக்குதல்: 5 பீகார் எம்.பிக்கள் ராஜினாமா!
......................................
ஏகன்
......................................
செல்வராகவனின் புதிய படம்
......................................
வெள்ளிக்கிழமை, 30, அக்டோபர் 2009 (11:38 IST)


                     நீலகிரிமாவட்டத்தில் மரங்களடர்ந்த ஒரு காட்டுப்பகுதியில் ஒரு ஆங்கிலேயரின் கல்லறை இருக்கிறது. அதில் பொறிக்கப்பட்டி ருக்கும் வாசகம் "இந்த உலகத்திற்கு நான் விட்டுச்செல்லும் செய்தி, உங்களைச் சுற்றிலும் பாருங்கள்!’’ சுற்றிலும் பார்த்தால் மரங்கள், மரங்கள், மரங்கள். ' இந்தக் கல்லறை வாசகத்திற்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது.

அந்த ஆங்கிலேயர் சில நூற்றாண்டு களுக்கு முன்னால் நீலகிரிப் பகுதியில் வாழ்ந்தவர். சமவெளிப்பகுதியான அங்கே தினமும் காலையில் வாக்கிங் செல்வது அவருடைய வழக்கம். அப்போது தன்னுடைய கோட்டுப் பாக்கெட்டில் நிறைய மரங்களின் விதைகளைப் போட்டுக் கொள் வாராம். வாக்கிங் செல்லும் வழி எங்கும் விதைகளைத் தூவியபடி செல்வார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாதையில் வாக்கிங் செல்வார். அவர் அந்தப் பகுதி முழுவதும் தூவிய விதைகள்தான் இன்று அங்கே பெரும்காடாக மாறி நிற்கிறது. அவர் இறந்த போதுகூட அவர் அந்த மரங்களைக் கண்டிருக்க வாய்ப்பில்லை.

ஆனாலும் அவர் மறைந்துபோன பிறகும் அந்தக்காடு அவர் பெயரைச் சொல்லிக்கொண்டு இருக்கிறது. ஒரு தனிமனிதரின் சாதனைதானே இது?

இதேபோல் ஒரு பெண்மணி ஆப்பிரிக்கா வில் மரங்கள் வளர்ப்பில் பெரும் சாதனை செய்தவர். உலகம் முழுக்கப் பிரபல மானவர். அவர் பெயர் வாங்கரி மத்தாய். கென்யா வின் காட்டில் உள்ள மரங்கள் சகட்டு மேனிக்கு வெட்டப்படுவதைக் கண்ட அவர் அதற்காக ஒரு தனி இயக்கத்தையே ஆரம்பித்தார். அவர் தலைமையில் திரண்ட பெண்கள் ஒரு வித்தியாசமான போராட்டத்தை ஆரம்பித்தார்கள். காட்டில் உள்ள மரங்களை மத்தாயின் தொண்டர் அணிப் பெண்கள் போய் அப்படியே கட்டிக் கொள்வார்கள். மரத்தை வெட்ட வருபவர்களை அவர்கள் அருகே அண்ட விடமாட்டார்கள். இது மீடியாவில் பெரிய செய்தியான பின் ஆயிரக்கணக்கான பெண்கள் வாங்கரி மத்தாயின் பின்னால் அணி திரண்டார்கள்.

வெறும் போராட்டத்தோடு மட்டும் நிற்காமல் பாஸிட்டிவ்வாகவும் தன்னுடைய பணியைச் செய்தார் வாங்கரி மத்தாய். “"நாங்கள் சொல்வதைக் கேட்டு நீங்கள் காடுகளை அழிப்பதை நிறுத்த மாட்டீர்கள், ஆனால் புதிய மரங்களை நாங்கள் உருவாக்குகிறோம்'’என்று சொல்லி வாங்கரி மத்தாய் தன் நாடு முழுவதும் மரங்களை நடும் மாபெரும் சமூகப் பணியை ஆரம்பித்தார். நம்பினால் நம்புங்கள், கோடிக்கணக் கான மரங்களைத் தன் போராட்டத்தின் மூலம் ஆப்பிரிக்கா வின் பல தேசங்களில் நட்டு இன்று அவற்றைப் புதிய கானகங்களாக மாற்றிய சரித்திரத்தைப் படைத்தார் வாங்கரி மத்தாய்.

தன்னுடைய போராட்டங்களுக்கான பரிசாகப் பலமுறை சிறை சென்று, கடும் தண்டனைகள் அனுபவித்தவர் வாங்கரி மத்தாய். நாளடைவில் இவர் பெயர் உலகம் முழுவதும் பரவி, பாராட்டுக்களும் விருதுகளும் குவிந்தன. தன்னுடைய சிறப்பு விருந்தினராகத் வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்தார் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா. இதையெல்லாம் தாண்டி உலக சமாதானத்துக்காக நோபல் பரிசு வாங்கரி மத்தாய்க்கு வழங்கப்பட்டது.

நைஜீரியாவில் எண்ணெய் வயல்களைக் கொள்ளை யடித்து நாட்டையே எரியும் பூமியாக்கி நாசப்படுத்திய பன்னாட்டு எண்ணெய் கம்பெனிகளை எதிர்த்துப் போராடிய ஆப்பிரிக்க கவிஞன் கென் சரோ விவாவை அந்த நாட்டு அரசாங்கம் தூக்கிலேயே போட்டது.

இயற்கைக்கு ஆதரவாகவும், இழந்த இயற்கைச் செல்வத்தை மீட்டெடுக்கவும் இதைப் போன்ற பல மனித முயற்சிகள், போராட்டங்கள் உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கின்றன.

அப்படிப்பட்ட சாதனை ஒன்று நம் தமிழ்நாட்டிலும் ஓசைப்படாமல் நடந்திருக்கிறது. கோயம்புத்தூர் என்பது மிக வளமான பகுதி. இயற்கையோடு இயைந்து வாழும் இருளர் இன மக்களைச் சேர்ந்த மன்னன் கோயன் என்பவர் ஏற்படுத்திய ஊர் என்பதால் கோயன் புத்தூர் என்று அழைக்கப்பட்டு பின்னாட் களில் கோயமுத்தூராக மாறியதாக ஒரு வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். அப்படிப்பட்ட வளமான கொங்கு நாட்டுப் பகுதி இன்றைக்குப் பல இடங் களில் வறண்ட பூமியாகக் காணப்படுவது மிகப் பெரும் சோகம்.

நொய்யல் ஆற்றின் பெருமைகளைப் பற்றியும் அதன் இன்றைய பரிதாப நிலை பற்றியும் சில அத்தி யாயங்களுக்கு முன்னால் குறிப்பிட்டிருந்தேன். நொய்யல் ஆறு மட்டு மின்றி ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் என பல தண்ணீர் நிலைகள் கோயம்புத்தூரில் அழியும் நிலைக்கு வந்துவிட்ட சமயம். இந்தத் தண்ணீர் நிலைகளுக்கு மறுவாழ்வு கொடுக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டார் ஓர் இளம் லீடர். சிரீமதி வந்தனா என்பவர்தான் அந்தப் பெண்மணி.

“சிறுதுளி’’ என்கிற அமைப்பைத் தொடங் கியவர், பல தொண்டு நிறுவனங்கள், வாலண்டியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், இயற்கை ஆர்வலர்கள் என்று பல்லாயிரம் மக்களை ஒன்று திரட்டினார். “""இழந்த கோயமுத்தூரின் தண்ணீர் நிலைகளை மீட்டெடுப்போம்''’’ என்கிற கோஷத்துடன் அவர்கள் களத்தில் இறங்கினார்கள்.

கோயமுத்தூரில் தூர் வாராமல் தூர்ந்து போயிருந்த குளம், ஏரிகளைத் தூர்வாரி னார்கள். “"ரெய்ன் வாட்டர் ஹார்வெஸ்ட்' முறை பற்றி மக்களிடையே பிரச்சாரம் செய்து வீடுகளில் மழை நீர் சேகரிப்புக்கான வழி வகைகளைச் செய்தார்கள். காடுகள், மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்துப் போராடினார்கள். நல்ல தண்ணீர் வீணா வதைத் தடுத்தார்கள்.

கழிவுநீர்க் கால்வாய்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து அதனைச் சுத்தப்படுத்தி னார்கள். அப்படி சுத்தப்படுத்தப்பட்ட தண்ணீர் விவசாய நிலங்களில் பாசனத் துக்காகத் திருப்பி விடப்பட்டது. இதுமட்டு மின்றி ஏரிகள், குளங்களின் அருகே ஏராளமான மரங்களை நட்டார்கள். மரங்கள் என்றால் ஒரு மரம் அல்ல, இரண்டு மரம் அல்ல, ஒரு மில்லியன், அதாவது பத்து லட்சம் மரங்களை நட்டார் கள். இதையும் நிச்சயம் ஒரு பசுமைப் புரட்சி என்று தான் சொல்லவேண்டும்.

மிகக்குறுகிய காலகட்டத்தில் கோயமுத் தூரின் ஐந்து பெரிய ஏரிகளை அவர்கள் முழுக்கத் தூர்வாரி மழைத்தண்ணீரை சேமித்து வைக்கும் நீர்நிலையாக மாற்றிக் காட்டினார்கள். ஒரு பெரும் குளத்தில் இருந்து மட்டும் 26000 கியூபிக் மீட்டர் அளவுக்கு குப்பைகளையும் கொட்டப்பட்ட பழைய பொருட்களையும் அவர்கள் தோண்டி எடுத்து சுத்தப்படுத்தினார்கள்.

இவர்களின் ஓயாத உழைப்பின் பலனாக கோயமுத்தூரின் தண்ணீர் மற்றும் இயற்கை அமைப்புகளே பெருமளவில் மாற்றம் கண்டன. கண்ணெதிரே உதித்த வசந்தத்தைக் கண்டு அதிசயித்தார்கள் மக்கள்.

முயற்சித்தால் முடியாதது என்று ஒன்று உண்டா இளைஞர்களே?

(தொடரும்)

 அரவணைப்பவர்!
சந்தோஷ்பாபு ஐ.ஏ.எஸ்.
-எம்.டி., எல்காட்

டாக்டர் கலாம் பற்றி பேசினாலே என்னை அறியாமல் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கிடைக் கும். அவரோட கார்ல டிராவல் செய்த நேரங்களில் எனக்கு புது உற்சாகம் கிடைச்சதை உணர்ந் திருக்கேன். இந்திய குழந்தை கள் மேலயும், இளைஞர்கள் மேலயும் அவர் வச்சி ருக்கிற நம்பிக்கையும் பாசமும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் ஓசூரில் ரூரல் பி.பி.ஓ. தொடக்க விழா நடந்தது. அதற்காக வந்த கலாம் சாரோட நிறைய டைம் ஸ்பெண்ட் பண்ற சான்ஸ் கிடைத்தது. நான் கிருஷ்ணகிரி கலெக் டராக இருந்தபோது படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்களை மீண்டும் படிக்க வைப்பதற்காக உருவாக்கிய திட்டம் பற்றிச் சொன்னதும் ரொம்ப உற்சாகமாக கேட்டார். எப்படி இதையெல்லாம் நடைமுறைப்படுத்துறீங்க? கிராமப்புற மாணவர் களுக்கு நிறைய உதவி செய்யுங்கள் என்று உற்சாகப்படுத்தினார். என்னோட அந்த ஸ்கீம் பற்றி தன்னுடைய இணையதளத்திலும் குறிப்பிட்டிருக்கிறார் டாக்டர் கலாம்.

கிராமப்புறங்களில் நகர்ப்புற வசதிகளை செய்துதரும் அவரோட புரா (Pura)   ஸ்கீமை கொஞ்சம் மாற்றி கிராமப்புறங்களில் தொழில் வாய்ப்பு உருவாக்கும் விதத்தில் நான் சொன்ன திட்டத்தைக் கேட்டு மேலும் என்னை தட்டிக் கொடுத்தார். புதிய விஷயங்களை யார் சொன் னாலும் அதைக் கூர்ந்து கேட்டுக்கொள்கிறார். சரியாக இருக்கும் என்றால் அதை செயல் படுத்தவும் செய்கிறார். பெரியார் மணியம்மை பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்தபோதும் அவரோடு மேடையில் இருந்தேன்.

5 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் இருந்த அந்த அரங்கிற்குள் டாக்டர் கலாம் நுழைந்ததுமே பெரிய சினிமா ஸ்டாரை பார்த்தது போன்று ஆர்ப்பரித்தது கூட்டம். அங்கேயும் அவர் கிராமப்புற மாணவர்களின் முன்னேற்றம் பற்றி நிறைய பேசினார். அவருடைய விஷன் 20:20 திட்டத்தில் என்னையும் பங்களிக்க வைத்திருக்கிறார். ஆர்வம் உள்ளவர்களை அரவணைப்பவர் டாக்டர் கலாம்.





தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : C.Eswar Date :10/31/2009 4:11:42 PM
siruthuli அமைப்பு தொடங்கியது வனிதா மோகன் .மொத்தம் பதினான்கு குளங்கள் நிரம்பியது.