Add1
logo
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ || அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம் || புதுச்சேரியில் ரவுடிகள் ஆட்சி செய்ய முடியாது: கிரண்பேடி || இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்! || அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி || அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்! || வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு || குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல் || பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை || போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்! || பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்! || பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்) || திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது! ||
சிறப்பு செய்திகள்
"கொள்ளிபோட ஆள் இல்லை அய்யா!" ராகுலிடம்
 ................................................................
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து ஆகுமா?
 ................................................................
கருத்தே இல்லாத கபோதிகளுக்கு கருத்து
 ................................................................
காங்கிரஸை 'கை' தூக்கி விடுவாரா ராகுல்?
 ................................................................
எலெக்ட்ரானிக் வடிவில் எமன்
 ................................................................
கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்கு பெயர் சூட்டிச்
 ................................................................
இறுதிச் சடங்கு உரிமைக்காக நீதிமன்றம் ஏறிய பார்சி பெண்!
 ................................................................
கல்வாரியின் அர்ப்பணிப்பும், சிறப்புகளும்
 ................................................................
பொடாவில் போட்டவரின் கையில் சுற்றிய பம்பரம்!
 ................................................................
பாட்டிலை திறப்பவர்கள் அனைவருமே எங்கள் உறுப்பினர்கள் தான்!
 ................................................................
பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது யார் குண்டு?
 ................................................................
அறிவிக்கும் இழப்பீடுகள் முறையாக சேர்கிறதா?
 ................................................................
ஐ.டி. ஊழியர்களைத் தாக்கும் திடீர் ஈட்டிகள்!
 ................................................................
மூக்கறுபட்ட முன்னோர்கள்!
 ................................................................
தமிழ் திரையுலகம் கொண்டாடும் அருவி!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 7, ஜூன் 2017 (14:2 IST)
மாற்றம் செய்த நாள் :7, ஜூன் 2017 (15:36 IST)'ஒரு கிடாயின் கருணை மனு' படம் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது நமக்கு ஒரு உணர்வு. பெரிய சத்தம் ஏதும் இல்லை...ஆனால் அங்கங்கே, தேவையான இடத்தில்,  இசை நம்மை பதற்றம் அடைய வைக்கிறது. கவனித்தால், நீண்ட அல்லது அதிர்ச்சி தரும் இசை எங்கும் இல்லை. அதிகமாக தாள கருவிகளின் (percussion instruments) இசையே பின்னணி இசைக்கு  பயன்படுத்தப்பட்டிருக்கிறது.  பாடல்களும் கவனிக்க வைத்தன. இசையமைப்பாளர் யாரென்று பார்த்தால் ரகுராம் என்ற புதியவர். சமீபத்தில் வெளிவந்த, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும், நம் மண்ணின் சொல்லப்படாத ஆயிரம் கதைகளில் ஒன்றை அழகாக சொல்லியிருக்கும் 'ஒரு கிடாயின் கருணை மனு' திரைப்படத்தின் இசையமைப்பாளர் ரகுராமை சந்திக்கும் ஆவலில் சென்ற நமக்கு முதல் பார்வையே சற்று அதிர்வு தருகிறது. நீண்ட முடி, நடக்கும் போதே நடனம் ஆடும் தோரணை, வித்தியாசமான உடைகள்,ராக்ஸ்டார்கள்  என்றே இசையமைப்பாளர்களை பார்த்துப் பழகிய நமக்கு, சக்கர நாற்காலியில் ஒரு இசையமைப்பாளர் வருவது சற்று அதிர்வைத் தருகிறது. வீட்டில் எங்கும் கடவுள்  படங்கள். சரி, இறைபக்தியிலாவது மற்றவர்களைப் போல இருக்கிறாரே என்று அந்தப் படங்களை நாம் பார்க்க, "நாங்க இந்த வீட்டை ஷேர் பண்ணி இருக்கிறோம். இதெல்லாம் இன்னொரு குடும்பம் வச்சிருக்கிறது", என்கிறார். உங்களுக்கு பக்தியில்லையா என்று நாம் கேட்க, "நான் இன்னும் தேடிக்கிட்டு தான் இருக்கேன். நாம இசையமைக்கும் போது, எதுவோ ஒன்னுதான் அழகான மெட்டுக்களை நமக்குள்ள வர வைக்குது, அறிவைத்தாண்டி...அது எதுனு கண்டுபிடிக்கிற தேடல் தான் இன்னும் நல்ல இசை தரும்னு நினைக்கிறேன்", என்கிறார். அப்பாடா...தத்துவமாகப் பேசுகிறார், இதிலாவது மற்ற இசையமைப்பாளர்களைப் போல இருக்கிறார் என்று நாம் ஆசுவாசம் அடைகிறோம்.ஆனாலும்,  அவரை சக்கர நாற்காலியில் பார்த்த அதிர்வு  இன்னும் நமக்கு விலகாததை உணர்ந்து, "இது மஸ்குலர் டைஸ்ட்ரோபி (muscular அப்படின்ற ஒரு பிரச்சனை" அவரே விளக்குகிறார். "பரம்பரை காரணங்களால வர்ற ஒரு நோய். இருபத்தஞ்சு வயசுக்கு மேல தான் துவங்குச்சு. மெல்ல மெல்ல சீரியஸ் ஆகுது. இருந்தாலும் எனக்கு நம்பிக்கை இருக்கு. இதைத் தாண்டியும் இசையில் சாதிக்க முடியும்னு", சொல்லும்போது நமக்கு அந்த நிலையின் தீவிரம் முழுவதுமாய் தெரியவில்லை. பின்னர் அந்த நோய் பற்றி விசாரித்த போது தான் தெரிகிறது. அப்பா, தாத்தா, கொள்ளுத் தாத்தா என யாருக்கேனும் இருக்கும் ஏதேனும் குறைகள் ஒன்றாய் சேர்ந்தோ, அல்லது ஏதோ ஒரு குறைபாடுள்ள ஜீன் வழியிலோ வருகிறது  இந்த மஸ்குலர் டைஸ்ட்ரோபி. கொஞ்சம் கொஞ்சமாக தசைகள் செயலிழக்கும் ஒரு நிலை. இன்னும் இதற்கு மருத்துவம் இல்லை. பிஸியோதெரப்பி போன்ற முறைகளின் மூலம் சற்று சமாளிக்கலாம் என்றாலும் தசைகள் செயலிழப்பதைத் தடுக்க முடியாது. சிறிது சிறிதாய் நடை குறையும், பின்னர் கை அசைவும் குறையும். அப்படியே முழு உடலும். கேட்கும் போதே நமக்கு நடுக்கம் ஏற்படுகிறது. "உன்னால சென்னை போய் ரோடு கூட கிராஸ் பண்ண முடியாது, எதுக்கு வீண் வேலைனு தான் நிறைய பேர் கேட்டாங்க...இருந்தாலும் ஒரு நம்பிக்கைல வந்தேன், ஓரளவு நடந்துருக்கு", என்று சென்னை வந்த கதை சொல்கிறார் ரகுராம். 


தேனி அருகே போடிநாயக்கனூர் தான் ரகுராமின் சொந்த ஊர். பண்ணைப்புரம் அருகில் தான் பிறந்ததை பெருமையாக சொல்கிறார். "சின்ன வயசுல இசை கத்துக்கிட்டேன். என் குரு தான் இளையராஜாவுக்கும் குருனு சொல்வாங்க. ஆனா உறுதியா தெரியல. ராஜா சாரோட இசையைக் கேட்டு அதே மாதிரியே வாசிக்கணும்னு நண்பர்கள் முயற்சி பண்ணுவோம். ஆரம்பத்துல சொதப்பி, அப்பிடி இப்படினு ஒரு கட்டத்துல வாசிக்க வந்துருச்சு. அவர், MSV லாம் எல்லாமே செஞ்சு வச்சுட்டாங்க. இன்னைக்கு இருக்கிற நாங்க நெறய பேர், அதை எடுத்து ஒழுங்கா பண்ணுனா போதும். கிட்டத்தட்ட இந்த இசைலாம் அவுங்க போட்ட பிச்சைதான்" என்று நெகிழ்கிறார்.  ஊரில் நண்பர்களுடன் நடத்திய இசைக்குழுவோடு விழாக்களில் சொந்தமாக தான்  உருவாக்கிய பாடல்கள் பெற்ற வரவேற்பு தான் இவரை சென்னைக்கு அனுப்பியிருக்கிறது. தன் குடும்பமும், தாய் மாமாவும் நண்பர்கள்  ஜெயசீலன் - ஜாஸ்மின் ஆகியோரும்   உறுதுணையாய் இருக்க, 'காக்கா முட்டை' இயக்குனர் மணிகண்டன் வழித்துணையாக வந்து சேர்கிறார். அவர் மூலமாக கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமியெல்லாம் நண்பர்களாகி பல குறும்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். "அப்போவே  நாங்க போட்ட பாட்டெல்லாம் நெறய பேர் கேட்டுட்டு 'ரொம்ப நல்லாருக்கு, தனியா ரிலீஸ் பண்ணுங்க'னு கேப்பாங்க, பாராட்டுவாங்க. அதனால அந்த சுவை பழகிட்டாலும், சினிமாவுல கிடைக்குற பாராட்டுகள் கொஞ்சம் பெருசா ஃபீல் ஆகுது", என்கிறார். பல்வேறு காரணங்களால் மணிகண்டன் இவரைத் தன் திரைப்படங்களில் பயன்படுத்த முடியாமல் போக, மணிகண்டனிடம் உதவி இயக்குனராக இருந்த சுரேஷ் சங்கையா 'ஒரு கிடாயின் கருணை மனு' தொடங்கிய போது ரகுராமை இணைத்துக்கொள்கிறார்.         
"மேற்கத்திய இசையில விவால்டினு  ஒரு இசைக்கலைஞர் '4 சீசன்ஸ்'னு பருவநிலை மாற்றங்களைத் தன் இசையால் வெளிப்படுத்தியிருப்பார். இசையைக் கேட்டால் அந்த வெயிலை, மழையை, வசந்தத்தை நாம் உணருகிற அளவுக்கு பண்ணியிருப்பார்.  அந்த மாதிரி, இசையை வெஸ்டர்ன், மெலடி இப்படிலாம் பிரிக்காம, உணர்வுக்கேற்ற மாதிரி கொடுக்கணும் என்பது தான் என் ஸ்டைல்", தன் பாணியைப் பற்றிய கேள்விக்கு ரகுராம் கூறிய பதிலில், உடலின் பலத்தைத் தாண்டிய மனதின் பலம் தெரிந்தது. "ஸ்டீஃபன் ஹாக்கிங் மாதிரி இவரு எந்த நிலையிலும் சாதிக்கணும். இவரை நான் இந்தியாவின் ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ்னு தான் அடிக்கடி சொல்லுவேன்", என்கிறார் பாடலாசிரியர் வேல்முருகன். உலகப்புகழ் பெற்ற இயற்பியல் அறிஞரும், பேச்சாளருமான  ஸ்டீஃபன் ஹாக்கிங், இதே நோயால் பாதிக்கப்பட்டவர். "இவரோட திறமை எனக்கு ரொம்ப நல்லா தெரியும். இன்னும் சில வருடங்களில் தசைகள் இன்னும் பலவீனமடையலாம். அதற்கு முன்னரே இவரை, இவரது திறமையைப் பயன்படுத்திக்கணும்,  உலகத்துக்குக் காட்டணும்னு நெனச்சேன். அது நடந்திருக்கிறது ரொம்ப சந்தோஷம்", என்கிறார் 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தின் இயக்குனர் சுரேஷ் சங்கையா. இவரைப் பற்றி எதுவும் தெரியாத பொழுதே நம்மை ஈர்த்தது தான் இவரது இசை. அந்தத் திறமை இன்னும் வெளிப்பட வேண்டும். சந்திப்பு முடிந்து நெடுநேரம், நாட்கள் ஆனாலும் நம் மனதில் ஒலிக்கிறது அந்தத்  தன்னம்பிக்கையின் இசை.    

வசந்த் பாலகிருஷ்ணன்                                                


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :