Add1
logo
இன்றைய (17.1.2018)டாப்-10 நிகழ்வுகள்! || பெரியபாண்டியனை நான் சுடவில்லை: நாதுராம் வாக்குமூலம் || ஹஜ் மானியம் ரத்து செய்து இருப்பது மத ஒற்றுமை, சனநாயக விரோத செயல் - நாராயணசாமி || ஜெ. உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது 4 அமைச்சர்கள் அதிக அளவில் சொத்து சேர்த்துள்ளனர் : தினகரன் || எம்.ஜி.ஆர். பட துவக்க விழாவில் ரஜினி - கமல்! (படங்கள்) || தமிழக மாணவர்கள் வடமாநிலங்களில் கொலை செய்யப்படுவதா?கி.வீரமணி கண்டனம் || போயஸ் தோட்ட இல்ல ஆய்வு நிறைவு!(படங்கள்) || மதுராந்தகம் அருகே சாலை விபத்து ஒருவர் பலி || வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்த ராமதாசுக்கு துறவியர் சங்கத்தினர் பாராட்டு! || ஹஜ் மானியம் ரத்து பாஜகவின் முஸ்லிம் வெறுப்பையே காட்டுகிறது! - வி.சி.க. கண்டனம் || ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே உயிரிழந்துவிட்டார்! - பரபரப்பு கிளப்பும் திவாகரன் || குறுகிய பாலத்தால் தொடர் விபத்து! - 50 உயிர்களைக் குடித்த பரிதாபம்!! || போக்குவரத்துத் தொழிலாளர்களைப் பழிவாங்கும் அரசு! - விஜயகாந்த் கண்டனம் ||
சிறப்பு செய்திகள்
ஒரு உயிருக்காக 800 நாள் போராட்டம்!
 ................................................................
இசுலாமியர்கள் மீதான இன்னொரு தாக்குதலா?
 ................................................................
ஆங்கிலேயர் காலத்தைச் சேர்ந்த வெளிநாட்டுக்
 ................................................................
நடிக்காததால் வென்ற நடிகன்!
 ................................................................
குருமூர்த்தி குழப்புகிறாரா? குழம்பிப்போனாரா?
 ................................................................
ஆளு தெரியும்; ஆனா.. பேரு தெரியாது!
 ................................................................
ஆளுகிறான் தமிழன்!
 ................................................................
ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த எழுச்சி!
 ................................................................
‘வைரமுத்துவை விடவே மாட்டோம்!’
 ................................................................
நமக்குப் பொங்கல்... ஆந்திரா, கர்நாடகாவில் என்ன?
 ................................................................
பனியோ, புகையோ
 ................................................................
கண் கூசும் நெடுஞ்சாலைகள்
 ................................................................
விசாரணை கமிஷனா? ராணுவ கோர்ட்டா?
 ................................................................
நீதித்துறையில் மோதல் வெடித்தது ஏன்?
 ................................................................
ஜல்லிக்கட்டு வகைகளும், விதிகளும்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 6, ஜூன் 2017 (18:55 IST)
மாற்றம் செய்த நாள் :6, ஜூன் 2017 (19:50 IST)


தரமற்ற தயாரிப்புகளை தலையில் கட்டும் பதஞ்சலி:
குட்டு வைக்கும் ஆய்வறிக்கைகள்!

மிகத் தொன்மையான கலாச்சாரம் கொண்ட இந்த நாட்டில், பன்னாட்டு நிறுவனங்கள் திட்டமிட்டே கூடாரமிடத் தொடங்கி தங்களின் வேர்களை ஆழப்பதித்துவிட்டன. மெக்காலே திட்டமிட்டு நடைமுறைப்படுத்தியது போலவே, இங்கு தனக்கு சொந்தமான ஒன்றைவிட மேன்மையானது எதுவென்று தேடித்திரியும் கலாச்சாரம் வெகு சுலபமாக பழக்கப்பட்டுவிட்டது. இவற்றைத் தடுக்க முடியாத நிலையில், உலகமயமாதல் மற்றும் நுகர்வுக் கலாச்சாரங்களால் மேலும் நம் நாட்டின் வளங்கள் அயல்நாடுகளுக்கும், அயல்நாட்டுப் பெருமைகளால் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட குப்பைகள் நம் நாட்டுக்கும் அத்தியாவசியப் பொருட்களாக வந்திறங்குகின்றன. நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்த பல்வேறு தன்னார்வ அமைப்புகள் பலவும் போராடிவந்த நிலையில், ஓரளவிற்கு இந்தியப் பொருட்களை, உணவுகளைப் பயன்படுத்தவேண்டும் என்கிற தெளிவு அனைவரின் மத்தியிலும் துளிர் விடத்தொடங்கியிருக்கிறது. இதனால், வெளிநாட்டுப் பொருட்களின் மோகம் குறைந்ததா எனக் கேட்டால் கண்டிப்பாக இல்லை.இதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த, சமயம் பார்த்துக் காத்திருந்த சர்ச்சைக்குரிய சாமியார் யோகா குரு என அழைக்கப்படும் பாபா ராம்தேவ், இந்தியாவின் பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின், தனது பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்களை கார்ப்பரேட் பாணியில் விற்கத் தொடங்கினார். ‘இந்திய பொருட்களையே வாங்க வேண்டும்; அயல்நாட்டுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்’ என்பது மாதிரியான விளம்பரங்களை தொலைக்காட்சிகளில் வெளியிட்டு, தனது நிறுவனத்தை அறிமுகப்படுத்தினார் அவர். முதலில் வெகுசில இடங்களில் மட்டுமே நிறுவப்பட்டிருந்தன அவரது கடைகள். ஆனால்,  நாளுக்கு நாள் தனது கிளைகளை வெகுசாமர்த்தியமாக நாடு முழுவதும் பரவவிட்டு, தன்னை வணிகத்தளத்தில் அசைக்க முடியாதவராய் நிலைநிறுத்திவிட்டார். அவரது பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்களில் அதிக கவனம் பெற்றவை ஆயுர்வேதப் பொருட்களே. முற்றிலும் இரசாயனக் கலப்புள்ள பொருட்களையே அதிகம் பயன்படுத்திவந்த பலரும், ஆயுர்வேதப் பொருட்கள் என்றவுடன் தங்களது பார்வைகளை பதஞ்சலி தயாரிப்புகளின் பக்கம் திருப்பினர். 

இப்படி பெரும்பான்மையான மக்களைத் தன் பக்கம் இழுத்துப்போட்ட பதஞ்சலி நிறுவனத்தின், கடந்த நிதிஆண்டிற்கான(2016-2107) வருமானம் ரூ.10,561 கோடி என்றால் நம்ப முடிகிறதா? கடந்த 2006-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் 2009-2010 ஆம் ஆண்டிற்கான வருமானம் வெறும் ரூ.163 கோடி மட்டுமே. ஹரித்வாரில் தலைமையகத்தைக் கொண்ட இந்த நிறுவனத்தின் 2015-2016 ஆம் ஆண்டிற்கான வருமானம் ரூ.5000 கோடி. ஒவ்வொரு நிதிஆண்டிலும் தனது நிறுவனத்தின் ஆண்டு வருமானத்தை இரட்டிப்பாக்குவதில் முனைப்புக் காட்டும் ராம்தேவ், அடுத்த ஆண்டின் வருமானத்தையும் இரட்டிப்பாக்கப் போகிறோம் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். ஆனால், தரமதிப்பீட்டில் இந்த நிறுவனத்தின் குறிப்பிட்ட சில ஆயுர்வேத பொருட்கள் தரமற்றவை என நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.பதஞ்சலி நிறுவனத்தின் ஆயுர்வேதப் பொருட்களின் தரம் குறித்தான சில தகவல்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளிவந்திருக்கின்றன. அதில் கிட்டத்தட்ட 40% ஆயுர்வேதத் தயாரிப்புகள் அவற்றில் குறிப்பிட்டுள்ள தரத்தைக் கொண்டிருக்கவில்லை என்கின்றன அந்தத் தகவல்கள். இந்த ஆய்வானது ஹரித்வாரில் உள்ள ஆயுர்வேத மற்றும் யுனானி மருந்துகளுக்கான ஆய்வகத்தில் நடத்தப்பட்டுள்ளது. 2013-2016 வரை 82 ஆயுர்வேதத் தயாரிப்புகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அவற்றில் 32 தயாரிப்புகள் தரம் குறைந்தவை என நிரூபிக்கப்பட்டன. அவற்றில் திவ்யா நெல்லிச்சாறு மற்றும் சிவ்லிங்கி பீஜ் எனப்படும் விதை வகைகளும் அடக்கம். கடந்த மாதம் ஆயுதப்படையினருக்கான பண்டகசாலைகளில் பதஞ்சலியின் திவ்யா நெல்லிச்சாறு விற்பனையானது தடைசெய்யப்பட்டது. இதற்குக் காரணம் மேற்குவங்கம் மாநிலத்தில் அந்தத் தயாரிப்பின் மீது நிகழ்த்தப்பட்ட ஆய்வில் தரமற்றதாக நிரூபிக்கப்பட்டதுதான் காரணம்.உத்தரகாண்ட்டில் உள்ள மாநில அரசு ஆய்வகத்தின் ஆய்வறிக்கையின் படி, பதஞ்சலியின் திவ்யா நெல்லிச்சாறு நிர்ணயிக்கப்பட்ட பிஎச் (pH) அளவுகளை விடக் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. பிஎச் அளவானது 7-க்கும் குறைவாக இருந்தால், அமிலப் பிரச்சனைகள் மற்றும் இதர சில பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது எனவும் அந்த ஆய்வறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆர்டிஐ மூலம் கிடைத்த தகவல்களில்,  பதஞ்சலியின் சிவ்லிங்கி பீஜ்-ல் 31.68% அயல்நாட்டு விஷயங்கள் அல்லது இயற்கை அல்லாத பொருட்கள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா மறுத்துவிட்டார். இதுகுறித்து அவர், சிவ்லிங்கி பீஜ் ஒரு இயற்கையான விதை; அதில் எப்படி கலப்படம் செய்யமுடியும்? எங்கள் தயாரிப்புகளின் மீதான ஆய்வறிக்கைகள் நிறுவனத்தின் பெயரைக் கெடுப்பதற்காகவே வெளியிடப்பட்டுள்ளன என்கிறார்.

இவை மட்டுமின்றி பதஞ்சலி நிறுவனத்தின் மற்ற படைப்புகளான அவிபத்திரிக்கா சூரணம், தாளிசத்யா சூரணம், புஷ்யானுகா சூரணம், லவண் பாஸ்கர் சூரணம், யோக்ராஜ் குக்குலு, லக்‌ஷ குக்குலு உட்பட மொத்தம் 18 மாதிரிகள் ஆய்வின் மூலம் தரமற்றவை என நிரூபிக்கப்பட்டுள்ளன. பத்தாண்டுகளுக்கு முன்னர் பதஞ்சலி நிறுவனத்தின் தயாரிப்புகள் தரம் குறித்த ஆய்வுகளில் தோல்வியடைந்ததை இந்த இடத்தில் நினைவுபடுத்திக் கொள்ளலாம். டாபர் எனப்படும் நிறுவனத்தோடு போட்டியிட்டு, பதஞ்சலி தனது தேன் தயாரிப்புகளின் விற்பனைக்கான விளம்பரங்களை வெளியிட்டது. அதில், சுத்தத்திற்கான ‘இரட்டிப்பு உத்தரவாதம்’ என சொல்லப்பட்டது. இதன் பின் டாபர் நிறுவனம் இந்திய விளம்பரங்கள் கட்டுப்பாட்டு வாரியத்தில் வழக்குத் தொடுத்து, பின்னர் அந்த விளம்பரங்கள் நிறுத்தப்பட அல்லது மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. 

மேலும், பதஞ்சலி நிறுவனம் தனது தயாரிப்புகளின் விளம்பரங்களில் தரம் குறித்து மிகைப்படுத்துவது மட்டுமல்லாமல், அதன் போட்டி நிறுவனங்களின் தரம் குறித்து விமர்சிப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளது. அதன் காச்சி கானி என்ற கடுகு எண்ணெய் விளம்பரத்தில் மற்ற நிறுவனங்களின் கடுகு எண்ணெய்களில் ஹெக்சேன் மாதிரியான கலப்படங்கள் இருப்பதாகவும், பசுந்தீவனமான குக்தாம்ரூட் விளம்பரத்தில் மற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளில் 3-4% யூரியா கலந்திருப்பதாகவும் ஆதாரமற்ற தகவல்களைப் பரப்பியது. இதனை கடந்த மே 2016-ஆம் ஆண்டு இந்திய விளம்பரங்கள் கட்டுப்பாட்டு வாரியம் கண்டுபிடித்து பதஞ்சலி நிறுவனத்திற்கு குட்டு வைத்திருக்கிறது. இதையே அந்த நிறுவனம் தலைக்குத் தேய்க்கும் எண்ணெய் தொடங்கி துணி துவைக்கும் பொடிகள் வரையில் கடைபிடித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆயுர்வேதப் பொருட்கள் எனப்படுபவை பெரும்பாலும், சிறுதொழில்களாகவோ அல்லது குடிசைத் தொழில்களாகவோ தான் இருந்திருக்கின்றன கடந்த காலங்களில். ஆனால், அவற்றை விளம்பரங்கள் முதலான பல கார்ப்பரேட் உத்திகளைப் பயன்படுத்தி, மக்களை நம்பச்செய்து, அதன் மூலம் தனது நிறுவனத்தைப் பெருக்கியிருக்கிறார் பாபா ராம்தேவ். மேலும், இத்தனை குற்றச்சாட்டுகள் இருந்தும், அடுத்தாண்டுக்கான வருமானத்தை இரட்டிப்பாக்கப் போகிறோம் என உற்சாகக் கூச்சலிடுகிறார் அவர். சாமியார்களிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு, மாடுகளை ஆட்சி செய்தால் போதும் என்று நினைக்கும் ஆட்சியாளர்கள் இருக்கும் தைரியத்தில் இதுமாதிரியான ஆட்கள் நாட்டில் வளர்ந்துகொண்டே தான் இருப்பார்கள். இந்தியத் தயாரிப்புகளையே வாங்க வேண்டும் என்ற எண்ணம் வளர்ந்திருப்பது பாராட்டிற்குரியது. ஆனால், மக்கள் மீண்டும் இதுமாதிரியான போலிகளின் விளம்பரங்களைக் கண்டு ஏமாறாமல் இருப்பதே அந்த வளர்ச்சியின் உண்மையான வெற்றியாக இருக்கும்!

- ச.ப.மதிவாணன்


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : baala Date :6/11/2017 6:26:05 AM
சாமியார் எல்லாமே
Name : rama subramanian Country : India Date :6/7/2017 10:14:10 AM
எவனையும் நம்ப முடியலே எல்ல பயலும் திருட்டுப்பயலா இருக்கானுங்க.ஆளும் அரசு வேற இவனுங்களுக்கு சப்போர்ட் பண்ணுகிறதே.