Add1
logo
சகஜானந்தா மணிமண்டப பணிகள் - மாவட்ட ஆட்சியர் ஆய்வு || விருத்தாசலம் அருகே மதுபானக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் || ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் || எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் வர காலதாமதம் ஆனதற்கு தமிழக அரசே காரணம்:ராதாகிருஷ்ணன் || போக்குவரத்துத் தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை விளக்கக்கூட்டம் || தமிழர் உரிமை மாநாடு பரப்புரைக் கூட்டம் || பாஜக அரசு யாரை நிறுத்தினாலும் அதிமுக ஆதரிக்கும்: முத்தரசன், வேல்முருகன் கருத்து || பொறியியல் கலந்தாய்வுக்கு தடை கோரிய வழக்கு: அண்ணா பல்கலைக்கழகம் பதிலளிக்க உத்தரவு || சத்துணவு சாப்பிட்ட 55 மாணவர்களுக்கு வாந்தி பேதி- பரபரப்பு || நடிகர் கவுண்டமணி நலமாய் இருக்கிறார்! || அலட்சியப்படுத்தினால் நாடு தழுவியப் போராட்டம்! சத்துணவு ஊழியர்கள் அறிவிப்பு! || நான் அப்படிச்சொல்லவில்லை : ரஜினி பேட்டி || பிஎஸ்எல்வி - சி 38 ராக்கெட் : 31 செயற்கைகோளுடன் நாளை விண்ணில் பயணம் ||
தமிழகம்
சகஜானந்தா மணிமண்டப பணிகள் - மாவட்ட ஆட்சியர் ஆய்வு
 ................................................................
விருத்தாசலம் அருகே மதுபானக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்
 ................................................................
ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்
 ................................................................
போக்குவரத்துத் தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை விளக்கக்கூட்டம்
 ................................................................
தமிழர் உரிமை மாநாடு பரப்புரைக் கூட்டம்
 ................................................................
சத்துணவு சாப்பிட்ட 55 மாணவர்களுக்கு வாந்தி பேதி- பரபரப்பு
 ................................................................
அலட்சியப்படுத்தினால் நாடு தழுவியப் போராட்டம்! சத்துணவு ஊழியர்கள் அறிவிப்பு!
 ................................................................
மருத்துவ பரிசோதனை - அமெரிக்கா செல்கிறார் ரஜினி!
 ................................................................
சென்னை மீனவர்கள் 300 பேர் ஆந்திராவில் சிறை பிடிப்பு
 ................................................................
சிம்பு படத்தை ரிலீஸ் செய்ய தடை கோரிய மனு தள்ளுபடி
 ................................................................
மத்திய அரசு ஊழியர்கள் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம்!
 ................................................................
நெடுவாசல் போராட்டத்திற்கு ஆதரவு திரட்ட மோட்டார் சைக்கிள் பேரணி நடத்திய இளைஞர்கள்
 ................................................................
டாஸ்மாக் கடை திறக்க அனுமதிக்க கூடாது: கிராம கூட்டத்தில் தீர்மானம்.
 ................................................................
தடையை மீறி நடைப்பயணம்: ஜி.ராமகிருஷ்ணன் கைது
 ................................................................
நெடுவாசலில் மத்திய, மாநில அரசுகளை அடித்து விரட்டும் போராட்டம் (படங்கள்
 ................................................................
மணல் குவாரியை மூட வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்!
 ................................................................
வெளிநடப்பு செய்யும் கட்டாயம்: மக்கள் பிரச்னைகளை விவாதிக்க அவையில் பங்கேற்கிறது: மு.க.ஸ்டாலின்
 ................................................................
மணல் விலை ஏற்றத்தை கண்டித்தும் கட்டிடப் பொறியாளர்கள் ஆர்ப்பாட்டம்!
 ................................................................
சென்னையில் கரும்பு விவசாயிகள் முற்றுகை போராட்டம்! (படங்கள்)
 ................................................................
சிறுபான்மையினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத தமிழக அரசு; எஸ்.டி.பி.ஐ. கடும் கண்டனம்
 ................................................................
வியாசர்பாடி அருகே பட்டப்பகலில் பிரபல ரவுடி சரமாரியாக வெட்டிக்கொலை!
 ................................................................
கணினி பயிற்சித் திட்ட பயிற்றுநர்கள் சங்கம் சார்பில் கவனஈர்ப்பு அறப்போராட்டம்! (படம்)
 ................................................................
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சேலம் மாநகர காவல் ஆணையர் நேரில் ஆஜராக சென்னை ஐகோர்ட் உத்தரவு!
 ................................................................
விழுப்புரம் அருகே கஞ்சா கடத்திய 4 பேர் கைது! (படம்)
 ................................................................
திருச்சி அருகே மணல் எடுக்க போட்டா போட்டி!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, ஏப்ரல் 2017 (17:43 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஏப்ரல் 2017 (17:43 IST)


பெரியார் திடலில் புத்தகக் காட்சியை 
கேப்டன் ஜே.சுரேஷ் திறந்து வைத்தார்

சென்னை புத்தக சங்கமத்தின் அய்ந்தாம் ஆண்டு சிறப்புப் புத்தகக் காட்சி தொடக்க விழா சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் இன்று (21.4.2017) காலை தொடங்கியது. அனைத்து புத்தகங்களும் 50% தள்ளுபடியில் விற்பனையாகும் இந்த சிறப்புப் புத்தகக் காட்சி இன்று (21.4.2017) முதல் 25.4.2017 முடிய ஐந்து நாள்கள் நடைபெறுகின்றது. 

தொடக்க விழா

சென்னை புத்தகச் சங்கமத்தின் சிறப்புப் புத்தகக் காட்சி தொடக்கவிழா வரியியல் வல்லுநர் ச.இராசரத்தினம் தலைமையில் நடைபெற்றது. பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முன்னிலையில் இந்திய கடற்படை ஐ.என்.எஸ். அடையாறு தலைமை அதிகாரி கேப்டன் ஜே.சுரேஷ் சென்னை புத்தக சங்கமத்தை திறந்து வைத்தார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் தலைவர் காந்தி கண்ணதாசன் புத்தக விற்பனையைத் தொடங்கி வைத்தார்.  விற்பனையில் முதல் புத்தகத்தை  பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் நல்.இராமச்சந்திரன் பெற்றுக் கொண்டார்.

தொடக்க விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களான கேப்டன் ஜே.சுரேஷ், வரியியல் வல்லுநர் ச.இராசரத்தினம், காந்தி கண்ணதாசன் ஆகியோருக்கு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து இயக்க வெளியீடுகளை வழங்கினார்.

நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் முற்றிலும் குளிர் சாதன வசதி கொண்ட தரைத்தளம், கீழ்த்தளத்தில் அமைக்கப்பெற்றுள்ள 49 அரங்குகளில் 60க்கும் மேற்பட்ட பதிப்பகங்களின் புத்தகங்கள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஆசிரியர் கி.வீரமணி, கேப்டன் ஜே.சுரேஷ், வரியியல் வல்லுநர் ச.இராசரத்தினம், இந்திய பாதுகாப்புத்துறையின் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி டி.சண்முகம், காந்தி கண்ணதாசன், கோ. ஒளிவண்ணன் துணைவேந்தர் பேராசிரியர் நல். இராமச்சந்திரன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் ஆகியோர் அனைத்து அரங்குகளுக்கும் சென்று பார்வையிட்டதுடன் அவரவர் விருப்பத்தேர்வின்படி புத்தகங்களை உரிய தொகை கொடுத்து பெற்றுக் கொண்டார்கள்.

தந்தைபெரியார், அண்ணல் அம்பேத்கர், கல்வி வள்ளல் காமராசர், அறிஞர் அண்ணா, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், கலைஞர், நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் க.அன்பழகன்,  கி.வீரமணி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் எழுதிய நூல்கள், சரித்திர நாவல்கள், பன்மொழி அகராதிகள்,  குழந்தைகளுக்கான புத்தகங்கள், தமிழ், ஆங்கில நாவல்கள், அறிவியல் புத்தகங்கள், உலக அறிஞர்களின் நூல்கள், வரலாற்று நூல்கள் என பல்வேறு வகைகளிலும் நூல்கள் பதிப்பகங்கள் வாரியாக அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து புத்தகங்களும் 50 விழுக்காடு தள்ளுபடி விலையில் அள்ளிச்செல்லும் வாய்ப்பு  சென்னை புத்தகச்சங்கமத்தின் ஐந்தாம் ஆண்டு சிறப்புப் புத்தகக் காட்சியில் பார்வையாளர்களுக்கு கிடைத்த அரும்பெரும் வாய்ப்பாக அமையப்பெற்றுள்ளது.



தொடக்கவிழாவில் வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன், சென்னை புத்தக சங்கமம் மேலாளர் ப.சீதாராமன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன், அச்சக மேலாளர் க.சரவணன், முத்துகிருஷ்ணன், விழிகள் பதிப்பகம் வேணுகோபால் மற்றும் பல்வேறு பதிப்பகங்களின் பதிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்களிடையே  கேப்டன் சுரேஷ்  கூறியதாவது:

இப்போது புத்தகம் படிப்பதென்பது அரிதான ஒன்றாக இருக்கிறது. எப்படியாவது மக்களை மற்றும் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற ஒரேயொரு குறிக்கோளோடு, 50 விழுக்காடு தள்ளுபடி செய்து, ஒரு ஏசி அரங்கில் எல்லோரும் அவசியம் வந்து நேரத்தை ஒதுக்கி, புத்தகங்களை எப்படியாவது வாங்கி படிக்கவேண்டும் என்கிற ஒரேயொரு குறிக்கோளுடன் இந்த சென்னை புத்ததகச் சங்கமம் ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது ஒரு பெரிய விஷயம். கண்டிப்பாக எல்லோருமே உபயோகப்படுத்தி, இங்கே வந்து புத்தகங்களை வாங்கி அனுபவிக்க வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :