Add1
logo
மோடியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு || நீட் தேர்வுக்கு விலக்களிக்க கோரிய விசாரணை ஒத்திவைப்பு! || முன்னாள் மத்திய இணை அமைச்சர் அரங்க வேலு எழுதிய நூல் வெளியீடு! || டி.எஸ்.பி ஆகிறார் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்மான்பிரீத் கவுர்! || கிணற்றை தருவதாக ஓ.பி.எஸ் எங்களை ஏமாற்றி விட்டார்: கிராம மக்கள் ஆவேசம்! || உணவில் பல்லி! காயிதே மில்லத் மாணவிகள் 105 பேருக்கு வாந்தி-மயக்கம்! || ஜெ., நினைவிடம் அமைப்பதற்கு தடைகோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு! || கழிவறை கட்ட வழியில்லாதவர்கள் மனைவியை விற்றுவிடுங்கள்: ஆட்சியரின் சர்ச்சை பேச்சு || விவசாயிகள் உயிருக்கு ஆபத்து என்றால் எச்.ராஜா தான் காரணம்: அய்யாக்கண்ணு || குட்கா ஊழல் ஆதாரத்தை அழித்து தமிழக அரசு தவறுக்கு மேல் தவறு செய்கிறது: ராமதாஸ் || சென்னையில் பள்ளி வேன் கவிழ்ந்து மாணவி பலி! || நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டத்தை ஆதரித்து அறந்தாங்கி மாணவர்கள் போராட்டம் || பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: டிராக்டர் ஓட்டுநர் கைது ||
முக்கிய செய்திகள்
விவசாயிகள் உயிருக்கு ஆபத்து என்றால் எச்.ராஜா தான் காரணம்: அய்யாக்கண்ணு
 ................................................................
குட்கா ஊழல் ஆதாரத்தை அழித்து தமிழக அரசு தவறுக்கு மேல் தவறு செய்கிறது: ராமதாஸ்
 ................................................................
ஆசிரியர் இடமாறுதலில் பல கோடி ஊழல்! அன்புமணி குற்றச்சாட்டு
 ................................................................
தமிழக அமைச்சர்கள் குழு மீண்டும் டெல்லி பயணம்
 ................................................................
உங்களோட போராடுவேன்: நெடுவாசலில் விஜயகாந்த் பேச்சு (படங்கள்)
 ................................................................
பாஜக ‘எள்’ என்றால் எடப்பாடி பழனிச்சாமி ’எண்ணெய்’ போல மாறிக் கொண்டிருக்கிறார்: ஸ்டாலின்
 ................................................................
அரசியல்வாதிகளுக்கு பதிலளிக்க நானே போதும் : கமல்
 ................................................................
வில்லன் போல செயல்படுகிறார் கிரன்பேடி : சீமான் குற்றச்சாட்டு
 ................................................................
5, 8ஆம் வகுப்புகளில் கட்டாயத்தேர்ச்சி ரத்து குலக்கல்விக்கே வழி வகுக்கும்! ராமதாஸ்
 ................................................................
இடிக்கிற மாதிரி போனாரு... கண்ணீருடன் புகார் கூறி வெளியேறிய நமீதா...
 ................................................................
பெட்ரோலிய மண்டலம் அமைத்து தமிழகத்தை பாலைவனமாக்குவதா? வேல்முருகன் கண்டனம்
 ................................................................
ஆறுக்குட்டி விலகலைத் தொடர்ந்து ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ். ஆலோசனை
 ................................................................
எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தார் ஆறுகுட்டி
 ................................................................
சசிகலாவை சிறைமாற்றம் செய்யும்படி வலியுறுத்துவீர்களா? மு.க.ஸ்டாலின் பதில்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, ஏப்ரல் 2017 (17:0 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஏப்ரல் 2017 (20:13 IST)


பத்திரப்பதிவு செய்ய
 மீண்டும் தடை விதித்தது ஐகோர்ட்!

தமிழகத்தில் நிலங்களை வரைமுறை படுத்த புதிய விதிகள் கொண்டு வரும் வரை அங்கீகாரம் இல்லாத நிலங்களை பத்திர பதிவு செய்ய மீண்டும் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற தடை விதிக்கக்கோரி சென்னை  உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற தடை விதித்து கடந்த 2016 ஆம் ஆண்டு செப் .9ஆம் தேதி  உத்தரவிட்டது. தமிழ்நாடு பத்திரப்பதிவு சட்டம், பிரிவு 22ஏ படி அங்கீகாரம்  இல்லாத வீட்டு மனைகளைப் பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டது.  அக்.20-ம் தேதிக்கு முன்பாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட மனைகளை  மறுபத்திரப்பதிவு செய்ய விலக்கு அளிக்கப்பட்டது. இந்த அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை முறைப்படுத்த அரசின் கொள்கை முடிவுகளை தாக்கல் செய்யும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு   கடந்த முறை (மார்ச்28) விசாரணைக்குக்கு வந்தபோது  தலைமை நீதிபதி (பொறுப்பு) எச்.ஜி. ரமேஷ், நீதிபதி டீக்காராமன் ஆகியோர் கொண்ட அமர்வு அங்கீகாரம் இல்லதா வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டது.
 
அந்த உத்தரவின் படி  அக்டோபர் 20, 2016 முன்பு வீட்டுமனைகளாகப் பதிவு செய்யப்பட்ட நிலங்களை   மீண்டும் பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. அதே சமயம் புதிதாக பத்திரப்பதிவு செய்யும்போது, அவை அரசு அங்கீகாரம் இல்லாமல் இருந்தால் அதனை பத்திரப் பதிவு செய்யக் கூடாது என்றும் இந்த உத்தரவு வழக்கின் இறுதி தீர்ப்பிற்கு கட்டுப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.
 
இந்த வழக்கு (ஏப்ரல்20) நேற்று தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர்,  “அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை முறைப்படுத்துவது தொடர்பான அரசின் கொள்கை முடிவுகளின் வரைவு அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். வரைவு அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பபட்டுள்ளதால் விதிகளை நடைமுறைப்படுத்த கால அவகாசம் கோரினார். இதனைத் தொடர்ந்த வழக்கி விசாரணை இன்று (ஏப். 21 வெள்ளி ) ஒத்திவைக்கப்பட்டது.
 
இதையடுத்து இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு முன்பு மீண்டும்  விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் யானை ராஜேந்திரன் "கடந்த 09-09-2016 பத்திரப்பதிவுக்கு தடைவிதிக்கப்பட்ட பின்பு  4 லட்சம் பத்திரப்பதிவுகள் நடந்துள்ளன. எனவே தடை விதித்த பின் எத்தனை  பத்திரபதிவுகள்  நடந்துள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும். அப்படி பதிவு செய்திருந்தால் அதை செல்லாது என அறிவிக்க வேண்டும், முறைக்கேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
 
இதற்கு நீதிபதிகள், பத்திரப்பதிவுக்கு தடை விதித்த பிறகு (9-9-2016 ) ஏதாவது பத்திரப்பதிவு நடந்துள்ளதா என்று அரசு தரப்பிடம் கேள்வி எழுப்பினர். அப்படி நடந்திருந்தால் அது நீதிமன்ற அவமதிக்கும் செயலாகும் . அந்த பத்திரப்பதிவுகள் செல்லாது எனக் கூறிய நீதிபதிகள். இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தலைமை வழக்கிறிஞருக்கு உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்த வழக்கு விசாரணை இரண்டு மணி நேரம் நடைபெற்றது.
 
அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் ."அங்கீகாரமற்ற நிலங்கள், வீட்டுமனைகளை  பத்திரப்பதிவு மற்றும் மறு பத்திரப்பதிவு செய்ய மீண்டும் தடை விதிக்கப்படுகிறது. இன்று முதல்  மறு உத்தரவு வரை இது அமலில் இருக்கும் என கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணை மே 4 ஆம் தேதிக்கு ஒத்திவைப்வைப்பதாக உத்தரவிட்டனர்".

மே 1 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறையாகும். கோடைகால சிறப்பு தலைமை நீதிபதி அமர்வில் மே 4 ஆம் தேதிக்கு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

- ஜீவாபாரதி
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : M.KANDASAMY Date :4/21/2017 11:19:48 PM
விழித்துக்கொள் தமிழா முன்பெல்லாம் அரசியல்வாதிகள் ரோஷம் மானம் சூடு சொரணை மிக்கவர்களாக இருந்தார்கள். லஞ்சம் வாங்க பயந்தார்கள். அரசியலை ஒழுக்கமாக நடத்தினார்கள். சொந்த பணத்தை செலவு செய்து மக்களுக்கு நன்மைகள் செய்தார்கள். சொந்த தொகுதியில் சொந்த பணத்தில் தார் ரோடுகள் போட்ட எம் எல் ஏ மற்றும் எம் பி கள் உண்டு. சுதந்திரம் பெற்ற பின் அமைந்த ஆட்சியில் பண்ணையார்களும் , சொந்த தொழில் செய்பவர்களும் எம் எல் ஏ களாகவும் எம் பி களாகவும் இருந்ததினால் அவர்களுக்கு பணம் பொருட்டல்ல மதிப்பு மரியாதை செல்வாக்கு ஆகியவற்றை பெறுவதர்க்காக உழைத்தார்கள். அமைச்சர்களாக இருந்தவர்கள் எல்லாம் இறுதி காலத்தில் மிகவும் சிரமப்பட்டார்கள். மருத்துவ சிகிச்சைக்குகூட வழியில்லாமல் இறந்தவர்கள் உண்டு. திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த போது வேட்பாளர்கள் அனைவரும் சாமான்ய மக்கள் பணம் , புகழ் ஆகியவற்றை அறியாதவர்கள்- அனுபவிக் காதவர்கள் அறிஞர் அண்ணா ஆட்சியில் லஞ்சம் வாங்க அவகாசம் இல்லை அடுத்து வந்த கலைஞர் ஆட்சியில் இரண்டு ஆண்டுகள