Add1
logo
நடிகர் சங்க ஊழலில் கமலுக்கு பங்கு உண்டு :வராகி || மக்களை தூண்டி விடுவது நல்ல மனிதனுக்கு அழகில்லை: கமல் விவகாரத்தில் ஜே.கே.ரித்தீஷ் || நீங்கள் கட்ட வேண்டியது 8 முழ சேலை: கமல் ரசிகர்கள் கண்டன சுவரொட்டி || மனித சங்கிலி போராட்டத்தில் ம.நே.ம.க. பங்கேற்பு: ஜவாஹிருல்லா அறிவிப்பு || ஆசிரியர்களுக்கும் பயிற்சி –செங்கோட்டையன் || கலெக்டர் அலுவலகம் முன்பு கருப்பு கொடியேற்றி ஆர்ப்பாட்டம்: வெள்ளையன் அறிவிப்பு || சென்னை மக்களின் குடிநீர் பிரச்னையைப் போக்க கிருஷ்ணா நதி நீரை பெற நடவடிக்கை வேண்டும்: ஸ்டாலின் || சேதுக்கரையில் முன்னோர்களுக்கு வழிபாடு || உலகின் அச்சானி உழவர்கள்: இயற்கை வேளாண் கருத்தரங்கில் விவசாயிகள் பெருமிதம் || சமவேலைக்கு சம ஊதியம் வழங்க பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை || 5, 8ஆம் வகுப்புகளில் கட்டாயத்தேர்ச்சி ரத்து குலக்கல்விக்கே வழி வகுக்கும்! ராமதாஸ் || இடிக்கிற மாதிரி போனாரு... கண்ணீருடன் புகார் கூறி வெளியேறிய நமீதா... || தந்தையின் இறுதிச்சடங்கு: கதிராமங்கலத்தில் கைதான ஜெயராமனுக்கு இடைக்கால ஜாமீன் அளித்த ஐகோர்ட் கிளை ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, ஏப்ரல் 2017 (16:28 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஏப்ரல் 2017 (16:49 IST)


புற்றுநோய் எனக்கூறி இண்டர்நெட்டில் 
ரு.22 லட்சம் மோசடி செய்த இளம்பெண்!

நம் நாட்டில் இரக்கத்தைப் பெறுவது ஒன்றும் சாதாரண விஷயமல்ல.. யாரிடமேனும் உதவி கேட்க வேண்டுமென்றால், குறைந்த பட்சம் அவர்களின் உணர்வுகளைத் தூண்டினால் போதுமானது. உண்மையாகவே கஷ்டப்படுகிறவர்கள் பலருக்குக் கிடைக்க வேண்டிய உதவிகள் மறுக்கப்பட்டு வரும் சூழலில், தனக்கு புற்றுநோய் இருப்பதாகக் கூறி ஒரு பெண் உலகின் பல பகுதிகளில் இருந்தும் ரூ.22 லட்சத்திற்கும் மேல் நிதி திரட்டி மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

சமியா அப்துல் ஹபீஸ் எனப்படும் 22 வயது பெண் தான் இந்தக் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டவர். உண்மையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் ஹைதராபாத்-ல் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தனது அப்பாவைப்  பார்க்க, சவுதி அரேபியாவில் இருந்து வந்தவர் தான் இந்த சமியா.



தனது அப்பாவின் சிகிச்சைக்கான தொகையைக் கட்ட முடியாத நிலையை, அந்த மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் ஒருவரிடம் முறையிட்ட சமியா, இந்தத் திட்டத்தை வகுத்து செயல்படுத்தியும் இருக்கிறார்.

‘கோ ஃப்ண்ட் சமியா’ என்ற முகநூல் பக்கத்தின் மூலம் தனது கைவரிசையைக் காட்டத்துவங்கிய சமியா, இதற்காக போலியான ஆவணங்களைத் தயாரித்து பதிவிட்டவர், தான் மூளை மற்றும் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் என்றும், இதற்காக ஆகும் மருத்துவச் செலவிற்கான தொகையை நிதியாகத் திரட்டவும் செய்திருக்கிறார்.




சமியாவின் புற்றுநோய்(?) சிகிச்சைக்காக ஆகும் செலுவுக்கு ஹைதராபாத் மற்றும் பல மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து செப்டம்பர் 2016 முதல் மார்ச் 2017 வரை கிட்டத்தட்ட ரூ.22 லட்சம் வரை, அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டிருந்தது. 

பல நாள் திருடன் ஒருநாள் பிடிபடுவான் என்பதைப் போல, சமியாவின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கின. அதில் ஒன்றுதான் ரியாத்-ல் உள்ள நகைக் கடையிலும், அழகுநிலையத்திலும் சமியாவைப் பார்த்ததாகக் கிடைத்த தகவல்கள்! உண்மையில் அந்த நாட்களில் சமியா கோமாவில் இருப்பதாக அந்த முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதுமாதிரி பல தடவைகளில் சமியா கையும் களவுமாக சிக்கத் தொடங்கியிருக்க, தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மோசடியின் மூலம் அவர் பெற்றிருந்த நிதியில் ரூ.10 லட்சத்தை தனது அப்பாவின் மருத்துவச் செலவுக்காக பயன்படுத்தியதாக சொல்லும் சமியா, மீதமுள்ள பணத்திற்கான செலவினங்களைத் தெரிவிக்கவில்லை. அவர் தொடங்கியிருந்த அந்த வங்கிக் கணக்கில் வெறும் ரூ.5,000 மட்டுமே இருப்பது தான் கடைசியாக கிடைத்திருக்கும் தகவல்.

மனித வாழ்க்கையின் அன்றாடங்களோடு ஒட்டிப் போன சமூக வலைதளங்களில் வரும் செய்திகளை உண்மையென எண்ணி இப்படி உணர்ச்சிவயப்பட்டு நிதி கொடுத்தவர்கள் தான், தங்களுக்கான நீதி வேண்டுமென போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
விந்தை மனிதர்கள்!!
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :