Add1
logo
98 மீனவர்கள் சாவு? மேலும் 500 பேரின் நிலை என்ன? அன்புமணி கேள்வி || காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற பெண்! - ஆதார் உதவியால் சிக்கினர்!! || விஷத்தன்மை உள்ள வின்டர்க்ரீன் ஆயில்! அதிகரிக்கும் தற்கொலைகள்! || குஜராத் தேர்தலில் பாக். எப்படி தலையிட முடியும்? - மோடிக்கு பிரகாஷ்ராஜ் கேள்வி || சங்கர் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள்! || தேசிய அளவிலான கூடைபந்து, கேரம் போட்டிகளில் பள்ளி மாணவர்கள் சாதனை! || ‘அந்த’ விளம்பரங்கள் இனி மிட்-நைட்டில்தான்: தகவல் ஒளிபரப்புத்துறை கெடுபிடி || தலைமைச் செயலகத்தில் களைகட்டும் தேர்தல்! || சேகர் ரெட்டியின் டைரியை வெளியிட்டது தினகரன் குடும்பம்! || இபிஎஸ் - ஒபிஎஸ் கண்ணை குத்தக் காத்திருக்கும் ஜெ.வின் கைரேகை! || ஒக்கி புயலால் 4 மரணங்கள்தான் ஏற்பட்டுள்ளன: ஜெயக்குமார் விளக்கம்! || அரசுக்கு ஜால்ரா போடுபவரே தகவல் ஆணையத் தலைவர்? || திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு மதுரை மாவட்டக்குழு பிரச்சாரம்! ||
தமிழகம்
98 மீனவர்கள் சாவு? மேலும் 500 பேரின் நிலை என்ன? அன்புமணி கேள்வி
 ................................................................
விஷத்தன்மை உள்ள வின்டர்க்ரீன் ஆயில்! அதிகரிக்கும் தற்கொலைகள்!
 ................................................................
தேசிய அளவிலான கூடைபந்து, கேரம் போட்டிகளில் பள்ளி மாணவர்கள் சாதனை!
 ................................................................
திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு மதுரை மாவட்டக்குழு பிரச்சாரம்!
 ................................................................
ரஜினிகாந்த் பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
 ................................................................
சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை!
 ................................................................
போலீசார் - மின்வாரிய ஊழியர்கள் மோதல்: ஆறு மணிநேரம் மின்தடை!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
பார் கவுன்சிலில் அரசியல் நுழைவதை தடுக்க நீதிபதி கிருபாகரன் பரிந்துரை
 ................................................................
நீட் பயிற்சி மையங்கள் துவங்குவது தொடர்பான அரசாணை ஐகோர்ட்டில் தாக்கல்
 ................................................................
பாரதி பொதுவுடமை கவிஞர் ...! நல்லக்கண்ணு புகழாரம்
 ................................................................
ஒகி புயலில் சிக்கி நாகை 12 மீனவர்கள் விபரங்களை பேரிடர் அதிகாரியிடம் வழங்கினார் : தமிமுன் அன்சாரி
 ................................................................
கூவம் கரையோர குடிசைகள் அகற்றுவதை கண்டித்து : திருமா ஆர்ப்பாட்டம் (படங்கள்)
 ................................................................
‘நிதித் தீர்வு மற்றும் வைப்புக்காப்பீடு வரைவு மசோதா – 2017’: அருண் ஜெட்லிக்கு ஸ்டாலின் கடிதம்
 ................................................................
கடல் கொந்தளிப்பால் நடுக்கடலில் சிக்கி தவித்தோம் உயிர் தப்பிய கடலூர், பரங்கிப்பேட்டை மீனவர்கள் பேட்டி
 ................................................................
குப்பைக்கு வரி... ஈரோடு மாநகராட்சி முற்றுகை!
 ................................................................
திருச்சியில் பாகிஸ்தான் தீவிரவாதியின் கள்ள நோட்டு ஏஜெண்டுகள். ! பெண் உள்பட 4 பேரிடம் விசாரணை !
 ................................................................
ஆர்.கே. நகரில் விடுபட்ட வாக்காளர்கள் பெயர் சேர்க்க குவிந்த மக்கள் (படங்கள்)
 ................................................................
மோடியும், எடப்பாடி பழனிசாமியும் குமரி மக்களை சந்திக்க வேண்டும்: தனியரசு, தமிமுன் அன்சாரி பேட்டி
 ................................................................
ஆர்.கே. நகரில் மா. சுப்பிரமணியம் பிரச்சாரம்! (படங்கள்)
 ................................................................
ஆர்.கே.நகரை சுற்றி வரும் வெளியூர் அதிமுகவினர்
 ................................................................
செல்போனில் பேச்சு: பள்ளி வேன் கவிழ்ந்து குழந்தைகள் படுகாயம்: போனில் சமாதானம் செய்த அமைச்சர்
 ................................................................
இந்துத்துவ வன்முறை வெறியாட்டங்களைத் தமிழ் மண்ணில் ஏற்படுத்த முயன்றால்! -சீமான் எச்சரிக்கை
 ................................................................
எடப்பாடி பழனிசாமி மாநிலத்தை ஆளும் தகுதியையும் - தார்மீக உரிமையையும் அறவே இழந்துவிட்டார்: ஸ்டாலின்
 ................................................................
ஆர்.கே. நகரில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கம் : பொதுமக்கள் முற்றுகைபோராட்டம் (படங்கள்)
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, மார்ச் 2017 (0:45 IST)
மாற்றம் செய்த நாள் :21, மார்ச் 2017 (0:45 IST)


தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத்துறை தொழிலாளர்களின்
கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுக! - வைகோ

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கையில்,

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் மொத்தம் 1.50 இலட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. 12 ஆவது ஊதிய ஒப்பந்தம் ஏற்பட்ட 01.09.2013 நாளிலிருந்து நிர்வாகத்தால் ஓய்வூதியருக்கான பி.எப். தொகை, பணப் பயன்கள், விடுப்பு தொகை போன்றவற்றின் நிலுவைத் தொகை இதுவரையில் வழங்கப்படவில்லை. முந்தைய ஒப்பந்தங்களில் கூறப்பட்டுள்ள பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. மேலும் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் 10 ஆயிரம் பேர், எந்தவித பணப் பயனும் கிடைக்கப் பெறாமலேயே இறந்து போனார்கள் என்ற தகவல் அதிர்ச்சியும் வேதனையும் தருகிறது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் 65 ஆயிரம் பேருக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஓய்வூதியத் தொகை இரு தவணைகளாக வழங்கப்பட்டது. 

இந்த மாதம் மார்ச்சில் இதுவரையில் ஓய்வூதியருக்கு ஓய்வூதியப் பணத்தை வழங்காமல் நிர்வாகம் அலைக்கழித்து வருவது கண்டனத்துக்கு உரியது. போக்குவரத்துத்துறை ரூ.35 ஆயிரம் கோடி கடனில் தத்தளிப்பதாக உயர்நிலை அலுவலர்கள் காரணம் கூறுகின்றனர்.

டீசல் விலை உயர்வு, அரசு போக்குவரத்துக் கழகங்களில் வரவைவிட செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால் போக்குவரத்துத்துறை ஒரு நாளைக்கு ரூ.6.58 கோடி இழப்பை சந்திக்க வேண்டிய அவல சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆண்டுக்கு ரூ.2400 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. 

இதனை ஈடுகட்டும் வகையில் போக்குவரத்துத்துறையின் வரவு மற்றும் செலவு இனங்களுக்கு இடையிலான இழப்புத் தொகையை தமிழக அரசு போக்குவரத்துத்துறைக்கு வழங்க வேண்டும் என்று கடந்த ஓய்வூதிய மாற்று ஒப்பந்த பேச்சுவார்த்தையின்போது மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி உள்ளிட்ட பத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியது. ஆனால், தமிழக அரசு அக்கோரிக்கைகளை கவனத்தில்கொள்ளவில்லை.

உரிய நிதி ஆதாரம் இன்றி தத்தளிக்கின்ற தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத்துறைக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தொழிற்சங்க கூட்டமைப்பு தமிழக அரசுக்கு வைத்துள்ள கோரிக்கை நியாயமானது ஆகும். நடப்பு 2017-18 நிதிநிலை அறிக்கையில், 2000 புதிய பேருந்துகள் வாங்குவதற்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

ஆனால், போக்குவரத்துத்துறை ஊழியர்களின் பணப் பலன்கள் உள்ளிட்ட 12 ஆவது ஊதிய ஒப்பந்தத்தில் நிர்வாகம் ஒப்புக்கொண்ட கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த சுமார் 5500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தால்தான் போக்குவரத்துத்துறையில் நிதி நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியும்.

ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியத் தொகை இந்த மாதம் வழங்கப்படாததால், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபடப் போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்து உள்ளன. ஏப்ரல் மாதம் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கும் அறைகூவல் விடுக்கப் போவதாக தெரிவித்திருக்கின்றன. 

தமிழ்நாடு முழுவதும் ஓய்வு பெற்ற போக்குவரத்துத்துறை ஊழியர்கள், பேருந்து பணிமனைகள் முன்பு தங்கள் குடும்பத்தினருடன் மூன்று நாட்களாக அறப்போராட்டத்தில் இறங்கி உள்ளனர். 

ஓய்வூதியருக்கான பணப் பயன்களை உடனடியாக வழங்கக் கோரியும், நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றவும் போக்வரத்துத்துறைத் தொழிலாளர்களும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

எனவே, தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறைக்குத் தேவையான நிதி ரூ.5500 கோடியை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 12 ஆவது ஊதிய ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட அனைத்துத் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதுடன், ஓய்வூதியத்தை நம்பி வாழும் ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்க ஆவனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் இவ்வாறு கூறியுள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :