Add1
logo
ராகுல் காந்தியை நோக்கி ஷு வீச்சு (வீடியோ) || இன்ஸ்சூரன்ஸ் நிறுவனம் பணத்தை திருப்பித் தரவில்லை: முதலீட்டார்கள் புகார் (படங்கள்) || மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து உண்ணாவிரத போராட்டம்! || இந்தியாவின் ஒன்றுமைக்கு அச்சுறுத்தல்: ஜனாதிபதி தலையிட பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல் || அதிமுக வேட்பாளர்கள் நாளை வேட்புமனுத் தாக்கல்? || வேலூர் மாநகராட்சி அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் || வேலூர் மாநகராட்சி அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் || தூத்துக்குடி மாநகராட்சி அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் || திருப்பூர் மாநகராட்சி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு || திருநெல்வேலி மாநகராட்சி 55 அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் || ஜெ குணமடைய கையில் தீபம் ஏந்தி பிரார்த்தனை (படங்கள்) || மதுரை மாநகராட்சி 100 அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் || கோயம்பத்தூர் மாநகராட்சிக்கான 100 அதிமுக வேட்பாளர்கள் ||
சிறப்பு கட்டுரை
உள்ளாட்சி தேர்தல் - 2016 : விபரம்
......................................
இது வேற மாதிரி என்கவுண்ட்டர்! -ராம்குமார் உயிர்பறிப்பு உண்மைகள்...!
......................................
அறிவோம்- காவிரி மேலாண்மை வாரியம்
......................................
""உண்மையான ஆட்டத்தை ஆரம்பிப்பேன்'' -சசிகலா புஷ்பா சவால் பேட்டி
......................................
கைதுக்குத் தேவை கார்டன் சிக்னல்! காத்திருக்கும் அதிகாரிகள்...!
......................................
ராம்குமார் வழக்கறிஞர் - சிறை அதிகாரி (பரபரப்பு ஆடியோ)
......................................
மாடல் அழகிகள் - சினிமா நடிகைகள்! வருமானவரித் துறையிடம் வசமாக மாட்டிய அ.தி.மு.க. வி.ஐ.பி.க்கள்..!
......................................
சர்வதேச ஜனநாயக நாள்
......................................
"எங்களிடமும் தீக்குச்சி இருக்கிறது - சீமான்
......................................
ஓ.கே. சொன்ன கார்டன்! ஆதாரத்துடன் சிக்கிய மாஜி + மேயர்!
......................................
கலகக்குரலுக்கு எதிராக கலைக்குரல்! ( வீடியோ )
......................................
போலீஸ் ஸ்பெஷல்!
......................................
சீரழிந்த சென்னை! ஜெ.வை ஏமாற்றிய மேயர்...!
......................................
இந்தியாவின் தங்க மகன்!
......................................
அடாவடி! டெல்லி டூ சென்னை! சாதிக்கும் ஈஷா! நெட்வொர்க் ரகசியம்...!
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 20, ஜூலை 2009 (13:21 IST)
மாற்றம் செய்த நாள் :20, ஜூலை 2009 (13:21 IST)
                  து 1950 வருடங்களில் நிகழ்ந்த சம்பவம்...

தமிழ்நாடுமுழுவதும் சூறாவளியாகப் பயணம் செய்து மக்களைத் தன்னுடைய சாதுர்யமான பேச்சினால் கவர்ந்து கொண்டி ருந்தார் அண்ணா. அவருடைய எரிதழலும், தென்றல் காற்றும் கலந்த அறிவார்ந்த பேச்சு மக்களிடையே ஒரு பெரிய எழுச்சியையே ஏற்படுத்திக் கொண்டிருந்தது. இராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் பள்ளி மாணவர்களாகிய நாங்களும் மகுடிக்கு அடங்கிய பாம்பு போல் அந்த வசீகரப் பேச்சில் கட்டுண்டு கிடந்தோம்.

அவரை எப்படியாவது எங்களுடைய பள்ளி விழாவுக்கு அழைத்து வந்து பேச வைக்க வேண் டும் என்கிற ஆசை தணியாத தாகமாய் மாறியது. ஒருநாள் நானும் சக மாணவர்கள் சிலரும் சென்னைக்கு ரயில் ஏறி விட்டோம். அறிஞர் அண்ணாவின் வீட்டைக் கண்டுபிடித்து அவரைச் சந்தித்தும் விட்டோம். மிக எளிமையான வீட்டில், ரொம்ப சிம்பிளாக இருந்த அந்த மாபெரும் தலைவரை முதல் முதலாகப் பார்த்த போது எனக்கு வியப்பில் மூச்சடைத்தது. இவரா மேடைகளில் புயல் கிளப்பும் பேச்சுக்களை அனல் பறக்க விடுபவர் என்கிற எண்ணம் ஏற்பட்டது.

ஆனால் அந்த கரகரப்பான மயக்கும் குரல் அருகில் ஒலித்ததை நான் நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். கைலி, கை வைத்த பனியன் மற்றும் ஷேவ் செய் யாத முகத்துடன் இருந்த அண்ணா, "இப்போதைக்கு என்னால் அங்கே வர முடி யாது'’என்று சொன்னதும் எங்களுக்கு ஏமாற்றமாக இருந் தது. ஆனாலும் நாங்கள் விடாப்பிடியாக "தாங்கள் கண்டிப்பாக வந்தே ஆக வேண்டும்'’என்று பிடிவாதம் பிடித்தோம். மெலிதாகப் புன்னகை புரிந்த அவர் “"சரி, திருவையாருக்குச் சுற்றுப் பயணம் வரும்போது உங்கள் பள்ளிக்கு அவசியம் வருகிறேன்' என்று உறுதி மொழி அளித்து எங்களை அனுப்பி வைத்தார். நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

திரும்பும் வழி எங்கும் அண்ணா எங்கள் பள்ளிக்கு வந்து பேசுவது போன்ற கனவுகளே வந்து கொண்டிருந்தன. இங்கே சிக்கல் ஒன்று இருந்தது. நாங்கள் சென்னைக்குக் கிளம்பி வந்து அண்ணா அவர்களைப் பார்த்ததோ, அவர் எங்கள் பள்ளிக்கு வர ஒப்புக் கொண்ட தோ எங்கள் பள்ளித் தலைமை ஆசிரியருக்குத் தெரியாது. அன்றிருந்த திராவிட இயக்க அரசியல் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருந்தது. தலைமை ஆசிரியருக்குத் தெரிந்தால் திட்டுவார் என்று பயந்து அவரிடம் இந்த விஷயத்தை மறைத்து விட்டோம்.

அண்ணாவிடமிருந்து ஒருநாள் "நான் இந்த தேதியில் பள்ளிக்கு வருகிறேன்' என்கிற தகவல் வந்ததும் நாங்கள் புளகாங்கிதம் அடைந்தோம். இனிமேலும் தலைமை ஆசிரி யரிடம் மறைக்க முடியாது என்கிற சூழ்நிலை யில் அவரிடம் தயங்கித் தயங்கி விஷயத்தைப் போட்டு உடைத்தோம். கடுங்கோபம் கொண்ட அவர் தன்னிடம் கேட் காமல் எப்படி அவ ரை அழைக்கலாம் என்று கேட்டு ஆகாயத்துக்கும் பூமிக்கும் குதித்தார். அவரை மெல்ல மெல்ல ஆசுவாசப் படுத்தினோம். கடைசியில் ஒப்புக்கொண்டார்.

அண்ணாவை வரவேற்பதற்கான கோலாகலமான ஏற்பாடுகளைச் செய்தோம். இராமநாதபுரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டிருந்தது. அண்ணாவும் எங்கள் பள்ளிக்கு வருகை தந்தார். அருமையான உரையை நிகழ்த்தினார். மேடைப் பேச்சில் அவருடைய அணுகு முறை மிகவும் வித்தியாசமானது. அன்று எங்கள் பள்ளி மேடையில் ஏறிய அவர் மாணவர்களாகிய எங்களைப் பார்த்து ""நான் எந்த தலைப்பில் பேச வேண்டும் என்று சொல்லுங்கள்..அதில் பேசுகிறேன்..''’என்றார். ஒரு கணம் நாங்கள் திகைத்துப் போனோம். எங்களுக்குள் அவசர அவசரமாகப் பேசி முடிவெடுத்து "நதிகள்'’என்கிற தலைப்பில் பேசுமாறு வேண்டினோம்.

மடை திறந்த வெள்ளம் போல் அந்தத் தலைப்பில் பேச ஆரம்பித்தார் அறிஞர் அண்ணா. மனித வரலாற்றில் ஐயாயிரம் வருடங்களுக்கும் மேலாக நதிகள் எப்படி மனித நாகரிகத்தை மேம்படுத்தின என்பதில் ஆரம்பித்து, இந்திய நாகரீக வளர்ச்சியில் நதிகளின் பங்கு, மற்றும் மேற்கு நாடுகளான சுவிட்ஸர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா முதலியவற்றில் நதி நீர் எவ்வளவு அற்புதமாகப் பயன்படுத்தப் படுகிறது என்பது வரை சுமார் ஒன்றரை மணி நேரம் தேனருவி போன்ற பேச்சை அளித்தார். நாங்கள் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந் தோம். நதிகளின் முக்கியத் துவம் பற்றி அப்போது அவர் பேசிய பேச்சு என் மனதில் பசு மரத்தாணி போல் பதிந் தது. இன் றைக்கும் நான் பேசும் பல கூட்டங்களிலும், எழுதும் கட்டு ரைகளிலும் நதி நீர் இணைப்பின் முக்கியத்துவம் பற்றிச் சொல்வதற்கு அந்தப் பேச்சு ஒரு ஆரம்ப விதை என்றே சொல்லலாம்.

ஐம்பது வருடங்களுக்கு முன் னால் அந்த தீர்க்கதரிசி பேசியது இன்று நிறைவேறக்கூடிய ஒரு சூழ் நிலை மெதுவாகக் கனிந்து வருகிறது. தீர்க்கதரிசிகள் பலரின் கனவுகள் பலிக்கும்போது அவர்கள் இருப்ப தில்லை என்பது வரலாற்றில் சோகமான நடப்பு.

நமது நாட்டில் ஆண்டுதோறும் 1500 BMC நதிநீர் வெள்ளத்தினால் கடலுக்குள் போய் சேருகிறது. அதில் 300 BMC நீரை நாம் உபயோகித்தாலே, நாடு வளம் பெற்று நலம் பெறும். அந்த 300 BMCநீரை எப்படி நாட்டுக்குள் திருப்பி விடுவது என்பதைப் பற்றி நாம் யோசித்து செயல்பட வேண்டிய கட்டத்தில் இருக் கிறோம். நதிநீர் இணைப்பு என் பது இன்று பேச் சளவில் ஒரு கருத்துருவாக்க மாக இருந்தா லும் மிக விரை வில் காலத்தின் கட்டாயத்தினால் அது நனவாகி விடும் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. ஆனால், பல பேர் முடியாது, முடியாது என்பதை தாரக மந்திரமாக வைத்துள் ளார்கள்.

கரிகாலன் முடியாது என்று நினைத்திருந்தால் தமிழ்நாட்டில் கல்லணை கிடையாது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்க்க முடியாது என்று காந்தியடிகளும், சுதந்திர போராட்ட வீரர்களும் நினைத் திருந்தால், நமக்கு சுதந்திரம் கிடைத் திருக்காது. சி.சுப்பிரமணியமும், எம். எஸ். சுவாமிநாதனும் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து இருக்காது. வர்கீஸ் கொரியன் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா வெண்மை புரட்சியில் வெற்றி அடைந்து இருக்காது. விக்ரம் சாராபாய் முடியாது என்று நினைத்திருந்தால் இன்று செயற்கைக்கோளை இந்தியா ஏவியிருக்க முடியாது.

முடியாது என்ற நோய் நம்மிடம் பல பேரிடம் அதிகமாக உள்ளது. முடியும் என்று நம்பும் மனிதனால்தான் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது. எனவே நண்பர்களே, முடியும் என்ற நம்பிக்கை கொண்ட 54 கோடி இளைஞர்கள்தான், இந்திய நதிகளை இணைக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்ட இளைஞர்கள்தான் அனுபவத் தின் துணை கொண்டு வெற்றியை காண வேண்டும். நதிகளை இணைக்க வேண்டும் என்றால் என்ன வேண்டும்... "முடியும்' என்ற நம்பிக்கை முதலில் ஓவ்வொரு இந்தியனுக்கும் வேண்டும்.

ஒவ்வொரு இந்தியனின் மேம்பாட்டுக்காக, மாநிலங்கள் பெருந்தன்மையுடனும், பரந்த மனப்பான்மையுடனும் நதிநீர் இணைப்புக்காக ஒன்றுபட வேண் டும் என்பதுதான் என் அவா. இதற்குத் தேவை கூட்டு மனப் பான்மை (ன்ய்ண்ற்ஹ் ர்ச் ம்ண்ய்க்ள்). எல்லா மனங்களும் இந்த விஷயத்தில் ஒன்றுபட வேண்டும். இந்த கூட்டு மனப்பான்மையை அந்த நாள் முதல் இந்நாள் வரை நான் இராமநாத புரத்து மக்களிடம் பார்க்கிறேன். பொதுப் பிரச்னையில் அவர்கள் எப்போதும் ஒன்றுபட்டே முடிவெடுப் பார்கள்.

ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் நான் மேற் கொண்ட என்னுடைய முதல் சொந்த ஊர்ப்பயணம் மறக்க முடியாத ஒன்றாக இருந்தது. என்னைக் காண மக்கள் அலை அலையாக வந்து கொண்டே இருந்தார்கள். அவர்களிடம்தான் எத்தனை கதைகள்! எத்தனை சோகங்கள்! எத்தனை போராட்டங்கள்! எத்தனை வெற்றிகள்!

அவர்களுடைய கோரிக்கைகளில் ஒன்று இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஒரு அறுவை சிகிச்சை தியேட்டர் வேண்டும் என்பது. கொச்சியில் இருந்த மாதா அமிர்தா மருத்துவ அறிவியல் கழகத்திடம் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு நான் வேண்டுகோள் விடுத்திருந்தேன். நானும் ஒரு நிதியை அதற்காக ஒதுக்கியிருந்தேன். அவர்களும் மனம் உவந்து அப்பணிகளை மேற்கொண்டிருந்தார்கள்.

அந்த மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டர் திறப்பு விழா எனக்கு மிக மகிழ்ச்சியைத் தந்தது. சில வருடங்களுக்கு முன்னால் இதே இராமநாதபுரம் மாவட்டத்துக்கு நான் வருகை தந்த போதும் எண்ணற்ற இளைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களைக் கண்டேன். அவர்களிடம் இந்தியா முன்னேறிய நாடாக மாற வேண்டும் என்கிற கனவு கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

நம்முடைய பக்கத்து நாடுகள் சிலவற்றில் மனித உரிமைகள் நசுக்கப்படுவதை நாம் காண்கிறோம், அந்த நாடுகள் இராமநாதபுரம் மாவட்ட மக்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(87)
Name : gayathribalakrishnan Country : Australia Date :9/3/2012 10:14:31 AM
"வாழ்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இருபதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி"-."அக்னி சிறகுகள்" என்ற உங்களுடைய நூலிலிருந்து நான் கற்று கொண்டது .
Name : gangatharan.k mallal Country : India Date :7/3/2012 2:44:55 PM
sir,u r great indian leader.anathor leatest leaders are weaste
Name : dilli babu Date :6/17/2012 4:11:41 PM
Sir, you are great Indian leader. Anathor leatest leaders are weaste
Name : n.marimuthu Date :5/3/2012 4:03:08 PM
iya intha aasai indianin aasaiyaga irukkatum.
Name : P.BALASUBRAMANIAN Country : Australia Date :2/29/2012 1:03:51 PM
I AM ACCEPT THE ABOVE ARTICLE
Name : M.JAYAKANTHAN Country : Australia Date :2/22/2012 2:25:43 PM
சார் உங்கள் கருத்துக்கு நான் தலைவணங்குகிறேன் .
Name : N.GAYATHRI Country : India Date :2/16/2012 2:30:41 PM
SIR YOUR MY ROLE MODEL IN MY LIFE.
Name : srikrish Date :2/13/2012 4:48:25 PM
அப்துல்கலாம் கனவுகளை நனவாக்க இளைனர் சமுதாயம் போராடவேண்டும்
Name : madhan Country : India Date :2/9/2012 5:41:50 PM
வெற்றி நமதே நண்பர்களே
Name : madhan Country : India Date :2/9/2012 5:40:26 PM
வெற்றி நமதே
Name : Maheswari.s Country : Australia Date :2/1/2012 6:50:29 PM
நாங்கள் மிகவும் மதிக்கிறோம்
Name : Rebecca Country : Sri Lanka Date :11/29/2011 11:19:31 AM
சார் நான் ஒரு இலங்கை பிரஜை உங்கள் கருத்துக்களை அதிகமாக மதிக்கின்றேன் வரவேற்கின்றேன்.மன ஒருமைப்பாடு, முடியும் என்ற தன்னம்பிக்கை இவை எல்லாவற்றையும் வாழ்க்கைகு நல்ல படிப்பினைகள்...
Name : karthika Country : India Date :10/29/2011 12:33:44 PM
ayya unkal agni sirakugal ennum bookai nan padithean...
Name : naveen kumar Country : Australia Date :8/8/2011 9:56:36 PM
very nice statement
Name : n.srija Country : Australia Date :7/9/2011 2:38:34 PM
அய்யா நான் உங்கள இது போதும் பிரவில் நானும் உங்களை மாதிரி ஆவேன்
Name : n.srija Country : Australia Date :7/9/2011 2:36:49 PM
அய்யா நான் உங்கள இது போதும் பிரவில் நானும் உங்களை மாதிரி ஆவேன்
Name : n.srija Country : Australia Date :7/9/2011 2:35:27 PM
அய்யா நான் உங்கள இது போதும் பிரவில் நானும் உங்களை மாதிரி ஆவேன்
Name : M.AYYAPPAN Date :6/17/2011 1:04:10 PM
ayya nan ungala parkanum ithu pothum intha piraviill
Name : s Country : India Date :6/16/2011 5:52:05 PM
i can
Name : u.saparish Country : Australia Date :5/1/2011 11:24:46 AM
apdhul kalam iya avargalai oru murai paarka vendum enphathu ennudaiya neenda naal kanavuga ullathu
Name : mahadevan, AVC engineering College nagai Date :4/12/2011 3:17:10 PM
இந்தியாவின் ஒரே நம்பிக்கை அப்துல் களம் ஆவர்களே!!!!!!!!!!!!
Name : K. SUDHA Country : India Date :3/1/2011 4:00:39 PM
நன் பார்க்க துடிக்க நினப்பதில்லாம் ஒன்றே ஒன்று தான். அவர் என் உயிர்க்கு மேலாக நினைப்பவர் என்னுடைய அப்துல் களம் ஐயா அவர்கள் தான். அவர் இருக்கும் இந்த நாட்டில் நான் இருக்கேறேன் என்பதில் நான் மிகுயம் பெருமை படுகிறேன். அவர் வாழும் இந்த காலத்தில் நான் வாழிறேன் என்பதில் நான் பெருமை படுக்றேன். இப்படிக்கு கே.சுதா
Name : SIVASTARCHANDRAN.M St.joseph's college Trichy Country : India Date :1/14/2011 5:04:42 PM
நன் அப்துல் கலாமின் மிக தீவிர ரசிகன் .இவர் மேலே கூறியவைகளை பார்க்கும் பொது இவருக்கு அண்ணாவின் மீது எந்த அளவுக்கு சிறு வயதிலுருந்தே மதிப்பும் ,மரியாதியும் இருந்திருக்கும் என்பது தெளிவாக புரிகிறது .இவர் அண்ணாவை பேச வைத்தது போல என் நண்பர்களும் அப்துல் கலாம் அவர்களை எங்கள் கல்லுரி வந்து பேச வைக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம் நிச்சயம் ஒரு நாள் நிறைவேறும் என்ற நல்ல நம்பிக்கையெல் .இப்படிக்கு சிவா சந்திரன், திருச்சி துய வளனார் கல்லுரி.
Name : Vannai Abu Country : India Date :1/7/2011 7:35:41 PM
நாடு முயுவதும் பரவிக்கிடைக்கும் ஊயல் அரசியல்வாதி களை பார்த்து எதிர்க்காலத்தில் நம்பிக்கை இயந்து தவிக்கும் எங்களுக்கு ஐயா தாங்கள் ஒரு விடிவெள்ளி .தாங்கள் இந்தியாவில் பிறந்தது இந்தியாவிற்கு பெருமை.தாங்கள் வாயும் இந்த காலகட்டத்தில் வாய்வது எங்களக்கு பெருமை / வண்ணை அபு
Name : vasanthan Srilanka Country : Sri Lanka Date :12/29/2010 11:53:31 AM
நான் தலை வணங்குகிறேன் நம் இந்தியாக்கு .உங்கள் தேச பக்தி உங்களை உலகளவில் வல்லரசாக்கும்.ஜெய் கிந் வந்தேமாதரம்
Name : vasanthan Srilanka Country : Sri Lanka Date :12/29/2010 11:53:23 AM
நான் தலை வணங்குகிறேன் நம் இந்தியாக்கு .உங்கள் தேச பக்தி உங்களை உலகளவில் வல்லரசாக்கும்.ஜெய் கிந் வந்தேமாதரம்
Name : velmurugan Country : India Date :12/13/2010 9:28:56 PM
இந்திய தேசத்தின் தந்தையை உன் உருவில் பார்கிறேன்! உம்மை வணங்குகிறேன்!
Name : velmurugan Country : India Date :12/13/2010 9:17:21 PM
இந்திய தேசத்தின் தந்தையை உன் உருவில் பார்கிறேன்! உம்மை வணங்குகிறேன்!
Name : karthick Country : India Date :12/4/2010 6:17:09 PM
நான் அப்துல் kalaam அய்யா ரசிகர். என் நண்பர்ஹல் ௧௦ பேர் கொண்ட தங்கள் பிறந்த நாளை கட்டாயமாஹா கொண்டாடி வருகிறோம். அப்துல் கலாம் அய்யாவை நாங்கள் காண விறு ம்பு ஹிnnறோம். அய்யா தங்களது சேவையை நீங்கள் தொடர்ந்து செய்யுங்கள். இப்படிக்கு.... கார்த்திக்
Name : Prem Kumar Rangarajan Country : India Date :11/23/2010 5:33:06 PM
அப்துல் கலாம் ஐயாவின் ஆசை கண்டிப்பாக நிறைவேற்றுவோம் இளைஞர் சமுதாயம் ஒன்று சேர்ந்தால் இப்படிக்கு பிரேம் சென்னயில் இருந்து....
Name : murlikumar Country : India Date :11/11/2010 1:22:08 PM
நன் பார்க்க துடிக்க நினப்பதில்லாம் ஒன்றே ஒன்று தான். அவர் என் உயிர்க்கு மேலாக நினைப்பவர் என்னுடைய அப்துல் களம் ஐயா அவர்கள் தான். இப்படிக்கு லியோ murlikumar delhi
Name : leo Country : Japan Date :11/3/2010 9:37:33 PM
நன் பார்க்க துடிக்க நினப்பதில்லாம் ஒன்றே ஒன்று தான். அவர் என் உயிர்க்கு மேலாக நினைப்பவர் என்னுடைய அப்துல் களம் ஐயா அவர்கள் தான். இப்படிக்கு லியோ கும்பகோணம்,,,,,,,,,,,,,,,
Name : govindaraj Country : India Date :10/16/2010 2:47:30 PM
தயவுசெய்து அனைத்து இந்தியர்களும் நதிகள் இணைப்பிற்கு ஆதரவாக இருக்க வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.
Name : Govindaraj Krishnan Country : India Date :10/16/2010 2:22:09 PM
Please pass this information to every indian to support for connecting the rivers... Otherwise, we have to beg for food with other countries very soon... Because now itself food item costs are increasing constantly (there is no limit)... Please do not think as selfish... Then, no one help you at critical situation.. its 100% sure.. I request the media to publish this information daily..
Name : J Mythily Date :10/15/2010 9:46:52 AM
நதிகள் இணைப்பு மிக அவசியம். நாம் இணைந்தால் நதிகள் இணைப்பு சாத்தியம்.
Name : varun Country : Australia Date :10/4/2010 7:43:10 PM
i like this message. im very proud because i born in tamil nadu.
Name : balasubramaniyan Country : India Date :10/4/2010 6:29:41 PM
i am very happy ,i born in tamil nadu, because sir abdul kalam was born in tamil நாடு, வெரி குட் நியூஸ் ,,,,,,,,,மனதை விரிய வைக்கும் எண்ணங்கள் .. இளம் சமுதாயமான நாம் எவ்வாறு வாழ்க்கையை எதிர் நோக்குவது என்பது பற்றி கூறியது சூப்பர் ,,,,,,,
Name : suresh Country : Australia Date :10/3/2010 5:43:33 PM
very good information to us...........
Name : sureka Country : India Date :9/30/2010 2:36:03 PM
He is precious gift of our country.we can do it...................
Name : viswa Country : Japan Date :9/29/2010 10:25:45 AM
very nice
Name : priya Country : India Date :9/28/2010 11:50:14 AM
நன் பார்க்க துடிக்க நினப்பதில்லாம் ஒன்றே ஒன்று தான். அவர் என் உயிர்க்கு மேலாக நினைப்பவர் என்னுடைய அப்துல் களம் ஐயா அவர்கள் தான். இப்படிக்கு priya
Name : anandaraj Country : India Date :9/25/2010 7:23:14 PM
இது ரொம்ப நல்ல செயதி நன்றி வணகம்
Name : arumugam Country : India Date :9/9/2010 3:08:09 PM
very goodnews
Name : kannan Date :9/4/2010 4:56:02 PM
குட் news
Name : HK Arun Country : Hong Kong Date :8/30/2010 9:50:04 PM
தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள். தன்னம்பிக்கையும் அதேநேரம் தன்னடக்கமும் மிகுந்த ஒரு மனிதர். எத்தனை உயர்வுகளை எட்டினாலும் எளிமையான பேச்சு! நாம் இவரிடம் இருந்து கற்றுக்கொள்ள எத்தனை விடயங்கள் உள்ளன!
Name : GMURUGAN Country : Singapore Date :8/23/2010 7:27:02 PM
Dr,கலாம் இஸ் கிரேட் scientist அண்ட் பிரேசெண்டேன்ட் ,ஹி ஹாடு டு அசிவே லோட் அண்ட் லோட் , ரேஅல்லி ஹி இஸ் man ஒப் ரியல் ஹீரோ
Name : d.rajendran Country : India Date :8/13/2010 1:02:31 PM
நாம் அனைவரும் டாக்டர் சென்னபடி முடியம் எண்டு உறுதிமொழி ஈடுப்பெம்
Name : Tevasahayam Date :8/6/2010 11:57:47 PM
Dear Sir, If i have a Opportunity to meet good persan in india i must select you. You are a grate. I red your ''AKINISIRAKUKAL'' BOOK Thank you. May God bless you. Thevasahayam Sri Lanka
Name : usharani Country : India Date :8/3/2010 11:23:34 PM
நண்பர்களே, முடியும் என்ற நம்பிக்கை கொண்ட 54 கோடி இளைஞர்கள்தான், இந்திய நதிகளை இணைக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்ட இளைஞர்கள்தான் அனுபவத் தின் துணை கொண்டு வெற்றியை காண வேண்டும். நதிகளை இணைக்க வேண்டும் என்றால் என்ன வேண்டும்... "முடியும்' என்ற நம்பிக்கைமுதலில் ஓவ்வொருஇந்தியனுக்கும் வேண்டும்
Name : S K MANOHARAN Country : Australia Date :8/3/2010 9:16:28 PM
பேரறிஞர் அண்ணா அவர்களால் தாங்கள் நீரின் தேவையை அறிந்து கொண்டுளீர்கள்,என்பதனை இதனை இன்று எம்மால் படிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தமையால் அறிந்து மகிழ்வுறுகிறேன்.நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு.என நமது பொய்யா மொழிப் புலவர் ஐயன் திருவள்ளுவன் அதிகாரம் 2 ன் 10 குறளாக வகுத்து (யாத்து)அளித்துள்ளார். அஃதாவது எப்படிபட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால்,மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும். என்று டாக்டர்.மு.வரதராசனார் அவர்களால் பொருள் கூறப்பட்டுள்ளதையும் தாங்கள் தங்களின் கருத்தில் வைத்து சபைகளில் கருத்துரைக்க மிக விருப்பமுடன் வேண்டுகிறேன்.உண்மையுள்ள எஸ்.கே. மனோகரன், ஞானம் எலட்ரானிக்ஸ்& மியூஸிக்கல்ஸ, லக்ஷ்மி காம்ப்ளெக்ஸ் , குளித்தலை, கரூர் DT
Name : karthik Date :8/3/2010 5:00:13 PM
i am very happy i say to indian and Dr.Abdul Kalam is my country citizen, he was my best friend,i am only aim show the great person, Thank you APJ sir
Name : tamila Country : India Date :8/3/2010 2:31:27 PM
iam very proud of u sir. yannaku ungala romba pudikkum.nan oru indiana erukka perumai padarayn karanam neenga indiala erukkinga adhan sir.
Name : tamila Country : India Date :8/3/2010 2:29:41 PM
iam very proud of u sir. yannaku ungala romba pudikkum.nan oru indiana erukka perumai padarayn karanam neenga indiala erukkinga adhan sir.
Name : appanraj Country : India Date :8/1/2010 1:54:03 PM
it is really possible to our nation .
Name : appanraj Country : India Date :8/1/2010 1:53:59 PM
it is really possible to our nation .
Name : sa.machu Date :7/16/2010 2:44:18 PM
கோவை மாநகரத்துக்கு வருகை தந்திருக்கும் உங்களை வருக வருக என வரவேற்கிறேன்.ச.மாச்சு
Name : sathish babu Country : India Date :7/11/2010 12:07:22 PM
என்னோட வாழ்நாளில் ஒரு முறையாவது பார்க்கவேண்டிய நபர் அப்துல் களம் ஐயா அவர்கள்.நான் அவருடைய மாவட்டத்தின் அருகில் இருக்கும் மாவட்டத்தை சார்ந்தவன் என்பதில் பெருமை படுகிறேன்
Name : sathish babu Country : India Date :7/11/2010 12:05:21 PM
என்னோட வாழ்நாளில் ஒரு முறையாவது பார்க்கவேண்டிய நபர் அப்துல் களம் ஐயா அவர்கள்.நான் அவருடைய மாவட்டத்தின் அருகில் இருக்கும் மாவட்டத்தை சார்ந்தவன் என்பதில் பெருமை படுகிறேன்
Name : sathya Country : India Date :7/9/2010 2:37:30 PM
என்னோட வாழ்நாளில் ஒரு முறையாவது பார்க்கவேண்டிய நபர் அப்துல் களம் ஐயா அவர்கள்.
Name : Bhaskaran Country : India Date :6/26/2010 4:44:44 PM
i was very happy to be a Indian. I was waste my life upto the date today only i was able to study this.
Name : muthu manickam Country : India Date :6/11/2010 10:46:34 AM
i am very happy ,i born in tamil nadu, because sir abdul kalam was born in tamil nadu, this (mudium ennru nambu) story very excelent . i will try any do our nation, thanks for abdul kalam sir
Name : k. sudha Date :4/24/2010 2:03:54 PM
நன் பார்க்க துடிக்க நினப்பதில்லாம் ஒன்றே ஒன்று தான். அவர் என் உயிர்க்கு மேலாக நினைப்பவர் என்னுடைய அப்துல் களம் ஐயா அவர்கள் தான். இப்படிக்கு கே. sudha
Name : BL. Mekala Date :3/20/2010 3:27:38 PM
என்னோட வாழ்நாளில் ஒரு முறையாவது பார்க்கவேண்டிய நபர் அப்துல் களம் ஐயா அவர்கள்.
Name : Sundar G Date :3/11/2010 1:29:01 PM
Please share your more experience with us. Because we have to become our nation forward. Sir, Will you Please send your novels to my address. Important WINGS OF FIRE. My Address is Sundar G. No.31, Ranganathan Nagar, Puthagaram, Chennai - 99.
Name : Booplan Date :12/25/2009 7:40:30 PM
நான் பிறந்ததன் பெருமை என்ற ஒன்று இருக்குமானால் அது எனது தாத்தா திரு. கலாம் அவர்கள் பிறந்த மாவட்டத்தில் பிறந்ததுதான்.(R.S. Mangalam எனது சொந்த ஊர். ) நானும் அவருக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் நானும் நிச்சயம் எனது போட்டோ கிராபிக் துறையில் சாதிப்பேன். என் தாத்தாவின் ஆசிர்வாதங்களுடன்.... பூபாலன்.
Name : r.sivanantham Date :12/24/2009 6:40:15 PM
ரியா அப்போது வாழ்த்த மக்கள் பொதுநலவாதிகள்,இப்போ நானும் சுயநலவாதிதான்,என வேலை பார்க்க நேரம் யாது?
Name : k.prem kumar Date :11/29/2009 9:08:32 PM
அவருடை கனவுக்கு நானும்( எனை சார்ந்தவர்களும் ) ஒரு ஊன்று கோலை போல் இருப்போம் .
Name : arunkumar Date :11/27/2009 12:44:18 PM
this page is very usefull to young students and all indians
Name : m.premkumar Date :11/12/2009 1:00:24 PM
very nice
Name : Gayathri Date :11/11/2009 11:44:10 AM
வணக்கம் sir! your speech excellent.you are live in this country i will very ஹாப்பி.
Name : mohamed yusuf Date :11/8/2009 8:07:17 PM
வி ஹவே டு லேஅர்ன் மோர் அண்ட் மோர் பிரோம் களம் கநோவலேட்கே, இட் இஸ் வெரி உசெபிஉல் போர் உச
Name : g.g.senthil Date :10/29/2009 6:41:32 PM
I Like Mr.Kalam.
Name : nifras Date :10/27/2009 2:10:45 PM
மனதை விரிய வைக்கும் எண்ணங்கள் .. இளம் சமுதாயமான நாம் எவ்வாறு வாழ்க்கையை எதிர் நோக்குவது என்பது பற்றி கூறியது superb
Name : indian Date :10/26/2009 8:01:10 PM
the great man one and only Mr.Kalam
Name : ashiq Date :8/19/2009 4:09:57 PM
அப்துல் கலாம் நம் நாட்டிற்கு மிகும் அவசியமான மனிதர்
Name : jeya49jk Date :8/5/2009 1:19:26 AM
அது 1950 வருடங்களில் நிகழ்ந்த சம்பவம்...
Name : selvaraj,tvm Date :8/1/2009 1:50:43 PM
ABDUL KALAM IS GREAT..................................................................
Name : S.Karthikeyan Date :7/31/2009 6:38:43 PM
Excellent, " Impossible as Possible"
Name : dhanammalarkkan Date :7/28/2009 10:57:02 AM
குடியரசு தலைவர் அவர்களின் தொடர் அனைவருக்கும் மிக எழுச்சியை தருவதாக உள்ளது. ஈழ தமிழர்களின் விடியலுக்கும் அவர் வழிகாட்ட வேண்டும். அவர்களின் துயர் நீங்க தன்னால் முடிந்த அணைத்து உதவிகளைய்ம் செய்ய வேண்டும்.
Name : peterkabilan Date :7/24/2009 6:51:53 PM
வரவேர்க்க வேண்டிய விழியம்.
Name : Ravi Date :7/24/2009 7:14:32 AM
Excellent. I am expecting next.
Name : Ravi Date :7/24/2009 7:13:15 AM
எக்ஸ்செல்லேன்ட்.
Name : Ravi Date :7/23/2009 7:46:05 AM
திரு ஐயா அவர்கள் , இது ஒரு அருமையிலும் அருமையான தொடர். மிக்க நன்றி..
Name : Vigneshwar Raj Date :7/22/2009 10:13:24 PM
Hat's Off to u nakkeeran..... thanks for posting this article.... i buy ur magazine in newstands.... but online... i was not able to access articles.... But ur doing a great job... in posting this type of articles free... Thank u
Name : kuppan_yahoo Date :7/22/2009 7:09:16 PM
is it really written by Abdual kalaam. becasue Anbazagan used to say that Annadurai spoke about Rivers topic in annaamalai university student function (there also he asked topic from crowd). Hence the doubt came. or is Annadurai also spoke same topics in all places/meetings like Vaiko, jeyalaitha teepori aarumugam. They speak same topics in all meetings.
Name : nazzar Date :7/22/2009 2:36:39 PM
மேல் எழுல்ந்தவாரியாக பக்கத்துநாட்டு மனித உரிமை பற்றி சொல்லாமல் , நேர்மையாக கண்டிக்க பயப்படும் தலைவர்களில் ஒருவரா கலாம் ?
Name : SYED RAFFIC Date :7/21/2009 8:11:16 PM
HE IS GRATE