logo
காவலர் பயிற்சிபள்ளி டிஜிபியாக கே.பி.மகேந்திரன் || ஒசூர் நில அளவையர் குவளை செழியன் கொலை வழக்கில் 7 பேர் கைது || இயக்குநர் சேரன் நீதிமன்றத்தில் ஆஜர் || ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கு - நாளை இறுதி விசாரணை || திருப்பரங்குன்றம் - அரசிதழில் வெளியீடு || துறைமுக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் || பாமக பிரமுகர் கொலை வழக்கில் 4 பேர் கைது || மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழப்பு || இடி,மின்னலுடன் இரவில் மழை பெய்ய வாய்ப்பு || நள்ளிரவில் டிரவுசர் கொள்ளையர்கள் அட்டகாசம் - போலீஸார் தீவிர விசாரணை || மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம் ( படங்கள் ) || புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி - உள்துறை அமைச்சகம் ஒப்புதல் || நடிகர் செந்தில் போலீஸ் கமிஷனரிடம் புகார் ||
தமிழகம்
காவலர் பயிற்சிபள்ளி டிஜிபியாக கே.பி.மகேந்திரன்
......................................
ஒசூர் நில அளவையர் குவளை செழியன் கொலை வழக்கில் 7 பேர் கைது
......................................
இயக்குநர் சேரன் நீதிமன்றத்தில் ஆஜர்
......................................
ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கு - நாளை இறுதி விசாரணை
......................................
திருப்பரங்குன்றம் - அரசிதழில் வெளியீடு
......................................
துறைமுக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
......................................
பாமக பிரமுகர் கொலை வழக்கில் 4 பேர் கைது
......................................
மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழப்பு
......................................
இடி,மின்னலுடன் இரவில் மழை பெய்ய வாய்ப்பு
......................................
நள்ளிரவில் டிரவுசர் கொள்ளையர்கள் அட்டகாசம் - போலீஸார் தீவிர விசாரணை
......................................
மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம் ( படங்கள் )
......................................
நடிகர் செந்தில் போலீஸ் கமிஷனரிடம் புகார்
......................................
கோகுல்ராஜ் தற்கொலை செய்துக்கொண்டார்: ஜாமீனில் வெளியே வந்த யுவராஜ் பேட்டி
......................................
படிமப் பாறை எரிவாயு திட்டத்தைத் தடை விதிக்க வேண்டும்: வைகோ வாதம்
......................................
மாவட்டச் செயலாளர்களுடன் திருமாவளவன் ஆலோசனை (படங்கள்)
......................................
பணம் வாங்கும் இன்ஸ்பெக்டரை கண்டித்து வழக்கறிஞர்கள் தீர்மானம்.
......................................
ரமலான் நோன்பையொட்டி சிறையில் உள்ளவர்களுக்கு சிறப்பு வசதி ஏற்படுத்தித் தர கோரிக்கை
......................................
கோகுல் ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட யுவராஜ் ஜாமீனில் விடுதலை
......................................
RTI கீழ் அனைத்துக் கட்சிகளையும் கொண்டுவர வேண்டும்: சுயஆட்சி இயக்கம் வலியுறுத்தல்
......................................
சென்னை - சிலை கடத்தல் தடுப்பு போலீசார் அதிரடி சோதனை
......................................
ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது: பள்ளி கல்வித்துறை உத்தரவு
......................................
சீமைக் கருவேல மரங்கள் ஒழிப்புக்கு நிதி திரட்ட இன்னிசை நிகழ்ச்சி
......................................
பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்தவர்களுக்கு ரூ. 28,000 அபராதம்
......................................
எஸ்.ஐ. பணிக்கு மறுதேர்வு
......................................
வேன் கவிழ்ந்து விபத்து: 8 பேர் காயம்
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 19, ஆகஸ்ட் 2013 (9:9 IST)
மாற்றம் செய்த நாள் :19, ஆகஸ்ட் 2013 (9:9 IST)


காலத்தை வென்ற கவிஞர் வாலி : கவிஞர் கனிமொழி பேச்சு

தென் சென்னை மாவட்ட, தி.மு.க., கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவையின் சார்பில், கவிஞர்கள் வாலி, ஆத்மநாதன் மற்றும் சாமி பழனியப்பன் ஆகியோரின் படத்திறப்பு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.  நிகழ்ச்சிக்கு தென் சென்னை மாவட்டச் செயலர், ஜெ.அன்பழகன் முன்னிலை வகித்தார். சண்முக நாதன் வரவேற்றார்.

வாலின் உருவப்படத்தை திரைப்பட இயக்குனர், எஸ்.பி.முத்துராமனும், கவிஞர் ஆத்மநாதன் உருவப் படத்தை இசையமைப்பாளர், தாயன்பனும், கவிஞர் சாமிபழனியப்பன் உருவப்படத்தை திராவிட இயக்க சிந்தனையாளர், திருநாவுக்கரசும் திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சியில், கனிமொழி எம்.பி., பேசியபோது,  ‘’கவிஞர் வாலி எழுதிய திரைப்படங்களைத் தாண்டி, அவர் எழுதிய பல எழுத்துக்களில் பக்தி இருந்தது. பக்தி இலக்கியங்களில் புலமை இருந்தது. பக்தி இலக்கியங்களில் இருந்து, பல விஷயங்களை திரைப்படப் பாடல்களில் அவர் எடுத்து, கையாண்டிருக்கிறார்.

அவர், "முகுந்தா முகுந்தா' போன்ற மற்றும், "ஸ்ட்ராபெர்ரி கண்ணே' போன்ற பாடல்களையும் எழுதியுள்ளார். எந்தக் காலகட்டத்தில், அவர் எழுதிக்கொண்டிருந்தாரோ, அந்தக் காலகட்டத்தில் இருந்த கவிஞர்களுக்கு இணையாக எழுதக்கூடியவர். கண்ணதாசன் இருந்த காலத்தில், வாலி எழுதிய பாடல்களை, பல நேரத்தில் பிரித்து பார்க்க முடியாது.

எம்.ஜி.ஆருக்காக, வாலி எழுதிய பாடல்களை அவர் எழுதியதா, கண்ணதாசன் எழுதியதா என்று பிரித்து பார்க்க முடியாத வகையில் அமைந்திருந்தது. மாற்றத்தை ஏற்றுக் கொள்வது என்பது மிகச் சிலருக்கே சாத்தியம். கவிஞர் வாலி, இன்றுள்ள இளைஞர்களை தொடக்கூடிய எழுத்துக்களை, எழுதக்கூடிய ஒரு கவிஞராக, காலத்தை வென்ற கவிஞராக இருந்தவர்.

விகடனிலே ராமாயணத்தை பற்றி எழுதப்பட்ட காவியத்தை தி.மு.க., தலைவர் கருணாநிதி படித்து விட்டு, வாலிக்கு தொடர்ந்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தார். இங்கு நாம் நன்றி செலுத்தியிருக்கக் கூடிய மற்றொரு கவிஞர் ஆத்மநாதன். அவருக்கு நடந்த நிகழ்ச்சியினால் தான், அவர், "விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே' என்ற பாடலை எழுதியதாக, அறிந்து கொண்டேன். இங்கே பேசியவர்கள், சாமி பழனியப்பனைப் பற்றி மிகப் பெருமையாக பேசினர்.

இந்த சமூகத்தில் வெற்றி பெறக்கூடிய பல கவிஞர்கள், எழுத்தாளர்கள் இருக்கின்றனர். ஆனால், தன் வாழ்நா ளெல்லாம், கொள்கை உறுதியோடு எத்தனை பேர் இருக்கின்றனர்? ஒரு கவிஞன் அல்லது ஒரு எழுத்தாளனின் வெற்றி என்பது கைத்தட்டல்களில் மட்டும் அடங்கி விடாது. வெற்றிச் சரித்திரத்தில், இடம் பெறக்கூடியதாக மாறுவது என்பது, அவரிடத்தில், இருக்கக் கூடிய கொள்கை உறுதியால் தான் அமையும் என்பதை மறந்து விட முடியாது’’என்று தெரிவித்தார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :