Add1
logo
மாவட்டச் செயலாளர் பதவியைக் குறி வைத்து நெல்லை அ.தி.மு.க. புள்ளிகளின் ஆடு, புலியாட்டம் || சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நிகழ்ச்சியில் ஆட்சியர் ஹரிஹரன் பங்கேற்காததால் அதிருப்தி || தூய்மையான இடத்தில் இலைகளை கொட்டி அள்ளுவது போல போஸ் கொடுத்த ஆளுநர்! || மாணவர்களுக்கு மறு தேர்வு கட்டணம் 15 மடங்கு உயர்வு! கோவையில் போராட்டம் || குஜராத் மாநில தலித் மக்கள் ஒரு அரசியல் சக்தியாக உருப்பெற துவங்கிவிட்டனர்: திருமாவளவன் || 99 இடங்களில் வெற்றி : 6-வது முறையாக குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக || ஆர்.கே.நகரில் பி.சுதாகர் ஐபிஎஸ் மாற்றம் || கோவையில் பள்ளிகளின் தரம் இன்று முதல் ஆய்வு || டெங்கு கொசு உற்பத்தி செய்த 55 பள்ளிகள்! || ஐயப்ப பக்தர்கள் 4 பேர் கார் விபத்தில் பலி || மோடி பிறந்த ஊரில் காங்கிரஸ் வெற்றி! || பண பட்டுவாடாவை தடுத்த தேர்தல் அதிகாரியை சுற்றி வளைத்த பெண்கள்! || அழிந்து வரும் பனைமரங்களை காக்கும் இருளர் சமூக பள்ளி மாணவர்கள்! ||
Logo
ஹெல்த்
கற்ப மூலிகை கண்டங் கத்திரி
 ................................................................
பழங்களின் நிறமும் குணமும்
 ................................................................
அரசமரம்
 ................................................................
உற்சாகம் தரும் உடற்யிற்சி நீச்சல்
 ................................................................
அழகோ அழகு...
 ................................................................
பாட்டி வைத்தியம் ஒரே தும்மலா இருக்கா?
 ................................................................
குழந்தையின் உணவு
 ................................................................
ஸ்வஸ்திக் ஆசனம்
 ................................................................
உடல் உறுப்புகள் - சருமம்
 ................................................................
எச்சரிக்கை... "கொழு.. கொழு" உடல்
 ................................................................
ஆயுளும் ஐஸ்வர்யமும்
 ................................................................
பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன்...
 ................................................................
திண்ணை கிளினிக் -ஆசிரியர்
 ................................................................
உடலெனும் பிரபஞ்சம் - பிரபஞ்ச சக்தி
 ................................................................
கை கழுவும் முறை...
 ................................................................
நில்.. கவனி... ஏன் இந்த சிதைவு...
 ................................................................
வர்மத்தின் மர்மங்கள்
 ................................................................
01-10-2010

அழகோ அழகு...

               னிதனின் ஆரோக்கியத்தை வெளிப்படுத்துவது அவனின் முகம்தான்.  உடலிலும், உள்ளத்திலும் குறை  ஏதும் உண்டானால் அதன் வெளிப்பாடும் முகத்தில் தெரியவரும்.  இன்றைய நாகரீக உலகில் முகத்திற்கு அழகு சேர்க்க சந்தையில் விற்கப்படும் பொருட்கள் ஏராளம்.  அதன் வருவாய் ஒவ்வொரு நாட்டிலும் 25 விழுக்காட்டிற்கு குறையாமல் உள்ளது.  முன்பெல்லாம் மேல்தட்டு மக்களையும், நகர வாசிகளையும் முன்வைத்து சந்தைப் படுத்திய இந்த அழகு சாதன பொருட்களை விற்கும் நிறுவனங்கள் இப்போது நடுத்தர மக்களையும், கிராமவாசிகளையும் நோக்கி தன் விளம்பர உத்தியைத் தொடர்ந்துள்ளது.

இந்த வகையான அழகு பொருட்களால் முகம் பொலிவுறுகிறதா, உண்மையான அழகு கிடைக்கிறதா என்றால் அது என்னவோ பூஞ்ஜியத்தில்தான் முடியும்.  இதனால் மேலும் பல சரும நோய்களின் பாதிப்புக்கு ஆளாக நேரிடுகிறது.  இப்படிப்பட்ட அழகு சாதன பொருட்களின் பகட்டு விளம்பரங்கள் மக்களை வெகுவாக கவர்ந்திழுத்துக் கொண்டு இருக்கிறது என்பது உண்மை.

காசு கொடுத்து கர்மத்தை வாங்காதே என்பர் நம் முன்னோர்கள்.  அதுபோல் இந்த முக அழகு பொருட்கள் உடலுக்கு தீங்குகளை விளைவிக்கக் கூடியவை. இவற்றை வாங்கி உபயோகிப்பதன் மூலம் நாம் பணத்தையும் அழகையும் இழப்பதுதான் மிச்சம்.

ஆனால் இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு வேதிப் பொருட்கள் கலப்பின்றி முகத்தையும், உடலையும் ஆரோக்கியம் பெறச் செய்யலாம்.

முகத்தில் வறட்சியோ, எண்ணெய் வடிதல், வெள்யைõக தோன்றுதல், பரு தோன்றுதல், முகக்கருப்பு, கருவளையம், கரும்புள்ளி என எந்தவகையான பாதிப்பு தோன்றினாலும் இதற்கு வேண்டிய மருந்துகளை பயன்படுத்தும் முன் மலச்சிக்கல் இருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.  சருமத்திற்கு ஒவ்வாமை தரக்கூடிய பொருட்களை தவிர்க்க வேண்டும்.  ஓய்வு காலங்களில் இவற்றை உபயோகிக்க வேண்டும்.  இந்த வழிமுறைகளை பின்பற்றினால் கீழ்காணும் மூலிகைப் பொருட்களால் முகம் பொலிவு பெறும்.

வறண்ட சருமத்திற்கு

வறண்ட சருமம் கொண்டவர்கள் கடல் உப்பை நீரில் கரைத்து முகத்தில் தேய்த்து இலேசாக மசாஜ் செய்து, பருத்தியினால் ஆன துணி கொண்டு முகத்தைத் துடைத்து, பின் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் வறண்ட சருமம் பொலிவு பெறும்.  15 நாட்கள் இவ்வாறு செய்வது நல்லது.

முகம் பொலிவு பெற

தேன்        - 1 ஸ்பூன்

ஆரஞ்சு பழச்சாறு    - 1 ஸ்பூன்

ரோஸ் வாட்டர்    - 2 ஸ்பூன்

இவற்றைக் கலந்து முகம், கழுத்துப் பகுதிகளில் தடவி 10 நிமிடங்கள் ஊறவைத்து பின் இளம் சூடான நீரில் முகம் கழுவினால் முகம் பட்டுபோல் ஜொலிக்கும்.

எண்ணெய் பிசுகு உள்ள முகத்திற்கு

இன்றைய இளம் வயதினர் அனைவருக்கும் மன உளைச்சலைத் தருவது எண்ணெய் தோய்ந்த முகமும், முகப்பருவும் தான்.

எவ்வளவுதான் முகப்பவுடர் பூசினாலும் சிறிது நேரத்திலே முகம் எண்ணெய் வடிவது போல் ஆகிவிடும்.

இதற்கு நிரந்தரத் தீர்வு

தேன்     - 1 ஸ்பூன்

முட்டை வெள்ளை கரு    - இரண்டையும் ஒன்றாகக் கலந்து முகம் முழுவதும் பூசி சுமார் 20 நிமிடம் காயவைத்து பின் நன்கு குளிர்ந்த நீரில் முகம் கழுவி வந்தால் எண்ணெய் தோய்ந்த முகம் மாறி, முகம் பளிச்சிடும்.

எலுமிச்சம் பழச்சாறில் பப்பாளிப் பழத் துண்டுகளைச் சேர்த்து நன்றாகக் குழைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவைத்து முகம் கழுவி வந்தால் முகம் சுருக்கமின்றி பொலிவுபெறும்.

மாதுளம் பழத்தோலை காயவைத்து பொடி செய்து அதனுடன் கடுகு எண்ணெய் கலந்து குழைத்து மேனி எங்கும்பூசி  குளித்து வந்தால்  தோல் சுருக்கங்கள் மாறும்.  மார்பகங்களில் பூசி வந்தால் மார்பகச் சுருக்கங்கள் நீங்கும்.

அழகான பாதங்களுக்கு

பெண்கள் அழகான முகத்தை விரும்புவது போல் அழகான பாதங்களையும் விரும்புவர். 

எலுமிச்சை சாறு     - 20 மிலி

ஆலிவ் எண்ணெய்    - 2 ஸ்பூன்

பால்            - 50 மிலி

ஏலக்காய்        - 1 கிராம்

பாதங்களில் பூசி வந்தால் பாதங்கள் மென்மையடைந்து, அழகு பெறும்.

அழகான உதடுகளுக்கு

பாலாடை, நெல்லிச்சாறு கலந்து உதட்டில் தடவி வந்தால் உதடு கருமை நீங்கி சிவப்பாகும்.

வெண்ணெய்யுடன் ஆரஞ்சு சாறு கலந்து உதட்டில் பூசி வந்தால்  வெடிப்புகள் மாறி உதடு மென்மையாகும்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :
கருத்துக்கள்(3)
Name : usharajesh Date & Time : 12/22/2013 9:07:49 PM
-----------------------------------------------------------------------------------------------------
என்னது வயது 30 ஆகிறது சிறு வயது அதிக முகபரு காரணமாக எனது கன்னங்களில் சிறு சிறு துவரன்களாக இருக்கிறது. என்ன செய்தலும் சரியாக வில்லை, விசேச விடுகழுக்கு செல்ல தயக்கமா உள்ளது எதாவது ஆலோசனை தாருங்கள்.
-----------------------------------------------------------------------------------------------------
Name : Parimala Date & Time : 5/2/2012 10:15:02 AM
-----------------------------------------------------------------------------------------------------
ஹாய், i will be dry skin how to reduce . My eyes and neck & lower & upper jaws or very dry, hands also. Pls give solutions. Ans plz gvie Tamil..Thanks
-----------------------------------------------------------------------------------------------------
Name : Ithay Date & Time : 10/26/2010 1:03:10 PM
-----------------------------------------------------------------------------------------------------
நல்ல அருமையான யோசனைகள் நன்றி
-----------------------------------------------------------------------------------------------------