Add1
logo
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ || அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம் || புதுச்சேரியில் ரவுடிகள் ஆட்சி செய்ய முடியாது: கிரண்பேடி || இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்! || அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி || அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்! || வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு || குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல் || பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை || போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்! || பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்! || பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்) || திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது! ||
Logo
ஹெல்த்
கற்ப மூலிகை கண்டங் கத்திரி
 ................................................................
பழங்களின் நிறமும் குணமும்
 ................................................................
அரசமரம்
 ................................................................
உற்சாகம் தரும் உடற்யிற்சி நீச்சல்
 ................................................................
அழகோ அழகு...
 ................................................................
பாட்டி வைத்தியம் ஒரே தும்மலா இருக்கா?
 ................................................................
குழந்தையின் உணவு
 ................................................................
ஸ்வஸ்திக் ஆசனம்
 ................................................................
உடல் உறுப்புகள் - சருமம்
 ................................................................
எச்சரிக்கை... "கொழு.. கொழு" உடல்
 ................................................................
ஆயுளும் ஐஸ்வர்யமும்
 ................................................................
பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன்...
 ................................................................
திண்ணை கிளினிக் -ஆசிரியர்
 ................................................................
உடலெனும் பிரபஞ்சம் - பிரபஞ்ச சக்தி
 ................................................................
கை கழுவும் முறை...
 ................................................................
நில்.. கவனி... ஏன் இந்த சிதைவு...
 ................................................................
வர்மத்தின் மர்மங்கள்
 ................................................................
01-10-2010
                 ரு வாரம் விடமாட்டேன் என்று அடம் பிடிப்பது போல் கொட்டித் தீர்க்கிறது மழை.

வெயில் காலத்தில், வெயிலையும், மழைக் காலத்தில் மழையையும் அனுபவித்து சுகித்தபடியே, மற்றொரு பக்கம் அவற்றை திட்டித் தீர்ப்பதுதான் மனித மனத்தின் விசித்திரமான செயல்பாடு.
குளித்து முழுகி, நெற்றியில் கட்டுக்கட்டாக நீறு துலங்க திண்ணையில் வந்து அமர்ந்த வைத்தியர், நீர் மயமாக நிறைந்து கிடக்கும் தெருவைப் பார்த்தார்.    மழை அவருக்குள்ளும் பெய்தது போல் அத்தனைக் குளிர்ச்சி.

மழையை வான் அமுதம் என்று வள்ளுவன் தெரியாமலா சொன்னான்.  மழை என்ற ஒன்று மட்டும் பெய்யாது போனால், மண்ணும் மனிதர்களும் என்ன ஆவார்கள்?

ம்.. யார் இதையெல்லாம் நினைத்துப் பார்க்கிறார்கள்.  காடுகளை அழித்து, இயற்கையை சூறையாடி, மழைக்கான ஜீவாதாரங்களை எப்படி எல்லாம் சிதைக்க வேண்டுமோ, அப்படி யெல்லாம் சிதைத்து சீரழிக்கிறார்கள்.  மழையின் அருமை குறித்து சிந்தித்த வைத்தியரின் எண்ணப் பறவை, தன் சிறகுகளை விரித்து எங்கெங்கோ பறக்கத் தொடங்கியது.

“என்ன வைத்தியரய்யா.. விட்டா தெருவில பெருகிக் கெடக்குற தண்ணில இறங்கி நீச்சல் அடிச்சிடுவிங்க போலருக்கே... அவ்வளவு ஆர்வமா பாத்துக்கிட்டு இருக்கீங்க...”

குரல் கேட்டுத் திரும்பிய வைத்தியர், குடையை மடக்கி கையில் பிடித்தபடி வந்து திண்ணையில் அமர்ந்த சுந்தரத்தை பார்த்தார்.

“என்னப்பா... சுந்தரம்.. இந்த மழையிலயும் விடாப்பிடியா குடையைப் புடிச்சிக்கிட்டு என்ன  வந்து பார்க்க வந்துருக்கே.. என்ன சமாச்சாரம்...உடம்புக்கு எதாச்சுமா...”


வைத்தியரின் வாஞ்சையான விசாரிப்பில் மனம் நெகிழ்ந்த சுந்தரம், அது என்னவா இருந்தாலும் உங்க அன்பான விசாரிப்புலையே காணாமப் போயிரும் வைத்தியரய்யா.  ஜனங்களுக்கு உங்கக்கிட்டே ரொம்ப பிடிச்ச விஷயமே அதுதான்.

சுந்தரம் சொன்னதைக் கேட்டுப் புன்னகைத்துக் கொண்ட வைத்தியர், “வைத்தியர்ங்குறவன் வெறும் மருந்து சொன்னா மட்டும் பத்தாது சுந்தரம்... வாஞ்சையான பேச்சும், வாத்சல்யமான உபசரிப்பும் ரொம்ப அவசியம்.  உடம்புல உள்ள நோய்க்குத் தான் மருந்து கொடுக்கலாம்.  மனசுல உள்ள வலிக்கும், வேதனைக்கும் மருந்து பயன் தராது.. ஆறுதலான பேச்சும், அன்பான விசாரணையும், அக்கறை யான அணுகு முறையும்தான் அதுக்கு ஔஷதங்கள்.  அதுனாலதான் சித்தர்கள் மருத்துவத்தை ஒரு வாழ்க்கை முறையாக  வகுத்து வச்சிருக்காங்க..”

“மனமது செம்மை யானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம் என்பதைப் போன்ற சித்தர்களின் உபதேசங்கள், உபநிஷத்துக்களை விட வலிமையாக இன்றும் உயர்ந்து நிக்கிறது..  அவர்களின் இயற்கை சார்ந்த அக்கறையே காரணம்... அந்த வழியிலே வந்த எனக்கும் அதே குணங்கள் இருக்கிறதுல எந்த அதிசயமும் இல்லைதானே... அது போகட்டும்.. நீ  வந்த  விஷயத்த சொல்லு...”

“அது வந்து வைத்தியரய்யா..  இப்பல்லாம் காலயில எழுந்து உக்கார முடியல.. தலை சுத்தி குப்புற தள்ளுது..  எழுந்து நிக்க முடியல..  சமயத்துல பாத்ரூம் போகவே முடியாம அப்படியே உக்காந்துடுவேன். மீறி போனா மயக்கமாகி கீழ விழுந்துடு வனோன்னு பயமா இருக்கு... பாக்குறதெல்லாம் ரெண்டு ரெண்டா தெரியுது.. சமீப காலமா இது  அதிக மாகிக் கிட்டே வருது.  அதுதான் உங்கள பாத்துட்டு போகலாம்னு வந்தேன்..”

சுந்தரம் சொன்னதைக் கவனமாகக் கேட்ட வைத்தியர், “இதுக்காக பயப்பட வேண்டாம்.  இதைப் பொதுவா பித்த மயக்கம்னு சொல்றது.  இதற்கு முக்கியமான காரணம் இரவில் நேரங்கழித்து உண்ட உணவு செரிக்காமல் இருக்குறதுதான்.  அதனால ஏற்படும் வாயு, பித்த நீரோட சேர்ந்து, உஷ்ண நீரா மாறி, தலையில ஏரிக்குது.  இது காலையில மயக்கம், வாந்தி, தலைவலி எல்லாத்தையும் உண்டு பண்ணுது.  சிலருக்கு வாந்தி எடுக்கும்போது சளியும் சேந்து வரும்.   இத பித்தச் சளின்னு சொல்லுவாங்க.”

“உடலானது  அதிகாலையில வாத பித்தமாகவும், பகல்ல பித்தமாகவும், மாலையில பித்த கபமாகவும் ராத்திரில கப நீராகவும் செயல்படுது.  இதுக்கு முக்கியமான காரணம், அஜீரணந்தான்.  அதுனால ராத்திரில  கடினமான உணவுகள சாப்பிடக் கூடாது.  காலையில காபி, டீக்கு பதிலா  தனியா , சீரகம் சேர்த்து காய்ச்சி குடிக்கலாம்.  மாலையில காபி, டீக்கு பதிலா சுக்கு நீர இனிப்பு கலந்து குடிக்கலாம்.  காலையில இஞ்சி சேர்த்த தேனீர் அருந்தலாம்.”

“காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் என்பது சித்தர்களின் மந்திரம்.  இதன்படி சேர்த்து வந்தாலே இது போன்ற மயக்கங்கள் எல்லாம் வராது.”

வைத்தியரின் நீண்ட அறிவுரையைக் கேட்டுக் கொண்டிருந்த சுந்தரம்,“ ஐயா... இதுக்கு ஏதாச்சும் மருந்து சொன்னிங்கன்னா நல்லா இருக்கு...” என்று தயங்கியபடியே கேட்டார்.

“நான் சொன்னதே மருந்துதான் சுந்தரம்.  இருந்தாலும் இன்னொரு மருந்தும் சொல்றேன்...”

“கொத்தமல்லி விதை, பனைவெல்லம், இஞ்சி 1 துண்டு சேத்து கொதிக்க வச்சி டீ காபிக்கு பதிலா குடிச்சிக்கிட்டு வா..”

“காலையில எழுந்ததும், எலுமிச்சம் பழச்சாறோட தேன் கலந்து குடிக்கலாம்.    நெல்லிக்காய் சாறோட தேன் கலந்து குடிக்கலாம்.. இதனால, காலை, நேரத்துல பித்தம் அதிகரிப்பது கட்டுப்படும்.”
வைத்தியரின் மருத்துவம் சார்ந்த அறிவுரைகளைக் கேட்ட சுந்தரம், அவரிடமிருந்து விடை பெற்றார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :