Add1
logo
7 தமிழர்களை விடுதலை செய்யும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது: ராமதாஸ் || பேருந்து கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்: பழனிசாமிக்கு ஸ்டாலின் கடிதம் || இடையில் மூன்று நாட்களில் என்ன நடந்தது? கி.வீரமணி கேள்வி || கல்லூரி மாணவ மாணவிகள் சாலை மறியல் || சிபிஐஎம் மாநிலக்குழு கூட்டம் || உங்களுக்காக காத்திருக்கிறேன்! உடன்பிறப்புகளுக்கு ஸ்டாலின் கடிதம்! || நல்ல பஸ் எப்ப விடுவீங்க... ஆட்சியரிடம் மனு கொடுத்த இளைஞர் || நீட் நெருங்குகிறது, பயிற்சி மையம் இல்லை: அரசு பள்ளி மாணவர் கனவு கலைகிறது! அன்புமணி || பஸ் கட்டணம் உயர்வு... வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள் || 2வது நாளாக நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை || விபத்தில் 3 இளைஞர்கள் பலி: சோகத்தில் மூழ்கிய கிராமம் || மீத்தேன் ஆய்வுப் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள் || அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த பாராளுமன்ற நிலைக்குழுவினர் ||
Logo
ஹெல்த்
கீரையோ... கீரை...
 ................................................................
யோகம் செய்யுங்கள் : லோலாசனம்
 ................................................................
பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன்...
 ................................................................
மகளிர் பக்கம் : மாதவிலக்கு...
 ................................................................
திருமுறை தல மகிமை - 7
 ................................................................
உலர்ந்த திராட்சை
 ................................................................
சுகம் தரும் சோம்பு
 ................................................................
தங்க 'புஷ்பம்' செம்பருத்தி
 ................................................................
தொல்லை தரும் ஒற்றைத் தலைவலி..
 ................................................................
அழகிய குறிப்புகள்...
 ................................................................
கொல்லிமலை ரகசியம்
 ................................................................
சித்தர்களை தெரிந்துகொள்வோம்
 ................................................................
வாய்வைக் கொன்றான்... வாழ்வை வென்றான்வே...
 ................................................................
அருமந்தமான அருகம்புல்
 ................................................................
நலமான குழந்தை...
 ................................................................
மூக்கு பொடியா...? போச்.... மூச்...
 ................................................................
புகை பெருகுது... பூமி திணறுது...
 ................................................................
கண்களைக் காக்கும் பொன்னாங்கண்ணி
 ................................................................
வர்மத்தின் சிறப்பு...
 ................................................................
01-12-2008

Untitled Documentகொல்லிமலை ரகசியம்

நிலவாகை - 21

             லைகளில்தான் மருத்துவக் குணம் நிறைந்த மூலிகைகள் கிடைக்கின்றன. அப்படிப்பட்ட மலைகளில் சீரான தட்ப வெப்பத்துடன் அதிக மூலிகைகளைத் தன்னகத்தே கொண்ட மலைதான் கொல்லிமலை.

ஒவ்வொரு இதழிலும் கொல்லிமலையில் உள்ள அபூர்வ மூலிகைகளைப் பற்றி அறிந்து வருகின்றோம். இந்த இதழில் நிலவாகை பற்றி அறிந்துகொள்வோம்.

இதனை நில ஆவாரை, நாட்டு நிலாவரை, ஆலகாலம், கமதாயம், தாளினி, ஆவரை, ஆவாகை, குயத்தினலகை என பல பெயர்களில் அழைக்கின்றனர்.

Tamil    : Nilavaagai

English    : Senna

Telugu    : Neela punna

Sanskrit    : Bhumiari

Malayalam    : Nilavaka

Botanical name : Cassia senna

இந்தியா முழுவதும் காணப்படும் நிலவாகை தென்னிந்தியாவில் திருநெல்வேலி மற்றும் கொல்லிமலைப் பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றது. இந்த நிலவாகையானது இந்தியாவின் மூலிகை ஏற்றுமதியில் கணிசமான பங்கு வகிக்கிறது.

இதனுடைய இலை அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.

மலச்சிக்கல் தீர

மலச்சிக்கலும், மனச் சிக்கலும் ஆதிநோய்கள் என்பதை அடிக்கடி சுட்டிக்காட்டி வருகிறோம். பொதுவாக மலச்சிக்கல் இருந்தால் மனச்சிக்கல் வரும். மனச் சிக்கல் இருந்தால் மலச்சிக்கல் கூடவே வரும். இப்படி மனச்சிக்கலும், மலச்சிக்கலும்தான் நோய்களின் வாசலாக உள்ளன. மலச்சிக்கலைத் தீர்ப்பது மிக அவசியம். நிலவாகை இலையை எடுத்து நிழலில் உலர்த்தி காயவைத்து பொடிசெய்து இரவு உணவுக்குப்பின் வெந்நீரிலோ, பாலிலோ கலந்து சாப்பிட்டு வந்தால் மலத்தை இளக்கி வெளியே தள்ளும். நாள்பட்ட மலத்தையும் வெளியேற்றும்.

குடல் சுத்தமாக

நாம் உண்ணும் உணவில் சில கிருமிகள் உட்சென்று குடல் பகுதியில் தங்கிவிடுகின்றன. இதனால் குடலில் உட்பகுதிகளில் உள்ள குடல் சுவர்கள் பாதிக்கப்பட்டு குடல் புண்களை ஏற்படுத்துகின்றது. இதனால் சீரண சக்தி குறைந்து உடல் வலுவிழக்கின்றது. இக்குறையை போக்க நிலவாகையிலையை காயவைத்து பொடி செய்து அதில் தேன் கலந்து காலையும், இரவும் உணவுக்குப் பின் அருந்தி வந்தால் குடல் சுத்தமாகும். மேலும் குடல் பூச்சிகளை நீக்கி குடல் சுவர்களை பலப்படுத்தி சீரண சக்தியைத் தூண்டும்.

கண் பார்வைக் கோளாறு நீங்க

பித்த அதிகரிப்பினால் சிலருக்கு கண் பார்வைக் கோளாறு ஏற்படுகின்றது. இந்தக் குறையைப் போக்க நிலவாகை இலையை நீரில் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினால் கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

மேக நோய்கள் குணமாக

மேக நோயானது மனித இனத்தையே ஆட்டிப் படைக்கின்றது. இந்த நோயின் தாக்குதலிலிருந்து விடுபட நிலவாகை கஷாயம் பயன்படுகிறது.

வாயுத் தொல்லைகள் நீங்க

நிலவாகையின் வேருடன் பிரப்பங்கிழங்கு, மிளகு, சுக்கு, காரையிலை இவற்றைச் சேர்த்து அரைத்துக் கொடுத்தால் வாயு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

சொறி சிரங்கு மாற

உடலில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தும் தோலின் வழியாகத்தான் தெரியவரும். இதனால் தோல் அலர்ஜி ஏற்பட்டு, சொறி, சிரங்கு ஏற்படுகிறது.

இதற்கு நிலவாகை இலையை எடுத்து அரைத்து சொறி, சிரங்கின் மீது தடவினால் சிரங்கு விரைவில் குணமாகும்.

அஜீரணக் கோளாறு நீங்க

நிலவாகை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் சேர்த்து குடித்து வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.

சிறுநீர் பெருக்கி

சிறுநீரகத்தின் செயலை அதிகப்படுத்தவும், நீர்ப்பெருக்கியாகவும் நிலவாகை பயன் படுகின்றது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :
கருத்துக்கள்(15)
Name : muthu kumar Date & Time : 12/16/2016 9:51:01 AM
-----------------------------------------------------------------------------------------------------
sigappu கத்தாழை (sengaththaalai) எங்களிடம் உள்ளது . வாங்க விருப்பம் உள்ளவர்கள் அழைக்கவும்..... தொடர்புக்கு குமார்-தாணிப்பாறை (வத்ராப்) ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் தொலைபேசி எண் 9488684968
-----------------------------------------------------------------------------------------------------
Name : ksridhar Date & Time : 6/18/2015 2:23:05 PM
-----------------------------------------------------------------------------------------------------
செங்கற்றாலை இன் மருத்துவகுணம் மற்றும் அதன் ரசவாத தன்மைகளை பற்றி விளக்கவும்.தலுதாலை mooligai பற்றியும் ,அதன் படங்கள்,விளையும் இடம் கூறவும்.தங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்கிறேன் நன்றி .
-----------------------------------------------------------------------------------------------------
Name : kravichandran Date & Time : 9/20/2014 10:00:46 AM
-----------------------------------------------------------------------------------------------------
All people should read and memorise this matter,they can use get good result (health good condition with out doctor
-----------------------------------------------------------------------------------------------------
Name : saravanan Date & Time : 4/25/2014 9:48:20 AM
-----------------------------------------------------------------------------------------------------
பல்வேறு விதமான நல்ல தகவல்களையும், பயனுறும் விதத்தில் நிலவாகை பற்றி கூறியதற்கு நன்றி- பொதட்டூர் சரவணன். - செல் :9498023330
-----------------------------------------------------------------------------------------------------
Name : karthik m Date & Time : 12/19/2013 5:39:12 PM
-----------------------------------------------------------------------------------------------------
வெரி இம்ப்ரெஸ் மீ .இ நீட் ஹேர் கிராத் டிப்ஸ் த்ரௌக் mooligai
-----------------------------------------------------------------------------------------------------
Name : bharathi Date & Time : 2/20/2013 5:32:08 PM
-----------------------------------------------------------------------------------------------------
இது போன்ற நல்ல பயனுள்ள தகவல் சொன்னதற்கு nandri
-----------------------------------------------------------------------------------------------------
Name : ravi Date & Time : 3/9/2012 12:33:54 PM
-----------------------------------------------------------------------------------------------------
ஹாய் நாலா எற்கு
-----------------------------------------------------------------------------------------------------
Name : PANDIAN G Date & Time : 12/10/2011 10:05:28 AM
-----------------------------------------------------------------------------------------------------
ayya

Name : shiva Date & Time : 8/1/2011 4:44:22 PM
-----------------------------------------------------------------------------------------------------
plz explain about sivanvere and jothigrass
-----------------------------------------------------------------------------------------------------
Name : Gopi Date & Time : 7/13/2011 3:42:44 PM
-----------------------------------------------------------------------------------------------------
I want to know about தி மூலிகை சிவப்பு கட்ற்றலை,please tell me where i get it
-----------------------------------------------------------------------------------------------------
Name : g.s.vijayakumar Date & Time : 11/3/2010 9:12:13 AM
-----------------------------------------------------------------------------------------------------
பைன் பட் ரகசம்பய papthippatkkavantum
-----------------------------------------------------------------------------------------------------
Name : senthil Date & Time : 5/31/2010 4:15:49 PM
-----------------------------------------------------------------------------------------------------
இட் இஸ் வெரி உசெபிஉல் டு மீ.இ மிஸ் டு ப்றேவிஸ் எடிதியன்.ப்ல்ழ்புப்ளிஷ் டு தி ப்றேவிஸ் எடிதியன்.அண்ட் இ ஹவே மச் இன்றேஸ்ட் டு க்நொவ் கொல்லிமலை.கொந்திநுஎ திஸ் மகஜினே சார்.தங்கஇங்க உ
-----------------------------------------------------------------------------------------------------
Name : kishore Date & Time : 5/25/2010 4:15:58 PM
-----------------------------------------------------------------------------------------------------
mountain

Name : kumaran Date & Time : 7/28/2009 6:04:53 PM
-----------------------------------------------------------------------------------------------------
your information about kollimalai mooligai is very fine.sir, i want to know about the sigappu katralai .pl inform
-----------------------------------------------------------------------------------------------------
Name : Anand Date & Time : 12/30/2008 8:23:42 PM
-----------------------------------------------------------------------------------------------------
அய்யா இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. கொல்லிமலை ரகசியம் தொடரின் பழைய பதிப்புகளை படிக்க வேண்டும். தயவு செய்து அதனை வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.