Add1
logo
29ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு || மோடி பிரதமர் என்ற ஈகோவினால் என் கடிதங்களுக்கு பதிலளிக்கவில்லை! - அண்ணா ஹசாரே || சாதிச்சுவரை இடிக்கக் கோரி போராடிய தலித்துகள், பத்திரிகையாளர்கள் கைது! || ‘பத்மாவத்’ படத்தை தடை செய்; இல்லையேல் சாகவிடு! - ராஜபுத் பெண்கள் பேரணி || பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சி.பி.எம். ஆர்ப்பாட்டம் || நடிகர்கள் எல்லாரும் முதல்வராகி விட முடியாது! - ஆர். வைத்திலிங்கம் எம்.பி பேச்சு || கடனைத் திருப்பித் தராததால் டிராக்டர் பறிமுதல்! - சக்கரத்தில் விழுந்து விவசாயி உயிரிழப்பு || பிப்ரவரி 03 இல் மதுக்கடை பூட்டுப் போடும் போராட்டம் - அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் || வங்கி காவலாளியை கட்டிப் போட்டு கொள்ளை முயற்சி. நகை தப்பியது! || பாகிஸ்தான் இந்தியாவுடனான பகையை இன்னும் மறக்கவில்லை! - மோகன் பாகவத் || கலாச்சார உடையில் கண்டன ஆர்ப்பாட்டம்! || ஒரு ரன்னில் உலகசாதனையை தவறவிட்ட நியூஸி பேட்ஸ்மேன்! || ஜெ., மரணம் குறித்த விசாரணையில் ஈபிஎஸ், ஓபிஎஸ்சை விசாரிக்காதது ஏன்? நாஞ்சில் சம்பத் ||
Logo
ஹெல்த்
கீரையோ... கீரை...
 ................................................................
யோகம் செய்யுங்கள் : லோலாசனம்
 ................................................................
பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன்...
 ................................................................
மகளிர் பக்கம் : மாதவிலக்கு...
 ................................................................
திருமுறை தல மகிமை - 7
 ................................................................
உலர்ந்த திராட்சை
 ................................................................
சுகம் தரும் சோம்பு
 ................................................................
தங்க 'புஷ்பம்' செம்பருத்தி
 ................................................................
தொல்லை தரும் ஒற்றைத் தலைவலி..
 ................................................................
அழகிய குறிப்புகள்...
 ................................................................
கொல்லிமலை ரகசியம்
 ................................................................
சித்தர்களை தெரிந்துகொள்வோம்
 ................................................................
வாய்வைக் கொன்றான்... வாழ்வை வென்றான்வே...
 ................................................................
அருமந்தமான அருகம்புல்
 ................................................................
நலமான குழந்தை...
 ................................................................
மூக்கு பொடியா...? போச்.... மூச்...
 ................................................................
புகை பெருகுது... பூமி திணறுது...
 ................................................................
கண்களைக் காக்கும் பொன்னாங்கண்ணி
 ................................................................
வர்மத்தின் சிறப்பு...
 ................................................................
01-12-2008

Untitled Documentமூக்கு பொடியா...? போச்.... மூச்...

      னித இனம் வியத்தகு வளர்ச்சியைக் கண்டு வந்தாலும் அதற்கு எதிர்மறையான கீழ்நோக்கு வளர்ச்சியும் சரிசமமாக உள்ளது.

ஆம்.. வேகமாக அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆக்கபூர்வமான வளர்ச்சி என்று ஒருபக்கமும், ஆரோக்கியத்தை அழிக்கும் செயல்கள் மற்றொரு பக்கமும் நடைபெறுகின்றன.

மனிதன் தன் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும் பழக்கங்களை பழங்காலம் முதலே கொண்டுள்ளான். அவை மது, புகை, போதைப் பொருள் என விரிந்துகொண்டே போகும்.

இத்தகைய பழக்கங்கள் ஆரம்பத்தில் ஆனந்தத்தையும், புத்துணர்வையும் கொடுப்பது போல் தோன்றும். பின் அவை நம்மை ஆட்கொண்டு அடிமைப்படுத்தி மீளாத் துயரத்தில் கொண்டுபோய் விட்டுவிடும்.

தீய பழக்கங்களால் ஏற்படும் தீமைகளை சித்தர்கள் முதல் ஞானிகள் வரை கூறிவந்துள்ளனர். ஆனாலும் இந்தப் பழக்கங்கள் அடியோடு மாறவில்லை. மாறாக வேகமாக வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

புகை நமக்கு பகை என்ற வாசகமும், பொது இடத்தில் புகைத்தால் அபராதம் என்ற சட்டமும் இவர்களை மாற்றவில்லை. இதுபோல் மூக்குப்பொடி, புகையிலை, பாக்கு போடுதல் போன்ற தீய பழங்கங்களைச் சிலர் கொண்டுள்ளனர். ஆனால் இந்த பொருட்களுக்கு மட்டும் இன்னும் தடைகள் பிறப்பிக்கப்படவில்லை.

பாக்கு, புகையிலை, புகை போன்றவை உபயோகிக்கும்போது மற்றவர்கள் எளிதில் கண்டு பிடித்துவிடலாம். ஆனால் மற்றவர்கள் அறிந்து கொள்ளா வண்ணம் உபயோகிக்கும் ஒரு பொருள்தான் மூக்குப்பொடி.

ஏதோ அந்தக் காலத்தில் பெரியவர்கள்தான் மூக்குப் பொடி போடுவார்கள் என்று நினைத்தால்... அதுதான் இல்லை...

இப்போது படித்த நவநாகரீக இளைஞர்களிடமும் இந்தப் பழக்கம் பரவியுள்ளது. மூக்குப்பொடி போடும் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி இந்த இதழில் விரிவாகப் பார்ப்போம்.

புகையிலையுடன் சுண்ணாம்பு சேர்த்து அரைக்கப் படுகிறது. புகையிலையுடன் சுண்ணாம்பு சேர்வதால் காரம் அதிகமாக இருக்குமாகையால் இவற்றில் நெய் சேர்க்கப்படுகிறது.

இந்தப் பொடியை கிராமத்தில் வயதானவர்கள் சிலர் டப்பாக்களில் நிரப்பி வைத்து உபயோகிப்பார்கள். தற்போது பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுகிறது.

இந்தப் பொடியை மூக்கின் வழியாக உறிஞ்சுவார்கள். அதன் காரத் தன்மையானது உடனே மூக்கில் உள்ள நீர்ப் பைகளை அடைகின்றது. வர்ம நூல்களில் இந்த நீர்ப்பைகளை கண்ணாடி வர்மப் பகுதி என்கிறார்கள். மூளைப் பகுதியிலுள்ள உணர்வு நரம்புகள் இந்த மூக்கு நீர்ப்பைகளோடு இணைந்துள்ளன. இதனால் உறிஞ்சும் பொடியானது உடனே நரம்புகள் வழியாக தலைக்கேறி ஒருவிதமான சிலிர்ப்புத் தன்மையை ஏற்படுத்துகின்றது.

இப்படியாக, நரம்புகள் தூண்டப்படுவதால் உடலின் அனைத்துப் பகுதிகளும் புத்துணர்வு ஏற்படுவதுபோல் ஒரு பிரம்மையை உண்டாக்குகின்றது. மேலும் மூக்கின் வழியாக சுவாசக் குழாய்க்குள் செல்லும் பொடியானது நுரையீரல் பைகளை அடைத்து அங்கு தங்கி விடுகின்றன. இதனால் பிராண வாயுவில் உள்ள ஆக்ஸிஜனை உள்வாங்குவதில் பாதிப்பு ஏற்படுவதுடன் இரத்தக் குழாய்களில் அடைப்பும் ஏற்படுகிறது. இதனால் இரத்த அழுத்த நோய் உண்டாகின்றது. மேலும் இரத்தப் புற்று நோய் வரவும் வாய்ப்புள்ளது.

சுவாசக் குழாய் மற்றும் நுரையீரல் பாதிக்கப்படுவதால் புண்கள் ஏற்பட்டு, அவை வளர்ந்து பரவி, தொண்டையிலும், நுரையீரலிலும் புற்றுநோயாக மாற வாய்ப்புள்ளது. மேலும் மூக்கின் நரம்புகள் வழியாக மேலே சென்று கத்திரிக்கோல் மார்க்கமாக வலது மூளையையும், இடது மூளையையும் அடைந்து மூளையைத் தாக்கி உணர்ச்சியைத் தூண்டுகிறது. இது தொடர்ச்சியாக நடைபெறும்போது மூளையானது இந்தப் பொடியின் தூண்டுதலுக்கு அடிமையாகிறது. இந்தப் பொடியை உறிஞ்சினால்தான் உடல் நரம்புகள் செயல்பட முடியும் என்ற நிலை உருவாகிறது.

சிலர் ஜலதோஷம் பிடித்திருந்தால் மூக்குப்பொடி உபயோகிப்பார்கள். தும்மலை வரவழைக்கவும் சிலர் உபயோகிப்பார்கள்.

எப்படி குடிப்பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு மனிதனை அடிமையாக்குமோ அதேபோல கொஞ்சம் கொஞ்சமாக அடிமையாக்கும் தன்மை மூக்குப் பொடிக்கும் உண்டு.

சிலர் பல்வலிக்கு மூக்குப்பொடியை பல் ஈறுகளின் மீது தடவுவார்கள். இதனால் பல் ஈறு பகுதிகள் மரத்துப் போவதால் வலி குறைவதுபோல் தோன்றும். ஆனால் இந்தப் பொடியானது உமிழ்நீருடன் சேர்ந்து தொண்டை வழியாக வயிற்றுக்குள் செல்கிறது. இதனால் அஜீரணக் கோளாறு, வாய்ப்புண், வயிற்றுப்புண் போன்றவை ஏற்படுகிறது.

இவ்வளவு பாதிப்புள்ள மூக்குப் பொடியை தவிர்ப்பது நல்லது. மேலும் இதைப் பயன் படுத்துபவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்தப் பழக்கத்திலிருந்து விடுபட வைக்கவேண்டும்.

புகைப்பழக்கமும், மூக்குப்பொடி போடும் பழக்கம் உள்ளவர்கள் புற்றுநோயாலும், பக்கவாதத்தாலும் பாதிக்கப்பட்டதை நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம்.

மனித இயக்கத்திற்கு மூளை தேவை... அந்த மூளையை பாதிக்கும் மூக்குப்பொடி தேவையா...?

சிந்திப்பீர்...

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :
கருத்துக்கள்(1)
Name : annasankar Date & Time : 11/7/2013 6:53:01 PM
-----------------------------------------------------------------------------------------------------
மிக பயனுள்ள பகுதி. எனக்கும் இந்தப் பழக்கம் உள்ள்ளது . விடவே முடியவில்ல்லை . முயற்சிக்கிறேன் மிக்கக நன்றி | வாழ்க நக்கீரன்
-----------------------------------------------------------------------------------------------------