Add1
logo
நீட் நெருங்குகிறது, பயிற்சி மையம் இல்லை: அரசு பள்ளி மாணவர் கனவு கலைகிறது! அன்புமணி || பஸ் கட்டணம் உயர்வு... வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள் || 2வது நாளாக நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை || விபத்தில் 3 இளைஞர்கள் பலி: சோகத்தில் மூழ்கிய கிராமம் || மீத்தேன் ஆய்வுப் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள் || அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த பாராளுமன்ற நிலைக்குழுவினர் || கொள்ளையடிக்க நினைக்கிறார்கள்: தமிழக அரசுக்கு என்.ஆர்.தனபாலன் கண்டனம் || வாக்கு சேகரிக்கும் போராட்டம் || மாட்டு வண்டியில் ஏறி போராட்டம் || சரத்பிரபு மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும்: ஜான்சிராணி || கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் தேவை! ராமதாஸ் || கருத்து வேறுபாடு இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன் || கருவறையில் புகுந்து அம்மன் தாலியைத் திருடிய கில்லாடிப் பெண் ||
Logo
இனிய உதயம்
செகண்ட் ஹேண்ட்
 ................................................................
ஒரு சிறைக் கைதியின் புகைப்படம்
 ................................................................
டைகர் - வைக்கம் முஹம்மது பஷீர்
 ................................................................
தகர - பி பத்மராஜன்
 ................................................................
மொழி பெயர்ப்பாளரின் முன்னுரை
 ................................................................
நான் புரட்டிப் பார்க்க ஆசைப்பட்ட...
 ................................................................
சேலத்தில் என் சமூகப் பணியை...
 ................................................................
பெங்குவின் பதிப்பகம்...
 ................................................................
புகழேந்தி கோடுகளில் ...
 ................................................................
01-06-2010

பெங்குவின் பதிப்பகம் ஆங்கிலத்தில்
வெளியிட்ட இரண்டாவது தமிழ் நூல்!

                       தேன்மதுரத் தமிழ் இலக் கியங்கள் உலகமெலாம் பரவ வகை செய்யும் விதத்தில், தமிழின் பண்டைய இலக்கியமான சங்க இலக்கியக் கருவூலங்களை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது பெங்குவின் நிறுவனம். 'Love Stands Alone' எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த நூலின் அறிமுகக் கூட்டம், சென்னையில் நூற்றாண்டு பல்கலைக்கழக பவளவிழா அரங்கில் நடந்தது.

கூட்டத்துக்கு தலைமை வகித்த செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பொறுப்பு அலுவலர் க. இராமசாமி பேசும் போது, ""பெங்குவின் நிறுவனம் தமிழ் இலக்கியத்தில் இதுவரை திருக்குறளை மட்டுமே ஆங்கி லத்தில் வெளியிட்டுள்ளது. அதன்பிறகு தற்போது சங்க இலக்கியப் பாடல்களை ஆங்கி லத்தில் வெளியிட்டு, சங்கப் பாடல்களை உலகறியச் செய் துள்ளனர். மொழிபெயர்ப்பாளர் ம. இலெ. தங்கப்பா கடந்த நாற்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து பல படைப்புகளை ஆங்கிலத்தில் தந்து உலகறியச் செய்துள்ளார். தனித்தமிழ்- பகுத்தறிவுக் கொள்கைகளை கடந்த 60 ஆண்டுகாலமாகக் கடைப்பிடித்து வருபவர் இவர் ஒருவரே எனலாம்'' என்றார்.

இயற்கை ஆர்வலரும் படைப் பாளியுமான தங்கப்பா தமிழ்- ஆங்கிலம் இரண்டிலும் புலமை மிக்கவர். தங்கப்பாவின் ஆங்கில மொழிபெயர்ப்பு நடையை- ஆங்கிலம் மட்டுமே அறிந்த ஆங்கில இலக்கியத்தில் புலமை கண்டவர்கள் வியந்து பாராட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.நூலின் எடிட்டரும் பேராசிரியருமான ஆ. இரா. வேங்கடாசலபதி பேசும்போது, ""ஒவ்வொரு தலைமுறையும் நம் தமிழ் இலக்கியங்களை அறிய இதுபோன்ற முயற்சிகள் தேவை. தமிழ் இலக்கியப் படைப்பு களை ஆங்கில உலகுக்குத் தந்த ஏ.கே. ராமானுஜத்திற்குப் பிறகு அத்தகைய பணியை மிகச் சிறப்பாகச் செய்து வருபவர் என்று தங்கப்பாவை மட்டுமே சொல்லலாம். இது இருபது ஆண்டு கால முயற்சி. பல ஆய்வுக் கூட்டங்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்கை யில், ஆங்கிலப் பேராசிரியர்கள் பலரிடம் காட்டி செம்மைப் படுத்தி உருவானது இந்த நூல்'' என்றார்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆய்வறி ஞர் மருதநாயகம் கூறுகையில், ""20, 21-ஆம் நூற்றாண்டு கவிதை வரலாற்றில்- மரபுக் கவிதை வரலாற்றில் முதலில் பாரதி, அடுத்து பாரதிதாசன்... அவர் களைத் தொடர்ந்தே அதன் தாக்கத்தால் பலர் கவிதை படைத்தனர். ஆனால் தங்கப்பா தனக்கென தனி நடையை- தெளிதமிழில் எழுதி தனி முத்திரை பதித்தவர்.

பாரதிதாசனின் மாணாக் கராக இருந்தாலும் அவரிடமி ருந்து வேறுபட்டு புனை வியலில் செவ்வியல் மரபை தனது படைப்புகளில் படைத்து தனித்துவம் பெற்றவர். பிற மொழிக் கலப்பில்லாமல் கவிதை உலகிலும் உரைநடை உலகிலும் படைப்புகளைத் தந்தவர்'' என்றார்.

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் து.இரவிக்குமார் குறிப்பிடும் போது, ""ஆங்கிலம் மட்டுமே அறிந்த அறிஞர்கள் நிறைந்த கூட்டமாக இத்தகைய கூட்டம் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் தமிழின் மேன்மையை- தமிழ் இலக் கியத்தின் கூறுகளை- அழகி

யலை- பண்டைய பெருமையை அவர்கள் அறிந்து வியந் தோது வர். அதுபோன்ற ஒரு நிகழ் வினை பல்கலைக் கழகங் களும் அரசும் செய்ய வேண்டும்.

தங்கப்பா எங்கள் ஊர்க் காரர். இதுவரை அவரின் புன்சிரிப்பையும் வணக்கத்தை யும் மட்டுமே அவரிடமிருந்து பெற்றேன். ஒரு ஆற்றல் வாய்ந்த சிந்தனையாளரைத் தவற விட்டு விட்டோமோ என்ற வருத்தம் உண்டாகிறது. தமிழின் பெருமையை உலகறி யச் செய்த தங்கப்பா நம்பிக் கைக் கீற்றை விதைத்திருக் கிறார். சித்தர் பாடல்களை இவரது ஆங்கில மொழியாக் கத்தில் வெளியிட உள்ளோம் என்றார்.

ஏற்புரை வழங்கிய தங்கப்பா, ""நாற்பது ஆண்டு காலமாக இத்தகைய பணி யைச் செய்தாலும், இதற்கு உந்துசக்தியாக இருந்தவர் த. கோவேந்தன். அவர் இன்றிருந்தால் இந்த நிகழ்வி னைக் கண்டு பெரும்

மகிழ்ச்சி அடைந்திருப்பார். இருபது ஆண்டுகளுக்கு முன்பே அவர் "உனது இந்த படைப்புகளை "பெங்குவின்' வெளியிடும்' என்றார். அதனை அவரது மாணவ ரான வேங்கடாசலபதி நிறைவேற்றி விட்டார். பல் வேறு பணிகளுக்கிடையே இத்தகைய பணியையும் தொடர்ந்து செய்து கொண்டிருப்பேன்'' என்றார்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆய்வறி ஞர் முனைவர் ந. அரணமுறு வல் நன்றி கூறினார்.

-எழில்முத்து

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :