Add1
logo
’’ உணவு இல்லாத டிபன் பாக்ஸ் கொண்டு வரும் மாணவர்’’- சார் சாட்சியர் சரயு உருக்கமான பேச்சு || அரசு அதிகாரிகளுக்கு புதுவை முதல்வர் நாராயணசாமி விடுத்த எச்சரிக்கை! || புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத்! || பா.வளர்மதிக்கு பெரியார் விருது! கி.வீரமணி கருத்து || மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு வைகோ கண்டனம் || பேராவூரணியில் அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த 14 மாட்டு வண்டிகள் பறிமுதல் || மக்கள் வயிற்றில் அடிக்காதே! அதிமுக அரசை கண்டித்து DYFI ஆர்ப்பாட்டம் || வைரமுத்துவுக்கு விஜயகாந்த் கண்டனம்! || இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி || எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். சிறைக்கு செல்வார்: செந்தில் பாலாஜி பேட்டி || அம்மன் கழுத்தில் உள்ள வெள்ளி தாலியை பட்டப்பகலில் பறித்த பெண் கைது || முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 153 பேர் நீக்கம்: ஓ.பி.எஸ்-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு || தி.மு.க. நடத்தும் போராட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்கும்: வைகோ ||
Logo
ஹெல்த்
சுரக்காயச்சல்
 ................................................................
இனிப்பு...
 ................................................................
அல்லி பூ
 ................................................................
பாட்டி வைத்தியம்
 ................................................................
பழங்கள் - நட்சத்திர பழம்
 ................................................................
ரத்த வித்திக்கு... எள்
 ................................................................
முகத்தில் முகம் பார்க்கலாம்
 ................................................................
பின்னோக்கி நடை...
 ................................................................
நில்... கவனி...
 ................................................................
மனித நேயம்...?
 ................................................................
இம்மாத மூலிகை - ஆடு தீண்டாப் பாளை
 ................................................................
பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன்...
 ................................................................
திண்ணை கிளினிக்
 ................................................................
தெரிந்து கொள்ளுங்கள்
 ................................................................
உடலெனும் பிரபஞ்சம்
 ................................................................
மூலிகை சமையல்
 ................................................................
வர்மத்தின் மர்மங்கள்
 ................................................................
01-11-2009

Untitled Documentஇம்மாத மூலிகை
ஆடு தீண்டாப் பாளை
                    டந்த இதழில் நீர்முள்ளியின் மருத்துவக் குணங்கள் பற்றி தெரிந்துகொண்டோம். இந்த இதழில் ஆடு தீண்டாப் பாளையின் மருத்துவக் குணங்கள் பற்றி தெரிந்துகொள்வோம்.

ஆடுதீண்டாப் பாளை பூண்டு இனத்தைச் சேர்ந்தது. இது தென்னிந்தியாவில் திருவாங்கூரிலும், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, பர்மா போன்ற நாடுகளிலும், இலங்கையிலும் அதிகம் காணப் படுன்றது.

இதனை ஆடுதின்னாப்பாளை, ஆடுதொடாப் பாளை, பங்கம்பாளை என பல பெயர்களில் அழைக்கின்றனர்.

Tamil - Adu thinna palai

English - Bracteated birth wort

Sanskri - Dhuma patra

Malayalam - Aadu tinlappala

Telugu - Gadug gudupa

Botanical Name - Aristolochia bracteata

கிரந்திகரப் பன்வெக்கை கேசநலி மாந்தை

யரந்தை வினையை யறுக்கும்துறந்து

பிரியொணா நோய்களையும் பின்முன்பா ராமல்

மறியுணா மூலியடை வாய்

(தேரையன் வெண்பா)

ஆடுதொடாப் பாளைக் ககக்கிருமி வன்சிலந்தி

நீடுகருங் குட்டம் நிறைகரப்பான்ஆடிடச் செய்

எண்பது வாய்வும் இகல்குட்ட முந்தீரும்

திண்பெருநற் றாதுவுமாஞ் செப்பு

(அகத்தியர் குணபாடம்)

உடல் வலுப்பெற

உடல் உழைப்பு குறைந்து போனதாலும், இயற்கையான ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவுகளை உண்பதாலும் இன்று பலருக்கும் உடல் வலு குறைந்து வருகிறது. இவர்கள் சிறிது கடினமான வேலையை செய்தாலும் உடனே சோர்ந்துவிடுவார்கள்.

இவர்கள் ஆடுதீண்டாப் பாளை இலையை காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும்.

வயிற்றுப் பூச்சிகள் நீங்க

வயிற்றுப் பூச்சிகள் உடலில் பல தொந்தரவுகளை உண்டுபண்ணுகின்றன. இவற்றால் வயிற்றில் புண்கள் உருவாகின்றன. சிறு குழந்தைகள் இந்த வயிற்றுப் பூச்சியினால் அடிக்கடி வாந்தி பேதிக்கு ஆளாக நேரிடுகிறது.

இவர்களுக்கு ஆடுதீண்டாப் பாளையை நிழலில் உலர்த்தி நன்றாக பொடி செய்து 1 ஸ்பூன் அளவு எடுத்து அதில் தேன் கலந்து கொடுத்து வந்தால் வயிற்றுப் பூச்சிகள் விரைவில் நீங்கும்.

நீர்மலம் நீங்க

மலமானது நீராக வெளியேறுவதால் உடலில் பல நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டாகிறது. இந்த நீர் மலம் நீங்க ஆடுதீண்டாப் பாளை இலைகளை உலர்த்தி கஷாயம் செய்து அருந்தி வருவது நல்லது.

பூச்சி கடிகளுக்கு

சில சமயங்களில் வண்டுகள், பூச்சிகள் கடிப்பதால் விஷமுண்டாகி சருமத்தில் தடிப்பு, கொப்புளம் போன்று உண்டாகும்.

இதற்கு ஆடுதீண்டாப்பாளை இலைகளை எடுத்து அரைத்து பூச்சி கடித்த இடத்தில் பற்று போட்டால் விஷம் முறியும். தடிப்புகள் மேலும் சருமத்தில் பரவாமல் தடுக்கும்.

கரும்படை கரப்பான் நீங்க

ஆடுதீண்டாப் பாளை இலைகளை அரைத்து தோலில் ஏற்படும் கரும்படை கரப்பான் இருக்கும் இடங்களில் பூசி வந்தால் விரைவில் குணமாகும்.

தலைமுடி உதிர்வதைத் தடுக்க

தலையில் முடி கொட்டுகிறது என்ற கவலை உள்ளவர்கள் ஆடுதீண்டாப் பாளை இலைகளை எடுத்து நிழலில் உலர்த்தி பொடியாக்கி சீயக்காய் தூளுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி கொட்டுவது உடனே நிற்கும்.

பெண்களுக்கு

சில பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் உண்டாகும் சூதக வலி, வயிற்று வலி, ஓழுங்கற்ற இரத்தப் போக்கு போன்றவற்றால் பெரிதும் அவதியுறுவார்கள். இவர்கள் ஆடு தீண்டாப் பாளை இலைகளை கஷாயம் செய்து அருந்தி வந்தால் மேற்கண்ட பாதிப்புகளிலிருந்து எளிதில் விடுபடலாம்.

மேலும் ஆடுதீண்டாப் பாளை விதைகளை எடுத்து அரைத்து வெந்நீரில் கலந்து கர்ப்பிணிப் பெண்களுக்குக் கொடுத்தால் பிரசவ நேரத்தில் உண்டாகும் வேதனை குறையும்.

இத்தகைய மருத்துவக் குணம் கொண்ட ஆடுதீண்டாப் பாளையை பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :
கருத்துக்கள்(17)
Name : Sunil Date & Time : 10/2/2016 10:07:53 AM
-----------------------------------------------------------------------------------------------------
Enaku intha muligai venum ankayavathu iruntha call panuga,ph no:9442512360
-----------------------------------------------------------------------------------------------------
Name : sathuragirikumar Date & Time : 6/10/2016 10:50:12 AM
-----------------------------------------------------------------------------------------------------
வெரி super

Name : jayachandran Date & Time : 3/14/2016 8:46:51 AM
-----------------------------------------------------------------------------------------------------
எது எங்கு இருக்கு சொல்லுகள் ப்ளீஸ். எனக்கு முடி கொஇட்டுது
-----------------------------------------------------------------------------------------------------
Name : nagaraj Date & Time : 10/28/2015 6:22:05 PM
-----------------------------------------------------------------------------------------------------
எங்கு கிdhiக்கும எனக்கு வேணும் 9789026449
-----------------------------------------------------------------------------------------------------
Name : kumar Date & Time : 10/17/2015 10:47:22 AM
-----------------------------------------------------------------------------------------------------
அய்யா தங்களின் தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இது போல் பல தகவல்கலை தொடர்ந்து வெளி இடவும். நன்றி. வே.குமார்.
-----------------------------------------------------------------------------------------------------
Name : duraikumar Date & Time : 8/30/2014 8:48:45 AM
-----------------------------------------------------------------------------------------------------
இந்த மூலிகை செடி என்கே கிடைக்கும்
-----------------------------------------------------------------------------------------------------
Name : swaminathan Date & Time : 6/6/2014 12:55:27 PM
-----------------------------------------------------------------------------------------------------
good article & very much useful. tq
-----------------------------------------------------------------------------------------------------
Name : veera nas Date & Time : 1/19/2014 9:52:53 PM
-----------------------------------------------------------------------------------------------------
ரெய்லி OK THANK U
-----------------------------------------------------------------------------------------------------
Name : chevlr Date & Time : 12/2/2013 5:50:17 PM
-----------------------------------------------------------------------------------------------------
ஹலோ

Name : reenakumari Date & Time : 9/29/2013 9:34:16 AM
-----------------------------------------------------------------------------------------------------
இம்மாத மூலிகை ஆடு தீண்டாப் பாளை கடந்த இதழில் நீர்முள்ளியின் மருத்துவக் குணங்கள் பற்றி தெரிந்துகொண்டோம். இந்த இதழில் ஆடு தீண்டாப் பாளையின் மருத்துவக் குணங்கள் பற்றி தெரிந்துகொள்வோம். ஆடுதீண்டாப் பாளை பூண்டு இனத்தைச் சேர்ந்தது. இது தென்னிந்தியாவில் திருவாங்கூரிலும், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, பர்மா போன்ற நாடுகளிலும், இலங்கையிலும் அதிகம் காணப் படுன்றது. இதனை ஆடுதின்னாப்பாளை, ஆடுதொடாப் பாளை, பங்கம்பாளை என பல பெயர்களில் அழைக்கின்றனர். Tamil - Adu thinna palai English - Bracteated birth wort Sanskri - Dhuma patra Malayalam - Aadu tinlappala Telugu - Gadug gudupa Botanical Name - Aristolochia bracteata கிரந்திகரப் பன்வெக்கை கேசநலி மாந்தை யரந்தை வினையை யறுக்கும்துறந்து பிரியொணா நோய்களையும் பின்முன்பா ராமல் மறியுணா மூலியடை வாய் (தேரையன் வெண்பா) ஆடுதொடாப் பாளைக் ககக்கிருமி வன்சிலந்தி நீடுகருங் குட்டம் நிறைகரப்பான்ஆடிடச் செய் எண்பது வாய்வும் இகல்குட்ட முந்தீரும் திண்பெருநற் றாதுவுமாஞ் செப்பு (அகத்தியர் குண
-----------------------------------------------------------------------------------------------------
Name : ISHWARYA Date & Time : 9/13/2013 10:21:53 AM
-----------------------------------------------------------------------------------------------------
Really useful information for us.Thanks a lot
-----------------------------------------------------------------------------------------------------
Name : Ayyasami Date & Time : 3/20/2013 4:20:57 PM
-----------------------------------------------------------------------------------------------------
Yenakku migayum use fulla irunthathu
-----------------------------------------------------------------------------------------------------
Name : srajee Date & Time : 10/19/2011 8:22:10 AM
-----------------------------------------------------------------------------------------------------
ரத்தத்துடன் சளி வந்தால் ஆடுதீண்டாப் பாளை பவுடர் 1 தேக்கரண்டி தேன் 2தேக்கரண்டி எடுத்து தொடர்ந்து மூன்று வேளைக்கு மூன்று நாள் சாப்பிட்டால் நல்ல குணம் தெரியும்
-----------------------------------------------------------------------------------------------------
Name : Chitra Shankar Date & Time : 4/5/2011 10:05:31 AM
-----------------------------------------------------------------------------------------------------
thank u sir/madam. this information is very helpful to me.i need this. where it is available.
-----------------------------------------------------------------------------------------------------
Name : geethag Date & Time : 2/3/2011 5:07:36 PM
-----------------------------------------------------------------------------------------------------
வணக்கம், மாதவிடாய் காலத்தில் வலி தாங்கமுடியாமல் நான் மாதிரைகளைதான் சாப்பிட்டு வருகிறேன். இதற்கு ஒரு தீர்வாக இம்மூளிகையை சொல்லிருக்கிரீர்கள். நன்றி.
-----------------------------------------------------------------------------------------------------
Name : vj Date & Time : 11/16/2009 10:16:39 AM
-----------------------------------------------------------------------------------------------------
i want simple tretement for psoris
-----------------------------------------------------------------------------------------------------
Name : venkat Date & Time : 11/3/2009 10:13:37 AM
-----------------------------------------------------------------------------------------------------
ஆரோகியமான பதிவு