Add1
logo
7 தமிழர்களை விடுதலை செய்யும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது: ராமதாஸ் || பேருந்து கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்: பழனிசாமிக்கு ஸ்டாலின் கடிதம் || இடையில் மூன்று நாட்களில் என்ன நடந்தது? கி.வீரமணி கேள்வி || கல்லூரி மாணவ மாணவிகள் சாலை மறியல் || சிபிஐஎம் மாநிலக்குழு கூட்டம் || உங்களுக்காக காத்திருக்கிறேன்! உடன்பிறப்புகளுக்கு ஸ்டாலின் கடிதம்! || நல்ல பஸ் எப்ப விடுவீங்க... ஆட்சியரிடம் மனு கொடுத்த இளைஞர் || நீட் நெருங்குகிறது, பயிற்சி மையம் இல்லை: அரசு பள்ளி மாணவர் கனவு கலைகிறது! அன்புமணி || பஸ் கட்டணம் உயர்வு... வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள் || 2வது நாளாக நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை || விபத்தில் 3 இளைஞர்கள் பலி: சோகத்தில் மூழ்கிய கிராமம் || மீத்தேன் ஆய்வுப் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள் || அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த பாராளுமன்ற நிலைக்குழுவினர் ||
Logo
ஹெல்த்
பாட்டி வைத்தியம்
 ................................................................
கண்ணைக் காக்கும் செண்பகம்...
 ................................................................
துவர்ப்பு சுவை
 ................................................................
கைக்குத்தல் அரிசி
 ................................................................
அழகு + ஆரோக்கியம்
 ................................................................
சூரிய நமஸ்காரம்
 ................................................................
பழங்கள் - பேரிக்காய்...
 ................................................................
நம்ம மண்ணு... - கொள்ளு
 ................................................................
மலைவளம் - குற்றாலம்
 ................................................................
பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன்...
 ................................................................
மூலம் எதனால வருது...
 ................................................................
இம்மாத... மூலிகை நில வேம்பு
 ................................................................
தேவையில்லை தாழ்வு மனப்பான்மை
 ................................................................
உடலெனும் பிரபஞ்சம்
 ................................................................
பன்றிக் காய்ச்சல்...? பதற்றம் வேண்டாம்...
 ................................................................
மூலிகை சமையல் - குறிஞ்சான் கீரை
 ................................................................
வர்மத்தின் மர்மங்கள்
 ................................................................
01-09-2009

Untitled Documentமலைவளம் - குற்றாலம்

                 மேற்கு தொடர்ச்சி மலைகளின் அற்புதங்களையும், அங்கு பரந்து விரிந்து கிடக்கும் மருத்துவ மூலிகைகளைப் பற்றியும் ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம்.

கடந்த இதழில் பொதிகை மலையில் அமைந்துள்ள மூலிகைகளைப் பற்றி அறிந்துகொண்டோம். அதன் தொடர்ச்சியாக பொதிகை மலையில் ஒரு பகுதியான குற்றால மலையையும் அங்கு காணப்படும் மூலிகைகளையும் பற்றி விரிவாக அறிவோம்.

குற்றால மலையைப் பற்றி தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்க மாட்டார்கள். எழில் கொஞ்சும் அருவி கொண்ட மலை தான் குற்றாலம். இந்த குற்றால மலை தெய்வீக தன்மை கொண்ட மலையாக கருதப்படுகிறது. புராணங்களில் இந்த குற்றால மலையின் சிறப்புகள் பற்றி கூறப்பட்டுள்ளது.

வெள்ளி உருகி கொட்டுவதுபோன்ற அருவியும்... அதன் சில்லென்ற சாரலும்... வானுயர்ந்த மரங்களும், பொதிகைத் தென்றலும், வெண்மேகங்கள் அந்த பசுமை கொஞ்சும் மலையைத் தழுவிச் செல்லும் காட்சியும் சாதாரண மனிதர்களைக் கூட கவிஞனாக்கிவிடும்.

நடராஜ தரிசனம் தந்த ஐந்து சபைகளுள் சித்திர சபை அமைந்துள்ளது. பாண்டிய, சோழ மன்னர்களால் கட்டப்பட்ட மாபெரும் திருக்கோவிலும் அமைந்துள்ளது. இங்கு வீற்றிருக்கும் இறைவன் குற்றாலநாதர் ஆவார்.

கடவுள் படைத்த இயற்கை என்னும் அற்புதங்களை காண வேண்டுமானால் ஒருமுறை குற்றாலம் சென்று வந்தால் புரியும்.

குற்றால மலையின் சிறப்பைப் பற்றி குற்றாலக் குறவஞ்சி என்னும் நூலில்

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்

மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்

கானவர்கள் விழியெறிந்து வானவரை யழைப்பார்

கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்

தேனருவித் திரையெழும்பி வானின்வழி யொழுகும்

செங்கதிரோன் பரிக்காலுந்த தேர்க்காலும் வழுகும்

கூனலிளம் பிறைமுடித்த வேணியலங் காரர்

குற்றாலத் திரிகூட மலையெங்கள் மலையே

என குற்றால மலையின் சிறப்புகளை திரிகூட ராசப்பக் கவிராயர் பாடியுள்ளார்.

குற்றால மலையில் உள்ள மூலிகைகள் பலவற்றை கடந்து வரும் அருவிகளில் குளிப்பவர்களுக்கு பல நோய்கள் தீருகின்றன.

இங்கு அமைந்துள்ள பேரருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி, ஐந்தருவி, புலி அருவி, பழைய அருவி, புது அருவி, பழத்தோட்ட அருவி, தேன் அருவி என ஒன்பது அருவிகள் உள்ளன. இந்த மலைப்பகுதியில் ஏராளமான விலங்குகள் உயிர்வாழ்கின்றன. இங்கு பல அபூர்வ வகை மூலிகைகள் நிறைந்துள்ளன.

குற்றால மலையில் வனத்துறைக்கு சொந்தமான பகுதியில் பழத்தோட்டம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு பலவகையான பழமரங்கள் உள்ளன பழத்தோட்ட அருவியும் இங்குதான் அமைந்துள்ளது. குற்றால மலையின் அழகை ரசிக்க உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். வருடத்தில் ஜூன் மாதம் முதல் தொடர்ந்து 6 மாதங்கள் வரை 9 அருவிகளிலும் தண்ணீர் கொட்டும். குற்றால மலையில் அமைந்துள்ள மூலிகைகளை தழுவி வரும் இந்த அருவி நீரில் மனநிலை சரியில்லாதவர்களை குளிக்க வைத்தால் நோயின் தன்மை குறைவதாகக் கூறுகின்றனர்.

அருவிநீர் மேகம் அகற்றும் கபத்தை

வருவிக்கும் ரத்தபித்த மாற்றம்பெருமிதமாம்

வேலை யுலகின் மிகுந்தபலம் உண்டாக்கும்

காலை மலர்முகத்தாய் காண்

தாம்பிரபன் னிப்புனலாற் சர்வசுரம் பித்துவிழித்

தூம்பிரமுட் காய்ச்சல் சுவாசநோய்தேம்பிமிகக்

கக்குகய மென்புருக்கி கைகாலெரிவுடனே

மிக்குறுதா கங்களும்போம் விள்

பதார்த்த குண சிந்தாமணி

குற்றால அருவியில் குளித்து வந்தால் ரத்தத்தில் பித்த அதிகரிப்பை குறைக்கும். தேகபலத்தைக் கொடுக்கும். சரும நோய்களைக் குணப்படுத்தும். பித்த தோஷத்தைப் போக்கும் என்கின்றனர் சித்தர்கள்.

இங்கு திரிப்பச்சை

மலைச்சுண்டை கருடன் கிழங்கு

செண்பகம் கிரேகைப் பச்சிலை

வெள்ளை கலியாண முருங்கை

சாம்பிராணி தொட்டாச் சுருங்கி

மான் செவிக்கள்ளி கொடிக்கள்ளி

நண்டுக்குத்தி ஐவிரலி

நறுவிலி வீரம்

மா பலா

தேக்கு சந்தனம்

மயிலாடி ஜோதிப் புல்

மலை பேய் மிரட்டி ஆணைவணங்கி

காட்டுச் சேனை குங்கிலியம்

காசித்தும்பை தப்பைச் செடி

சிவப்பு கற்றாழை காட்டு எலுமிச்சை

கற்பூரவில்வம் சித்தரத்தை

நாகமல்லி மலை ஆலன்

ஜாதிக்காய் திப்பிலி

சிறுகுறிஞ்சான் தூங்குமூஞ்சிமரம்

கடுக்காய் மரம் கருந்துளசி

திருநீற்றுப் பச்சிலை கஸ்தூரி வெண்டை

கிச்சிலிக் கிழங்கு சர்ப்பகந்தி

மாவிலங்கம் செந்நாயுருவி

தழுதாழை

குற்றால மலையில் உள்ள மூலிகையின் மருத்துவக் குணங்களைப் பற்றி வரும் இதழில் காண்போம்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :
கருத்துக்கள்(1)
Name : Shivani.R Date & Time : 4/25/2013 10:11:40 AM
-----------------------------------------------------------------------------------------------------
miga miga arumai
-----------------------------------------------------------------------------------------------------