Add1
logo
இன்றைய (17.1.2018)டாப்-10 நிகழ்வுகள்! || பெரியபாண்டியனை நான் சுடவில்லை: நாதுராம் வாக்குமூலம் || ஹஜ் மானியம் ரத்து செய்து இருப்பது மத ஒற்றுமை, சனநாயக விரோத செயல் - நாராயணசாமி || ஜெ. உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது 4 அமைச்சர்கள் அதிக அளவில் சொத்து சேர்த்துள்ளனர் : தினகரன் || எம்.ஜி.ஆர். பட துவக்க விழாவில் ரஜினி - கமல்! (படங்கள்) || தமிழக மாணவர்கள் வடமாநிலங்களில் கொலை செய்யப்படுவதா?கி.வீரமணி கண்டனம் || போயஸ் தோட்ட இல்ல ஆய்வு நிறைவு!(படங்கள்) || மதுராந்தகம் அருகே சாலை விபத்து ஒருவர் பலி || வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்த ராமதாசுக்கு துறவியர் சங்கத்தினர் பாராட்டு! || ஹஜ் மானியம் ரத்து பாஜகவின் முஸ்லிம் வெறுப்பையே காட்டுகிறது! - வி.சி.க. கண்டனம் || ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே உயிரிழந்துவிட்டார்! - பரபரப்பு கிளப்பும் திவாகரன் || குறுகிய பாலத்தால் தொடர் விபத்து! - 50 உயிர்களைக் குடித்த பரிதாபம்!! || போக்குவரத்துத் தொழிலாளர்களைப் பழிவாங்கும் அரசு! - விஜயகாந்த் கண்டனம் ||
Logo
இனிய உதயம்
சொல்ல மறக்காத கதை!
 ................................................................
நாகேஷ் எனும் மகா கலைஞன்!
 ................................................................
பாரதி காவியம்
 ................................................................
தமிழ் இலக்கியத்தில் தேவதாசிகள்
 ................................................................
தேவதேவனுக்கு கவிக்கோ விருது!
 ................................................................
குறுந்தொடர்
 ................................................................
மாணவர் கவிதைப் போட்டி - 3
 ................................................................
01-12-2017
நான் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியிலும், அதற்கு முன்னர் திருப்பூர் எல்.ஆர்.ஜி. நாயுடு மகளிர் கல்லூரியிலும் பணியாற்றினேன்.

அப்போது பி.எச்.டி படித்தால் மூன்று ஆண்டு ஊதிய உயர்வும், ஆய்வில் நிறைஞர் (எம்.பில்.) படித்தால் ஓர் ஆண்டு ஊதியமும் தரப்படும் என்ற அரசு வசதி எதுவும் இல்லை. துணைவர் வி. மாணிக்கம் சிறந்த கல்வியாளர். வரலாற்று ஆய்வாளர். நாங்கள் திருப்பூர் கல்லூரியில் பணியாற்றியபோது அவர் பி.எச்.டி. படித்தார். அவர் முடித்த பின்பு நானும் ஆய்வுத் தேடலுக்காகவே பி.எச்.டி. செய்தேன். (மகளிர் படைப்புகள்) என்ற பெரிய தலைப்பில் 1987 வரையிலான அனைத்துப் படைப்புகளையும் படித்து முடிந்த பின்பே ராஜம் கிருஷ்ணன் புதினங்களை ஆய்வுக்கு தேர்ந்தெடுத்தேன். நூல்கள் படிக்கவே இரண்டு ஆண்டுகளாகிவிட்டன. எவ்வாறு படிப்பது, எழுதுவது என்று துணைவர் வழிகாட்டுவார். அவரும் எனக்காகப் படித்துக் குறிப்பு எடுத்துத் தருவார்.

நெறியாளர் கோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரிப் பேராசிரியர் முனைவர். க. கமலேசுவரன், துணைவரின் ஆய்வுத் திறத்தைக் கண்டு, அவரையே நெறிப்படுத்தக் கூறிவிட்டார். அந்த ஆய்வுதான் எனது முதல் நூல். தமிழ் வளர்ச்சித்துறையின் நிதித் துணையுடன் மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டது.மேலை நாட்டுச் சமுதாய மாற்ற கோட்டுபாடுகளின் அடிப்படையில் தமிழ்ப் புதினங்களை முதன்முதலில் ஆய்வு செய்த நூல். பல ஆய்வு மாணவர்க்குப் பயன்பட்டது. ஆசிய மொழிகளின் நிறுவன, (தில்லி) மலரில் இந்நூல்பற்றி வெளியானது. அங்கு பணியாற்றிய முத்துச்சண்முகம் பிள்ளை, தொடர்ந்து இம்முறையில் ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தி எழுதியிருந்தார்.

ஆய்வுக்காகப் படித்தபோது சமுத்திரம் கதைகளில் ஈர்ப்பு ஏற்பட்டது. மாணவிகளுக்குச் செயல்முறைத்திட்டம் என்று ஒரு தாள். எனக்கு ஒதுக்கப்பட்ட மாணவியரை இவருடைய கதைகளில் ஆய்வு செய்யச் சொன்னேன். தஞ்சையில் நடந்த ஒரு கருத்தரங்கில், மாணவியருடன் ஆய்வேட்டை அவரிடம் நேரில் கொடுக்கச் சென்றபோது ஆழமான நட்பு உருவானது.

மதுரை வந்தால் இல்லம் வருவார். சமுத்திரத்தின் படைப்புகள் அனைத்தையும் ஆய்வுக்கு எடுத்து முந்நூறு பக்க அளவில் நூல் எழுதினேன்.

"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்' பதிப்பகத்தின் இந்நூல் வரைவைத் தேர்வுக் குழுவுக்கு அனுப்பியபோது
நா. வானமாமலை நூலைத் தேர்ந்தெடுத்தார். இடையே பதிப்பகத்துக்கும், சு. சமுத்திரத்துக்கும் மனக்கசப்பு ஏற்படவே, அவரே நூலைத் திரும்பப் பெற்று என் இல்லம் வந்து, கொடுத்து வாங்கிச் சென்றார். தன் ஏகலைவன் பதிப்பகம் வெளியிடும் என்று கூறினார். ஆயினும் 300 பக்க அளவை 150 பக்கங்களாக அவரே சுருக்கி சு. சமுத்திரத்தின் சிறுகதை இயக்கம் என்று பெயரிட்டு வெளியிட்டார்.

நான் நூலகப் புழு. கற்பிக்கும் நேரம் போக நூலகர் மாலை கதவை மூடும் வரை படித்துக்கொண்டிருப்பேன். இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் எனக்குக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பொறுப்பு வந்தது. அதுவரை தமிழ் இலக்கியத் துறையின் இருப்பே தெரியாமல் இலக்கிய மாணவியருக்கு நிலையான வகுப்பறைகூட இல்லாமல் ஒதுங்கி இருந்தது. மாணவியரைப் போராடத் தூண்டி நிலையான அறை பெற வைத்தேன். கல்லூரி விழாக்களில் தமிழ் இலக்கிய மாணவரைப் பங்கேற்கச் செய்து பரிசுபெற வைத்துத் தமிழ்த்துறையின் பெயரை முதலிடத்துக்குக் கொண்டுவந்தேன். மாணவியரின் திறமையைப் பல வகையினும் வெளிக்கொண்டுவந்தோம்.

கல்லூரி தொடங்கிய நாள் முதல் பின்பற்றிய  பாடத்திட்டத்தை மாற்றி  இதழியல் போன்ற புதிய பாடங்களைக் கேட்டு வாங்கினேன். இதற்காகவே நானும் இதழியல் வகுப்பில் சேர்ந்து (மதுரைப் பல்கலை) மாலை நேரக் கல்லூரியில் பயின்றேன். பொங்கல் விழாவை இலக்கியத் துறையில் சிறப்பாக்கி கொண்டாட வைத்தேன். அகப்பொருள் பாடம் முடிந்த பின்பு, தலைவர்- தலைவி திருமணம் ஆண்டுதோறும் திருமணவிழா, விருந்து திருமண அன்பளிப்புப் பையுடன் மாணவியருக்கும் அப்பழங்காலத் தோற்றத்தில் ஒப்பனை செய்து மாணவியரிடம் தமிழ் உணர்வைத் தோற்றுவிக்க அயராது பாடுபட்டேன். நான் ஓய்வு பெற்ற பின்பு என்ன ஆனது எனத் தெரியவில்லை. தமிழுணர்வு என்றால்என்ன என்று  அறியாது இருந்த மாணவியருக்கு அதைப் புரிய வைத்தேன்.

தமிழ் நேயம் என்ற சிற்றிதழ் பற்றிச் செய்தித்தாள் ஒன்றில் விளம்பரம் கண்டு, அதன் ஆசிரியர் கோவை ஞானி அவர்களுக்கு மடல் எழுதினேன். இதழ் நடத்திய மகளிர் சிறுகதைப் போட்டியில் என்னை கலந்துகொள்ளக் கூறினார். நானும் கலந்து கொண்டேன். பரிசும் கிடைத்தது. இப்படி அவருடனான நட்பு மிகவும் ஆழமானது. எனது தமிழ் அவருக்கு ஏனோ பிடித்துப் போனது. நூல்கள் எழுதுமாறு கூறி அவருக்கு வரும் பல்துறை நூல்களை அச்சு மணம் மாறாமல் அனுப்பி வைப்பார். இது இன்றளவும் தொடர்கின்றது. இரண்டாயிரம் ஆண்டு தொல்காப்பிய மரபே இன்று வரை தொடர்கின்றது என்ற அவரது கருத்தை அரண்செய்யும் வண்ணம் "இலக்கியம் மரபும் புதுமையும்' நூல் எழுதினேன். காவ்யா பதிப்பகம் வெளியிட்டது.

பழங்காலம் முதல் இன்றைய  புதுக்கவிதை வரை ஒவ்வொன்றிலும் ஒரு சான்றுடன் இக்கருத்து நூலில் அரண் செய்யப்பட்டுள்ளது. (மரபுக்கவிதை, புதுக்கவிதை, திறனாய்வு, மறுபடைப்பு, சிறுகதை) இது முடிந்தபின்னர் தமிழ் இலக்கிய வரலாறு இதுவரை படைப்பிலக்கியப் பார்வையில் எழுதப்படவில்லை. அந்தக் குறையை நாம் நீக்கிக்கொள்ள வேண்டுமென நூற்றுக்கணக்கான நூல்கள் படிக்க வைத்தார். தம் கருத்துக்களைக் கூறி நெறிப்படுத்துவார். அவர் எழுதிய மடல்களே ஒரு மூட்டை அளவு இருக்கும். 2 ஆண்டுகள் முடிந்து அந்த நூல் வெளிவந்தது (காவ்யா வெளியீடு). ப. மருதநாயகம் எனக்கு நேரடி அறிமுகம் இல்லை எனினும். நூலை முழுவதும் படித்து நீண்ட அணிந்துரை எழுதி அந்நூலை உடனடியாக மொழிபெயர்ந்து மேலை நாட்டினரிடம் கொண்டு செல்லவேண்டும் எனக் கருத்துரைத்தார். (தமிழ் இலக்கிய வரலாறு படைப்பிலக்கியப் பார்வையில்- காவ்யா) மொழிபெயர்ப்பாளர் இன்றும் கிடைக்கவில்லை என்பது பெரும் குறையும் வருத்தமும் ஆகும்.ஈழத்துப் படைப்பாளர் எஸ். பொன்னுத்துரை தம் படைப்புகளை ஞானி அவர்கள் மதிப்பீடு செய்யவேண்டும் என விரும்பினார். அவருக்கு இயலாது என அவருடைய நூல்கள் அனைத்தையும் எனக்கு அனுப்பி என்னை எழுதுமாறு கேட்டுக்கொண்டார். ஈழத்து உடன்பிறப்புகள் மீது மட்டற்ற அன்பு கொண்ட நான், கடைப்போரின் தாக்கத்தால் கடுமையான நோயுற்றேன். அவர்களுக்கு ஏதேனும் நிலையான பெயர் தரும் வகையில் எஸ்.பொ. படைப்பாளுமையும் பன்முகப் பார்வையும் எனும் பொருளில் சிறுகதை (50), புதினம், நாடகம், மொழிபெயர்ப்பு, கவிதை, நேர்காணல்கள், உரைநடைத் தொகுப்பு, இரண்டாயிரம் பக்கங்களில் அவர் எழுதியுள்ள வரலாற்றில் வாழ்தல் எனும் தன் வரலாறு அனைத்தையும் உள்ளடக்கி  நடுநிலையுடன் ஆய்வு செய்தேன்.

பாலியல் உணர்வுகளை அவர் வெளிப்படையாக எழுதுவதால், என்மீது அன்பு கொண்டு தன்னை மேம்படுத்தியவர்களுள் ஒருவராக என்னை கருதிய பெரியார் இயலாளர் சங்கமித்ரா, இந்நூல்களை நான் எழுதுவதை விரும்பவில்லை. ஆனாலும் இதைக் குறை கூறியே திறனாய்வு செய்துள்ளேன். எஸ்.பொ. தன் செலவில் வெளியடுவதாகக் கூறியிருந்தார்.

கடுமையான நோய்வாய்ப்பட்டிருந்த எனக்குச் சரியாக தெளிவாக எழுத இயலாமல் போனதால் ஒளியச்சு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. அவரிடமிருந்து அவருடைய நண்பர், நூல் நன்றாக இருப்பதால், தானே ஒளியச்சு செய்வதாக வாங்கிச் சென்று, பல மாதங்கள் ஆகியும் தரவில்லை. இதற்கிடையே எஸ்.பொ.வும் மறைந்துவிட அவர் மாபெரும் கனவுடன் தொடங்கிய மித்ர பதிப்பகமும் நின்றுவிட்டது. ஞானி அவர்கள் பெரிதும் முயன்று காவ்யா பதிப்பகம் மூலம் வெளிவரச் செய்தார். எஸ்.பொ.வின் நண்பர் இளம்பிறை ரகுமான் மூலம், மூலப்படியைப் பெற்றுத்தந்தார். எஸ்.பொ.வின் துணைவியார் நூலின் 20 படிகள் ஞானி அவர்கள் மூலம் வாங்கிச் சென்றார். அவர் ஆஸ்திரேலியாவில் இருக்கின்றார்.

தமிழகத்தின் பெருங்கவிஞர்கள், இன்றைய கவிஞர்கள் வரையிலான பெரும்பாலானவரின் கவிதைகளில் ஞானி நடுநிலையுடன் திறனாய்வு செய்து 600 பக்கங்களுக்கு மேல் எழுதியுள்ளார்.

அவருடைய கருத்துக்கள் கவிதையியல் கோட்பாட்டை இக்காலத்திற்கேற்ப விரிவாக்கும் திறனுடையவை.

அவருடைய திறனாய்வுக் கருத்துக்களிலிருந்து "ஞானியின் கவிதையியல் கொள்கைகள்' எனும் எனது நூல் புதுப்புனல் வெளியீடாக வந்துள்ளது. அவருடன் நட்புறவு தொடங்கிய நாள் முதல் எனக்கு எழுதிய மடல்கள் சிலவற்றைத் தொகுத்து மடல் எழுதுவது அரிதாகிவிட்ட இளைய தலைமுறையினருக்கு மடல் எழுதும் கலையின் அருமையை உணர்த்தும் வகையில் எழுதியுள்ள "நட்பிற் பெருந்தகை யாவுள' எனும் நூலும் புதுப்புனல் வெளியீடாக வந்துள்ளது.

தமிழறிஞர்கள் பலரும் தமிழின் ஆய்வுப் பரப்பை ஆழ் அகலமாக்கிக் கொண்டுள்ளனர். தமிழறிவும் தம்முணர்வும் இல்லாமற்போன மாணவர் உலகை விழிப்புறச் செய்யும் வண்ணம், வேர்களில் ஆற்றிய சிறு சிறு பணிகளைத் தொகுத்து, ஓர் அரசுக் கல்லூரியில் தமிழின் நிலை எவ்வாறு உள்ளது என்பதை "நானும் என் தமிழும்' என்ற தலைப்பில் ஞானி தன் தமிழ்நேயம் இதழ் சார்பாக வெளியிட்டார். இதைத் தொடர்ந்து பல தமிழறிஞர்கள் தம் அரிய பணிகளை இவ்விதழில் வெளியிட்டனர். இரண்டாயிரம் ஆண்டுத் தமிழில், தமிழுக்கென மூலமொழியில் பேரிலக்கியம் (காப்பியம்- Epic) இல்லை என்பது பெருங்குறையே. கம்பனின் இராமாயணம் வழிநூல்தான். காப்பிய இலக்கணமும் வடமொழிக் காப்பியங்களை அடிப்படையாகக் கொண்டவை. எனவே பேரிலக்கியம் என்பதற்குரிய பொருளைப் புதிதாக வரையறை செய்து, இந்த வரையறைக்கு ஏற்ப புறநானூறே தமிழரின் பேரிலக்கியம் என நிறுவும் வகையில் எழுதியுள்ள நூல் இன்னும் சில நாட்களில் புதுப்புனல் பதிப்பகம் மூலம் வெளிவர உள்ளது. சிலப்பதிகாரம் காப்பியமாயினும் அது கற்பனையே. வாழ்வியல் நெருக்கடிகளுக்குத் தீர்வு கூறுவதே பேரிலக்கியம் எனக் கொள்ளவேண்டும்.

தமிழறிவு மிகவும் குறைந்து வரும் இன்றைய சூழலில் தமிழின் அன்றைய சிறப்பும், இன்றைய சீரழிவும் என்ற பொருளில் "நடந்தாய் வாழி தமிழே' எனும் பொருளில் சிறு கவிதை நூலொன்றும் வெளிவர உள்ளது.

அரசர்கள் வரலாறும் ஆட்சிகளின் வரலாறும் வரலாறு இல்லை எனும் பார்வை இப்போது நிலவுகின்றது. இந்தியா உட்பட பல நாடுகளின் வரலாறு மீளாய்வு செய்யப்படுகின்றது. மக்கள் வரலாறே வரலாறு. துளிகள் இன்றி நீரில்லை. இந்த வகையில் ஒரு மனிதரின் வரலாறு எழுதப்படும்போது, அது அவருடன் நின்றுவிடுவது இல்லை. அவர் காலம், இடம், குடும்பம், பொருளியல், பணி, வட்டாரம், ஆட்சி முதலிய கூறுகளை உள்ளடக்கியுள்ளது இதனால் அவர் வாழ்ந்த காலத்தைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். இதனால்தான் ஞானி, சங்கமித்ரா ஒவ்வொருவரும் தத்தம் வாழ்க்கையை வரலாறாக எழுத வேண்டும் என்பர். பலருக்கு முன்மாதிரியாகக்கூட அமைய முடியும். இந்த அடிப்படையில் தன்னைத்தானே உருவாக்கிக் கொண்ட ஓர் இடைநிலை, வகுப்பு வட்ட ஆட்சியராகத் தம் அளவில் பணியில் சிறந்து, தம் மூன்று பிள்ளைகளைக் கல்வியிலும், ஒழுக்கத்திலும் பண்பிலும் சிறந்தவர்களாக உருவாக்கிய என் பெற்றோரின் வாழ்க்கை வரலாறும் புதுப்புனல் வாயிலாகவே வர உள்ளது. (எந்தையும், தாயும்).

அன்றைய விகடன் முதல் இன்றைய தினமணி கதிர் வரை பல இலக்கிய பெண்ணிய, முற்போக்கு இதழ்களில் தொடர்ந்து எழுதிவந்தேன். பல புதிய நூல்கள், புதுப்பார்வையில் வெளியிடும் பல நூல்களுக்கு மதிப்புரை எழுதுவதும் எனது பொழுதுபோக்கு. கருத்தரங்குகள், ஆய்வரங்குகளில் தவறாது கலந்து கொண்டேன். இப்போது முன்பு போல் செல்வதில்லை. சிறிது காலம் ஆய்வுக் கட்டுரை மட்டும் அனுப்பி வந்தேன். ஒரு சில தவிர, ஆய்வரங்குகள், கருத்தரங்குகள் பணம் கட்டினால், தேர்ந்தெடுத்தல், தரம் காணல், இன்றி அனைத்துக் கட்டுரை களையும் வெளியிடுகின்றன. கல்லூரிகளில் பல்கலைக் கழகம் வழங்கும் கருத்தரங் கிற்கான தொகையைச் செலவுசெய்து கணக்கு வேண்டும் என்பதற்காகவே கருத்தரங்குகள் நடத்துவதை நேரடியாகவே அறிந்துள்ளேன்.

இப்போது ஆய்வியல் நிறைஞர் (M.Phil) முனைவர் (Ph.D)  ஆய்வு செய்பவர்கள் ஏதேனும் ஆய்வுக் கட்டுரை வெளியிட வேண்டும் என்ற விதி உள்ளது. ஆய்வு மாணவரிடம். பணம் பெற்றுக்கொண்டு அவர்கள் என்ன எழுதியிருந்தாலும் வெளியிடுகின்றன இலக்கிய இதழ்கள். எம்.ஃபில் நிறைஞர் ஆய்வுகளும், தொகுப்புரையாக அமைந்துள்ளன. நெறியாளருக்கும் வாய்மொழித் தேர்வுக்குத் தேர்வாளராக வருபவருக்கும் ஆயிரக்கணக்கில் அன்பளிப்பு கொடுத்து வருகின்றன. நாங்கள் ஆய்வு செய்யும்போது, ஆய்வு தரமில்லை என்றால் தேர்வாளர் திருப்பி அனுப்பிவிடுவார். இப்போது அப்படியொரு நேர்மையும், உண்மையும் அறவே இல்லை. இறுதி ஆண்டில் அனைத்தையும் எழுதி முடிக்கின்றனர். நெறியாளர்கள் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் அறவே இல்லை. அவர்களுடைய சொந்தப் பணிகளுக்கு வேலை செய்தால் போதும், ஆய்வாளருக்குத் தேர்ச்சியும், நிறைய மதிப்பெண்ணும் உண்டு. எங்கேனும் அரிதாகவே உண்மையான நெறியாளர், ஆய்வாளரைக் காண முடிகின்றது.

ஒருபுறம் ஹார்டுவேர் பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில் தமிழாய்வுக்கு இருக்கை தொடங்குகின்றனர்.

மற்றொரு புறம், தகுதியான ஆய்வாளர், ஆசிரியர் இல்லை என வட இந்தியா, உலக நாடுகளின் பல்கலைப் கழகங்களில் தமிழ் இருக்கைகள் மூடப்படுகின்றன.

தமிழ் எவ்வளவு கீழ்நிலையில் உள்ளது என்பதற்கு முகநூல் ஒன்றேபோதும் அடிப்படைத் தமிழ்கூட இல்லாமை அதிர்ச்சி அளிக்கின்றது.

தமிழ்மொழி சாதி, இன, தமிழக, இந்திய வரலாறு தெரியாதவர்கள், தமக்குத் தெரிந்ததை மட்டும் எழுதி வருகின்றனர். பிழை இல்லாத தமிழைக் கவிதைகள், கருத்துகள் என எதிலும் காணமுடியவில்லை என்பது தமிழுக்குப் பெரும் இழிவே. தமிழ் தமிழ் எதிர்ப்பாளர்களை வசைபாடுவோர் தமிழே தெரியாமல் பழித்துரைக்கின்றனர். பிழை திருத்த முனைந்தால், நாங்கள் இலக்கணம் படிக்க வரவில்லை என்கின்றார். தமிழ் எழுதிற் தெரியாமல் தமிழை எப்படி காப்பாற்ற முடியும். என்பது பற்றி சிந்திப்பதே இல்லை. பிழை இல்லாமல் எழுதக் கற்றுக் கொள்வோம் என்ற முயற்சி கடுகளவும்கூட இல்லை! இது எங்கே போய் முடியும் எனத் தெரியவில்லை.

தமிழ்மொழி உட்பட வரலாறுகள் திருத்தி எழுதப்பட்டுவிட்டன என்று முன்னர்க் கூறினேன்.  இவை எதுவும் அறியாதவர்கள் தவறான செய்திகளை சற்றும் தயக்கமின்றி எழுதுகின்றனர். தம்முடைய மொழி பேச, எழுதத் தெரியாமல், வரலாறு தெரியாமல் தமிழ் பற்றி முழங்குவதும், தமிழ், தமிழின எதிர்ப்பாளர்களை வசைபாடுவதும் நகைப்புக்கும், கவலைக்கும் உரியதாகும். என்பதை உணரவில்லை. அதே சமயம் அவர்களது மொழி, உணர்ச்சியை சற்றும் குறை கூற இயலாது. திறமையும் அறிவும் வாய்ப்பும் உள்ளவர்கள் அவற்றை முழுமையாகப் பயன்படுத்திகளால் தமிழுக்குப் பெரும் ஆக்கம் தரும். தம் கண்களையே குத்திக்கொள்வது அறிவுடைமை இல்லை!

ஒரு தனிமனிதனின் வாழ்க்கைதான் அவன் வாழ்ந்த வாழும் சமுதாயத்தை முழுமையாகக் காட்டும் உண்மையான சான்று. அரசியல் சமுதாயச் சூழலில் அவனது வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சிக்கல், அவனுடைய அக வாழ்க்கையில் தாக்கம் ஏற்படுத்து கின்றது. இருந்த வகையில் நான் எண்ணிலிருந்துநான் விடுபட்டு ஒரு பெண் என்ற நிலையில், தனக்குரிய கொள்கைகள், விருப்பங்களோடு வாழ இயலாத சமுதாயச் சூழல், பணிசெய்யும் இடத்தில் நேரிடும் சிக்கல்கள், ஒரு தமிழர், தமிழ்ப் பேராசிரியர் என்ற வகையில், செய்யவேண்டிய செயல்கள், செய்ய முடியாமற்போன காரணங்கள் முதலியவற்றை அந்நியப்பட்டு நின்று எழுதியுள்ள வரலாறே, நெஞ்ச கதவை மெல்லந்திறந்து எனும் வாழ்க்கை வரலாற்று புதினம்! இது நளிளிதேவி என்ற தனிமனித வரலாறு அன்று! ஒரு பெண்ணின் வரலாறு. கற்பனை கலவாமல் வாழ்க்கை வரலாறு என்று மட்டும் அமையாமல் எழுதப்பட்ட புதிய பார்வையிலான நூல். துணிச்சலான நூல் என்று பாராட்டுகின்றனர். ஒருவரையும் எதன் பொருட்டும் குறைகூறி அவமானப்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு சிறிதுமின்றி நடந்தவற்றையும் எண்ணியவற்றையும் என் தவறுகளையும் தொகுத்து உள்ளேன்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :