Add1
logo
நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்த ’சாத்தியமாகும் கனவு பயணம்’ குழு! || நாட்டுமாடுகள் கண்காட்சி: 100க்கும் மேற்பட்ட மாடுகள், குதிரைகள், நாய்கள், ஆடுகள் பங்கேற்பு || 29ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு || மோடி பிரதமர் என்ற ஈகோவினால் என் கடிதங்களுக்கு பதிலளிக்கவில்லை! - அண்ணா ஹசாரே || சாதிச்சுவரை இடிக்கக் கோரி போராடிய தலித்துகள், பத்திரிகையாளர்கள் கைது! || ‘பத்மாவத்’ படத்தை தடை செய்; இல்லையேல் சாகவிடு! - ராஜபுத் பெண்கள் பேரணி || பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சி.பி.எம். ஆர்ப்பாட்டம் || நடிகர்கள் எல்லாரும் முதல்வராகி விட முடியாது! - ஆர். வைத்திலிங்கம் எம்.பி பேச்சு || கடனைத் திருப்பித் தராததால் டிராக்டர் பறிமுதல்! - சக்கரத்தில் விழுந்து விவசாயி உயிரிழப்பு || பிப்ரவரி 03 இல் மதுக்கடை பூட்டுப் போடும் போராட்டம் - அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் || வங்கி காவலாளியை கட்டிப் போட்டு கொள்ளை முயற்சி. நகை தப்பியது! || பாகிஸ்தான் இந்தியாவுடனான பகையை இன்னும் மறக்கவில்லை! - மோகன் பாகவத் || கலாச்சார உடையில் கண்டன ஆர்ப்பாட்டம்! ||
Logo
பொது அறிவு உலகம்
திட்டங்கள்
 ................................................................
விருதுகள்
 ................................................................
விளையாட்டுகள்
 ................................................................
பொருளாதாரம்
 ................................................................
அறிவியல்-தொழில்நுட்பம்
 ................................................................
சர்வதேசம்
 ................................................................
தேசம்
 ................................................................
தமிழகம்
 ................................................................
இந்தியாவின் அரசியல் பொருளாதாரம்
 ................................................................
டார்வின் 200 -கோவி. லெனின்
 ................................................................
01-05-09

Untitled Documentடார்வின் 200
-கோவி. லெனின்

             ழைய சிந்தனைகளிலிருந்து விடுபட மறுத்த உலகத்தை தங்களின் அரிய கண்டு பிடிப்புகளால் மாற்றம் பெறச் செய்தவர் களில் நால்வருக்கு முதன்மை பங்கு உண்டு. நாம் வாழும் புவி உருண்டையானது என்ற க—யோ, இயக்கவியல் கோட்பாட்டை நிறுவிய ஐன்ஸ்டீன், புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்த சர் ஐசக் நியூட்டன், மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி குறித்த உண்மைகளை வெளியிட்ட சார்லஸ் டார்வின் ஆகியோரே அந்த நான்கு முதன்மை அறிவியலாளர்கள். இவர்களின் கண்டுபிடிப்புகளே நவீன உலகின் அறிவியல் முன்னேற்றத்திற்கு அடித்தளம்.

இங்கிலாந்து நாட்டின் ஷிரூஸ்பரி நகரில் 1809-ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் நாள் பிறந்த சார்லஸ் டார்வின் இன்று உயிரோடு இருந்திருந்தால் அவருக்கு வயது 200.அவரது இருநூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தமிழகம் உள்பட உலகின் பல பகுதிகளிலும் கொண்டாடப் படுகிறது. தான் பிறந்து 200 ஆண்டுகள் கழித்தும் தன்னை இந்த மனித சமுதாயம் நினைவில் வைத்திருக்கும் அளவுக்கு மனித குலம் குறித்த மிக முக்கியமான ஆய்வுப்புரட்சியை நடத்தியவர் டார்வின். அப்படியென்ன புரட்சி?

உலகில் உள்ள உயிரினங்கள் ஒவ்வொன்றையும் கடவுள் படைத்தார். அதுபோல, மனிதனையும் கடவுள் படைத்தார் என்பதே மதம் சார்ந்த மக்களின் நம்பிக்கையாக காலங்காலமாக இருந்து வந்தது. டார்வினின் ஆராய்ச்சி முடிவுகள் நம்பிக்கையைத் தகர்த்தெறிந்து உண்மையை உலகுக்கு உணர்த்தின. எச்.எம்.எஸ் பீகிள் கப்பலில் இயற்கையியலாளராக பதவியமர்த்தப்பட்ட சார்லஸ் டார்வின் ஏறத்தாழ 5 ஆண்டுகள் அந்தக் கப்பலில் பயணித்து தென் அமெரிக்காவின் பசிபிக் கரையோரத்திலும் பசிபிக் கடலில் உள்ள சில தீவுகளிலும் உயிரினங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து 600 குறிப்பேடுகளில் தரவுகளைப் பதிவு செய்தார். மனிதன் உள்ளிட்ட உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி (படிமலர்ச்சி) பற்றிய டார்வினின் அரிய ஆய்வுகளுக்கு அந்தக் குறிப்பேடுகளே அடித்தளம்.

உயிரினங்கள் தங்களின் இயற்கையான தேர்ந்தெடுத்தலில் காரணமாகவே படிமலர்ச்சியை அடைகின்றன என்பதே டார்வினின் கோட் பாடாகும். பறவை, விலங்கு என ஒவ்வொரு உயிரினத்திற்கும் பொதுவான குணங்கள் இருந்தா லும் தனிப்பட்ட ஒவ்வொரு பறவைக்கும் விலங்குக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன என்பதை டார்வின் தெளிவுபடுத்தினார். ஒரே தட்பவெப்பம் நிலவும் பகுதியில் வாழும் பறவை களில் சிலவற்றுக்கு வலிமையான அலகு இருக்கிறது. சிலவற்றுக்கு மென்மையான அலகு இருக்கிறது. சிலவற்றுக்கு நுண்மையான அலகு இருக்கிறது. வலிமையான அலகுகள் கொண்ட பறவைகள் பெரிய விதைகளை சாப்பிடக்கூடியனவாகவும், மென்மையான அலகுகளைக் கொண்ட பறவைகள் சிறிய விதைகளைச் சாப்பிடுபவையாகவும் நுண்ணிய அலகுகளைக் கொண்ட பறவைகள் புழு- புச்சிகளை சாப்பிடக்கூடியனவாகவும் இருப்பதை அவர் தன் ஆய்வில் உறுதி செய்தார்.

ஒரே இனத்தில் இத்தகைய மாறுபாடுகள் கொண்ட உயிரினங்கள் அடுத்தடுத்த தலைமுறைகளில் படிமலர்ச்சியை அடைந்து புதிய உயிரினங் களாக மாற்றம் பெறுகின்றன என்பதே டார்வினின் ஆராய்ச்சி. அதாவது, ஆதாம்-ஏவாள் மூலமாக மனித இனத்தைக் கடவுள் படைத்தார் என ஒரு மதமும், படைப்புக் கடவுளான பிரம்மாவி னால் மனிதர்கள் படைக்கப்பட்டார்கள் என இன்னொரு மதமும் பல நூற்றாண்டுகளாக மக்களின் மனங்களில் கருத்துகளைப் பதிவு செய்திருந்த நிலையில், அதற்கு முற்றிலும் மாறுபட்டிருந்தது டார்வினின் ஆராய்ச்சி. மனித இனம் என்பது தனித்துவமாகப் படைக்கப்பட்டதில்லை. ஒரு செல் உயிரி, பல செல் உயிரி என்ற படிமலர்ச்சியின் தொடர்ச்சி யாக ஒவ்வொரு உயிரினமாக உலகில் தோன்றின. அப்படி தோன்றிய உயிரினங்களின் வழியே, இயற்கையான தேர்வு முறையில் படிமலர்ச்சி பெற்ற இனம்தான் மனித இனம். சுருக்கமாகச் சொல்வதென்றால், குரங்கு இனத் தில் இயற்கைச் சூழலால் தனித்த குணங்களுடன் செயல்பட்ட ஒரு குழுவிலிருந்து ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் படிமலர்ச்சி பெற்றவனே மனிதன்.

டார்வினின் இந்த ஆய்வு, அவர் காலத்திற்கு முன்பு வரை இருந்து வந்த மதம் சார்ந்த- மூடநம்பிக்கைகளுடனான அறிவியலை மதத்திற்கு அப்பாற்பட்ட பகுத்தறிவு சார்ந்த அறிவியலாக மாற்றியது என்கிறார் இருபதாம் நூற்றாண்டின் இயற்கைவியலாளரும் படிமலர்ச்சி ஆராய்ச்சியாளருமான எர்னஸ்ட் மேயர். இத்தகைய அறிவியல் புரட்சியை மதம் சார்ந்த உலகம் உடனடியாக ஏற்றுக் கொள்ளுமா?

படிமலர்ச்சி குறித்த டார்வினின் ஆய்வு களுக்கு எதிராக இங்கிலாந்து நாட்டில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இது கடவுளை மறுக்கும் கருத்து, நாத்திக கருத்து என மதரீதி யான எதிர்ப்புகள், அரசியல் போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள் ஆகியவை நடைபெற்றன. இது டார்வினை கலங்கச் செய்தது. அவ ருடைய ஆய்வுகள் புரட்சிகரமாக இருந்தனவே தவிர, டார்வின் புரட்சியாளர் அல்ல என்கிறார் அறிஞர் ஜான் பெலாமி ஃபாஸ்டர். படிமலர்ச்சி பற்றிய டார்வினின் புகழ்பெற்ற புத்தகமான உயிரினங்களின் தோற்றம் 1859ல் வெளியா

னது. தன் இறுதிக்காலத்தில் லண்டன் நகரிலிருந்து 15 கல் தொலைவில் உள்ள ஓர் ஊரில் வசித்தார் டார்வின். அவர் தனது ஆய்வுக் கோட்பாடுகளை, தானே தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற முயற்சிகளில் ஈடுபடவில்லை. உயிரியல் தொடர்பான ஆராய்ச்சிகளை புதிய சிந்தனைகளோடு முடுக்கிவிடும் தன்னுடைய ஆராய்ச்சிகளை தொடரும் பணியை தாமஸ் ஹக்சிலி போன்றவர்களிடம் விட்டுவிட்டார்.

டார்வின் முன்வைத்த படிமலர்ச்சி கோட்பாடு இன்றளவிலும் பலவித மான ஆய்வுகளைக் கண்டு வருகிறது. மேற்குலக நாடுகளில் நிறத்தின் பெயரா லும் இனத்தின் பெயராலும் அடிமைத்தனம் நிலவி வந்த கால கட்டத்தில், உயிரினங்களின் தோற்றம் பற்றிய டார்வினின் ஆராய்ச்சி உண்மையிலேயே பெரும் புரட்சிதான். ஏனெனில், வெள்ளை இனம் எஜமானம் செய்யவும் கறுப்பினம் அடிமைத்தொழில் புரியவும் படைக்கப்பட்டவர் கள் என்ற ஒடுக்குமுறை சிந்தனையை உடைத்தெறியும் விதத்தில், மனிதர்கள் படைக்கப்படவில்லை. அவர்கள் இயற்கையான தேர்வு முறையில் உயிரினங்களின் படிமலர்ச்சி யின் விளைவாக உருவானவர்கள் என்ற டார் வினின் தத்துவம், ஆண்டான்-அடிமை கோட் பாட்டை உடைத்து நொறுக்குவதாக அமைந் தது. இந்தியாவிலும் பிறப்பினால் உருவாக் கப்பட்டுள்ள நால் வருணக் கோட்பாட்டுக்கு சம்மட்டி அடி தருவதாகவே இருக்கிறது டார்வினின் ஆராய்ச்சி முடிவு.

உலகில் உள்ள மனிதர்கள் ஏற்றத்தாழ்வற்ற சமஉரிமைகளுடன் வாழவேண்டும் என்ற பெருங்கனவுடன் பொதுவுடைமை எனும் அர சியல் விஞ்ஞானக் கோட்பாட்டை வகுத்தவர் களான காரல்மார்க்சும், ஃப்ரெடெரிக் எங்கெல் சும் டார்வினின் ஆய்வுகளை கவனத்துடன் அல சினர். உயிரினங்களின் தோற்றம் புத்தகத்தின் முதல் பதிப்பை வாங்கிப்படித்த எங்கெல்ஸ், இது முற்றிலும் சிறப்பானது என மார்க்சுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார். டார்வினின் செயலை “அறிவியல் கண்ணோட்டத்தில் பெருங் காப்பியம்’ என வர்ணித்தார் காரல் மார்க்ஸ்.

ஆள்வதற்கும் ஒரு பிரிவும் அடிமையாக இருப்பதற்கு ஒரு பிரிவுமாக மனிதகுலம் படைக்கப்படவில்லை. மனித இனம் என்பது படைப்பால் வந்ததன்று. இயற்கையான தேர்வு முறையினால் வந்ததன்று என்கிற புரட்சிகரமான உண்மையை வெளிக்கொண்டு வந்தவர் அறி வியல் அறிஞர் சார்லஸ் டார்வின். அதனால் தான் மாபெரும் அறிஞர்கள் போற்றும் மகத் தான அறிஞராக இரு நூற்றாண்டுகளுக்குப் பின்னும் அவர் நினைக்கப்படுகிறார். டார்வினின் ஆய்வுகள் புதிய புதிய கோணங்களில் இன்றளவும் ஆராய்ச்சி செய்யப்படுவது அவரது பேராற்றலுக்கு கிடைத்துள்ள பெருமை.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :
கருத்துக்கள்(16)
Name : yogalingam kajatheepan Date & Time : 9/5/2014 12:58:59 PM
-----------------------------------------------------------------------------------------------------
Manithanai arigarakkukirathu
-----------------------------------------------------------------------------------------------------
Name : S.Jenagaraj Date & Time : 1/22/2014 3:11:18 PM
-----------------------------------------------------------------------------------------------------
அறிய கண்டுபிடிப்பு , பதிவு செய்தமைக்கு நன்றி.
-----------------------------------------------------------------------------------------------------
Name : senthilkumar Date & Time : 4/13/2013 12:03:19 PM
-----------------------------------------------------------------------------------------------------
இன்று மனிதன் ஆராய்ச்சியில் முக்கியமானது artificial intelligence (robotics) and 4th dimension(time travel), ஐன்ஸ்டீன் theory படி ஒளியின் வேகத்தை மிஞ்சி நேரத்தை வலைப்பதே அண்டம் விட்டு அண்டம் தாண்டும் முயற்சி, மனிதனின் பரினமவளர்சிக்கு இதை விட சான்று வேறென்ன?
-----------------------------------------------------------------------------------------------------
Name : ம்ன்னை முத்துக்குமார் Date & Time : 12/13/2011 10:34:20 AM
-----------------------------------------------------------------------------------------------------
அருமையான கட்டுரை...பதிவுக்கு நன்றி
-----------------------------------------------------------------------------------------------------
Name : baas Date & Time : 10/22/2009 9:38:02 AM
-----------------------------------------------------------------------------------------------------
வணக்கம், டார்வினின் இந்த கோட்பாடு அற்புதமான அறிவியல் வளர்ச்சியின் முன்னோடி. ஆனாலும் ஒரு விஷயம், இந்த உயிரின் பரிணாமம் என்பது நமது பாரதத்தில் ஏற்க்கனவே கண்டு சொல்லப் பட்டது. தசாவதாரத்தின் மூலம்.(கமல் ஹாசனுடையது அல்ல). டார்வினை பெருமைப் படுத்திய நக்கீரனுக்கு நன்றி.
-----------------------------------------------------------------------------------------------------
Name : vani Date & Time : 6/15/2009 2:45:35 PM
-----------------------------------------------------------------------------------------------------
டார்வின் கருது மிகவும் பயனுளுலதக்க இருக்கிறது அடாத முறை கார்ல் மார்க்ஸ் பற்றி விவரங்கன் அனுப்புவம் இத னுடன் எங்கள் கரத்தை முடிதுகொள்கிறோம் நன்றி வணக்கம்
-----------------------------------------------------------------------------------------------------
Name : Thamil selvan Date & Time : 6/15/2009 10:25:34 AM
-----------------------------------------------------------------------------------------------------
அப்படியாயின் மனித குரங்குகளும், குரங்குகளும் தற்காலத்திலும் இருக்க தானே செய்கின்றன இவைக்கு மட்டும் பரிணாம வளர்ச்சி என்பது விதி விலக்கா?
-----------------------------------------------------------------------------------------------------
Name : Allwin Date & Time : 6/15/2009 10:23:28 AM
-----------------------------------------------------------------------------------------------------
ஹலோ பிரிஎண்ட்ஸ் என்னுடிய காருதின் படி (There is no wisdom nor understanding nor counsel against the LORD) என்னவே சார்லஸ் டார்வின் இந்த கருதூ முழுவதும் தவறு ..என்னவே இது வேல்லைய்ட வீணர்களின் தேவையட்ட வார்த்தை இது .நன்றி
-----------------------------------------------------------------------------------------------------
Name : Vinayaham Date & Time : 6/11/2009 10:13:00 AM
-----------------------------------------------------------------------------------------------------
Dear Sir Please do you Confirm All Scriptures (Particular Al-Quran) are Human Thoughts not at all, Its all GOD's Words. I m Challange... First Confirm Then Read this Articals
-----------------------------------------------------------------------------------------------------
Name : Pavi Date & Time : 6/3/2009 3:54:05 PM
-----------------------------------------------------------------------------------------------------
அருமையான கட்டுரை. திரு. யுஸுப் அவர்கள் எழுப்பிஇருப்பது ஒரு நல்ல வினா. ஒரு நாள் அதிசயமாக குரங்கு மனித குழந்தையை பிரசவித்துவிடாது. அதாவது படிமலர்ச்சி என்பது திடீர் என்று ஒரு நாள் நடக்கக்கூடியது அன்று. சில ஆயிரம் ஆண்டுகளில் நிகழ்வது. இப்போதும படிமலர்ச்சி என்பது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. பெரிய விலங்குகளில் நடைபெறும் இந்த நீண்ட இடைவெளியில் நிகழும் மாற்றத்தை குறுகிய காலத்தில் வாழும் நம்மால் கண்கூடாக காண இயலாது. அனால் நுண் உயிர்களில் இது போன்ற ஆய்வுகள் நிரூபிக்கப்பட்டுவிட்டன.
-----------------------------------------------------------------------------------------------------
Name : jayakumar Date & Time : 6/2/2009 3:47:20 PM
-----------------------------------------------------------------------------------------------------
that is currect Mr.Elangoven.Mobile .satalite .internet are also superpower man made.thats call developing generation.
-----------------------------------------------------------------------------------------------------
Name : Servant of GOD Date & Time : 6/2/2009 3:46:59 PM
-----------------------------------------------------------------------------------------------------
Parinama valarchi endo nenkal sollum kurankil irundhu manithan vanthan endal inraiya sulnilai-il antha oru manitha kurankum manithanaka villai.parinama valarchi enpadu hudalai patri paesukiradhu,harivai patri paesa villai so nanbar Elangovan porindhu kollavaendum.kurankil irunthu than manithan vanthan enpatharku antha evidensum illae.can you proof in any zoo they monkey become the man?. no proof.somebody say something better think before accept the concept.
-----------------------------------------------------------------------------------------------------
Name : sathya priya Date & Time : 6/1/2009 9:50:04 AM
-----------------------------------------------------------------------------------------------------
ப்ளீஸ் disply தி புல் தமிழ் format
-----------------------------------------------------------------------------------------------------
Name : Elangovan Date & Time : 6/1/2009 9:50:04 AM
-----------------------------------------------------------------------------------------------------
அய்யா இந்த வளர்ச்சி பல ஆயிரம் , லட்சம் வருடங்கள் கடந்து வந்தது , ஜீன் ஆராய்ச்சிகள் நிருபிக்கிற்றனவே. குரங்கில் மனிதனின் முக்கிய தோற்றகள் நினைவு படுத்தவில்லையா ? இன்றைய மனிதனே சூபர் மனிதன் தெரியவில்லையா எங்கேயோ இருக்கும் உமக்கு டோரோண்டோவிளிருக்கும் நான் பதில் அனுப்புவது அந்த சூப்பர் மனிதனின் கண்டுபிடிப்புதான் கடஉவுளின் கண்டுபிடிப்பு என்ன?
-----------------------------------------------------------------------------------------------------
Name : yousuf Date & Time : 5/24/2009 11:16:24 PM
-----------------------------------------------------------------------------------------------------
திரு டார்வினின் கோட்பாட்டின் படி குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் அல்லது பரிணாமவளர்ச்சி வந்தது என்றால், அந்த வளர்ச்சி ஏன் இப்போது நின்றுவிட்டது அல்லது ஏன் குரங்கிலிருந்து மனித குழந்தை ஏன் இன்னமும் பிரக்கவல்லை அல்லது ஏன் அந்த வளர்ச்சி முன்னேறி இருந்தால் மனிதனுக்கு பிறகு சூப்பர் மனிதன் பரிணாமம் கண்டிருக்கலாமே?, தயவு கூர்ந்து இதற்கு சரியான பதிலை அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------
Name : tharshan Date & Time : 5/23/2009 10:58:36 AM
-----------------------------------------------------------------------------------------------------
நக்க்தீரன் இக்கு நன்றிகள்.
-----------------------------------------------------------------------------------------------------