Add1
logo
டாஸ்மாக் கடையை பூட்டு: இளைஞர்கள் கோரிக்கை || அனைத்து விவசாய கடன்களையும் ரத்து செய்யுமாறு முதலவருக்கு விவசாய சங்கங்கள் கோரிக்கை || ஊழல் புகாரில் அதிமுக பஞ்சாயத்து தலைவர் || போலீசில் இளைஞர் புகார்: நடிகர் சூர்யா விளக்கம் || மின்சாரம் பாய்ந்து இறந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் || மா.செயலாளர்கள் கூட்டம்: வைகோ அறிவிப்பு || மாநிலங்களவைத் தேர்தல்: பாஜக வேட்பாளர்களின் 2வது கட்ட பட்டியல் || நட்பைக் கெடுக்க சதி: கலைஞர் || 3 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வாய்ப்பு: ராஜேஷ் லக்கானி || தேர்தல் செலவு கணக்குகளை ஜூன் 19க்குள் தாக்கல் செய்ய வேண்டும்: ராஜேஷ் லக்கானி || ஒளிவு மறைவின்றி சொன்னால்தானே தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை ஏற்படும்: கலைஞர் || சச்சின், லதா மங்கேஷ்கரை கேலி செய்யும் விதமாக வீடியோ: நகைச்சுவை நடிகர் மீது வழக்கு || சிவகாசி - பட்டாசு ஆலையில் வெடி விபத்து - ஒருவர் உயிரிழப்பு ||
Logo
ஹெல்த்
நலம் தரும் சூப்...
......................................
யோகம் செய்யுங்கள் பிறையாசனம்
......................................
மல்லிகைக்கு குணமும் உண்டு
......................................
வரும்முன் காப்போம்
......................................
வேண்டாமே... விவாகரத்து...
......................................
நம்ம மண்ணு நம்ம மருந்து
......................................
பழங்கள் - பேரீச்சை
......................................
கர்ப்பவதிகளுக்கு...
......................................
கொல்லிமலை ரகசியம்
......................................
சிரிப்பு...
......................................
அழகிய குறிப்புகள்...
......................................
இம்மாத மூலிகை - சீந்தில்
......................................
பார்த்தேன்... கேட்டேன்...
......................................
சித்தர்களை தெரிந்துகொள்வோம்
......................................
குழந்தை மருத்துவம்
......................................
கணுக்கால் வலியா...
......................................
மனித உடலின் புதிர்கள்-வர்மத்தின் மர்மங்கள்
......................................
மூலிகை சமையல்
......................................
01-11-2008


சிரிப்பு...

         புன்னகையை பொன்னகைக்கு ஒப்பிடுவார்கள்.  ஆம் உடல் முழுவதும் தங்கத்தால் அணிகலன்கள் அணிந்திருந்தாலும் சிறிது புன்னகையிருந்தால்தான் பொன்னகையும் ஜொலிக்கும் என்பார்கள் நம் முன்னோர்கள்.

மனிதனுக்கு இயற்கை வழங்கியிருக்கும் சக்தி வாய்ந்த மருந்து சிரிப்பு என்று மருத்துவ விஞ்ஞானம் சொல்கின்றது. 

சிரிப்பு என்பது பிறரைகேலி, கிண்டல் செய்வதால் வருவதல்ல. உங்கள் உள் மனதின் வெளிப்பாடே சிரிப்பாக வரவேண்டும்.

தற்போது சிரிப்பு என்பதே மறந்து போய்விட்டது.  காலை முதல் இரவு வரை பரபரப்பான வாழ்க்கை முறை. இதில் மன அழுத்தம், மன உளைச்சல், பொருளாதார போராட்டம் என பல நெருக்கடிகள், தொந்தரவுகள். இதில் எங்கே நாம் சிரிப்பது என்று நினைக்கின்றனர்.  முதலில் போராட்டம் இல்லாத உயிர்களே இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.  ஒவ்வொருவருடைய வாழ்விலும் நெருக்கடிகள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.

இந்த நெருக்கடிகளின் தன்மை வேண்டுமானால் மாறலாம்.  அவற்றின் பாதிப்புகள் எல்லாம் ஒன்றுதான்.

இரவு படுக்கைக்கு செல்லும்முன் நினைத்துப் பாருங்கள்.  இன்று நாம் எத்தனை முறை சிரித்து உள்ளோம், எத்தனை முறை கோபப்பட்டுள்ளோம் என்று.  இதில் சிரிப்பு என்னமோ சிக்கனமாகத்தான் இருக்கும்.

சிரித்து வாழவேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே என்ற பாடலின் வரியைப் போல் வாழ வேண்டும்.

நாம் ஒவ்வொரு முறை சிரிக்கும்போதும் நம் ஆயுளின் அளவு அதிகரிக்கின்றது என்றார் ஒரு அறிஞர்.

பழங்காலத்தில் நம் முன்னோர்கள் திருவிழாக்கள் கொண்டாடியதே அனைவரும் கூடி மகிழத்தான்.  இயல், இசை, நாடகம் என மூன்று பிரிவுகளாகப் பிரித்து மக்களின் மனங்களை புத்துணர்வு பெறச் செய்தார்கள்.

நகைச்சுவை உணர்வு சினிமாவில்தான் இருக்கிறது.  அந்த உணர்வுதான்  அடித்தட்டு மக்களையும் இன்றும் சிரிக்க வைக்கின்றது.  ஒரு மனிதன் சிரிக்கும்போது அவனது முகத்தில் 16 விதமான தசைகள் தளர்ச்சியடைகின்றன.  உடலானது இறுக்கம் நீங்கி புத்துணர்வு பெறுகின்றது. 

ஆனால் ஒருவர் கோபப்படும்போது 68 விதமான தசைகள் இறுக்கம் அடைகின்றன.  இந்த இறுக்கம்தான் மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது.  இதனால் உடலின் இரத்தம் சூடாகின்றது.  ஜீரண உறுப்புகளின் செயல்பாடு குறைகின்றது.  மலச்சிக்கல் உருவாகின்றது.  கோபம்தான் மனிதனின் எதிரி. ஆனால் புன்னகை நமக்கு நண்பன்.

அதற்காக கோபப்பட வேண்டிய இடத்தில் கோபத்தை காட்டாமல் இருக்கக் கூடாது.  அதை அடக்கவும் கூடாது.

கோபத்தை குறைக்க நகைச்சுவை உணர்வே சிறந்த மருந்தாகும்.  இந்த நகைச்சுவையானது ஒருவருக்கு வாய்க்குமானால் அவர்கள் வாழ்வு இனிமையாகும்.  அவர்களுடைய குடும்பத்திலும் மகிழ்ச்சி பொங்கும்.

சிரிப்பின் பயன்கள்
· ஒரு மனிதன் சிரிக்கும்போது அவனுடைய உடலில் பல இரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன.

· உடலின் இரத்த ஓட்டம் சீராகும்.  இதனால் இருதயத் துடிப்பு சீராகும்.  இரத்த அழுத்த நோய்கள் உள்ளவர்களுக்கு சிரிப்பு ஒரு சிறந்த மருந்து.

· சிரிக்கும்போது நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள பிராண வாய்வு நன்கு உட்சென்று உடலுக்கு புத்துணர்வைத் தரும்.

· சிரிப்பதால் மன அழுத்தம், மன இறுக்கம், மன உளைச்சல் குறையும்.

· ஜீரண உறுப்புகள் சீராக செயல்பட்டு மலச்சிக்கல் தீரும்.

· சிந்தனை, செயல் அதிகரிக்க சிரிப்பே சிறந்தது.

· அதிக டென்ஷன் உள்ளவர்கள், வேலைப்பளு கொண்டவர்கள் சிறிது நேரம் நகைச்சுவை காட்சிகளைப் பார்ப்பது நல்லது.  அப்போது நம்மை அறியாமலேயே சிரிப்பு தோன்றும்.  அப்போது டென்ஷன் குறைந்து உடலும் மனமும் புத்துணர்வு பெறும்.

· நாம் கோபப்படும் போது நமது உடல், மனம், மட்டுமல்லாமல் நம்மைச் சுற்றியுள்ளவர்களும், குடும்பத்தில் உள்ளவர்களும் பாதிக்கப்படுவார்கள். 

· கோபத்தைக் குறைத்து சிறிது புன்னகையுடன் நடந்துகொண்டால் சொர்க்கம் என்பது வேறெங்கும் இல்லை,  நம்மைச்சுற்றிதான் என்பதை நம்மால் உணர முடியும்.

தற்போது நகைச்சுவை மன்றங்கள் அதிகரித்திருப்பது ஆரோக்கிய வாழ்விற்கு நல்லது.  பிறர் மனது புண்படும்படி சிரிப்பதோ, நக்கலாக சிரிப்பதோ சிரிப்பல்ல.  மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய, உள்மனதிலிருந்து வரும் சிரிப்பே மகத்தானது.

இவ்வுலகை ரசிப்போம்... மனம் விட்டுச் சிரிப்போம்... நம் வாழ்வை நேசிப்போம்... வாய்விட்டு சிரித்தால்  நோய்விட்டுப் போகும் என்று சும்மாவா சொன்னாங்க...


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :
கருத்துக்கள்(2)
Name : praveen Date & Time : 2/15/2009 5:54:59 PM
-----------------------------------------------------------------------------------------------------
மாமா நலமா....
-----------------------------------------------------------------------------------------------------
Name : sethu Date & Time : 12/6/2008 4:39:19 PM
-----------------------------------------------------------------------------------------------------
சிரிப்பது நல்லது தான்‍‍, ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டு, ஓவரா சிரிச்சா "வேற பேரு" உண்டு "ஹி ஹி ஹி "
-----------------------------------------------------------------------------------------------------