Skip to main content

ஒரு நாளைக்கு 10 வாட்டர் கேன்கள் முதல் மணிக்கு 1,000 வாட்டர் கேன்கள் வரை - WaterOnClick.com நிறுவனத்தின் சாதனைப் பயணம்!

Published on 24/01/2022 | Edited on 14/02/2022

 

பரக

 

ஆறு, ஏரி, கிணற்று நீரையே குடிநீராகப் பயன்படுத்தி, எந்த உடல் நலக் கோளாறும் இன்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர் நம் முன்னோர்கள். ஆனால் இன்றோ அடுத்த ஊருக்குச் சென்று தண்ணீர் குடித்தால் கூட உடனே தொண்டைக் கட்டிக்கொண்டு, சளி இருமல் தொந்தரவு வந்துவிடுகிறது. எனவே, சுத்தமான குடிநீரைத் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டுமென்பது இன்று இன்றியமையாத அத்தியாவசியம்.

 

இந்நிலையில், கடந்த 7 வருடங்களாக மக்களுக்காகத் தரமான தண்ணீரை தருகிறது WaterOnClick.com (வாட்டர் ஆன் கிளிக்) நிறுவனம். மக்களுக்குத் தண்ணீரைத் தரமாகக் கொடுக்க வேண்டும் என ஐ.டி (IT) வேலையை உதறிவிட்டு வந்திருக்கிறார்கள், கார்த்திகேயன் மற்றும் சதீஷ்குமார். இரு நண்பர்கள் சேர்ந்து ஆரம்பித்த தொழில் இப்போது சென்னை தாண்டி வெளி மாவட்டம், வெளி மாநிலம் எனப் பயணித்துக் கொண்டிருக்கிறது. இதுபற்றிய அனுபவங்களை அவர்களிடம் கேட்டோம்.

 

முதலில் பேசிய சதீஷ்குமார், "கேன்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் தண்ணீர் உண்மையில் எங்கிருந்து கிடைக்கிறது. எப்படிச் சுத்தப்படுத்தப்படுகிறது. எந்த அளவுக்குப் பாதுகாப்பானது என்பது பற்றி யாருக்கும் தெரிவதில்லை. என்னதான் புது லேபிள் ஒட்டினாலும், பலர் குழாய் நீரையே பிடித்து கேனில் அடைத்து விற்பனை செய்வதும் நடந்துகொண்டு தான் இருக்கிறது. கேன்களை குறைந்த பட்சம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். ஆனால் பெரும்பாலும் 2 ஆண்டுகளுக்கும் மேலாக அதே பழைய கேன்களில் தான் நிரப்புகிறார்கள். நாள்பட்ட கேன்களில் தண்ணீரை அடைக்கும்போது அதன் மூலம் பாக்டீரியாக்கள் உருவாகும். இப்படிப்பட்ட தண்ணீரைத் தான் பெரும்பாலான மக்கள் குடிக்கின்றனர். இதனால், வயிற்றுப்போக்கு, சுவாச நோய், எலும்பு நோய், சிறுநீரக நோய், தோல் புற்று நோய்கள் உருவாகிறது. 

 

நீண்ட நாட்களாகவே இதைத்தடுக்க மக்களுக்குத் தரமான தண்ணீரைத் தர வேண்டும் என நானும் எனது நண்பர் கார்த்திகேயனும் ஆலோசித்துக் கொண்டிருந்தோம். 2013-ம் ஆண்டு இருவரும் ஐ.டி வேலையிலிருந்து வெளியேறி இந்த நிறுவனத்தை ஆரம்பித்தோம். நாங்கள் நினைத்திருந்தால் சொந்தமாக ஒரு வாட்டர் பிளாண்ட் அமைத்து தண்ணீர் கேன் சப்ளை செய்திருக்கலாம். ஆனால் மற்றவர்கள் அப்படியேதான் விற்பனை செய்யப்போகிறார்கள். அவர்களை முறைப்படுத்த வேண்டும் என நினைத்தோம். அதனால்தான் தண்ணீரை வழங்கும் நிறுவனங்களை ஒருங்கிணைத்து ஒரு நிறுவனமாக உருவாக்கினோம். இருவருக்கும் கணினித்துறை பழக்கப்பட்டது என்பதால் நிறுவனத்தை உருவாக்குவது மற்றும் அதற்கு தேவையான WaterOnClick.com என்ற இணையதளம் உருவாக்குவது இரண்டும் இன்னும் எளிதானது. 

 

ுபர

 

2013-ல் ஆரம்பித்த எங்கள் நிறுவனம் சென்னை வேளச்சேரி பகுதியில் மட்டும் தண்ணீரை சப்ளை செய்து வந்தோம். 2014-15-ம் ஆண்டுக்குப் பின்னர் எங்களது நிறுவனத்தை விரிவுபடுத்தினோம். இப்போது பாண்டிச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் 15+ முக்கிய நகரங்களில் வாட்டர் ஆன் கிளிக் சர்வீஸ் செயல்பட்டு வருகிறது. சுமார் 200 விற்பனையாளர்கள் எங்களிடம் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு 10 வாட்டர் கேன்கள் சப்ளை செய்து கொண்டிருந்த எங்கள் நிறுவனம் இப்போது ஒரு மணி நேரத்துக்கு 1,000 வாட்டர் கேன்களுக்கு மேல் சப்ளை செய்து கொண்டிருக்கிறது." என்றார்.

 

jlk

 

பின்னர் தொடர்ந்த கார்த்திகேயன், "குடிநீரை வடிகட்டி சுத்திகரிப்பதில் 5-7 விதிமுறைகளைக் கையாள வேண்டும். அதன் பிறகே விற்பனைக்கு அனுப்ப வேண்டும். ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள் இவற்றைச் செய்வதில்லை. இன்னொரு விஷயம் முக்கியமாகக் கவனிக்க வேண்டும். இப்போது 20-30 ரூபாய் கொடுத்து வாங்கும் தண்ணீரில்தான் அத்தனை அசுத்தங்களும் இருக்கின்றன. எல்லாவற்றையும் சரியாகச் செய்து ஒரு கேனை 20-30 ரூபாய்க்கு தர முடியாது. இதைக் களைவதற்காகத்தான் நாங்கள் நிறுவனமே ஆரம்பித்தோம். எங்களுடன் தரமான தண்ணீர் விற்பனையாளர்கள் தொடர்பில் இருக்கிறார்கள். நாங்களே அந்த கம்பெனிகளுக்குப் போய் சரியாக இருக்கிறதா எனப் பார்த்து அதன் பின்னர்தான் எங்கள் நிறுவனத்தின் மூலம் தண்ணீரை சப்ளை செய்ய சொல்வோம். 

 

மக்களும் WaterOnClick.com இணையதளம் மற்றும் மொபைல் ஆப் மூலமாக தங்களுக்குத் தேவையான தண்ணீரை ஆர்டர் செய்தால் வீட்டுக்கே தண்ணீர் கொண்டுவந்து சப்ளை செய்கிறோம். எங்கள் மூலம் தண்ணீரை விற்பனை செய்ய விருப்பமுள்ள விற்பனையாளர்கள் எங்களை அணுகலாம். இறுதியாக மக்களுக்குச் சொல்லிக் கொள்வது ஒன்றுதான் - கேன் வாட்டரில் மேல் மூடியில் சீல் (Seal) மற்றும் ஐ.எஸ்.ஐ (ISI) முத்திரை இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும்." என்றார்.

 

WaterOnClick குறித்த மேலும் தகவல்களுக்கு - https://wateronclick.com என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளவும்!