Skip to main content

தோனியே என்னை கலாய்த்தார்; 'ஆர்ஜே' சிவசங்கரி கலகல

Published on 11/05/2023 | Edited on 11/05/2023

 

 RJ Shivashankari Interview

 

வெற்றிகரமான ரேடியோ வர்ணனையாளராக பயணித்து வரும் ஆர்ஜே சிவசங்கரியுடன் ஒரு நேர்காணல்...

 

ரேடியோவில் பேசுவது என்பது என்னை நானே ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் ஒரு வாய்ப்பு. தினமும் மைக்கை ஆன் செய்யும்போது என்னுடைய பாசிடிவ் பக்கம் மட்டுமே வெளிவருகிறது. என்னுடைய கவலைகள் அனைத்தையும் அது மறக்க வைக்கிறது. என்னை இன்னும் சிறந்த ஒரு மனிதராக மாற்றுகிறது. காலை மற்றும் இரவு நேரங்களில் அதற்கேற்ற மாடுலேஷனில் நாங்கள் பேசுவோம். ஆர்ஜே-வாக இருக்கும்போது நம்முடைய தோற்றத்தை விட திறமைக்கு அதிக மதிப்பிருக்கும் என்பதால் பெண்கள் இந்தத் துறையில் நுழைய அதிகம் விரும்புகின்றனர். ஒரு பெண்ணாக இருப்பதால் அவளை மட்டும் தட்டுவது முதலில் மாற வேண்டும். பெண்ணும் ஆணைப் போல் சமமாக மதிக்கப்பட வேண்டும்.

 

ஒரு ஆர்ஜே-வால் மக்களுடைய மூடை மாற்ற முடியும். தொழில்நுட்பம் எவ்வளவு முன்னேறினாலும் ரேடியோவுக்கான ஆதரவு குறையாது என்றே நான் நினைக்கிறேன். ஆர்ஜே என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எந்த விதியும் இல்லை. ஒரு ஆர்ஜே இயல்பாக இருக்க வேண்டும். எங்களுடைய பணியில் ஒரே நேரத்தில் நிறைய தலைப்புகள் பற்றி பேச வேண்டி வரும். 

 

ஒருமுறை தவறான மேட்சை பார்த்துவிட்டு கிரிக்கெட் அப்டேட் கொடுத்ததை மறக்கவே முடியாது. தோனியே கால் செய்து யார் அந்த அப்டேட் கொடுத்தது என்று கேட்பார் என்று அனைவரும் என்னை கலாய்த்தனர். ஆனால் அது தவறான அப்டேட் என்பதை நான் தான் அனைவருக்கும் சொன்னேன். இப்படி நான் செய்யும் தவறுகளை நானே வெளியே சொல்லி விடுவேன். ஹாரர் ஆர்ஜே என்கிற பெயரும் எனக்கு உண்டு. ரஜினி சாரை ஒருமுறை பேட்டி எடுக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. அவர் கண்டக்டராக இருந்ததால் பேருந்தில் வைத்து அவரை பேட்டி எடுக்க வேண்டும். 

 

சோசியல் மீடியாவில் வரும் நெகட்டிவிட்டி மனதை டிஸ்டர்ப் செய்யும். ஒருவரை காயப்படுத்தி விமர்சனம் செய்யும் முறையில் இருந்து நம்முடைய தலைமுறை மாற வேண்டும்.