Skip to main content

அரசியல் தலைவர் கமல் - அன்பும் அறச்சீற்றமும்! Day 1 Highlights

Published on 21/02/2018 | Edited on 22/02/2018

‘நடிகர்’ கமல்ஹாசன் என்னும் குறியீட்டிலிருந்து விலகி,  அரசியல் கட்சி தலைவராக இன்று மாலை மதுரையில்  அவதாரம் எடுக்கிறார் கமல்ஹாசன். முழுநேர அரசியல்வாதியாக  கமல் உதிர்த்த சில முத்துகளின் தொகுப்பு பின் வருமாறு. 
 

Kamal Hassan as political leader



நேற்று மதுரை வந்தடைந்த கமலிடம், அரசியலில் காகித பூக்கள் மணக்காது என்ற மு.க.ஸ்டாலின் விமர்சனத்திற்கு பதில் கேட்க,  “நான் பூ அல்ல விதை, என்னை முகர்ந்து பார்க்காமல் விதைத்து பாருங்கள், நிச்சயம் முளைப்பேன்” என்று பதிலடி கொடுத்தார். 

அப்துல் கலாம் படித்த பள்ளிக்கு செல்ல மாவட்ட கல்வித் துறை அனுமதி மறுத்தது. இதன் பின் அரசியல் இருப்பதாகக் கருதும் கமல், இது குறித்த கேள்விக்கு  “நான் பள்ளிக்குப் போவதை தான் அவர்களால் தடுக்க முடியும், பாடம் படிப்பதை அல்ல. இது மாதிரி தடைகளை தொடர்ந்து ஏற்படுத்தினால், தடைகளை வென்றே சரித்திரம் படைப்பேன்” என்று பத்திரிகையாளர் சந்திப்பில் தீர்மானமாக கூறினார்.

மீனவர்களுடனான சந்திப்பில் “எங்கள் கட்சியில் பொன்னாடை  பழக்கம் கிடையாது. அதற்கு பதில் நானே உடையாவேன். பதிலுக்கு நீங்கள் என்னை அணைப்பதே இனி நான் விரும்பும் ஆடை” என்று மீனவ பிரதிநிதிகளை கட்டியணைத்தார் கமல்.

தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை பட்டியலிட்ட மீனவ பிரதிநிதி போஸ் “தங்களை மத்திய மாநில அரசுகள் ஏமாற்றும் இந்த தருணத்தில், கடலில் தத்தளிக்கும் மீனவனை காப்பாற்றும் துடுப்பாக கமலை பார்க்கிறோம்” என்றார். அவரிடம் ஒரு நிருபர் “நீங்கள் கமல் கட்சியில் இணைய உள்ளீர்களா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு போஸ், “எங்களுக்கு நல்லது யாரு செய்தாலும் ஆதரவு அளிப்போம்” என்று முடிப்பதற்குள் குறுக்கிட்ட கமல் “நான் என் கட்சிக்கு ஆள் சேர்க்க இங்கு வரவில்லை, என்னை இவர்களுடன் இணைத்துக் கொள்ள வந்திருக்கிறேன்” என்று நம்மவராய் மீனவர்களை மீண்டும் நெகிழ வைத்தார்.

 

Kamal Hassan as political leader



மதிய உணவிற்கு பின் தனது ரசிகர்கள் முன் உரையாற்றிய கமல், “இதுவரை நான் சினிமா நட்சத்திரம், இனிமேல் நான் உங்கள் வீட்டின் விளக்கு, அதை ஏற்றுவதும், அணையாமல் பாதுகாப்பதும் உங்கள் பொறுப்பு” என்று கமல் முடிக்க விண்ணை முட்டியது ரசிகர்களின் ஆராவாரம்.

“இராமநாதபுரத்தில் என் சித்தப்பா வீடு இருக்கிறது. ஆனால் இன்று உங்களை பார்க்கும் பொழுது நான் வந்து போக  இங்கு ஒரு வீடில்லை, பல வீடு இருக்கிறது” என்று சொல்ல.. வீட்டுக்கு வா தலைவா என்று முதல் வரிசை ரசிகர் கமலுக்கு அழைப்பு விடுத்தார். “ஆமாங்க, ஒவ்வொரு வீட்டுக்கும் வருவேன்” என கமல் உடனடியாக சம்மதிக்க, இதை சற்றும் எதிர்பார்க்காத கூட்டம்  கலகலப்பானது. 

Next Story

நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல்; குழு அமைத்த கமல்ஹாசன்

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
Parliamentary elections approaching; Kamal Haasan announce Team

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழு மற்றும் கூட்டணி தொகுதிப் பங்கீடு ஆகிய விஷயங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தல் பணி ஒருங்கிணைப்புக் குழுவை கட்சித் தலைமை அறிவித்துள்ளது.  மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஒருங்கிணைப்புக் குழு குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். ஏ.ஜி. மௌரியா, தங்கவேலு, அருணாச்சலம் ஆகியோர் அடங்கிய தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான செயல் திட்டங்களை உருவாக்கவும், செயல்படுத்தவும் இவர்களுக்கு வழிகாட்டுதல் அளிக்கப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Next Story

'அது ஒரு கருவிதான்'-பணம் குறித்து கமல்ஹாசன் பேச்சு

Published on 24/09/2023 | Edited on 24/09/2023

 

'It's a tool' - Kamal Haasan talks about money

 

கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பணம் குறித்து உரையாற்றிய பேச்சு இணையத்தில்  வைரலாகி வருகிறது.

 

கமல்ஹாசன் பேசியதாவது, ''என்னோட அனுபவத்தில் சொல்கிறேன். மூச்சு இல்லாமல் 40 செகண்ட் அல்லது ஒரு நிமிடம் தாங்குவோம். தண்ணி இல்லாமல் ஆறு ஏலு நாட்கள் தாங்குவோம். சாப்பாடு இல்லாமல் பத்து நாட்கள் தாங்குவோம். அதைவிட பணம் எப்படி முக்கியமாக இருக்க முடியும். இதையெல்லாம் வாங்குவதற்கு அது ஒரு கருவி. ஆண்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் தாடி வைக்க வேண்டுமா அல்லது மழிக்க வேண்டுமா என்பது உங்களுடைய இஷ்டம். அதை நீங்கள் பிளேடு கிட்டப் போய் கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது. அதுவெறும் கருவி தான். அதுவா சொல்லும் வேணாம் தாடிய கொஞ்சம் நீளமாகவே வச்சுக்கோ அல்லது முழுவதும் சவரம் பண்ணிக்க, இல்ல மீசை மட்டும் வச்சுக்க என பிளேடுக்கு சொல்லத் தெரியாது. அவ்வளவுதான் பணமும். அது பேசாமடந்தை.

 

நான் சினிமா நடிக்க வந்த பொழுது இப்படி எல்லாம் நடிக்க முடியுமா என்று பலர் இருந்தனர். முக்கியமாக என் ஏரிக்கரையில் தெரிந்த முதல் சூரியன் சிவாஜி. அதன் பிறகு தான் இப்படி ஒரு கேலக்ஸி இருக்கிறது என்றே தெரியும். அதற்கு காரணம் எனக்கு கோனார் நோட்ஸ் கொடுத்து பொழிப்புரை சொல்லி அனுப்பி வைத்தவர் சிவாஜி சார் தான். நான் உங்களுக்குச் சொல்லிக் கொள்வதெல்லாம் இன்னொரு சிவாஜி ஆகவேண்டும் என நான் நினைக்கவே இல்லை. இன்னொரு சிவாஜி வருவாரா என்று கூட கேட்கவில்லை'' என்றார்.