Skip to main content

"ஸ்டாலின் ஜாதகத்தை ஜோசியரிடம் பார்த்தேன்..." - ஹெச்.ராஜா 

Published on 11/04/2018 | Edited on 11/04/2018

கடந்த 8ஆம் தேதி சென்னையில் நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் அந்தக் கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பேசினார்...

 

H.Raja speech



"மத்திய அரசின் திட்டங்களின் காரணமாக மக்கள் மத்திய அரசின்பால், பா.ஜ.கட்சியின்பால், பிரதமர் மோடியின்பால் திரும்பிக் கொண்டிருப்பதால், தமிழகத்தில் உள்ள ஐந்து தீய சக்திகளும் ஒன்றாக சேர்ந்து, ஏதோ தமிழகத்தை பா.ஜ.க. வஞ்சிப்பது போன்று பொய்களை பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், நாத்திகவாதிகள், இவாஞ்சலிஸ்ட் (மத போதகர்கள்), டெரரிஸ்ட்  இந்த ஐந்து தீய சக்திகளும் சேர்ந்து தமிழகத்திலே ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியும். தமிழகம் வஞ்சிக்கப்பட்டதுபோல, அதாவது இவர்கள் கடந்தகாலங்களில் செய்தவற்றை சொல்லி மக்களை திசை திருப்ப பார்க்கிறார்கள்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்... வைகோ நடைபயணம் போறாரு. சுகர் கூடிப்போனா டாக்டர் ஒரு மணிநேரத்துக்கு பதிலாக இரண்டு மணிநேரம் நடக்கத்தான் செய்வார்கள். அதுக்காக இது ஒரு காரணமா? பக்கத்து வீட்டு குழந்தை, "தாத்தா, வைகோ தாத்தா ஏன் நியூட்ரின் சாக்லெட்டை எதிர்த்து நடைபயணம் போறாரு?"னு கேக்குது. நியூட்ரினோ திட்டத்தை பற்றி வைகோவிற்கு தெரியுமா? விஞ்ஞானிகள் முடிவு செய்ய வேண்டியதை வெட்டிக் கூட்டம் வீதியிலே முடிவு செய்யக்கூடாது. யார் கொண்டு வந்தது நியூட்ரினோ திட்டத்தை? 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் டாடா இன்ஸ்டிடியூட் டி.என்.டி.எப் கிளியரன்ஸ்காக அப்ளை செய்திருந்தது. 2010 அக்டோபர் மாதம் டி.என்.டி.எப். அனுமதி கொடுக்குது அப்போதானே ஆய்வு தொடங்குது? வைகோவிற்குதான் பழக்கம் இது. அங்கே போய் ஸ்டாலின் நிக்கிறாரே? ஸ்டாலினை வைத்துக்கொண்டு வைகோ இப்படி துவங்கலாமா? இவங்க ஆட்சிதான க்ளியரன்ஸ் கொடுத்தது? மத்திய அரசு க்ளியரன்ஸ் கொடுக்கும் போது சுற்றுச்சூழல் அமைச்சர் யாரு ஆ.ராசாதானே? 

 

chidambaram with anil agarwal

ஸ்டெர்லைட் அணில் அகர்வாலுடன் ப.சிதம்பரம்


நானும் ஸ்டாலினுக்கு ஜாதகத்தை ஜோசியர்கிட்ட கொடுத்துப் பார்த்தேன், அவருக்கு சி.எம் ஆகுற வாய்ப்பே இல்லனு சொல்லிட்டாரு. அதுனாலதான்  'பொன்னார்'னு சொல்லுறதுக்கு 'பொன்னர் சங்கர்'னு சொல்றாரு 'எடப்பாடி'க்கு 'வாழப்பாடி'னு சொல்லறாரு, 'பூனை மேல் மதில் போல'னு  சொல்றாரு. பூனை மேல மதில வச்சா பூனை இறந்துடாதா? 'யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே'னு சொல்றாரு. சோசியல் மீடியால கூட ஒரு யானை வால போட்டு அதுல மணிய கட்டிவிட்ருக்காங்க. என்ன பேசறதுனே தெரியாம மனச்சிதைவுல இருக்காங்க. ஸ்டாலின் நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன், கதிராமங்கலம் போன்ற தமிழகத்துக்கு எதிரான திட்டங்களை மோடி அரசு கொண்டுவந்ததுனு சொல்றாரு. பொய் பேசுறதுக்கு வெக்கப்பட வேண்டாமா? ஏற்கனவே சொன்னேன், நியூட்ரினோ திமுக கொண்டுவந்தது. இப்போ அவரே சொல்றாரு சுனாமி வந்துவிடுமாம். 

அதவிட பெரிய விஞ்ஞானி ஒருத்தர் இருக்காரு. வைகோ... அவரு சொல்றாரு நாளைக்கு அமெரிக்காகாரனுக்கும் இந்தியாவுக்கும் போர் வந்தா அவன் தமிழ்நாட்ல இருக்க நியூட்ரினோ ஆய்வு பண்ணுகிற இடத்த டார்கெட் பண்ணி குண்டு போடுவான். இதுனால சுத்தியுள்ள ஐந்து மாவட்டம் அழிஞ்சு போகும்னு. பேசறத ஆதாரத்தோடு அறிவோட பேசணும். 1965-ல பாகிஸ்தான் யுத்தம்... எங்க ஊர்ல பாகிஸ்தான்காரன்  குண்டுபோட்டான். ஏன்னா காரைக்குடியில சென்ட்ரல் எலக்ட்ரோ கெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் இருந்தது. அதனால குண்டு போட்டான். பாகிஸ்தான்காரன் எப்போதுமே தற்குறி. அது குறிதவறி குளத்துல விழுந்துருச்சு. அதுக்காக, 'பாகிஸ்தான் டார்கெட் பண்ணுறான். அந்த இன்ஸ்டிடியூட்ட இழுத்து மூடு'னு சொல்றது எப்படிப்பட்ட புத்திசாலித்தனமோ அதே போன்றதுதான் வைகோ பண்ணுவதும் இருக்கு.
 

stalin inaugrates vaiko walkathon



அதே போல் ஸ்டெர்லைட் காங்கிரஸ், திமுக, அதிமுகவோட கூட்டுச்சதி. 1992-ல மகாராஷ்டிரால் ரத்தினகிரில வேண்டாமென்று நிராகரிக்கப்பட்ட திட்டம் தமிழகத்திற்கு வந்ததுக்கு அதிமுகதான் காரணம். அதை மறைக்க முடியுமா? அதே போல் ஸ்டெர்லைட்டின் நான்-எக்சிக்கியூட்டிவ் டைரக்டரா இருந்தது காங்கிரஸின் சிதம்பரம் தானே? 1996-ல ரிப்பன் கட்டி திறந்து வச்சது யாரு கலைஞர்தானே? எப்படி மறக்கமுடியும்? அப்போ பா.ஜ.க சார்பா பொன்ராதாகிருஷ்ணன் தூத்துக்குடில நாலு நாள் உண்ணாவிரதம் இருந்தாரு.  நான்தானே முடித்து வைத்தேன்? நான் சில நேரத்துல உண்மைய பேசிடுவேன். எனக்கு அட்வான்டேஜூம் அதுதான், டிஸ்அட்வான்டேஜூம் அதுதான்.

2003-ல காரைக்குடி பக்கத்துல அமராவதி புதூர்ல ஸ்டெர்லைட்டுக்கான எல்லா க்ளியரன்ஸையும் ப.சிதம்பரம் பண்ணிட்டாரு. அப்போ முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அண்ணாமலை செட்டியார் என்னை தேடிவந்தார். அப்பொழுது நான் சட்டமன்ற உறுப்பினர். "ஸ்டெர்லைட்டுக்கு நிலத்தடி நீர் உபயோகிக்கப்பட போகிறது காரைக்குடி மட்டுமல்ல சிவகங்கையே நிலத்தடி நீரை வைத்துதான் வாழுகிறது எல்லாம் வானம்பார்த்த பூமி  என்று கூறினார். நான் அவரிடம் சொன்னேன். "ப.சிதம்பரத்தை எதிர்த்து பஞ்சாயத்துல தீர்மானம் நிறைவேற்றமுடியுமா?" என்று கேட்டேன். அவரும் ஒப்புக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றினார். அந்தத் தீர்மானத்தை எதிர்த்து  ஜனாதிபதிகிட்டயே போனாலும் ஒன்னும் பண்ண முடியாது, மீற முடியாது தெரியுமா? ஆனா இப்போ தூத்துக்குடி ஆலையோட எக்ஸ்பேன்ஷன் அனுமதிக்கு நீதிமன்றத்துக்குப்  போயிருக்காங்க. இனி தடுக்குணும்னா கோர்ட்டுக்குதான் போகணும்.

 

h.raja speech 1



என்னமோ மோடி கையில பூட்டு வச்சிருக்காரு, வர வச்சு பூட்டு போட்டுடலாம்னு நெனைக்குற முட்டாள் பய கூட்டம் இது. எதுக்கு யாரை குறைசொல்வது? மோடி அரசா காரணம் ஸ்டெர்லைட்டுக்கு? பொட்டி வாங்கின காங்கிரஸ், திமுக, அதிமுக, ப.சிதம்பரம் முட்டாள் கும்பல் இன்னைக்கு பாஜகவுக்கு எதிரா போராடலாமா? ஈ.வே.ரா இதைத்தான  சொன்னாரு, 'எனக்கு முட்டாள் பயகூட்டம்தான் வேணும்ன்னு? அண்ணாதுரை, கருணாநிதினு இந்த முட்டாப்பயலுங்க கூட்டம்தான் இப்போ தமிழ்நாட்டு மக்களை முட்டாளாக்கிட்ருக்காங்க.

வைகோவும் சீமானும் போடுற சண்டையைப் பார்த்தால் இன்னொரு பத்மநாபா கொலை மாதிரி ஒரு கொலை நடந்துடும் போல. அதுக்கு பெயர் வேற வெச்சிருக்காங்களாம், சகோதர யுத்தம்னு. ஆனா இப்போதான் ஒன்னு புரியுது.  எல்.டி.டி-யை ஆதரிச்சவன் எல்லாம் காசு பார்க்கலாம்னு தெரியுது, யார் எவ்வளவு காசு பார்த்தாங்கனு பின்னாடி கணக்கு பாத்துக்கலாம்."