Skip to main content

கைபேசிகளில் வந்துவிழும் நட்பு சேவை குறுந்தகவல்! -ஆர்வம் காட்டினால் பணம் பணால்!

Published on 11/10/2018 | Edited on 11/10/2018

‘உங்கள் பகுதியில் நல்ல நண்பர் வேண்டுமென்றால், செல்போன் அல்லது வாட்ஸ்-ஆப் மூலம் என்னைத் தொடர்பு கொள்ளவும் - ரேணு 9600853317’ என, 8220254997 என்ற எண்ணிலிருந்து நண்பர் ஒருவரின் கைபேசிக்கு குறுந்தகவல் வந்திருக்கிறது.  

 

ww

 

அந்த எண்ணில் அவர் தொடர்புகொண்டபோது, ரேணு லைனுக்கு வராததால், வாட்ஸ்-ஆப்பில் ‘யார் நீங்க?’ என்று கேட்டிருக்கிறார். பெயரைச் சொல்வதற்குப் பதிலாக,  ‘டேட்டிங் சேட்டிங் செக்ஸ் ரிலேஷன்ஷிப்’ என்று மெசேஜ் அனுப்பியிருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து, ‘வருடத்திற்கு 72 பெண்களின் தொடர்பு எண்களும், மாதம் ஒன்றுக்கு 6 பெண்களின் தொடர்பு எண்களும், அவர்கள் குறித்த தகவலும் தரப்படும்’ எனவும், ‘எங்களிடம் குடும்பப் பெண்கள், கல்லூரி மாணவிகள், விதவைகள், விவாகரத்தான பெண்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள், வியாபாரத்தில் ஈடுபடும் பெண்கள் என பலவகைகளில் உள்ளனர். இது ஒரு நண்பர்களின் சங்கம் (friendship club) ஆகும். இச்சங்கத்தில் இணைந்து உறுப்பினராக வேண்டுமென்றால், வருடத்துக்கு ரூ.6000 செலுத்த வேண்டும். இதற்கு, ஆன்லைன் பேங்கிங் அல்லது டெபாசிட் மூலம் பணம் கட்ட வேண்டும். பணம் செலுத்தி உறுப்பினரான 15 நிமிடங்களில், தங்களுக்கான சேவை தொடங்கிவிடும்.’ என்று ரேணு தரப்பில் தகவல்கள் வந்து குவிய, நண்பரும்  ‘நான் உங்களை எப்படி நம்புவது?’ என்று குறும்புத்தனமாகக் கேட்டிருக்கிறார். அதற்கு நேரடியாக பதிலளிக்காத ரேணு ‘உங்களுக்கு எந்த ஊரில் சேவை தேவைப்படும்?’ என்று கேட்டுவிட்டு, ‘எப்பொழுது பணம் செலுத்துவீர்கள்?’ என்று அவசரப்படுத்தியிருக்கிறாள். 

 

ww

 

மேலும் அவள்,  ‘நபேந்து ராய் என்ற பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிக் கணக்கில் (எண் 20006945641 (SBIN 0002070) பணம் செலுத்துங்கள் என்றும், மேற்கு வங்கத்தில் உள்ள சிலிகுரியைச் சேர்ந்த நான்,  இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் தொடர்பில் உள்ளேன். அதனால், எந்த ஊர்ப் பெண் என்றாலும் ‘லிங்க்’ ஏற்படுத்தித் தரமுடியும்’ என்றிருக்கிறாள். நண்பரும் விடவில்லை ‘உங்களுக்கென்று பிரத்யேக இணையதளம் எதுவும் இருக்கிறதா?’ என்று கேட்க,  ‘இல்லை.. நேரடியாக பெண்களுடன் தொடர்பு ஏற்படுத்தித் தருவோம்.’ என்றிருக்கிறாள். 

 

ww

 

ரேணு என்பவள் ஒரு டுபாக்கூர் என்பதை அறிந்துகொண்ட நண்பர், சேட்டில் ‘சைலண்ட்’ ஆகிவிட, அவளோ, ‘நீங்கள் எங்களை நம்பினால், தங்களுக்கு 100 சதவீதம் சேவை அளிப்பதற்குத் தயாராக இருக்கிறோம். பெண்கள் விஷயத்தில், உங்களுக்கு உண்மையிலேயே ஆர்வம் உண்டா? இல்லையா? ஆம் அல்லது இல்லை என்று சொல்லிவிடுங்கள்.’ என்று மெசேஜ் அனுப்பியிருக்கிறாள். நண்பரும் விளையாட்டாக ‘ஆர்வம் இல்லாமலா? உங்களுடன் இப்போது பேசலாமா?’ என்று கொக்கி போட, ‘காத்திருக்கவும். ஒரு மணி நேரம் கழித்து அழைக்கிறேன்.’ என்று பதிலளித்துவிட்டு, அன்று முழுவதும் தொடர்புகொள்ளவே இல்லை. மறுநாள் அவள் ‘குட் மார்னிங்! எப்போது பணம் செலுத்துவீர்கள்? தயவு செய்து பதிலளிக்கவும்.’ என்று மீண்டும் தொடர்புகொள்ள, இவரோ ‘அட போம்மா.. ஜொள்ளு பசங்ககிட்ட இருந்து பணம் பறிக்கிறதுக்கு உன்னை மாதிரி பிராடுங்க எத்தனை பேர் கிளம்பியிருக்கீங்க?’ என்று  ‘நச்’ என்று மெசேஜ் தட்டிவிட்டு,  ரேணுவுடனான சேட் விபரங்களை  ‘ஸ்க்ரீன் ஷாட்’ எடுத்து நமக்கு அனுப்பினார். 

 

www

 

கைபேசிக்கு வரும் அனாமதேய குறுந்தகவலை நம்பி ஆர்வம் காட்டினால்,   பணத்தை இழக்க வேண்டியதுதான்!