Skip to main content

ராகுல் பிடிவாதம்! உறுதி அளித்த சோனியா! - சமாதானம் அடைந்த அதிருப்தி தலைவர்கள்! 

Published on 30/12/2020 | Edited on 30/12/2020

 

ddd

 

நாடாளுமன்றத்திலும் சட்ட மன்றங்களிலும் தொடர்ச்சியாகத் தோல்வியை சந்தித்து வரும் காங்கிரசில் தலைவர் பதவியும் காலியாக இருக்கிறது. சொந்தக் கட்சியிலிருந்தே எதிர்ப்புக் குரல்கள் வலுக்கின்றன. தங்களின் அதிருப்திகளை வெளிப்படுத்தி 23 மூத்த தலைவர்கள் சோனியாவுக்கு கடிதம் எழுதியிருந்தனர். குறிப்பாக, "நீண்ட நெடிய வரலாறு கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு முழுநேர தலைவரை தேர்வுசெய்ய முடியாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது; விரைந்து தேர்வு செய்யுங்கள் அல்லது உள்கட்சித் தேர்தலை நடத்தி தலைவரை தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்தலை அறிவியுங்கள்; மாநில தலைவர்கள் சுதந்திரமாக இயங்குவதற்கேற்ற சூழலை கொண்டு வாருங்கள்; அகில இந்திய தலைமை மூலம் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளை நியமிக்கும் முறைகளை தவிர்த்து மாநில கமிட்டிகளுக்கு அதிகாரம் வழங்குங்கள்' என்பது உள்ளிட்ட 15 பக்க கடிதத்தை எழுதி 23 தலைவர்களும் போர்க்கொடி உயர்த்தியிருந்தனர்.

 

ddd"காங்கிரஸ் இல்லாத பாரதம்' என பா.ஜ.க. சொல்லி வரும் நிலையில், "அதிருப்தி கடிதம் எழுதியவர்களைத் துரோகிகளாக சித்தரிப்பதும் நடந்தது. காங்கிரசை பிளவுபடுத்த மோடி -அமீத்ஷாவின் சதி வலையில் கதர் சட்டையினர் வீழ்ந்துவிட்டனர்; அந்த துரோகிகளை கட்சியிலிருந்துகளை எடுக்கவேண்டும்; சில தேர்தல் தோல்விகளை வைத்து தலைமைக்கு எதிராக கடிதம் எழுதும் அவர்கள், கட்சியின் தேர்தல் வெற்றிக்காகவும், மாநிலங்களில் கட்சியின் வளர்ச்சிக்காகவும் என்ன செய்தார்கள்' என்கிற கோபாவேசத்தை ராகுல்காந்தியிடம் வெளிப்படுத்தினர் காங்கிரஸ் இளம் தலைவர்கள். இதன் மூலம் மூத்த தலைவர்களுக்கும் இளம் தலைவர்களுக்குமான அரசியல் இடைவெளி அதிகரித்தபடியே இருந்தது.

 

"இதனை வளரவிடாதீகள். சீக்கிரம் ஒரு முடிவை எடுங்கள்'‘என சோனியாவை சந்தித்து ஆலோசனை வழங்கியிருந்தார் முன்னாள் பிரதம ரும் மூத்த தலைவருமான மன்மோகன்சிங். அதனை வழிமொழிந்த சோனியா, அக்கறை காட்டத் துவங்கினார். இந்த நிலையில், டெல்லியில் அதி கரித்த காற்று மாசு பிரச்சனையால், டெல்லியி லிருந்து சில நாட்கள் வெளியில் தங்கியிருங்கள் என சோனியாவுக்கு அவரது குடும்ப டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதனால், ராகுல் மற்றும் பிரியங்காவுடன் கோவாவிற்கு இடம் மாறிய சோனியா. 20 நாட்கள் தங்கியிருந்துவிட்டு சமீபத்தில் டெல்லி திரும்பியிருக்கிறார்.

 

கோவாவில் தங்கியிருந்த நாட்களில் கட்சிக்கு முழுநேர தலைவரை தேர்வு செய்வதில் கவனம் செலுத்திய சோனியா, மீண்டும் தலைவர் பதவியை ஏற்க மறுத்துவரும் ராகுலின் பிடிவாதத்தை தளர்த்த வைத்திருக்கிறார். "சோனியாவுக்கு உதவி யாக பிரியங்காவும் வலியுறுத்திய நிலையில் ராகுலின் பிடிவாதம் தளர்ந்துள்ளது'’என்கிறார்கள் நம்மிடம் பேசிய தமிழக காங்கிரஸ் எம்.பி.க்களில் சிலர்.

 

இந்த நிலையில், ஜனவரி மாதம் நடக்கவிருக்கும் காங்கிரசின் அகில இந்திய மாநாட்டில் கட்சிக்கான முழுநேர தலைவரை அறிவிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது காங்கிரஸ். "இன்னும் 3 மாதங்களில் தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய 4 மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கும் சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில், காங்கிரசுக்கு தலைவரை தேர்வு செய்யாமல் இருப்பது கட்சிக்கு மேலும் பின்னடைவாகவே இருக்கும்' என மூத்த தலைவர் கள் கருதினர்.

 

dddஇதனையடுத்து, "சோனியாவும் அதிருப்தி தலைவர்களும் சந்தித்து பிரச்சனைகளை பேசித் தீர்க்கவேண்டும்' என மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வரும், சோனியாவின் விசுவாசியுமான கமல்நாத், அதற்கான முயற்சியில் இறங்கினார். அதிருப்தி தலைவர்களுடன் பேசினார். சோனியா விடம் விவாதித்து அதிருப்தி தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை ஏற்பாடு செய்தார் கமல்நாத்.

 

டெல்லியில் சோனியா தலைமையில் நடந்த அந்த ஆலோசனைக் கூட்டத்தில் மன்மோகன்சிங், ராகுல்காந்தி, ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம், கமல்நாத், அசோக் கெலட், அம்பிகாசோனி, வேணுகோபால், பிரியங்கா காந்தி, ரன்தீப் சுர்ஜிவாலா மற்றும் அதிருப்தி தலைவர் களான ராஜ்யசபா எதிர்க் கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத், துணைத்தலைவர் ஆனந்த் சர்மா, மகா ராஸ்ட்ரா முன்னாள் முதல் வர் பிரித்விராஜ் சவான், ஹரியானா முன்னாள் முதல்வர் பூபேந்தர் சிங், சசிதரூர், கபில்சிபல், முகுல் வாஸ்னிக், விவேக் தங்கா, அஜய் சிங், ரேணுகா சௌத்ரி, மிலிந்த் தியாரோ, அஜய்சிங், அரவிந்தர்சிங் லவ்லி, யோகானந்த் சாஸ்திரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

 

இந்த கூட்டம் குறித்து பேசிய கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, "கருத்து வேறுபாடுகள் கொண்ட தலைவர்களை சமாதானப் படுத்துவதற்கான கூட்டமோ உள்கட்சி பகைகளை விவாதிக்கும் கூட்டமோ இது கிடையாது. இனி வரும் தேர்தல்களில் காங்கிரஸ் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதற்கான தீர்வுகள், ஜனவரியில் நடக்கவிருக்கும் கட்சி மாநாடு கட்சிக்கு முழுநேர தலைவர் ஆகியவைகளை விவாதிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் இது. முழு நேர தலைவராக ராகுல் காந்திதான் பொறுப்பேற்க வேண்டும் என மூத்த தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை 99.9. சதவீதத்தினர் விரும்புகின்றனர். விரைவில் முழு நேர தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவர்'' என்கிறார்.

 

ஆலோசனைக் கூட்டம் குறித்து விசாரித்த போது, ’’கூட்டத்தில் பேசிய குலாம்நபி ஆசாத், "நாங்கள் அதிருப்தியாளர்கள் இல்லை. கட்சியின் நலன்களுக்காகவே கடிதம் எழுதினோம். அதையும் தலைவராகிய உங்களுக்குத்தான் எழுதினோம். அதனை பொதுவெளியில் விவாதிக்கவில்லை. எல்லாவற்றையும் நீங்கள் சரி செய்ய வேண்டும் என்பது தவறா? ஆனால், எங்களை துரோகிகள் ரேஞ்சிற்கு சிலர் விமர்சித்ததுதான் ஜீரணிக்க முடியவில்லை. எந்த சூழலிலும் கட்சிக்கு விரோதமாக நாங்கள் நடக்கவில்லை. ஆலோசனை சொல்வதோ கட்சியின் நலனுக்காக பேசுவதோ தவறுன்னு நீங்க நினைச்சீங்கன்னா… இனி அதை நாங்கள் செய்யப்போவதில்லை'' என்று சொன்னார். அதனை வழிமொழிந்த ஆனந்த்சர்மா, "தலைவரை தேர்வு செய்வதற்கு உள்கட்சி தேர்தலை நடத்தியிருந்தால் கருத்து வேறுபாடுகளே வந்திருக்காது. ஒவ்வொரு மாநிலத்திலும் கட்சி சோர்வாக இருப்பதற்குக் காரணம் அனைத்து முடிவுகளும் டெல்லியிலேயே எடுப்பதால்தான். தலைமைக்கு நெருக்கமான நபர்களை பிடித்து மாநில பொறுப்புகளையும் ஏ.ஐ.சி.சி. உறுப்பினர் பதவியும் வாங்கிக்கொள்கிறார்கள். இப்படி டெல்லிக்கு வந்து பதவியை வாங்கிக்கிட்டு போய்டுவதால் தனி கோஷ்டிகள் நிறைய உருவாகிவிட்டன. இதெல்லாம் தவிர்க்கப்பட்டால்தான் மக்களுக்கு நம் மீது நம்பிக்கை வரும். இதனை நாங்கள் வெளிப்படுத்தினால் துரோகிகள் என குற்றம்சாட்டுவது எப்படி ஆரோக்கியமானதாக இருக்க முடியும்?'' என்றிருக்கிறார்.

 

பிரித்விராஜ் சவான் பேசும்போது, "விசுவாசிகள் என்கிற பேரில் கட்சி தலைமையை பலர் துதிபாடுவதும், அதனை தலைமை அங்கீகரிப்பதும் தொடர்ந்தால் இன்னும் நாம் பின்னடைவை சந்திப்போம். தோல்விக்கான புள்ளி எது என்பதையும் அதற்கான தீர்வையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் நமது எதிரியான பா.ஜ.க.வை வீழ்த்துவது கடினம்தான்'' என்றிருக்கிறார். தொடர்ந்து பேசிய பலரும், "நேரு குடும்பத்துக்கு வெளியே இருந்து ஒருவரை தலைவராக தேர்வு செய்யுங்கள் என சொல்கிறீர்கள். ஆனா, அதற்காக எடுக்கப்பட்ட வழிமுறைகள் என்ன? எதனால் கட்சி தோல்வி அடைகிறது? பிரச்சனை எங்கு இருக்கிறது? என்பதை எல்லோரையும் அழைத்து ஆலோசனை நடத்தக்கூட தலைமை விரும்பவில்லைங்கிற ஆதங்கம் எல்லோருக்கும் இருக்கிறது'' என சொல்லியுள்ளனர்.

 

cnc

 

மூத்த தலைவர்கள் பலரும் இதனை மறுத்து பேசியதுடன், "ராகுல்காந்தியின் தலைமையில்தான் கட்சி ஒற்றுமையாக இருக்கும். அதை தவிர்த்து மாற்று சிந்தனை தேவையில்லை'' எனச்சொல்ல, வேறு வழியின்றி அதிருப்தி தலைவர்களும் அதனை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

 

அப்போது, "கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் இருப்பதுதான் நல்லது. துதிபாடுபவர்களை நான் ஆதரிப்பதுமில்லை. நீங்கள் சொல்லும் பிரச்சனைகளை பலமுறை ஆராய்ந்திருக்கிறேன். "ஜனவரியில் முழுநேர தலைவர் தேர்வு செய்யப்படுவார்' என உறுதியளித்திருக்கிறார் சோனியாகாந்தி'' என்று கூட்டத்தில் நடந்ததை விவரித்தனர் நம்மிடம் பேசிய தமிழக எம்.பி.க்கள்.

 

 

 

Next Story

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராஜினாமா!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Delhi Congress president resigns

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே சமயம் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் ஆம் ஆத்மி உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அரவிந்தர் சிங் லவ்லி ராஜினாமா செய்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அரவிந்தர் சிங் லவ்லி எழுதியுள்ள கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது, கட்சியின் கொள்கைக்கு எதிரானது. மேலும் இதனைப் பொருட்படுத்தாமல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. எனவே தனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.