Skip to main content

"அவங்க ரெண்டு பேரும் கன்டன்ட் கொடுத்தாங்க, நான் மொக்கையா இருந்தேன்"-பிக்பாஸ் ரம்யா

Published on 26/07/2018 | Edited on 26/07/2018
ramya

 

கடந்த ஞாயிற்று கிழமை பிக்பாஸ் வீட்டினில் இருந்து வெளியேறிய என்.எஸ்.கே. ரம்யாவிடம் நீங்கள் கேட்க விரும்பிய கேள்விகளோடு சென்றோம்... 

 

வோட்டிங் எல்லாம் ஒழுங்காக நடக்கிறதா? நீங்களும் நித்யாவும் வெளியேறுவீர்கள் என்று நாங்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை...?
 

வோட்டிங் சரியா நடக்குதா என்று எனக்கு தெரியவில்லை! ஏனென்றால் மக்கள் எல்லாம் சொல்லுவது 'இல்லை' என்றுதான். எனக்கு இன்ஸ்டாகிராம், ட்விட்டர் இதுல எல்லாம் கூட ஃபாலோவர்ஸ் குறைவாதான் இருக்காங்க, அதனால் வெளிய வந்துருப்போம்னு நினைச்சேன். ஆனா எனக்காக வோட்டு போட்டவர்களுக்கு எல்லாம் கோபம் இருக்குன்னு தெரியுது. நிறைய பேர் கமெண்ட் பண்றாங்க. ஆனா எனக்கு தெரில, அந்த வோட்டிங் உண்மையா இல்லையானு...

 

ஹவுஸ்மேட்ஸ் யாரையாவது பர்மனெண்டா ஜெயில்ல போடணும்னா யார சொல்லுவீங்க?
 

பாலாஜி அண்ணா!

 

ஆமா... அவரை ஜெயில்ல போடும்போது யாருமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே?
 

இதுலயே புரியுதா அவர் எப்படின்னு? எங்களுக்குதான் தெரியும் அங்க நடக்குறது.

 


உங்க ஹேர் ஸ்டைல், வெள்ளை முடி உங்களுக்கு வசதியா இருக்கா? அதனால் நீங்க ஓர் பக்கமாகவே தலையை சாய்ச்சே வச்சி இருக்கீங்களே, எப்படி இருக்கு?
 

அது வெயிட்னால ஒரு பக்கமாகவே சாய்ஞ்சி இருக்குனு நினைக்கிறன். எனக்கு இது வசதியாகத்தான் இருக்கு.

 

ஐஸ்வர்யாவையும், யாஷிகாவையும் பிக் பாஸ் காப்பாத்துற மாதிரி தெரியுது, நீங்க எப்படி பார்க்கிறீங்க?
 

காப்பாத்தலாம்! ஏன்னா அவங்க கன்டென்ட் கொடுக்கறாங்க, நான் மொக்கையா இருந்துட்டேன்.

 

கமல் சார் மேல் உங்களுக்கு சங்கடம் அல்லது விமர்சனம் ஏதாவது இருக்கா?
 

இல்லை

 

சென்றாயனை, நீங்க எப்படி 'ஃபேக்'னு சொல்றீங்க?
 

அவரு கோபத்தைக் கட்டுப்படுத்தறேன் என்ற பெயரில் கொஞ்சம் கூட தன்னை வெளிப்படுத்தாம இருக்கார். அதனால்தான் எனக்கு அப்படி ஃபீல் ஆச்சு.

 

மகத், யாஷிகா, ஐஸ்வர்யா இவங்க மூன்று பேரும் ஒரே பெட்ல படுத்துட்டு இருந்தது பற்றி உங்கள் கருத்து என்ன?
 

தப்புதான்...

 

என்னை தப்பா நாமினேட் பண்ணிட்டீங்களே பிக் பாஸ்... அப்படினு வருத்தப்பட்டீங்களா?
 

நிச்சயமா, ஏன்னா நான் டாஸ்க் ஒழுங்கா பண்ணலனு ஒரு வார்னிங் கூட கொடுக்கல. ஆனா வைஷ்ணவிக்கு இரண்டு முறை மூன்று முறைனாலும் கூட வார்னிங் வந்துச்சு. அதனால எனக்கு வருத்தம் இருக்கு, ஆனா வெளிய வந்ததும் ஓகே ஆயிடுச்சு.

 

வெளிய வந்ததுக்கு அப்பறம் உங்க ஷோஸ்லாம் பாத்திங்களா? ச்சே இதை எடிட் பண்ணிட்டாங்களேனு பீல் பண்ணிங்களா?
 

ஸ்நேகன் சார் விஷயம்தான் ஞாபகத்துக்கு வருது. ஏன்னா நான் அந்த கதையை பெரிசா சொல்லி இருந்தேன். நடுவுல 'யாரு நீ, என்னை ஜட்ஜ் பண்ண'ணு ஒரு வார்த்தை வந்துச்சு. அந்த இடத்துல நீங்க பாத்தீங்கன்னா ஒரு 'கட்' இருக்கும். அது நான் ஸ்நேகன் சாரை சொல்லவில்லை, பொதுவா எல்லாரையும் சொன்னேன். பிக் பாஸ் அத கட் பண்ணி கோர்த்து விட்டுட்டாரு.

 

உங்கள் வெளியேற்றியது நேர்மைக்குக் கிடைத்த பரிசு. உங்கள் மனசாட்சி என்ன சொல்லுகிறது?
 

அப்படியா... நல்ல விஷயம்தானே!

 

பிக்பாஸ் ஒரு நாடக மேடை. அதுல நீங்களும் நடிச்சிட்டுதான் வந்திங்கனு நான் சொல்றேன் நீங்க என்ன சொல்றீங்க?
 

நூறு சதவீதம் நான் நடிக்கவில்லை. அதனால்தான் என்னால் கண்டன்ட் கொடுக்க முடியல. அதனால்தான் யாரோட கவனமும் ஈர்க்க முடியாம இப்போ வெளிய வந்துட்டேன்.