Skip to main content

வந்த செய்தி! விசாரித்த உண்மை!

Published on 21/02/2018 | Edited on 22/02/2018
வந்த செய்தி: சர்ச்சைக்குரிய ஐ.பி.எஸ். அதிகாரி துவக்கி வைத்த ஐ.ஏ.எஸ். அகாடமி. விசாரித்த உண்மை: கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சென்னை, குரோம்பேட்டையில் ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ்.அகாடமி தொடங்கப்பட்டது. இந்த அகாடமியைத் துவக்கி வழிகாட்டுபவர் டாக்டர். ஆர்.நட்ராஜ் ஐ.பி.எஸ். என விளம்பரங்கள் பளிச்ச... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

முன்னாள் டிஜிபி வழக்கில் இருந்து உயர்நீதிமன்ற நீதிபதி விலகல்!

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
High Court judge withdraws from ex-DGP case

முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. நட்ராஜ் தாக்கல் செய்த வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகுவதாக உயர் நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சொல்லாத கருத்துகளை சொல்லியதாக அவதூறு பரப்பியதாக முன்னாள் டிஜிபியும், அதிமுக முன்னாள் எம்எல்ஏவுமான நட்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக மத்திய மாவட்ட வழக்கறிஞர் அணியினர் திருச்சி எஸ்.பி அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தனர். இதனையடுத்து முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது ஏழு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நட்ராஜ் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் தனிப்பட்ட காரணங்களால் இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகுவதாக உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்துள்ளார். இதனால் வேறு ஒரு நீதிபதி முன்பு இந்த வழக்கு பட்டியலிடப்பட்டு விசாரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக நட்ராஜின் மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“எனது அன்பு நண்பர் எம். காமராஜன் இனி இல்லை” - கலங்கிய சிம்ரன்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023
simran friend passed away

சிம்ரன் தற்போது துருவ நட்சத்திரம், சப்தம் உள்ளிட்ட சில படங்களைக் கைவசம் வைத்துள்ளார். சப்தம் படம் அவரது 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அவரது நெருங்கிய நண்பர் இறந்துவிட்டதாகத் தெரிவித்து வருத்தமடைந்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நம்ப முடியாத மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்தி. எனது அன்பு நண்பர் எம். காமராஜன் இனி இல்லை. 25 வருடங்களாக எனது வலது கரமாகவும், எனது ஆதரவு தூணாகவும் இருந்தார். எப்பொழுதும் சிரித்துக்கொண்டே இருக்கும் ஒருவர். உறுதியான மற்றும் சுயமாக உருவாக்கப்பட்ட மனிதன். நீங்கள் இல்லாமல் எனது சினிமா பயணம் சாத்தியமில்லை.

உங்கள் வாழ்க்கை உண்மையிலேயே பலருக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சீக்கிரம் சென்றுவிட்டார். அவரது குடும்பத்தினருக்கும், அன்புக்குரியவர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.